அன்வாரின் டத்தோ பட்டம் பறிக்கப்பட்டது

பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  டத்தோஸ்ரீ  பட்டத்தை  சிலாங்கூர்  சுல்தான்  இரத்துச்  செய்திருக்கிறார். அரண்மனை  அறிக்கை  ஒன்று அண்மைய  மந்திரி  புசார்  நெருக்கடியின்போது  சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷா-வின்  நேர்மை குறித்தும்  ஆட்சியாளர் அமைப்பு பற்றியும்  அன்வார் கேள்வி  எழுப்பியிருந்ததாகவும்  அதன்  விளைவுதான்  இம்முடிவு  என்றும்   தெரிவித்தது.

ஜெப்ரி, மகாதிரைப் பழிவாங்கும் உணர்வை இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறார்

சாபா கள்ளக்குடியேறிகள் விவகாரத்துக்கு  டாக்டர்  மகாதிர்மீது  பழிபோடும்  ஜெப்ரி  கிட்டிங்கானை  அம்னோ- ஆதரவு வலைத்தளம் ஒன்று சரமாரியாக  சாடியுள்ளது. “(ஆர்சிஐ) ஆணையத்தின்  அறிக்கை  மகாதிரைப் பாதுகாக்கும்  ஒரு  ‘கண்துடைப்பு’ என்றவர்  கூறியிருப்பது  மகாதிரை  அரசியல்  ரீதியில்  பழிவாங்கும் உணர்வு இன்னும்  அவரிடம்  இருப்பதைத்தான்  காண்பிக்கிறது”, என்று  MyKmu.Net கூறிற்று.…

அன்வாரின் டத்தோ பட்டம் பறிக்கப்பட்டது

  பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் டத்தோ பட்டத்தை சிலாங்கூர் சுல்தான் பறித்து விட்டார். இது நவம்பர் 3 லிருந்து அமலுக்கு வந்துள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த சிலாங்கூர் மாநில மந்திரி புசார் நெருக்கடியின் போது அன்வார் சிலாங்கூர் சுல்தானின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக…

ஆர்சிஐ வெறும் சிஐயாக ஆக்கப்பட்ட குழப்பம்

  சாபா மாநில குடியேறிகள் மீதான விசாரணை நடத்தப்படுவதற்காக கடந்த ஆண்டு ஜனவரியில் அமைக்கப்பட்ட ஆணையம் "அரச விசாரணை ஆணையம்" (RCI) என்றே தொடக்கத்திலிருந்து அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எல்லாமே மாறியுள்ளது. முதலில், அந்த ஆணையம் "Royal Commission Inquiry" என்று அறிவிக்கப்பட்டது. இப்போது அந்த…

பெல்டா குளோபல் அடுத்த எம்ஏஎஸ் ஆகலாம்

பங்குச்  சந்தையில்  பல  இழப்புகளைக்  கண்டுள்ள  பெல்டா  குளோபல்  வெண்ட்சர்ஸ்  ஹொல்டிங் (எப்ஜிவி) மற்றொரு  மலேசிய  விமான  நிறுவனம்  ஆகும்  சாத்தியம்  உள்ளது. “எப்ஜிவி-க்கு  ஆகக்  கடைசியாக  ஏற்பட்டுள்ள  இழப்பு   மலேசிய  விமான  நிறுவனத்தைப்போல்  அதுவும்  நிதித்தொல்லைகளால்  வீழ்ச்சி  காணலாம்  என்பதற்கான  அறிகுறி”, என்று  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா …

ஜெப்ரி: ஆர்சிஐ அறிக்கை ஒரு ‘கண்துடைப்பு’

சாபா  குடியேறிகள்  மீதான  அரச  விசாரணை  ஆணைய (ஆர்சிஐ) அறிக்கை  முன்னாள்  பிரதமர்  மகாதிர்  முகம்மட்மீது  பழி  வராமல்  பாதுகாக்கும்  ஒரு  கண்துடைப்பு என  சாபாவின்  மூத்த  அரசியல்வாதி  ஜெப்ரி  கிட்டிங்கான்  கூறினார். “சாபா  மக்களுக்கு  அதில்  திருப்தி இல்லை”, என  சாபா  சீர்திருத்தக் கட்சித்  தலைவருமான  ஜெப்ரி…

ஒரு புள்ளிகூட மாற்றப்படவில்லை- ஆர்சிஐ செயலாளர் கூறுகிறார்

சாபா  குடியேறிகள்   மீதான  அரச விசாரணை  ஆணைய  அறிக்கையில்  எந்தத்  திருத்தமும்  செய்யப்படவில்லை  என ஆர்சிஐ  செயலாளர்  சரிபுதின்  காசிம்  வலியுறுத்தினார். 368-பக்கம்  கொண்ட  அவ்வறிக்கை  அமைச்சரவையிடம்  ஒப்படைக்கப்பட்டு  ஆறு  மாதங்கள்  கழித்து  வெளியிடப்படுவது  ஏன்  என்று  கேள்விகளும்  இடையில்  திருத்தங்கள்  செய்யப்பட்டிருக்குமோ  என்று  சந்தேகங்களும்  எழுப்பப்பட்டுள்ளன. “ஒரு …

ஆர்சிஐ: ‘புரொஜெக்ட் ஐசி’-இல் அரசாங்கம், அரசியல் கட்சிகளுக்குத் தொடர்பில்லை

சாபாவில்  குடியேறிகளுக்கு பெருமளவில் குடியுரிமை வழங்கியதில்  அரசாங்கமோ அரசியல்  கட்சிகளோ  சம்பந்தப்பட்டிருக்கவில்லை  என அரச விசாரணை  ஆணைய (ஆர்சிஐ) அறிக்கை  கூறுகிறது. இதனால்  வாக்குகளுக்காகக்  குடியேறிகளுக்குக்  குடியுரிமை  வழங்கியவர்கள்  மத்திய  அரசுத்  துறைகளும்  அம்னோ  தலைவர்களும்தான்  என்று  இதுவரை  கூறப்பட்டு  வந்தது  பொய்யென்று  ஆகிறது. பதிவுத் துறையின்  முன்னாள் …

எம்பி: போலீஸ் காஜாங்கில் தேவாலய வழிபாட்டைத் தடுக்கப் பார்த்தது உண்மையே

காஜாங், பெதானி  தேவாலயத்தில்  ஞாயிற்றுக்கிழமை  வழிபாடு  நடந்துகொண்டிருந்தபோது  இரண்டு  போலீஸ்காரர்கள்  அதைத்  தடுக்க  முயன்றது  உண்மைதான். ஆனால்,   கிறிஸ்துவர்களின் தேசிய  எவெங்கலிகல்  கூட்டமைப்புடன்(என்இசிஎப்)  பேசுமாறு  கூறப்பட்டதும் அவர்கள்  திரும்பிச்  சென்று  விட்டதாக. டிஏபி-இன்  செர்டாங்  எம்பி  ஒங்  கியான்  மிங்  கூறினார். நேற்று, மலேசியாகினியில்  வழிபாட்டை  அவர்கள்  தடுத்து …

சிலாங்கூர் சட்டமன்றத்திலிருந்து பிஎன் வெளிநடப்பு

இன்று  சிலாங்கூர்  சட்டமன்றத்தில்  தேச  நிந்தனைச்  சட்டத்தை  இரத்துச்  செய்ய வேண்டும்  என்று  மத்திய  அரசுக்குக்    கோரிக்கை  விடுக்க  அவசரத்  தீர்மானம்  ஒன்று  தாக்கல்  செய்யப்பட்டது. அத்தீர்மானத்தை  லாவ் வெங்  சான்(டிஏபி- கம்போங்  துங்கு) தாக்கல்  செய்ய  சாஅரி  சுங்கிப் (பாஸ்- உலு கிளாங்)  வழிமொழிந்தார். ஆனால், அத்தீர்மானம் …

சுஹாகாம்: மலேசியாவில் உடல்குறையுடையோருக்கு அவர்களின் உரிமகள் மறுக்கப்படுகின்றன

மலேசியாவில்  உள்ள  உடல்குறையுடையோருக்கு  அவர்களின்  உரிமைகள்  மறுக்கப்படுகின்ற  நிலைதான்  இன்னமும்  உள்ளதாம். மலேசிய  மனித  உரிமை  ஆணையம் (சுஹாகாம்),  அனைத்துலக உடல்குறையுடையோர்  தினத்தையொட்டி   வெளியிட்டிருக்கும்  அறிக்கை  ஒன்றில்  இவ்வாறு  கூறியுள்ளது. “மலேசியாவில், உடல்குறையுடையோருக்குத்  தொடர்ந்து  உரிமைகள்  மறுக்கப்படுகின்றன. மற்றவற்றோடு  பொதுக் கல்விமுறையில்,  பொது, தனியார்  துறைகளில்  வேலைக்குச்  சேர்த்தல் …

அன்னிய முதலீட்டுக்கு உள்நாட்டுப் பங்காளி தேவை என்ற நிபந்தனையை இரத்துச்…

மலேசியாவில்  முதலீடு  செய்ய  விரும்பும்  அன்னிய  நிறுவனங்கள் உள்நாட்டு  நிறுவனமொன்றைப்  பங்கு  சேர்த்துக்கொள்ள  வேண்டும்  என்ற  கொள்கையை  நீக்க  வேண்டும்  என்று  லண்டன்  மேயர்  போரிஸ்  ஜான்சன்  பரிந்துரைத்துள்ளார். நேற்றிரவு கஜானாவின் உலகளாவிய  சொற்பொழிவு  நிகழ்வில்  உரையாற்றிய  அவர், “இந்த  ஆலோசனையைப்  பரிசீலிக்க  வேண்டும்”, எனப் பிரதமர்  நஜிப் …

பெர்காசா: மலாய்க்காரர் நலன் காப்பது இனவாதமல்ல

மலாய்க்காரர்-அல்லாதார் “சமுதாய  ஒப்பந்தத்தை” மதிக்க  வேண்டும்  என்று  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின் கேட்டுக்கொண்டிருப்பதை  “இனவாதப் பேச்சு” என்று  வருணித்துள்ள  பிகேஆர்  இளைஞர்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக்  அஹ்மட்டை  மலாய்  உரிமைக்காகப்  போராடும் பெர்காசா  கண்டித்துள்ளது. மலாய்க்காரர்  உரிமைகளைப்  பாதுகாக்க  முனைவது இனவாதமல்ல  என்று  கூறிய …

மாணவர் இயக்கத்தில் ‘பிஎன்னுக்கு வாக்களிக்க’ச் சொன்ன அமைச்சர்

மாணவர்களும்  பெரியவர்களும் கலந்துகொண்ட  ‘மீண்டும்-பள்ளிக்கூடம் போகலாம்’ இயக்கத்தில்  உரையாற்றிய  உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார  அமைச்சர்  ஹசன்  மாலேக், பாரிசான்  நேசனலுக்கு  வாக்களிக்கச்  சொல்லவும்  மறக்கவில்லை. உலகத்திலேயே  மக்களின்  நல்வாழ்வு  பற்றிச்  சிந்துக்கும் “ஒரே  அரசாங்கம்”  பிஎன் மட்டுமே  என்று  ஹசன்  கூறினார். “அதனால், பிஎன்னுக்கு  வாக்களிக்க …

சீனப் புதுக்கிராமங்கள் சீனர்கள் காலூன்ற உதவின

1952-இல், சீனர்கள்   பல  மில்லியன்  ரிங்கிட்  பெறுமதியுள்ள  புதுக்கிராமங்களில் குடி அமர்த்தப்பட்டது  அவர்கள்  இந்நாட்டில்  வலுவாகக்  காலூன்ற  பெரிதும்  உதவியதாக  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா)  உதவித்  தலைவர்  அப்துல்  ரஹ்மான்  மாட்  டாலி  கூறினார். “மெர்டேகாவுக்கு  சில  ஆண்டுகளுக்குமுன், சர்  ஹெரோல்ட்  பிரிக்ஸ் மிகப்  பெரிய  நடவடிக்கையை …

தேவாலய வழிபாடு ‘இரைச்சலாக இருந்ததால்’போலீஸ் தடுத்து நிறுத்தியதாம்

மிகுந்த  இரைச்சலாக  இருப்பதாய்  அண்டைவீட்டார்  புகார்  செய்ததை  அடுத்து  காஜாங் தேவாயம்  ஒன்றில்  நடைபெற்றுக்  கொண்டிருந்த  ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை  போலீசார்  தடுத்து  நிறுத்தியதாகக்  கூறப்படுகிறது. இச்சம்பவம்  காஜாங், பெதானி  தேவாலயத்தில்  கடந்த  ஞாயிற்றுக்கிழமை  நடந்தது. வழிபாடு  நடந்துகொண்டிருந்த  நேரத்தில் போலீஸ் கடைவீடு  ஒன்றில்  அமைந்திருந்த  தேவாலயத்துக்குள்  சென்றார்களாம். “வழிபாட்டை …

‘கிள்ளிங்’என்று சொன்னவருக்கு எதிராக நாடு முழுக்க போலீஸ் புகார்

கடந்த  வார  அம்னோ  பேராளர் கூட்டத்தில் இந்தியர்களை  இழிவுபடுத்தும் சொல்லைப்  பயன்படுத்திய  பெர்மாத்தாங்  பாவ்  அம்னோ  தலைவர்  ஜைடி  முகம்மட்  சைட்-டுக்கு  எதிராக    நாடு  முழுக்க  போலீஸ்  புகார்  செய்யும்  இயக்கமொன்று  தொடங்குகிறது. முதல் புகார் இன்று  கிள்ளானில்  தமிழர்  செயல்படையால்  செய்யப்பட்டது “கிள்ளிங்”  என்று  சொல்லி  ஜைடி…

கெராக்கான்: அம்னோ பேராளர்கள்மீது தேச நிந்தனைக் குற்றம் சாட்டுக

அரசாங்கம்  தேச  நிந்தனைச்  சட்டத்தைச்  செயல்படுத்துவதில்  நியாயமாக  நடந்துகொள்ள  வேண்டும்  என  வலியுறுத்திய  கெராக்கானின்  பல்ஜிட் சிங்,  அம்னோ  பேராளர்கள்  முகம்மட்  ஜைடி முகம்மட்  சைட், மஷிடா  இப்ராகிம்  ஆகியோருடன் பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலியையும்  கூண்டிலேற்ற வேண்டும்  எனக்  கூறினார். ஆள் பார்த்துத்தான்  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்படுகிறது…

கூட்டத்துக்கு வராத பழனிவேலுக்கு கேமரன் குடியிருப்பாளர்கள் கண்டனம்

அண்மைய  நிலச் சரிவுகள்  பற்றி  விவாதிக்க ஞாயிற்றுக்கிழமை  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த ஒரு  கருத்தரங்குக்கு  இயற்கைவள, சுற்றுச்சூழல்  அமைச்சர் ஜி.பழனிவேல்  வராததைக்  கண்டு  கேமரன்  மலை  குடியிருப்பாளர்கள்   ஆத்திரமடைந்துள்ளனர். கேமரன்  மலை  எம்பியான பழனிவேலுவுடனும்  தானா  ராத்தா  சட்டமன்ற  உறுப்பினர்  லியோங்  இங்கா இங்காவுடனும்  கலந்துரையாட ரக்யாட்  பிரிஹாதின்  கேமரன்…

அம்னோ இருவர்மீது விசாரணை நடத்த ஜாஹுட்-டின் உத்தரவுக்குக் காத்திருக்கிறார்களா, போலீசார்?

அம்னோ  பேராளர்கள்  முகம்மட்  ஜைடி  முகம்மட்  சைட், மஷிடா  இப்ராகிம்  ஆகியோருக்கு  எதிராக பல  புகார்கள்  செய்யப்பட்டும்  போலீசார்  நடவடிக்கை  எடுக்கத்  தயங்குவது  ஏன்? உள்துறை  அமைச்சர்  பச்சை  விளக்குக்  காண்பிக்கக்  காத்திருக்கிறார்களா  என  டிஏபி  பெருந் தலைவர்  லிம்  கிட்  சியாங் வினவுகிறார். அவ்விருவரும்  பிரதமர்,  துணைப் …

கிட்டிங்கான்: முதலில் தீவிரவாதிகளைக் கைது செய்யுங்கள்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட் ஹமிடியும்,  சாபா  விவகாரம் தொடர்பில்  யாரையும்  கைது   செய்யுமுன்னர்  கள்ளக்குடியேறிகளுக்கு  போலி  அடையாள  அட்டைகளையும்  மைகார்டுகளையும்  கொடுத்து  அவர்களை  வாக்காளர்  பட்டியலிலும்  இடம்பெறவைத்த ‘துரோகிகளையும்  கயவர்களையும்’   கைது  செய்ய  வேண்டும்  என  சாபா சீர்திருத்தக் கட்சி (ஸ்டார்) …

‘கம்முனிஸ்ட் கட்சி விருந்து’ ஏற்பாட்டாளர்கள்மீது போலீஸ் விசாரணை

மலாயா கம்முனிஸ்டுக்  கட்சி  தொடர்பில்  ஒரு  விருந்து  நிகழ்வுக்கு  ஏற்பாடு  செய்தவர்களை  போலீஸ்  விசாரணைக்கு  அழைக்கும்  என பினாங்கு துணை  போலீஸ்  தலைவர்  ஏ,தெய்வீகன்  கூறினார். சனிக்கிழமை  பட்டர்வொர்த்  பல்நோக்கு  மண்டபத்தில்  நடைபெற்ற  அவ்விருந்து  பற்றி  இதுவரை  24  புகார்கள்  செய்யப்பட்டிருப்பதாக  அவர்  கூறினார். “அவர்களை  நேரடியாக  தொடர்புகொள்வோம்.…

சட்டமன்றத் துணைத் தலைவர் பதவிமீது டிஏபி-க்கு ஏன் இத்தனை மோகம்?…

சட்டமன்றத்  தலைவர்  பதவி  வேண்டும்  என்று  பிடிவாதம்  பிடிக்கும் டிஏபி- யை சிலாங்கூர்  கெராக்கான்  சாடியுள்ளது. சிலாங்கூர்  சட்டமன்றத்தில்  இரண்டாவது  துணைத்  தலைவர்  பதவி  உருவாக்கப்பட்டு  அது  டிஏபி-க்குக்  கொடுக்கப்பட  வேண்டும்  என்று சிலாங்கூர்  டிஏபி  தலைவர்  டோனி  புவா  கோரிக்கை  விடுத்திருப்பதை  சிலாங்கூர்  கெராக்கான்  செயலாளர்  எண்டி …