தினேஷா குடும்பத்தினர் சுகாதார அமைச்சரைச் சந்தித்தனர்

ஜி.தினேஷாவின்  சாவுக்கு  மருத்துவமனையின் அலட்சியம்தான்  காரணம்  என்று  கூறிவரும்  அவரின்  குடும்பத்தார்  இன்று  சுகாதார  அமைச்சர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியத்தை புத்ரா  ஜெயாவில்  உள்ள  அவரது  அலுவலகத்தில்  சந்தித்தனர். அவர்களிடம்  அமைச்சர்  தம்  அமைச்சில் இயங்கும்  தனியார்  மருத்துவ  சிகிச்சை கட்டுப்பாட்டுப்  பிரிவிடம் (யுகேஏபிஎஸ்)  புகார்  செய்யுமாறு  கூறினார். அவர்களும் …

அம்னோ கூட்டத்தில் மகாதிர்

முன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகம்மட், அம்னோ  ஆண்டுக்  கூட்டத்துக்கு  வருவாரா. மாட்டாரா  என்ற  கேள்வி  இருந்துகொண்டே  இருந்தது. உடல்நலன்  குன்றியிருந்ததால்  கூட்டத்துக்கு  வரும் வாய்ப்பு  இல்லை  என்றே  மகாதிரும்  கூறியிருந்தார். பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கைத் தொடர்ந்து  குறைகூறி  வந்திருப்பதால்  தம்  அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில்  மகாதிர்…

சாலைப் பெயர் மாற்றத்தில் குற்றம் காண்பது ஆட்சியாளர்களைக் குறை சொல்வதாகாது

சாலைகளின் பெயர்களை  மாற்றி  அவற்றுக்கு  சுல்தான்களின்  பெயர்களை  இடும்  அரசாங்கத்தின்  போக்கைக்  குறை  கூறுவது  ஆட்சியாளர்களை  எதிர்ப்பதாகாது. “கோலாலும்பூரில்   சில  சாலைகளின்  பெயரை  நீக்கும்  அரசாங்கத்தின்  உத்தேசம்  குறைகூறப்படுவதை ஆட்சியாளர்களுக்கு  எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதன்  அடையாளமாகக்  கருத  வேண்டிய  அவசியமில்லை”, என  அரசமைப்பு சட்ட  வல்லுனர்  அப்துல்   அசீஸ் பாரி …

நஜிப்: தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படாது; அது மேலும் வலுப்படுத்தப்படும்

பிரதமர்  நஜிப்  அப்ல்  ரசாக்,   தேச  நிந்தனைச்  சட்டம் தொடர்ந்து  இருக்கும்  எனக் கூறியதும்  அம்னோ  பேராளர்கள்  எழுந்து நின்று  கரவொலி  எழுப்பி  அவரைப்  பாராட்டினார்கள். ஆக, கட்சிக்குள்  கொடுக்கப்பட்ட  அழுத்தத்துக்குப்  பணிந்து அச்சட்டம்  இரத்துச்  செய்யப்படாது  என்ற  முடிவுக்குப் பிரதமர்  வந்திருப்பதுபோல்  தெரிகிறது. “அச்சட்டம் வைத்துக்கொள்ளப்படும், அத்துடன் …

அம்னோதான் மலாய் நிலங்களை விட்டுக் கொடுத்தது; பாஸ் குற்றச்சாட்டு

மலாய்க்  காப்பு  நிலங்கள்  பறிபோயிருப்பதாக அம்னோ  இளைஞர்  தலைவர்  ஓலமிடும்  வேளையில்  அதற்கு  யார்  காரணம்  என்று  அம்னோ  தன்னைத்  தானே  கேட்டுக்கொள்ள  வேண்டும்  என  பாஸ்  இளைஞர்  தகவல்  பிரிவுத் தலைவர்  முகம்மட்    நாசாயி  இஸ்மாயில்  கூறினார். மலாய்க்காரர்  நிலங்களைப் பாதுகாக்க  அறங்காவல்  மன்றம்  அமைக்க  வேண்டும் …

யூபிஎஸ்ஆர் அறிவியல் பாட மறு தேர்வு: இது குறித்து கல்வி…

  இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளின் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள்  மிகுந்த ஐயத்துடன்  எதிர்பார்த்த ஒன்று. குறிப்பாக, சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து கிடைத்துள்ள தகவல்படி, இவ்வாண்டு தேர்ச்சி முடிவுகள் அறிவியல் பாடத்தில் ''ஏ ''  பெறாத மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.   அதே…

காஜாங்கில் வெள்ளம், அசிசா எங்கே?

சிலாங்கூர் எதிரணித்  தலைவர்  ஷம்சுடின்  லியாஸ்,   இரண்டு நாளாக  சட்டமன்றத்துக்கு   வராத  காஜாங்  சட்டமன்ற  உறுப்பினர்  வான் அசீசா  வான்  இஸ்மாயிலைச்  சாடினார். அது பொறுப்பற்ற  நடத்தை  என  அந்த  சுங்கை  பூரோங்  அம்னோ  உறுப்பினர்  வருணித்தார். “அச்சட்டமன்ற  உறுப்பினர் (அசிசா) வெளிநாட்டில்  இருப்பதாக  அறிகிறேன். “அவரது  தொகுதியில் …

மலாய்காரர்களின் நம்பிக்கையை அழித்த பின்னர் அவர்களைக் கைதூக்கிவிடுவது எப்படி?

மலாய்க்காரர்களுக்கு   தான்  ஒரு  வரமா,  சாபமா?  என ஈக்காத்தான்  முஸ்லிமின் மலேசியா மலேசியா (இஸ்மா) தன்னைத்  தானே  கேட்டுக்கொள்ள  வேண்டும்  என  நெகாரா கூ  அமைப்பின் புரவலரான  அம்பிகா  ஸ்ரீநிவாசன்  கூறியுள்ளார். அந்த  அமைப்பு  மலாய்க்காரர்கள்  முற்றுகைக்கு  ஆளாகியிருப்பதுபோன்ற  சிந்தனையைத்  தொடர்ந்து  பரப்பிவருவது  அவர்களின்  முன்னேற்றத்துக்கு  உதவுகிறதா  அல்லது  அவர்களை…

அஸ்மின்: ‘அவமதிக்கப்பட்ட’ பிஎன் பிரதிநிதிகள் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்

ரிம2.4மில்லியன்  ஒதுக்கீட்டை  நிராகரித்த சிலாங்கூரின்  பிஎன்  சட்டமன்ற  உறுப்பினர்கள், உண்மையில்  பக்கத்தான்  ரக்யாட்  அரசுக்கு  நன்றி  கூற  வேண்டும்  என்கிறார்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி. அவர்கள்  ஒதுக்கீட்டைப்  புறந்தள்ளியிருந்தாலும்   மாநில  அரசு ஆளுக்கு  ரிம200,000  கொடுப்பதைத்  தொடரும்  என்றாரவர். பிஎன்  சட்டமன்ற  உறுப்பினர்களுக்கு  ரிம200,,000  கொடுப்பதுபோக …

எம்பிகளின் சம்பளம் 69விழுக்காடு உயர்கிறது

அடுத்த  ஆண்டிலிருந்து  எம்பிகளின்  சம்பளம்  69 விழுக்காடு  உயர்வதாக  அரசாங்கம்  அறிவித்துள்ளது. இதன்படி  எம்பிகளின்  அலவன்ஸ்  தொகை  ரிம6,508-இலிருந்து  ரிம11,000  ஆக  உயரும். செனட்டர்களின்  சம்பளம்  ரிம4,112  இலிருந்து  ரிம7,000  ஆக  கூட்டப்படுகிறது. அனைத்துக்  கட்சிகளும் கூடிப்  பேசி   எம்பிகளின்  சம்பளத்தை  உயர்த்த  முடிவு  செய்ததாகக்  குறிப்பிட்ட  பிரதமர்துரை …

கடுமையான பாதுகாப்புச் சட்டங்களுக்கு ஆதரவு தாரீர்: எம்பிகளுக்கு நஜிப் வேண்டுகோள்

இன்று  நாடாளுமன்றத்தில்,  அனைத்துலக  இஸ்லாமிய தீவிரவாத  கூட்டமைப்பான  இஸ்லாமிய  அரசின் (ஐஎஸ்)  மிரட்டல்மீது  வெள்ளை  அறிக்கை  தாக்கல்  செய்த   பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், கடுமையான  பாதுகாப்புச்  சட்டங்கள் தேவை  என்றும்  அவற்றுக்கு  நாடாளுமன்றம்  ஆதரவளிக்க  வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டார். ‘ இஸ்லாமிய  அரசின்  மிரட்டலை  எதிர்கொள்ளல்’  என்ற …

பல்கலைக்கழகங்களுக்கான நிதிக் குறைப்பால் கட்டணங்கள் உயரலாம்

கல்வி  அமைச்சு  2015-க்கான  அதன் பட்ஜெட்டில்  பல்கலைக்கழகங்களுக்கான  நிதியைக்  குறைத்தது  ஏன்  என்று  வினவும்  பிகேஆர்  எம்பி  சிம்  ட்ஸி  ட்ஸின்,  இதனால்  கல்விக்  கட்டணம்  உயரலாம்  என்றார். 2014 பட்ஜெட்டுடன்  ஒப்பிடும்போது  புதிய  பட்ஜெட்டில்  ரிம1.05 பில்லியன் அதாவது 12.36  விழுக்காடு  குறைக்கப்படுகிறது. 20  பொதுப் பல்கலைக்கழகங்களில் …

பயங்கரவாதச் சட்டம் என்ற பெயரில் ஐஎஸ்ஏ-க்குப் புத்துயிர் அளிக்கப்படவில்லை

பயங்கரவாதத்துக்கு  எதிரான  புதிய  சட்டம்,  ஏற்கனவே  இரத்துச்  செய்யப்பட்ட  உள்நாட்டுப்  பாதுகாப்புச்  சட்டம்  போன்றதல்ல  எனத்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  கூறினார். “இது பயங்கரவாதம் பற்றி  மட்டுமே  கவனம்  செலுத்தும்”, என்றவர்  இன்று  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  கூறினார். முன்னதாக  இஸ்லாமிய  அரசு  மிரட்டல் மீது  வெள்ளை …

மூல வாக்குறுதியை நினைவில் கொள்க: மலாய்க்காரர்-அல்லாதாருக்கு அம்னோ அறிவுறுத்தல்

மலாய்க்காரர்-அல்லாதார் சமுதாய  ஒப்பந்தத்தில்  கொடுத்த  “மூல வாக்குறுதி”யை  மறந்து  விடக்கூடாது  என்பதை  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின்  நினைவுவுறுத்தியுள்ளார். நாடு  சுதந்திரம்  பெற்றபோது  மலாய்க்காரர்- அல்லாதார்  குடியுரிமை  பெற  அனுமதித்து மலாய்க்காரர்கள்  தியாகம்  செய்துள்ளனர் என கைரி  இன்று  அம்னோவின்  ஆண்டுக்கூட்டத்தில்  கூறினார். பதிலுக்கு மலாய்க்காரர்-  அல்லாதார் …

ஷரிசாட்: மலாய்க்காரர்-அல்லாதாரின் குடியுரிமை பற்றிக் கேள்வி எழுப்பாதீர்

மலேசியாவில்  பிறந்த  சீனர், இந்தியர்  குடியுரிமை  பற்றி  அம்னோ  உறுப்பினர்கள்  கேள்வி  கேட்கக்  கூடாது  என  அம்னோ  மகளிர்  பகுதித்  தலைவர் ஷரிசாட்  அப்துல்  ஜலில்  வலியுறுத்தினார். “இந்நாட்டில்  ஆதியில் வந்த  நம்முடைய சிறப்புரிமைகள்  பற்றி  அவர்கள்  கேள்வி  கேட்காதவரை  நாமும் இந்நாட்டின்  குடிமக்களாகிய  அவர்களின்  உரிமையை  மதிக்க …

விவேகனந்தா ஆசிரமம் வாணிப நோக்கத்திற்காக மேம்படுத்தவும் முடியாது, மேம்படுத்தவும் கூடாது,…

  விவேகனந்தா ஆசிரமத்தின் நிலை என்ன என்பது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் நஸ்ரியுடன் விவாதிப்பதற்காக முன்னாள் மஇகா தலைவரும் அமைச்சருமான வி.டி. சம்பந்தனின் மகள் தேவ குஞ்சரி இன்று (நவம்பர் 25) அமைச்சரை நாடாளுமன்றத்தில் சந்தித்தார் என்று குலா கூறுகிறார். விவேகனந்தா ஆசிரமத்தை ஏன் தேசிய பாரம்பரிய சொத்தாத…

‘அவமதிக்கப்பட்ட’ பிஎன் பிரதிநிதிகள் ரிம200,000 ஒதுக்கீட்டை நிராகரித்தனர்

சிலாங்கூரின் பிஎன்  சட்டமன்ற  உறுப்பினர்கள்  12 பேரும்  அவர்களின்  தொகுதி   மேம்பாடுக்காக பக்கத்தான்  ரக்யாட்  அரசு  கொடுத்த  ரிம200,000 ஒதுக்கீட்டை  நிராகரித்தனர். அந்த  ஒதுக்கீட்டை  அவர்கள்   அவமதிப்பாக  கருதுகிறார்கள். பக்கத்தான்  சட்டமன்ற  உறுப்பினர்களுக்கு  ஆளுக்கு  ரிம700,000  கொடுத்த  அரசு  தங்களுக்கு  ரிம200,000  கொடுத்தது  தங்களை  அவமதிப்பதாகும்  என  எதிரணித் …

அதிகாரக் கோட்டையைக் கதிகலங்க வைத்த பதின்ம வயது மலேசியாகினி

 மக்கள்  கருத்து:எங்களுக்காகக் குரல்கொடுக்க  இருக்கவே இருக்கிறது 15-வயது  மலேசியாகினி எக்ஸோலோட்: @Kini-யை வடிவமைத்த அம்போஸ்  போ-வுக்கும்  மலேசியாகினி  நிறுவனர்களுக்கும் பாராட்டுகள். மலேசியாகினி  15ஆம்  ஆண்டு விழா  நிகழ்வுகள்  அற்புதமாக  இருந்தன. . உணவு  அப்படித்தான்  சுவையாக  இருந்தது, மகிழ்ச்சியும்  நட்புறவுறவும்  நிறைந்த  சூழல். பலத்த  மழையால்கூட  எங்கள்  உற்சாகத்தைக் …

மகாதிர்: அம்னோ பேராளர்கள் தலைவர்களைக் கண்டிக்க வேண்டும்

உடல்நலம்  குன்றியிருந்தாலும்  மனத்தில்  பட்ட  கருத்துகளைப்  பகிர்ந்துகொள்ள தயக்கம்  காட்டுவதில்லை முன்னாள்  பிரதமர்  டாகடர் மகாதிர்  முகம்மட். அந்த  வகையில்  அம்னோவைச்  சீரழிக்கும்  பிரச்னைகளை விவரித்த   மகாதிர், தலைவர்கள்  தவறாக  நடந்துகொள்ளும்போது  அவர்களைக்  கண்டிப்பது  அவசியமாகும்  என்பதையும்  வலியுறுத்தினார். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைத்  தொடர்ந்து  குறைசொல்லிவரும்  மகாதிர், …

தடுப்புக்கைதியின் சாவில் சந்தேகம் கொள்ள எதுவுமில்லை

அண்மையில் ஜோகூர், பெங்கேராங்கில்  தடுப்புக்காவலில்  இருந்தபோது  இறந்த  25-வயது   ஆடவரின் மரணத்தில்  சந்தேகம் கொள்ள  எதுவுமில்லை  என  போலீஸ்  தெரிவித்துள்ளது. அது  ஒரு  திடீர்  மரணம்  என  ஜோகூர்  சிஐடி  தலைவர் ஹஸ்னான்  ஹசான்  கூறினார். சைட் முகம்மட்  அஸ்லான்  சைட்  முகம்மட்  நூர்,  சுங்கை  ரெங்கிட்  போலீஸ் …

ரபிஸி: எண்ணெய் நிறுவனங்களின் ஆதாயம் பாதுகாக்கப்படுவதை நிறுத்துவீர்

எரிபொருள்  விலைகளை  மிதக்கவிடும் அரசாங்கத்தின் புதிய  நடைமுறையைத்  தற்காத்துப்  பேசும்  இளைஞர், விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜமாலுடினைச்  சாடிய  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி,  விலைகள்  மிதக்க  விடப்பட்டாலும்  எண்ணெய்  நிறுவனங்களின்  ஆதாயத்துக்கு மட்டும்  ஆபத்தில்லை  என உத்தரவாதம்  அளிக்கப்பட்டிருப்பதைச்  சுட்டிக்காட்டினார். நேற்று  கைரி, தம்  வலைப்பதிவில் …

நஸ்ரி: கிழக்கு சாபா செல்ல பயமாக இருக்கிறது

கிழக்கு  சாபா ஒரு  பாதுகாப்பான  இடமல்ல  என்பதைத்  தொடர்ந்து  வலியுறுத்தும்  சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  முகம்மட்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்,  காவலர்  துணையின்றி  அங்கு  செல்ல  மாட்டாராம். “பாதுகாவலர்கள்  துணைக்கு  இல்லாமல் கிழக்கு  சாபா  போக  மாட்டேன்”, என  அவர்  கூறியதாக  சின்சியு  நாளேட்டின்  இணையப்  பதிப்பு  தெரிவித்தது.…

ஊடகங்களிடம் சென்றதால் மருத்துவ அறிக்கை கொடுப்பது இழுத்தடிக்கப்படுகிறதாம்

கடந்த  வெள்ளிக்கிழமை  காலமான  ஜி.தினேஷாவின் பெற்றோர், தங்களுக்கு  மகளின்  மருத்துவ  அறிக்கை  கொடுக்கப்படவில்லை  என  அசுந்தா  மருத்துவ  மனைக்கு  எதிராக  இரண்டாவது  முறையாக போலீசில்   புகார்  செய்துள்ளனர். “எங்களுக்கு  உதவி  செய்ய  ஒரு  வழக்குரைஞரையும்  ஏற்பாடு  செய்யப்போகிறோம்”, என தினேஷாவின்  உறவினர்  ரமேஷ்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார். விவகாரத்தை  ஊடகங்களுக்கு …