ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
டிஎன்பி ஊழியரை திட்டியதை ஒப்பினார் நாம்வீ
சர்ச்சைக்குரிய ரேப் இசைக்கலைஞரும் படத்தயாரிப்பாளரும், நாம்வீ என்ற பெயரில் பிரபலமாக விளங்குபவருமான வீ மிங் சீ, 2009-இல் தெனாகா நேசனல் பெர்ஹாட் ஊழியர் ஒருவரை இழிவுபடுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அக்குற்றத்துக்காக மூவார் செசன்ஸ் நீதிமன்றம் மூன்று மாதச் சிறை அல்லது மூன்று மாத சமூகச் சேவைகள் எனத் தீர்ப்பளித்தது.…
சாபா கள்ளக்குடியேறிகள் மீதான ஆர்சிஐ அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏன்?
சாபா கள்ளக்குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணைய(ஆர்சிஐ) அறிக்கையில் “தெரிவிக்கப்பட்டுள்ள சில பரிந்துரைகள் அரசாங்கத்துக்குப் பிடிக்கவில்லைபோலும்” அதனால்தான் அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யாமல் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார் ஆணையத்திடம் சாட்சியமளித்துள்ள முக்கிய சாட்சிகளில் ஒருவர். “கடந்த டிசம்பரில் அது தயாராகி விட்டது. மே 21-இல் …
வணிகர்: அனிபாவுக்கு ரிம100 மில்லியன் கொடுப்பதாக சொல்லவில்லை
தொழில் அதிபரான ஈஷாக் இஸ்மாயில், 2008-இல் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான், பிஎன்னைவிட்டு வெளியேறி அன்வார் இப்ராகிம் புதிய அரசாங்கம் அமைக்க உதவினால் அவருக்கு ரிம100 மில்லியன் கொடுப்பதாக சொன்னதே இல்லை என்கிறார். தாம் ரிம100 மில்லியன் கொடுக்க முன்வந்ததாகக் கூறப்படுவதை “ஒட்டுமொத்தமாக மறுப்பதாக” ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள …
எம்பி: எண்ணெய் விலை உயரும்போது உதவித் தொகை திரும்பி வருமா?
உலகின் எண்ணெய் விலை சரிந்து வரும்வேளையில் உதவித் தொகையை நிறுத்திக்கொண்டு விலையை மிதக்கவிட்டிருக்கும் அரசாங்கம் விலைகள் உயரும் பட்சத்தில் திரும்பவும் உதவித் தொகையை கொடுக்குமா என ஈப்போ பாராட் எம்பி எம்.குலசேகரன் வினவுகிறார். “எந்த நேரத்திலும் உலக எண்ணெய் விலை உயரலாம். இப்போதைய கட்டுப்படுத்தப்பட்ட மிதவை முறையின்கீழ் அரசாங்கத்தின் …
டாயாக் இனத்தவர் ஓரங்கட்டப்படுது ஏன்? நஜிப் விளக்க வேண்டும்
டாயாக் இனத்தவர், பொதுச் சேவைத் துறையில் தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறிக்கொள்வது தொடர்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நடப்பு செனட் கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டிருக்கிறார். “அரசாங்கச் சேவையில் உள்ள பூமிபுத்ராக்களுக்கிடையில் பாரபட்சம்…
விவேகனந்தா ஆசிரமம்: இப்போதெல்லாம் வரலாற்றுக்கான முக்கியத்துவத்தை விட வாணிக நோக்கம்…
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் விவேகனந்தா ஆசிரமம் அமைந்துள்ள இடத்தை மேம்படுத்தி 23 மாடி கொண்டோ கட்டுவதற்கு அதன் அறங்காவலர்கள் வரைந்திருக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்றும், அங்கு ஓர் எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தை விவேகானந்தா ஆசிரமத்தை காப்பற்றுவதற்கான நடவடிக்கை குழு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த…
டீசல் தரும் அதிர்ச்சி; ரோன்95 விலை குறைகிறது
புதிய எரிபொருள் விலைகள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என சி பூத்தே எம்பி தெரேசா கொக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இன்றைய சைனாபிரஸ் டெய்லி-இல், நாளை முதல் அமலுக்கு வரும் எரிபொருள் விலைகள் அறுவிக்கப்பட்டிருந்தன. ரோன்95 - லிட்டருக்கு ரிம2.26 (4 சென் குறைவு) ரோன்97 -…
கேவியெஸ்: நஜிப் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்
தேச நிந்தனைச் சட்டம் விஷயத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அடித்த பல்டியை மக்கள் முற்போக்குக் கட்சி(பிபிபி)த் தலைவர் எம்.கேவியெஸ் ஆதரிக்கிறார். “இந்த ஆட்டத்தில் இரண்டு விதிகள்தான். போஸ் எப்போதும் சரியாகத்தான் சொல்வார். போஸ் தவறாக சொல்லியிருந்தால் முதல் விதி குறிப்பிடுவதைப் பின்பற்றுக(அது , போஸ் எது சொன்னாலும் சரியாகத்தான் …
மசீச ‘தேச நிந்தனைச் சட்டத்தை ஆதரிக்கிறது’, அம்னோ செராஸைச் சாடுகிறது.
மசீச ‘தேச நிந்தனைச் சட்டத்தை ஆதரிக்கிறது’, அம்னோ செராஸைச் சாடுகிறது. மசீச, அதன் துணைத் தலைவர் வீ கா சியோங், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிஎன் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துபேசாமலேயே தேச நிந்தனைச் சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருக்க முடிவெடுத்து விட்டதாக குறைப்பட்டுக்கொண்டார் எனக் கூறப்படுவதை மறுத்து, வீ …
குவான் எங்: வெளிப்படையாக அவமதிக்கும் அம்னோவுடன் தொடர்ந்து இருக்கத்தான் வேண்டுமா?
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், நடந்த முடிந்த அம்னோ ஆண்டுக்கூட்டத்தில் மலேசியாவின் சிறுபான்மை இனங்கள்மீது “வெறுப்பைக் கக்கிய” அம்னோவுடன் கூட்டு வைத்துள்ள பிஎன் பங்காளிக்கட்சிகளைக் கண்டித்துள்ளார். “சீன வாக்குகளை வெற்றிபெற முடியும் என்ற எண்ணத்தை அம்னோ கைவிட்டிருக்கிறது. அதனால் அவர்களை ஏளனப்படுத்துகிறது, அவர்களைப் பற்றிப் பொய்களைக் கூறுகிறது, …
மனிதவள அமைச்சை அம்னோ எடுத்துக்கொள்ள வேண்டும்
மனிதவள அமைச்சை அம்னோ அதன் பாரிசான் நேசனல் பங்காளித்துவ கட்சியான சரவாக் யுனைட்டெட் பியுபில்ஸ் பார்ட்டியிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஓர் அம்னோ பேராளர் வலியுறுத்தினார். அம்னோ பொதுக்கூட்டத்தின் கடைசி நாளான இன்று காலையில் பேசிய சைபுல் ஹாஸிஸி தனியார்துறையில் மலாய்க்காரர்களுக்கு எதிராக வேறுபாடுகள் காட்டப்படுவதால் இது…
லிம்: மலாய் கம்போங்களை விற்றதன் மூலம் இலாபம் அடைந்தது அம்னோ!
நேற்று பாயான் பாருவில் மலாய்க்காரர்களிடையே பேசிய பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பினாங்கு அம்னோ தலைவர்கள்தான் அவர்களின் நிலங்களை வாங்கி விற்றது என்றார். "மலாய்க்காரர்களை விரட்டியடிப்பதற்காக" விலையைப் பொருட்படுத்தாமல் பாலிக் புலாவ் நிலங்களை கட்சி வாங்கியது என்று டிஎபி மற்றும் பினாங்கு அரசாங்கம் மீது அம்னோ…
தாய்மொழிப்பள்ளிகளை மூடக்கூடாது, அம்னோ பேராளர்
அம்னோ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சாபா அம்னோ பேராளர் தாய்மொழிப்பள்ளிகள் மூடப்படக்கூடாது என்று வாதிட்டார். த ஸ்டார் ஓன்லைன் செய்திப்படி, தவ்ஃபிக் அபு பாக்கார் திதிங்ஆன் என்ற அந்த பேராளார் சாபாவில் தாய்மொழிப்பள்ளிகளை மூடுவது சாத்தியமல்ல ஏனென்றால் அதிகமான பூமிபுத்ராக்கள் அப்பள்ளிகளில் பயில்கின்றனர் என்றாரவர். சீனமொழிப்பள்ளிகளில் பயிலும்…
சரவாக் மலேசியாவிலிருந்து விலக நினைப்பது தேச நிந்தனைக் குற்றமல்ல
பிரிவினைக்காக குரல் கொடுப்பதைத் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் குற்றமாக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முடிவுக்கு சரவாக்கில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. சாபா, சரவாக் மாநிலங்கள் மலேசியாவிலிருந்து பிரிந்துசெல்ல கோரிக்கை விடுப்பதைக் குற்றமாக்கும் வகையில் அச்சட்டம் விரிவுபடுத்தப்படும் என அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் அறிவித்ததை கெராக்கான் அனாக் …
‘குர்ஆன் எரிக்கப்பட்டதாக’ சொன்னவர்மீது போலீசில் புகார்
சீனர்கள் ஒரு வழிபாட்டின்போது குர்ஆனை எரித்தார்கள் என்று கூறிய பாலிங் அம்னோ மகளிர் தலைவர் மஷிடா இப்ராகிம்மீது டிஏபி போலீசில் புகார் செய்துள்ளது. “என்ன ஒரு பொறுப்பற்ற பேச்சு”, என கூலாய் எம்பி தியோ நை சிங் சாடினார். . கெடாவில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டிருகிறது.…
தப்பித்துக் கொண்டார் நஜிப், ஆனால் அவரின் முடிவு நெருங்கி வருகிறது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1948ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் தொடர்ந்து இருக்கும் என்று அறிவித்ததும் அம்னோ பேராளர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் அதை வரவேற்றார்கள். நஜிப்பும் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார். ஆனால், அதுவே அவரது கடைசி மூச்சாக இருக்கும் என்கிறார் முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் மைடின்.…
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது நஜிப்பின் கடப்பாடு
தேச நிந்தனைச் சட்டம் இரத்துச் செய்யப்படும் என வாக்குறுதி அளித்த பிரதமர் நஜிப் அப்துல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மலேசிய வழக்குரைஞர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. “வாக்கு கொடுப்பது வசதியாக இருக்கும்போது செய்வதற்காக அல்ல, சிரமமான சூழ்நிலையிலும் அதை நிறைவேற்ற வேண்டியது கடப்பாடாகும். “பிரதமர் ஈராண்டுகளுக்குமுன் தேச …
பினாங்கின் வெற்றிக்கு சீனர்களின் சட்டவிரோத தொழில்களே காரணம்
பினாங்கில் சீனர்களின் பொருளாதாரம் வளமாக இருப்பதற்கு சட்டவிரோத தொழில்களே காரணமாம்.அம்னோ பேராளர் கூட்டத்தில் பெர்மாத்தாங் பாவ் பேராளர் ஸைடி முகம்மட் சைட் இவ்வாறு கூறினார். சீனர்களின் முறைகேடான செயல்கள் “பட்டப் பகலில்” நடக்கின்றன. கண்டிக்கும் துணிச்சல்தான் அம்னோ தலைவர்களுக்கு இல்லை என்றவர் சாடினார். “சீனர்களின் பொருளாதாரத்துக்கு அடிப்படையாக இருப்பவை …
அம்னோ இன்றி மலாய்க்காரர்களால் வாழ முடியும்
மலாய்க்காரர்கள்தான் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள். அதனால் அம்னோ தோற்றுப் போனால்கூட அவர்களால் வாழ முடியும் என்கிறார் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம். அம்னோ தோல்வியுற்றால் மலாய்க்காரர்கள் அழிந்து விடுவார்கள் என பிரதமர் நஜிப் அம்னோ பேராளர் கூட்டத்தில் குறிப்பிட்டதற்கு எதிர்வினையாக அன்வார் இவ்வாறு கூறினார். இளைஞர்கள் அவர்களின் எதிர்காலத்தைத் …
அம்னோ பேராளர்: சீனர் வாக்குகளை மறந்து விடுங்கள்
சீனர்கள் பிஎன்னுக்கு வாக்களிப்பார்கள் என நினைத்து அவர்களின் வாக்குகளைப் பெற முயல்வது வீண் வேலை. அது நடவாது என பேராக் பேராளர் முகமட் ரட்ஸி மனான் இன்று அம்னோ பேராளர் கூட்டத்தில் கூறினார். “அவர்களின் வாக்குகளை நம்பியிருப்பது மணலில் நீரை ஊற்றுவதற்கு ஒப்பாகும். பயனற்ற வேலை. “அம்னோ அதன் …
பெர்காசா: விசாரணையின்றி காவலும் பிரம்படியும் தொடர்ந்து இருக்க வேண்டும்
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் இரத்துச் செய்யப்பட்டாலும் அதன் சாரம் தேச நிந்தனைச் சட்டத்தில் தொடர்ந்து வாழ வேண்டும் என பெர்காசா விரும்புகிறது. அந்த வகையில், தேச நிந்தனைச் சட்டம் வலுப்படுத்தப்படும்போது விசாரணையின்றி காவலில் வைப்பதும் அதில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என அதன் தலைவர் இப்ராகிம் அலி விரும்புகிறார். இது,…
அன்வார் பிஎன்னைக் கவிழ்க்க ரிம100 மில்லியன் கொடுக்க முன்வந்தார்
வெளியுறவு அமைச்சர் அனிபா அமான், 2008-இல், பக்கத்தான் ரக்யாட் புதிய அரசாங்கம் அமைக்க சாபாவின் 10 எம்பிகளுடன் கட்சிமாறினால் ரிம100 மில்லியனும் துணைப் பிரதமர் பதவியும் கொடுக்க அன்வார் இப்ராகிம் தரப்பு முன்வந்தது என கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று கூறினார். தம் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவின் …


