வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர், எரிபொருள் மானியங்கள், பள்ளி பராமரிப்பு, சுகாதார வசதிகள், செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி, மின்னணு விலைப்பட்டியல் (e-invoicing), மற்றும் சிறிய வியாபாரிகள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் மக்களுக்கு நேரடியாகப் பயனளிப்பதாகக் கூறுகிறார். வீடமைப்பு…
பிகேஆர் இளைஞர் தலைவர், ஆனால் அரசியலில் விருப்பமற்றவர்
மெலிஸா சசிதரன் ஜோகூரைச் சேர்ந்த ஓர் இளம் வழக்குரைஞர். அரசியலில் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் இருந்ததே இல்லை. “13வது பொதுத் தேர்தலில் தேர்தல் முகவராக இருந்தேன். அவ்வளவுதான் நம் அரசியல். அதற்குமேல் போவதில்லை என்பதுதான் என் முடிவாக இருந்தது. “அரசியல் விழிப்புணர்வு இருந்தாலும் …
சொல்வதை முகத்துக்கு நேராக சொல்லுங்கள்: இணையப் பயனர்களுக்கு நஸ்ரி சவால்
துணிச்சலாக பேசும் குணமுள்ளவரான பண்பாட்டு, சுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், சமூக வலைத்தளங்களில் ஒளிந்துகொண்டு தம்மைக் குறைகூறுவோரை நேருக்கு நேர் வந்து பேசுமாறு அறைகூவல் விடுத்துள்ளார். “டிவிட்டரோ முகநூல் பக்ககோ இல்லாத ஒரே அமைச்சர் நானாகத்தான் இருப்பேன். “முகநூலில் எனக்கு நம்பிக்கை. நேருக்கு நேர் பேசுவதில்தான் …
‘மாற்றத்தைக் கொண்டுவரும் மாவீர’ரை வரவேற்கிறது டிஏபி
தேசிய இலக்கியவாதி ஏ.சமட் இஸ்மாயில் இப்போது டிஏபி உறுப்பினர் என்பதை லிம் கிட் சியாங் இன்று அறிவித்தார். கிளந்தான், குவா மூசாங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் 80-வயது கவிஞரிடம் அவரின் உறுப்பினர் அட்டையை வழங்கிய லிம், அவரை "Perwira Ubah" (மாற்றத்தைக் கொண்டுவரும் மாவீரர்) என்றும் வருணித்தார்.
டிஏபி சீனர்களின் கட்சி என்ற முத்திரையை உடைக்க பாக் சமட்…
தேசிய இலக்கியவாதியான ஏ. சமட் சைட் டிஏபி-இல் சேர்ந்தது, டிஏபி சீனர்களின் கட்சி என்ற முத்திரையை உடைப்பதற்கான அக்கட்சியின் முயற்சிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். இதனைத் தெரிவித்த அரசியல் நோக்கர் வான் சைபுல் வான் ஜான், அதற்காக மலாய்க்காரர்கள் டிஏபி-க்குள் சென்று குவிந்து விடப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். ஆனாலும் …
அமைச்சர்: ஷா ஆலம் அதிரடிச் சோதனை ‘இனவாதமிக்கது’அல்ல
உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹசன் மலேக், ஷா ஆலம் குடியிருப்புப் பகுதியில் அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனை இனவாத நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். அமைச்சு வேண்டுமென்றே மலாய்க்காரர்கள் நிறைய வசிக்கும் அப்பகுதியைத் தேர்ந்தெடுத்து போலிப் பொருள்களையும் ஜிஎஸ்டி-மீறல்களையும் கண்டுபிடிப்பதற்கான அந்த அதிரடிச் சோதனையை நடத்தியுள்ளது …
முகைதினையும் ஷாபியையும் விலக்குவது நஜிப்புக்குத்தான் ஆபத்து
துணைப் பிரதமர் முகைதின் யாசினையும் புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர் ஷாபி அப்டாலையும் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுவது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்க்குத்தான் ஆபத்தாக முடியும் என எச்சரிக்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். “நஜிப் முகைதினையும் ஷாபியையும் விலக்குவது அவர் தமக்குத் தாமே எதிர்ப்பை உருவாக்கிக்கொள்வதாக அமையும். அவ்விருவரும், வேறு வழியின்றி…
விளையாட்டாளர்களைக் குறை சொல்லாதீர்: குறைசொல்வோர்மீது கைரி பாய்ச்சல்
ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஃபாரா என் அப்துல் ஹாடி-யைத் தற்காக்க முன்வந்த இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், பார்க்க வேண்டியது விளையாட்டாளர்களின் சாதனையைத்தானே தவிர உடையை அல்ல என்று குறைகூறுவோரைச் சாடினார். “ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஃபாரா நீதிபதிகளையே வியக்க வைத்து நாட்டுக்குத் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்.…
மகாதிர்: 1எம்டிபியின் அருள் பொய் சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும்
1எம்டிபி நிறுவனம் பற்றி தாம் கூறியது பொய்யா என்பதை நிர்ணயிப்பது மகாதிரின் வேலைஅல்ல என்று அந்நிறுவனத்தின் தலைவரும் செயல்முறை இயக்குநருமான அருள் கந்தா கந்தசாமி கூறிய போதிலும், அவர் பொய் கூறியது மக்களுக்கு தெரிந்ததுதான் என்று மகாதிர் கூறினார். "அவர் பொய் சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும்.…
அமைச்சரவை மாற்றமெல்லாம் இல்லை என்கிறார் நஸ்ரி
சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், ஹரி ராயாவுக்குப் பின்னர் அமைச்சரவை திருத்தி அமைக்கப்படலாம் என்று கூறப்படுவதை நிராகரித்தார். அதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்றாரவர். “அதற்கான வாய்ப்பில்லை. பிரதமர் எந்த நேரத்திலும் அது பற்றிப் பேசியதில்லை. “இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில்கூட அதற்கான அறிகுறி …
என்எஸ்டி: அமைச்சரவை மாற்றம் நிகழலாம்
ஹரி ராயாவுக்குப் பின்னர் அமைச்சரவை திருத்தி அமைக்கப்படலாம் என அம்னோ தொடர்புடைய நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், பெயர் குறிப்பிடப்படாத வட்டாரங்களை மேற்கோள்காட்டி அறிவித்துள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1எம்டிபி குளறுபடிகளைக் குறைகூறும் துணைப் பிரதமர் முகைதின் யாசினை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுவார் என்ற ஊகம் பரவிவரும் வேளையில் இச்செய்தி …
அஸ்மின்: சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படாது
பாஸ்- டிஏபி பிரச்னைகளின் காரணமாக சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுவதை மந்திரி புசார் அஸ்மின் அலி மறுத்தார். அவற்றின் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக அவர் சொன்னார். பிகேஆர் துணைத் தலைவருமான மந்திரி புசாரிடம், பக்கத்தான் ரக்யாட்டை ஆட்டிப்படைக்கும் நெருக்கடிக்குத் தீர்வுகாண அவர் எப்போது டிஏபி-யையும் …
பிஏசி-இன் 1எம்டிபி விசாரணை: நேரடி ஒளிபரப்பில்லை
பொதுக் கணக்குக் குழு, 1எம்டிபி-இடம் நடத்தும் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கு மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அனுமதி அளிக்க மறுத்து விட்டார். நாடாளுமன்றக் குழுக்களில் விவாதிக்கப்படுவதை நேரடி ஒளிபரப்புச் செய்வதை நிலை ஆணை 85 தடுக்கிறது என்று பண்டிகார் கூறினார். குழுவிடம்…
பாஸ் ஜெலுபு தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறினர்
ஜெலுபு பாஸ் தலைவர்கள் ஐவர் பதவி துறப்பதாகவும் கட்சியிலிருந்து வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளனர். இஸ்லாமியக் கட்சியின் அண்மைய நடப்புகளால், குறிப்பாக கட்சித் தேர்தலில் உலாமா அணியிடம் முற்போக்காளர் அணி கிட்டதட்ட முற்றாக தோல்வி அடைந்ததன் விளைவாக, அவர்கள் இம்முடிவுக்கு வந்துள்ளனர். “புதிய பாஸ் தலைமையிடம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை”, என…
மகாதிர்: 1எம்டிபி -இன் முட்டாள்தனங்கள்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 1எம்டிபி-இன் பல நடவடிக்ககள் அதன் “முட்டாள்தனத்தை”ப் பறைசாற்றுவதாக உள்ளன என்கிறார். அதே வேளையில், தாம் பலமுறை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சாடியிருந்தபோதும் 1எம்டிபி செய்த தவறு என்னவென்பது மக்களுக்கு இன்னும் புரியாமலேயே இருக்கிறது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். “என் வலைப்பக்கத்தில்…
எம்டிபி விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப பிஏசி இணக்கம்
1எம்டிபி விசாரனையைத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புவத்தில் பொதுக் கணக்குக் குழு(பிஏசி)வுக்கு எந்தப் பிரச்னையுமில்லை. “அதில் எனக்குப் பிரச்னையே இல்லை”, என பிஏசி தலைவர் நூர் ஜஸ்லான் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். “ஆனால், நடப்பு நாடாளுமன்ற நடைமுறையில் அதற்கு இடமில்லை.அதனால் கேள்வி என்னவென்றால் நேரடி ஒளிபரப்புக்கு அனுமதி அளிக்கும் …
பாஸ் டிஏபியுடன் உறவுகளை முறித்துக்கொண்டதா? குழப்பம்தான் நீடிக்கிறது
பக்கத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சியான டிஏபியுடன் உறவுகளை முறித்துக்கொள்ளும் விவகாரத்தில் பாஸ் தலைவர்கள் பேசும் பேச்சு குழப்பத்தைத்தான் தருகிறது. அண்மையில் நடந்து முடிந்த பாஸ் முக்தாமாரில் பேசியவர்களில் சிலர் பாஸ் இன்னும் பக்கத்தானில்தான் இருக்கிறது என்றும் வேறு சிலர் அது டிஏபியுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியதாக …
இன்னுமொரு பாஸ் தலைவர் பினாங்கு அரசிலிருந்து விலகினார்
பாஸின் முற்போக்குத் தலைவர்களான முகம்மட் சாபு, முஜாஹிட் யூசுப் ராவைத் தொடர்ந்து இன்னொரு தலைவரும் பினாங்கு அரசில் வகித்த வந்த பதவியைத் துறந்துள்ளார். பினாங்கு பாஸ் தகவல் தலைவர் ரொஸிடி ஹுசேன், பினாங்கு இளைஞர் மேம்பாட்டு கார்ப்பரேசன் இயக்குனர் பதவியிலிருந்து வெளியேறினார். பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் …
மகாதிர்: பிரதமர் பதவி விலகி, குற்றமற்றவர் என நிரூபித்து மீண்டும்…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், நஜிப் அப்துல் ரசாக் மீண்டும் பிரதமராவதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தில் எந்தத் தவறும் நிகழவில்லை என்பது நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்குமுன் 1எம்டிபி நிதி விவகாரங்களில் முழு புலனாய்வு நடப்பதற்கு வழி வகுத்து நஜிப் பதவி விலக வேண்டும் …
அம்னோவுடன் தேநீர் அருந்தினால் அவர்களுடன் ஒன்றிணைகிறோம் என்று அர்த்தமல்ல
பாஸ் கட்சியினர் அவர்களின் தலைவர்கள் அம்னோவுடன் கைகோக்க விரும்புகிறார்கள் என்று குற்றஞ்சாட்டக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார் புதிய உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மட். பாஸ் தலைவர்கள் ஜன்ம பகைவர்களான அம்னோவுடன் அமர்ந்து தேநீர் அருந்துவதை வைத்து உறுப்பினர்கள் அவசரப்பட்டு அப்படி ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது என்றாரவர்.…
பாஸ் பினாங்கிலும் சிலாங்கூரிலும் அரசுப் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது
பாஸ் கட்சியின் இரண்டு முக்கிய புள்ளிகள் அரசுப் பதவிகளிலிருந்து விலகியிருக்கலாம். ஆனால், அக்கட்சியில் உள்ள பலர் அவ்விருவரையும் முன்மாதிரியாகக் கொள்ளத் தயாராக இல்லை. முன்னாள் பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுவும் மத்திய செயல்குழு உறுப்பினர் முஜாஹிட் யூசுப் ராவாவும் டிஏபியுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள முக்தாமாரில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு…
அமைச்சரவையில் மாற்றமா?
1எம்டிபி சர்ச்சையால் அம்னோவில் நிலவும் மாறுபட்ட கருத்துகளின் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என்ற ஊகங்களை மூத்த அமைச்சர்களான ஹிசாமுடின் ஹுசேனும், நஸ்ரி அப்துல் அஸிசும் நிராகரித்தனர். இது குறித்து ஹிசாமுடினிடம் கேட்டதற்கு, அவர் சிரித்ததோடு இது போன்ற கூட்டுச் சதித் திட்ட புனைவியல்களுக்கு தாம் இடம்…
நஜிப்: மகாதிருடன் பொதுவில் வாதமிடுவது நன்றாய் இராது
முதல் தடவையாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடந்த வெள்ளிக்கிழமை 1எம்டிபி கலந்துரையாடலில் கலந்துகொள்ளாததற்கான காரணத்தை விளக்கியுள்ளார். அறைக்குள் நடப்பதாக இருந்த கலந்துரையாடல் பொது விவாதமாக உருமாறியதுதான் காரணமாம். ‘ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற தலைப்பிடப்பட்டிருந்த அந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் தாம் பொதுவில் விவாதமிடுவது முறையாகாது …
‘பதவி விலகுங்கள், பினாங்கு விழுகிறதா என்பது தெரிந்து விடும்’- பாஸுக்கு…
பாஸ், அதன் ஆதரவின்றி பினாங்கு அரசு நிலைக்காது என்று கூறுவதை அபத்தம் என்கிறார் தஞ்சோங் எம்பி இங் வை ஏய்க். “பாஸ் பினாங்கு அரசில் உள்ள அதன் உறுப்பினர்களை பதவி விலகச் சொல்லுங்கள். பாஸ் ஆதரவின்றி டிஏபி-பிகேஆர் அரசு விழுகிறதா இல்லையா என்பது தெரிந்து விடும்”, என பினாங்கு …



