பால் லோ: ஐபிசிஎம்சி, இஎஐசி எல்லாம் வெறும் பெயர்கள்தான்!

பிரதமர்துறையில் "அமைச்சர்" என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பால் லோ "வலுப்படுத்தப்பட்ட" இஎஐசி, ஐபிசிஎம்சியைவிட சிறப்பானதாக இருக்கும் என்று கூறியுள்ளார். "புதுப்பிக்கப்பட்டு" மற்றும் "வலுப்படுத்தப்பட்ட" நேர்மை ஆணையம் அமலாக்கப் பணித்துறை (இஎஐசி), சுயேட்சை போலீஸ் புகார் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) போன்ற புதிய ஆணையத்தைத் தொடங்குவதைவிடச்…

குழந்தைகள் மதம் மாற்ற சட்டங்கள் மீதான வாக்குறுதியைக் காப்பாற்றுமாறு அரசுக்கு…

பெற்றோர்கள் பிரிந்த பின்னர் பிள்ளைகளை தங்கள் பராமரிப்பில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு இன்னொரு சமயத்துக்கு மதம் மாற்றம் செய்வதை தடுக்கும்  வகையில் சட்டத் திருத்தம் செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு  அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சரவை அந்த வாக்குறுதியை வழங்கியது.  ஆனால் சம்பந்தப்பட்ட…

லிம் குவான் எங்: பக்காத்தான் எல்லா வாக்காளர்களையும் நியாயமாக நடத்துகின்றது.…

பிஎன் தனது ஆதரவாளர்களுக்குச் சேவை செய்யவே விரும்புகின்றது.  எதிர்ப்பாளர்களுக்கு அல்ல எனக் கூறியுள்ள துணைப் பிரதமர் முஹைடின்  யாசினை டிஏபி சாடியுள்ளது. எல்லா வாக்காளர்களையும் நியாயமாக நடத்தும் பக்காத்தான் மாநிலங்களை பிஎன்  பின்பற்ற வேண்டும் என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்  கூறினார். "பக்காத்தான் கட்சிகள்…

பிஎஸ்எம்: பக்கத்தான் பதிலை எழுத்து மூலமாக கொடுக்க வேண்டும்

  பக்கத்தான் கூட்டணியில் இணைந்து கொள்வதற்காக மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) செய்திருந்த மனுவுக்கு பகத்தான் தலைமைத்துவம் எழுத்து மூலம் பதில் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. பக்கத்தான் தலைவர்கள் ஆளுக்கொருவிதமாக எதிர்மாரான அறிக்கைகள் விடுத்துக் கொண்டிருப்பதால் அதிகாரப்பூர்வமான பதில் எழுத்து மூலமாக வேண்டும் என்று டிஎபி தேசியத்…

பாஸ் தலைவர்கள் ஜுன் 15 ‘கறுப்பு 505’ பேரணியில் கலந்து…

பக்காத்தான் ராக்யாட் ஜுன் 15ல் ஏற்பாடு செய்துள்ள 'கறுப்பு 505' பேரணியில்  கலந்து கொள்வது என பாஸ் முடிவு செய்துள்ளது. பேரணியில் பங்கு கொள்வது என இன்று காலை நடைபெற்ற மாதாந்திரக்  கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக அதன் துணைத் தலைவர் முகமட்  சாபு அறிவித்தார். மே 5…

சிங்கப்பூரில் இணையத் தள அனுமதிக்கு எதிராக வலைப்பதிவாளர்கள் பேரணி

சிங்கப்பூரில் உள்நாட்டு செய்தி இணையத் தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய  அனுமதி நிபந்தனைகளை மீட்டுக் கொள்ளுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும்  பொருட்டு ஹொங் லிம் பூங்காவில் உள்ள பேச்சாளர் அரங்கில் 2,500க்கும்  மேற்பட்ட மக்கள் கூடினர். #FreeMyInternet என அழைக்கப்பட்ட வலைப்பதிவாளர் குழு ஒன்று அந்த  அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு…

நெகிரி செம்பிலானில் பிள்ளைகளை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதற்குப் பெற்றோர்களில் ஒருவருடைய…

நெகிரி செம்பிலானில் தங்கள் பிள்ளைகளை மதம் மாற்றம் செய்வதற்கு  இஸ்லாத்தை தழுவிய பெற்றோர்களில் ஒருவருடைய ஒப்புதல் இருந்தால் போதும்  என அந்த மாநில இஸ்லாமிய விவகாரத் துறை கூறியுள்ளது. அந்த மாநிலத்திலும் மற்ற மாநிலங்களிலும் உள்ள சட்டங்களில் அது தெளிவாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது என அந்தத் துறையின் இயக்குநர் ஜோஹானி…

டிஏபி, இசி பாரங்களில் வெவ்வேறான வாக்கு எண்ணிக்கைகள்

பேராக் ஜெலாபாங் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்களிப்பு வழிகளில் ஒன்றுக்கு  வெவ்வேறான தேர்தல் முடிவுகளைக் காட்டும் ஆவணங்களை டிஏபி-யும் இசி  என்ற தேர்தல் ஆணையமும் பெற்றுள்ளன. அந்தத் தகவலை  பேராக் டிஏபி பிரச்சாரத் தலைவர் வோங் கா வோ  வெளியிட்டார். SRJK (C) Lahat-ல் 3வது வாக்களிப்பு வழிக்கான டிஏபி-யின்…

‘தேர்தல் ஆணையம் செய்த வேலையை ஏய்ப்பு எனச் சொல்வது மிக…

உங்கள் கருத்து : "20 விழுக்காடு வாக்காளர்களைக் கொண்டு பிஎன் 112 இடங்களை  வென்றிருக்குமானால் அவர்கள் அதனை 'முதலில் கம்பத்தைத் தொடுகின்றவர்' என  எப்படி அழைத்தாலும் அது ஜனநாயகமல்ல. அது குற்றமாகும்" பிஎன் கடந்த தேர்தலில் சிறிய தொகுதிகளிலேயே பெரும்பாலும் வெற்றி பெற்றது முஷிரோ: ஆகவே மொத்த வாக்குகளில்…

புறக்கணிக்கப் போவதாக மஇகா மருட்டல்!

பேரா மாநில சட்டமன்ற சபாநாயகர் பதவி மஇகா-வுக்கு வழங்கப்படாவிட்டால் அந்த மாநில அரசாங்கப் பதவிகள் எதனையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என மஇகா மருட்டியுள்ளது. அந்தப் பதவி ஒர் இந்தியருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என அது தெரிவித்துள்ளது. 12வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பேரா மாநிலத்தை 2009ம் ஆண்டு…

சுல் நூர்டின்: ‘துரோகிகளை’ விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்

'துரோகிகளை' விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என வழக்குரைஞரும்  அரசியல்வாதியுமான சுல்கிப்லி நூர்டின் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் அரசாங்கத்தைப் பிரதிநிதிப்பதால் சுய நலன் சம்பந்தப்படுவதைத் தவிர்க்க அது உதவும் என அவர் கருதுகிறார். அதே வேளையில் அரசர் அமைப்பு முறையின் சார்பில் வழக்குத்…

2013 மெட்ரிக்குலேசன் இட ஒதுக்கீடு: புத்ரா ஜெயாவில் அமைதிக் கூட்டம்

நடப்பு ஆண்டில் மெட்ரிக்குலேசன் படிப்பிற்கு விண்ணப்பம்  செய்து இடம் கிடைக்காமல் இருக்கும் மாணவர்கள் சம்பந்தமாக எதிர்வரும் திங்கள்கிழமை (10.6.2013)  காலை மணி 11.30 க்கு புத்ரா ஜெயா பிரதமர் அலுவலகம் முன் ஓர் அமைதிக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து பிரதமர் நஜிப் ரசாக்கை சந்திக்க…

லிம் கிட் சியாங் தடை ஏதுமின்றி சபாவுக்குள் நுழைந்தார்

டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங், இன்று சபாவுக்குள் எந்தத் தடையுமின்றி  நுழைந்தார். அவருக்கும் பலருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. "எதிர்பார்க்கப்பட்ட எந்தத் தடையும் இல்லாமால் நான் சபாவுக்குள் நுழைந்தேன். சபாவுக்கு  வழங்கப்பட்டுள்ள குடிநுழைவு  உரிமையில் சட்டப்பூர்வ அரசியல் நடவடிக்கைகளுக்காக  மலேசியர்கள் அந்த மாநிலத்துக்குள்…

பூச்சோங் முரளிக்கு தற்காலிக விடுதலை கிடைக்குமா?

இரண்டு வாரங்களுக்கு மேலாக சுங்கை பூலோ சிறையில் வாடும் பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியத்தின் (வயது 45) 18 மாத சிறைத் தண்டனைக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு கோரும் மனு ஒன்றை, வரும் திங்கள் கிழமை, ஜூன் 10 தேதி, சா அலாம் உயர் நீதிமன்றம்…

பிஎன் கடந்த தேர்தலில் சிறிய தொகுதிகளிலேயே பெரும்பாலும் வெற்றி பெற்றது

இந்த நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட 130 நாடாளுமன்றத்  தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் வெற்றி பெற்றதின் வழி பிஎன் அரசாங்கத்தை அமைத்துள்ளது. அந்த மிகச் சிறிய தொகுதிகளில் 112ஐ பிஎன் வென்றது. அதனால் அதற்கு சிறிய பெரும்பான்மை கிடைத்தது என வழக்குரைஞர் அண்ட்ரூ கூ கூறினார். என்றாலும் பிஎன்…

‘உதயாவைத் தண்டித்து மற்றவர்களை மன்னித்தது ஏன்?’

உங்கள் கருத்து :  ‘உதயா, இண்ட்ராப்-பின் சட்ட ஆலோசகர் என்ற முறையில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் புரவுனுக்கு அனுப்பட்ட கடிதத்தில் கையொப்பம் இட்டிருந்தார். இண்ட்ராப் தலைமைத்துவத்தின் ஒப்புதலுடன்தான் அவர் அதைச் செய்தார்’ அண்ணனை விடுவித்திருக்க வேண்டும் என்கிறார் வேதா பிஆர்: சில நாள்களுக்கு முன்பு, பிரிட்டிஷ் நீதிமன்றம், காலனித்துவ…

இசி: நாங்கள் அழியாமை குறித்து அமைச்சுடன் கலந்தாய்வு செய்தோம்

மே 5 பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியாமையின் பாதுகாப்பு பற்றி தாம் சுகாதார  அமைச்சுடன் ஆலோசனை நடத்தியதாக இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ்  முகமட் யூசோப் வலியுறுத்தியுள்ளார். சுகாதார அமைச்சு அத்தகைய அறிக்கை எதனையும் கொடுக்கவில்லை என அதன் அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம்…

டாக்டர் மகாதீரின் ‘இனவாத’ வலைப்பதிவுக்கு எதிராக போலீசில் புகார்

சீன வாக்காளர்களுக்கு எதிராக அண்மையில் 'நேர்மையற்ற தாக்குதலை' தொடுத்துள்ள டாக்டர் மகாதீர்  முகமட்டுக்கு எதிராக அலோர் ஸ்டார் போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் இன்று ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது. அலோர் ஸ்டார் எம்பி கூய் சியாவ் லியூங்-கும் அவரது ஆதரவாளர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தை  நடத்தினர். அந்த முன்னாள் பிரதமருடைய "முற்றிலும் நியாயமற்ற…

தமது சகோதரர் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என வேதா சொல்கிறார்

புதிதாக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ள துணை அமைச்சர் பி வேதமூர்த்தி, தமது மூத்த சகோதரர் பி உதயகுமார், தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்காக எதிர்வாதம் செய்யுமாறு அழைக்கப்படாமல் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். ஆகவே உதயகுமார் 'நல்ல வாய்ப்புக்கள்' இருப்பதால் கதவுகள் திறந்திருக்கும் போது அந்த 30…

‘பொய் சொல்லும் போலீஸ் அதிகாரிகளைத் தண்டியுங்கள்’

கோலாலம்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா உட்பட போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல அரசு சாரா அமைப்புக்கள் கேட்டுக் கொண்டுள்ளன. தடுப்புக் காவல் மரணங்களுக்கான காரணங்கள் மீது முரண்பாடான அறிக்கைகளைப்…

பாடாங் மெர்போக் மீது பிகேஆர் சிக்கலான சூழ்நிலையை எதிர்நோக்குகின்றது

பேரணிகளுக்கு தான் ஏற்பாடு செய்யும் போது எப்போதும் சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக்  கொள்வதாக பிகேஆர் கூறுகின்றது. இரண்டு இடங்களின் உரிமையாளர்களும் போலீசும் தாங்கள் அனுமதி கொடுக்கும் முன்னர் மற்ற தரப்பின் 'அனுமதியை' பெற வேண்டும் என வலியுறுத்துவதே அதற்குக் காரணமாகும். பாடாங் மெர்போக்கில் 'கறுப்பு 505' பேரணியை ஜுன்…

உதயா ஒரே குற்றத்துக்காக இரண்டு முறை ஜெயிலில் அடைக்கப்படுகிறாரா ?

ஹிண்ட்ராப் தலைவர் பி உதயகுமார் ஒரே குற்றத்துக்காக இரண்டு முறை ஜெயிலில்  அடைக்கப்படுகிறாரா என்ற கேள்வியை பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா எழுப்பியுள்ளார். உதயகுமார் தேச நிந்தனைக் குற்றத்தைப் புரிந்துள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டு புதன்கிழமை இரண்டரை ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்நாட்டுப்…