ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
பாஸ் பிரதிநிதி சிலாங்கூர் சட்டமன்றத் துணைத் தலைவர்
சிலாங்கூர் சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பாஸ் கட்சியின் பாங்கி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முகம்மட் ஷாபி இங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷாபி, 28 வாக்குகள் பெற்று அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மன்றத் தலைவர் ஹன்னா இயோ அறிவித்தார். சட்டமன்றத் துணைத் தலைவருக்கான தேர்தலில் பிஎன் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை. செகிஞ்சான் சட்டமன்ற …
பிரிவினை கோரிக்கை வலுப்பதாகக் கூறுவது ஒரு ‘தோற்றப்பாடுதான்’
மலேசியாவிலிருந்து சாபா, சரவாக் ஆகிய இரண்டும் பிரிந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள் பெருகிவருவதாகக் கூறப்படுவது “வெறும் தோற்றப்பாடுதான்” என்கிறார் உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜப்பார். “சிலர் அப்படிச் சொல்லி வருகிறார்கள். அவர்கள் எண்ணிக்கை அதிகமில்லை. அது (பெரும்பாலோர் என்பது) உண்மையும் அல்ல”, என …
PKFZ மீதான வழக்கைக் கைவிட்டது ஏன்? பிகேஏ மீது டிஏபி…
புதிதாக நியமிக்கப்பட்ட கிள்ளான் துறைமுக நிறுவன(பிகேஏ)த் தலைவர் கொங் சோ ஹா, பிகேஎப்ஜெட் மீதான ரிம720மில்லியன் வழக்கைக் கைவிட்டது ஏன் என விளக்க வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. கோலா டிமென்சி (கேடிஎஸ்பி) மீதான அவ்வழக்கைக் கைவிடும் முடிவு “அதிர்ச்சியளிப்பதாக” டிஏபி செர்டாங் எம்பி ஒங் கியான் மிங்(வலம்) …
நஜிப்: மிதவாதம் என்றால் தாராண்மைத்துவம் மற்றும் பன்மைத்துவம் ஆகாது
மிதமான போக்கை கடைபிடிப்பது என்றால் தாராண்மைத்துவத்திற்கு அல்லது பன்மைத்துவத்திற்கு ஒப்புதல் அளிப்பது என்றாகாது என்பதை பிரதமர் வலியுறுத்தினார். தமது மிதமான நிலைப்பாட்டை சில தரப்பினர் "புரிந்துகொள்ளவில்லை" அல்லது "வேண்டுமென்றே புரிந்துகொள்ளவில்லை" என்று நஜிப் அவருடனான நேர்காணலில் கூறியிருந்ததை இன்று (நவம்பர் 23) மிங்குவான் மலேசியா வெளியிட்டது. "மிதமாக இருப்பது…
முன்னாள் நீதிபதி ஹமிட்: மலாய்க்காரர்கள் சிவப்பு இந்தியர்களாகி விடுவர்
டிஎபி மத்திய ஆட்சியைக் கைப்பற்றுவதிலிருந்து தடுப்பதற்கு பாஸ்சும் அம்னோவும் ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் வலியுறுத்தினார். டிஎபி ஆட்சியைக் கைப்பற்றினால் அமெரிக்காவில் "சிவப்பு இந்தியர்களுக்கு" ஏற்பட்ட கதி மலாய்க்காரர்களுக்கும் ஏற்படும் என்றாரவர். மலாய்க்காரர்களின் பிரச்சனைகள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்எ)…
தாக்குதல்களால் மலேசியாகினி மனஉறுதி தளரவில்லை, ஸ்டீபன் கான்
சுயேட்சை செய்திதளமான மலேசியாகினிக்கு எதிராகக் கடந்த 15 ஆண்டுகளாக மேகொள்ளப்பட்ட தாக்குதல்கள் அதன் மனஉறுதியைத் தகர்ப்பதில் தோல்வி கண்டன என்று அத்தளத்தின் கூட்டு நிறுவனரான ஸ்டீபன் கான் இன்று கூறினார். மலேசியாகினியின் 15 ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதன் 1,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிடம்…
எரிபொருள் உதவித் தொகை இரத்துச் செய்யப்பட்டதைச் சாடுகிறது பிகேஆர்
பொருள், சேவை வரி அமலுக்கு வரும் வேளையில் எரிபொருள் உதவித் தொகை கொடுப்பதை நிறுத்திக்கொள்வது பொறுப்பற்ற செயலாகும் என பிகேஆர் இளைஞர் பகுதி அரசாங்கத்தைச் சாடியுள்ளது. உதவித் தொகை இரத்துச் செய்யப்படுவதாக அறிவித்த அரசாங்கம் எதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறது என்று மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என அதன் …
அம்னோ தலைவர்: சரியாகத்தான் சொன்னார் தெங்கு அட்னான்
அம்னோ பேரவையில் பேராளர்கள் மற்ற இனத்தவரின் மனத்தைப் புண்படுத்தும் பிரச்னைகளைத் தொடாமலிருப்பது நல்லது; ஆனால், மலாய்க்காரர் தொடர்பிலான விவகாரங்களைத் தாராளமாக விவாதிக்கலாம். இவ்வாறு அறிவுறுத்திய செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹப்ஷி, நேற்று கட்சித் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் வலியுறுத்திய ஒன்றைத்தான் …
அரசுப் பள்ளிகளில் இஸ்லாமிய சமய ஊடுருவல்: அதனால் அவை தவிர்க்கப்படுகின்றன
மலாய்க்காரர்- அல்லாத பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசாங்கப் பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புவதில்லை. அப்பள்ளிகள் சமய நோக்கத்துடன் செயல்படுவதும் இஸ்லாமிய சமயம் படிப்படியே ஊடுருவி வருவதும்தான் இதற்குக் காரணம் என்கிறார் டிஏபி எம்பி சைரில் கீர் ஜொஹாரி. முன்பு அரசாங்கப் பள்ளிகளில் 70 விழுக்காடு மலாய்க்கார மாணவர்களும் 30 விழுக்காடு …
பெட்ரோலுக்குப் புதிய விலை நிர்ணய முறை
ரோன் 95-க்கான விலை இனி, managed float system என்ற முறையின் அடிப்படையில் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். இதன்படி அனைத்துலகச் சந்தையில் 10-நாள் எண்ணெய் விலைகளிலிருந்து ஒரு சராசரி கணக்கிடப்பட்டு கூடவே சுத்திகரிப்பு ஆலைகள், சில்லறை வணீகர்கள் ஆகியோரின் ஆதாயமும் நிர்ணயிக்கப்பட்டு எண்ணெய்க்கான விலை முடிவு …
1எம்டிபி விவகாரத்தில் டோனி புவாவை நஜிப் மிரட்டுகிறார்
அரசுக்குச் சொந்தமான 1மலேசியா டிவெலப்மெண்ட் பெர்ஹாட் பற்றி டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா தெரிவித்திருந்த கருத்துகளுக்காக அவர் மீது வழக்குத் தொடரப் போவதாக பிரதமர் நஜிப் மிரட்டியுள்ளார். ஒரு யுடியூப் வீடியோ பதிவில் டோனி நஜிப்பின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக டோனியிடம் சார்வு செய்யப்பட்ட ஒரு…
மாணவியின் மரணத்துக்கு மருத்துவமனையின் கவனக்குறைவு காரணமில்லை
ஊழியர்களின் கவனக்குறைவால்தான் ஜி.தினாஷா இறந்தார் என்று கூறப்படுவதை அசுந்தா மருத்துவமனை மறுத்துள்ளது. அந்த 14-வயது மாணவிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதில் மருத்துவமனை நடைமுறைகள் சரியாகவே பின்பற்றப்பட்டன என அம்மருத்துவமனையில் தலைமை செயல் அதிகாரி பீட்டர் டிஎல் லியோங் கூறினார். “தொடக்கநிலை விசாரணைகள் அக்கொள்கை பின்பற்றப்பட்டிருப்பதைக் காண்பிக்கின்றன”, என்றாரவர். தினாஷாவின் பெற்றோர், …
காலிட் உதவியாளர்களுக்கு ரிம2.6 மில்லியன் கொடுக்கப்பட்டதில் அதிகாரமீறல் நிகழ்ந்துள்ளது
சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி, தமக்கு முன்னவரான அப்துல் காலிட் இப்ராகிம் அவரின் உதவியாளர்களுக்கு ரிம2.6 மில்லியன் :ஊக்கத் தொகை கொடுத்த விவகாரத்தில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். காலிட் பதவிக்காலத்தின் இறுதிநாளில் மந்திரி புசார் இன்கோர்பரேடட் (எம்பிஐ) வாரிய உறுப்பினர்களுமான அந்த எண்மருக்கும் அப்பணத்தைக்…
கேமரன் மலை வெள்ளத்துக்கு அட்னான், பழனிவேல் இருவருமே பொறுப்பு
கேமரன் மலை வெள்ளப் பெருக்குக்கும் நிலச் சரிவுக்கும், கேமரன் மலை எம்பி ஜி.பழனிவேல், பகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கூப் ஆகிய இருவருமே பொறுப்பாவர் என்கிறார் சிபூத்தே எம்பி தெரேசா கொக். மாநில அரசு தேவையான சட்ட அமலாக்கத்தைச் செய்யத் தவறியதை அட்னானே ஒப்புக்கொண்டிருக்கிறார். எனவே, பழனிவேல் மட்டுமே …
மசீச: பாஸ் ஹுடுட் கொண்டுவந்தால் டிஏபிக்கு சங்குதான்
எதிர்வரும் அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் சீனப் பள்ளிகள் பற்றிப் பேசப்பட்டு அதன் விளைவாக அவை மூடப்பட்டால் மசீச-வின் “கதையும் முடிந்துபோகும்” என்று டிஏபி எம்பி இங் வெய் ஏய்க் கூறியதால் ஆத்திரமடைந்த மசீச, கிளந்தானில் பாஸ் ஹுடுட்டைக் கொண்டு வந்தால் சீனச் சமூகத்தினர் டிஏபி-க்கு “சங்கு ஊதி விடுவார்கள்” …
மகளின் மரணத்துக்கு மருத்துவமனையே காரணம்: பெற்றோர் குற்றச்சாட்டு
ஜி, தினாஷாவின் பெற்றோர் சிலாங்கூரில் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து செய்தியாளர் கூட்டமொன்றில் குறைகூறிய சில நிமிடங்களுக்குப் பின்னர் அந்த இரண்டாம் படிவ மாணவி இறந்துபோனார். ஞாயிற்றுக்கிழமை இரவு தினாஷாவுக்கு ,14, காய்ச்சல் அடித்ததால் தாயார் ஐ. உதயபவானி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். இரவு மணி …
ரிஸால்மன் பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்தை மறுக்கிறார்
மலேசிய தூதரகத்தின் முன்னாள் இராணுவ அதிகாரியான முகம்மட் ரிஸால்மான் இஸ்மாயில், நியு சிலாந்து பெண் ஒருவர்மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்டதாக சாட்டப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியுள்ளார். பாலியல் வல்லுறவு கொள்ளும் நோக்கத்திலும் கொள்ளையிடும் நோக்கத்திலும் அவர் அத்தாக்குதலில் ஈடுப்பட்டாராம். இக்குற்றச்சாட்டு தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு…
ஜெசிஒய் கலகத்தை அரசாங்கம் மூடிமறைக்கிறதா?
ஜோகூரில், ஜெசிஒய் எச்டிடி டெக்னலோஜி (ஜெசிஒய்) தொழிற்சாலையில் அன்னிய தொழிலாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை போலீசார் மூடிமறைக்க முயல்வது கண்டு மலேசிய தொழிசங்க காங்கிரஸ்(எம்டியுசி) அதிர்ச்சி அடைந்துள்ளது. ஜெசிஒய் தொழிலாளர்களின் தொழிலியல் நடவடிக்கை தொழிலாளர்களுக்கிடையிலான தப்பெண்ணத்தால் உண்டானது என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜப்பார் நாடாளுமன்றத்தில் …
போலீசை இழிவுபடுத்தியவருக்கு ரிம10,500 அபராதம்
போலீசாரை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்ட கார் விற்பனையாளர் ஒருவருக்கு மலாக்கா மெஜிஸ்திரேட் நீதிமன்றம் ரிம10,500 அபராதம் விதித்தது. செப்டம்பர் 25-இல், கடமைச் செய்துகொண்டிருந்த இரு போலீஸ் அதிகாரிகளை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டதை டான் கெங் ஹொங் ஒப்புக்கொண்டார். காலை மணி 9.30க்கு அவர்கள் கடமையில் இருக்கும் படத்தைப் போட்டு…
பிஎன் பிரதிநிதிகள் டத்தோ பட்டம் பெற பணம் கொடுத்த சீன…
திரங்கானு, புக்கிட் பிசியில் இயங்கும் ஒரு சீன சுரங்க நிறுவனம் அச்சுரங்க வேலைகளைச் சுலபமாக்குவதற்காக பிஎன் அரசியல்வாதிகள் டத்தோ பட்டங்கள் பெறுவதற்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளது. சிஎஎ ரிசோர்ஸ்சஸ் என்ற நிறுவனத்தில் தலைமை செயல்முறை அதிகாரி லி யாங் அந்நிறுவனத்துடன் மறைமுகமான தொடர்புடைய அரசியல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் சுமார் யுஸ்$100,000…
சுல்தான் கடிந்துகொண்டிருப்பதை வைத்து தம்மைக் குற்றம் சொல்வது தவறு என்கிறார்…
மஇகா தலைவர் ஜி.பழனிவேல் தம் நாடாளுமன்றத் தொகுதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்குப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணத் தாம் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுவதை மறுக்கிறார். நேற்று பகாங் ஆட்சியாளர் சுல்தான் அஹ்மட் ஷா சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாக அவர் இவ்வாறு கூறினார். “அவர் என்ன செய்தார்? ஒன்றுமே இல்லை......இதுபோன்ற பேரிடர் …
அம்னோ பேராளர்கள் உணர்ச்சிவயப்பட வைக்கும் விவகாரங்களை விலக்கி வைக்க வேண்டும்
அம்னோ ஆண்டுப் பேரவையில் கலந்துகொள்ளும் பேராளர்கள் இனம், சமயம் தொடர்பிலான எளிதில் உணர்ச்சிவசப்படவைக்கும் விவகாரங்களைப் பெரிதுபடுத்திப் பேசாதிருப்பது நல்லது எனத் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அறிவுறுத்தியுள்ளார். உறுப்பினர்களின் தனிப்பட்ட பிரச்னைகளையெல்லாம் பேரவைக்குக் கொண்டுவரக் கூடாது. “தனிப்பட்ட விவகாரங்கள், எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கும் இன விவகாரங்கள்,…
பணி நீக்கம் செய்யப்பட்ட 97 தொழிலாளர்களை கேடிஎம்பி மீண்டும் வேலைக்கு…
வேலைநிறுத்த மறியலில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட 97 தொழிலாளர்களை கேடிஎம்பி மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டது. ஆனால், அவர்களுடமைய சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் காரணம் கோரும் கடிதம் பெற்றவர்களும் அடங்குவர் என்று கேடிஎம்பியின் தலைவர் நாவாவி அஹ்மட் கூறினார். ஆனால், அவர்கள் மீண்டும் தங்களுடைய…


