ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு காய்கறி வழங்குபவர்களிடமிருந்து லஞ்சம் கேட்டு வாங்கியதற்காக ஜொகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தால் ஒரு மூத்த குடியேற்ற அதிகாரிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 20,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) சட்டத்தின் பிரிவு 16(a)(B) இன் கீழ் சுல்கிப்லி…
“சோம்பேறிகள்”, தந்தை சொல் மிக்கதோர் மந்திரமில்லை
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் சில தினங்களுக்கு முன்பு மாலாய்க்காரர்கள் சோம்பேறிகள் என்று மீண்டும் கூறியிருந்தார். அவரின் அக்கருத்துக்கு சிலர் ஆட்சேபம் தெரிவித்திருந்தாலும், மலாய்க்காரர்களின் மேலாண்மைக்காகப் போராடும் சிலாங்கூர் பெர்காசா மாகாதீரின் கருத்தை தற்காத்துள்ளது. மகாதீர் பெர்காசாவின் புரவலாக இருக்கிறார். மலாய்க்காரர்கள் குறைகூறப்பட்டுள்ளதால் மற்ற இனத்தவர்கள்…
என்ஜிஒ: நஜிப்பின் உண்மையான குணம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது
அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை நசுக்குவதற்காக அரசாங்கம் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கட்டவிழ்த்து விட்டுள்ள கடும் நடவடிக்கைகள் பிரதமர் நஜிப்பின் உண்மையான சர்வாதிகார மனப்பாங்கை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது என்று மனித உரிமைகள் உன்னிப்பு ஆசியப் பகுதி துணை இயக்குனர் பில் ரோபர்ட்சன் இன்று விடுத்துள்ள ஓர்…
குறை கூறுவதாக இருந்தாலும், அம்னோவை “போடோ” என்று திட்டாதீர், ஸாம்…
அம்னோவின் முன்னாள் தகவல் அமைச்சர் ஸைனுடின் மைடின் (ஸாம்) அம்னோவை ஏளனமாக "போடோ" என்று கூறியிருப்பதற்கு ஓர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் முகமட் ராஸ்லான் முகம்மட் ராபி "அம்னோ" மற்றும் "முட்டாள்" என்ற இரு…
மலாய்க்காரர்கள் சோம்பேறிகள்தான், தமது கருத்தை தற்காக்கிறார் மகாதீர்
கடுமையான குறைகூறல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும், மலாய்க்காரர்கள் சோம்பேறிகள் என்ற தமது சர்சைக்குள்ளாகியிருக்கும் கருத்தை மகாதீர் இன்று தற்காத்து பேசியுள்ளார். "என்னை நானே ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை. சோம்பேறி என்றால், சோம்பேறி என்று கூறுவேன். "மக்கள் விரும்பவில்லை என்றால், நல்லது, அது பற்றிக் கவலையில்லை. நான் அம்னோ தலைவராக இருந்த…
எம்எச்370 குறித்த இந்தோனேசிய ஊடக அறிக்கை ஐஜிபியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
மார்ச் 8 இல் மலேசியன் ஏர்லைன்ஸ் (மாஸ்) பயணம் எம்எச்370 மாயமாக மறைந்து போனது பற்றி போலீசுக்கு தெரியும் என்று கூறும் இந்தோனேசிய ஊடக அறிக்கைகளை மலேசிய போலீஸ் மறுத்துள்ளது. அம்மாதிரியான ஊடக அறிக்கைகளால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக மலேசிய போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு பாக்கார்…
இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த மாஸ் விமானம் திரும்பியது
நேற்றிரவு இந்தியா, ஹைதராபாத்துக்கு இங்கிருந்து கிளம்பிய மாஸ் பயணம் எம்எச்198 ஏதோ கோளாறு காரணமாக திரும்பி வந்து விட்டது. அந்த விமானத்தில் தீ பற்றியதால்தான் விமானம் திரும்பி வர நேரிட்டது என்ற வதந்தியை மலேசியன் ஏர்லைன்ஸ் (மாஸ்) நிராகரித்துள்ளது. இன்று காலையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் விமானம்…
ஹமிடி எச்சரிக்கை: இந்த நான்குடன் விளையாடாதீர்
அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ள நான்கு முக்கிய இன உறவுகள் பற்றிய சமூக ஒப்பந்தத்துடன் விளையாட முயற்சிக்க வேண்டாம் என்று அம்னோவின் உதவித் தலைவரும் உள்துறை அமைச்சருமான அஹமட் ஸாகிட் இன்று அனைத்து தரப்பினரையும் எச்சரித்துள்ளார். இந்த நான்கையும் தற்காப்பதில் அம்னோ முன்னணியில் நிற்கும் என்பதை வலியுறுத்திய அவர்,…
அமைச்சர் இட்ரீஸ்: அஸ்மிக்கு எதிரான தேசநிந்தனைக் குற்றச்சாட்டு தவறு
பிரதமர் நஜிப்பின் அமைச்சரவையின் உறுப்பினரான அமைச்சர் இட்ரீஸ் ஜாலா தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் மலாயா பல்கலைக்கழக சட்டத்துறை இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோம் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை பகிரங்கமாக குறைகூறினார். "அஸ்மி ஷரோம் மீது தேசநிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தி இருக்கக்கூடாது. அறிவு வளர அறிவுக் கழக சுதந்திரம் அவசியமாகிறது",…
காலிட்டுக்கு ஹாடியின் உறுதியான ஆதரவு கவலையளிக்கிறது
பிகேஆரின் ஆதரவை இழந்து நிற்கும் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பதில் பாஸ் தலைவர் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார் என்று பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவர் நிக் நாஸ்மி நிக் அஹமட் கூறுகிறார். சிலாங்கூர் மாநில மந்திரி புசார் விவகாரத்திற்கு ஒரு…
குபுர் இடைத்தேர்தல்: ஹாடி, டிஎபி காணப்படவில்லை
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எதிர்வரும் பெங்காலான் குபுர் இடைத்தேர்தல் பாஸ் கட்சிக்கு இது மூன்றாவது இடைத்தேர்தலாகும். இது சற்று மாறுபட்ட காட்சியைத் தருகிறது. வழக்கமாக இடைத்தேர்தலில் கட்சியின் வேட்பாளருடன் சேர்ந்து செல்லும் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று வேட்பாளர் நியமனம் செய்யப்படும் இடத்தில்…
தேச நிந்தனை விசாரனை பட்டியலில் வழக்குரைஞர் போன்
நீண்டு கொண்டே போகும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்க அழைக்கப்பட்டவர்களின் பட்டியலில் வழக்குரைஞர் எட்மெண்ட் போனும் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் போன் தாம் செப்டெம்பர் 16 இல் நாடு திரும்பியதும் வாக்குமூலம் அளிக்க போலீசாரை சந்திப்பேன் என்று கூறினார். ஜனவரி 20 இல், த மலேசியன்…
பெங்காலான் குபுர் இடைத்தேர்தல்: மும்முனைப் போட்டி
கிளந்தான் மாநில சட்டமன்ற தொகுதி பெங்காலான் குபுர் இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டி பின் மற்றும் பாஸ் ஆகியவற்றுக்கிடையிலானது என்றாலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் களமிறங்குவார் என்பதால் இது ஒரு மும்முனைப் போட்டியாக மாறுகிறது. பாஸ் சார்பில் வான் ரோஸ்டி வான் இப்ராகிம் போட்டியிருகிறார். மாட்…
ரித்துவானை கைது செய்து குழுந்தையை மீட்டுக் கொடுக்க ஐஜிபிக்கு நீதிமன்றம்…
பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகமட் ரித்துவான் அப்துல்லாவை கைது செய்து குழந்தை பிரசன்னா டிக்சாவை மீட்டு தாயாரிடம் ஒப்படைக்க ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று போலீஸ் படை தலைவர் காலிட் அபு பாக்காருக்கு உத்தர விட்டுள்ளது. ஐஜிபி நடவடிக்கை எடுக்க அவரை…
தேர்வுத் தாள்கள் மீண்டும் கசிந்தால் துணைப் பிரதமர் பதவி துறக்க…
யுபிஎஸ்ஆர் தேர்வுக்கான அறியல் மற்றும் ஆங்கில மொழி தாள்கள் கசிந்துள்ளதைத் தொடர்ந்து எதிர்காலத்தில் எந்த ஒரு முக்கியமான தேர்விலும் கசிவுகள் ஏற்பட்டால் பதவி துறக்க துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசின் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பள்ளி தேர்வுகளின் சீரிய நிலையைப்…
மகாதீர்: ஒரு பெயரை மட்டும்தான் கொடுத்தேன், பிரச்சனையே இல்லை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மட் தாம் பதவியிலிருந்த காலத்தில் மந்திரி புசார் பதவிக்கு ஒரு பெயரை மட்டுமே அரண்மனையிடம் கொடுத்ததாக கூறினார். "என் காலம் முழுவதிலும், அது எப்போதுமே ஒரே ஒரு பெயர்தான். எந்த சுல்தானுடனும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இருந்ததே இல்லை", என்று மகாதீரிடம்…
சந்தியாகோ: சிலாங்கூர் தண்ணீர் ஒப்பந்த நடவடிக்கை சட்டவிரோதமானதாக இருக்கலாம்
சிலாங்கூருக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான முன்மொழியப்பட்டுள்ள ரிம9.65 பில்லியன் மதிப்பிலான தண்ணீர் ஒப்பந்த நடவடிக்கை சட்டத்திற்கு முரணானதாக இருக்கலாம், ஏனென்றால் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் மாநிலத்தை ஆளுவதற்கான சட்டப்பூர்வமான தகுதி இல்லாதவராக இருக்கிறார் என்று டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ…
நம்புங்கள், ஜிஎஸ்டி சுமையாக இருக்காது, நஜிப்
ஏப்ரல் 1, 2015 இல் அமலாக்கப்பட விருக்கும் ஜிஎஸ்டி என்ற பொருள்கள் மற்றும் சேவைகள் வரி முறை மலேசியர்களுக்கு சுமையாக இருக்காது என்று பிரதமர் நஜிப் உறுதியளித்துள்ளார். உலகின் 90 விழுக்காடு நாடுகளில் அமலாக்கப்பட்டிருக்கும் இந்த வரி முறை மலேசியாவின் தளராத மற்றும் தொடர்ந்த வளர்ச்சியை உறுதி…
மன்னிப்பு, சுல்தான் இன்னும் முடிவெடுக்கவில்லை
சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு ஒவ்வொரு கட்சியும் இரண்டு வேட்பாளர்களின் பெயர்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் விடுத்திருந்த உத்தரவுக்கு மாறாக பிகேஆரும் டிஎபியும் தலா ஒரு பெயரை மட்டுமே அரண்மனைக்கு அனுப்பி இருந்தன. சிலாங்கூர் சுல்தான் இக்கட்சிகளின் செயலை ஆணவமானது மற்றும் துரோகமானது…
ரஷ்யாவில் முருகனுக்கு உதவினோம்
ரஷ்யாவிலுள்ள மலேசிய தூதரகம் மலேசிய மாணவர் எம். முருகன் பிள்ளைக்கு உதவ தவறி விட்டது என்ற குறைகூறலை மலேசிய வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. முருகன் பிள்ளை ரஷ்யாவுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு அவர் அங்குள்ள விமானநிலையத்தில் ஐந்து நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். "தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டவில்லை என்றாலும்,…
டிஎபி: கேடிஎம்பி தொழிலாளர் வேலை நீக்கம், லியோவ் தலையிட வேண்டும்
கெரித்தாப்பி தானா மெலாயு பெஹாட் (கேடிஎம்பி) அதன் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் விவகாரத்தில் போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய் தலையிட வேண்டும் என்று டிஎபி குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார். கேடிஎம்பியின் தலைவர் எலியாஸ் காடிர் பதவி…
அன்வார் தாமதப்படுத்துகிறார்
பிகேஆர் மிக அண்மையில் சிலாங்கூர் சுல்தானுக்கு அனுப்பியிருந்த அதன் கடிதத்திற்கு அரண்மனையிலிருந்து பதில் கிடைக்கும் வரையில் அக்கட்சி மந்திரி புசார் பதவிக்கு கூடுதலான வேட்பாளர்களின் பெயர்கள் அனுப்புவதை அன்வார் இப்ராகிம் தாமதப்படுத்தியுள்ளார். நேற்றிரவு நடந்த அக்கட்சியின் அரசியில் குழுவின் கூட்டத்தில் கூடுதல் பெயர்களை சேர்த்துக்கொள்ளும்படி எழுந்த முன்மொழிதல்களின்…
கேடிஎம்பி எட்டு தொழிற்சங்கவாதிகளை வேலையிலிருந்து நீக்கியது
கெரித்தாப்பி தானா மெலாயு பெர்ஹாட் (கேடிஎம்பி) தொடர்ந்து தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று மேலும் எட்டு தொழிற்சங்க உறுப்பினர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. "இன்னும் 15 க்கு மேற்பட்டோர் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ரயில்வேமென்ஸ் யூனியன் ஆப் மலாயா (ஆர்யுஎம்) தலைவர் அப்துல்…
நிக் அஸிஸ் “பயத்தில் நடுங்கினார்”
சிலாங்கூர் சுல்தான் பிகேஆர் மற்றும் டிஎபி ஆகியவற்றின் ஆணவத்தையும் பணிய மறுத்தலையும் கண்டித்துள்ளது பற்றி நாளிதழிகளில் படித்த போது பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் "பயத்தில் நடுங்கினார்" என்று கூறப்படுகிறது. உத்துசான் மலேசியாவின் கூற்றுப்படி, அம்மதிப்பிற்குரிய தலைவர் அச்செய்திகளைப் படிக்க சிரமப்பட்டார்.…


