ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
பிஎஸ்எம்: பைபிள் மீது இடப்பட்டுள்ள முத்திரைக்காக சிலாங்கூர் மன்னிப்பு கோர…
சிலாங்கூர் மாநிலத்தில் பைபிள் விநியோகிப்படுவது பற்றிய சட்டவிதிகளை 30 பைபிள் பிரதிகளில் பதித்ததற்காக சிலாங்கூர் அதிகாரத்தினர் மன்னிப்பு கோர வேண்டும் என்று மலேசிய பைபிள் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பக்கூடாது என்று சிலாங்கூர் மந்திரிபுசார் அஸ்மின் அலி முன்பே கூறியிருந்த போதிலும், அம்மாதிரியான முத்திரை…
குவான் எங்: முட்டாள்கள் மலேசியர்கள் அல்ல, அது பிஎன்
மலேசியன் ஏர்லைன்ஸின் (மாஸ்) தோல்விக்கு காரணம் மலேசியர்கள் முட்டாள்களாக இருப்பதுதான் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் நேற்று கூறியிருந்தார். இக்கருத்துக்கு வலுவான எதிர்ப்பு தெரிவித்த பினாங்கு மாநில முதல்வரும் பகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், முட்டாள்கள் மலேசியர்கள் அல்ல. பிஎன்தான் முட்டாள் என்றார். அரசாங்கம்…
மஇகா: தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறுதேர்தல் இல்லை
சங்கங்கள் பதிவகத்தின் உத்தரவுப்படி கட்சியின் பதவிகளுக்கு மறுதேர்தல் நடத்தப்படும் என்பதை மஇகா உறுதிப்படுத்தியது. ஆனால், கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரின் பதவிக்கு மறுதேர்தல் இல்லை. 2013 ஆண்டு நடைபெற்ற கட்சியின் தேர்தலில் தலைவர் ஜி. பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம்…
‘மலேசியர்கள் முட்டாள்கள், அதுதான் எம்ஏஎஸ் தோல்விக்குக் காரணம்’
“மலேசியர்கள் முட்டாள்கள். விமானப் போக்குவரத்தை நடத்தத் தெரியவில்லை”. மலேசிய விமான நிறுவன(எம்ஏஎஸ் நியுகோ)த்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக கிறிஸ்டர் ஆர் முல்லர் நியமிக்கப்பட்டிருப்பது பற்றி முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இவ்வாறு கருத்துரைத்தார். மலேசியர்களுக்கு விமானப் போக்குவரத்தை எப்படி நடத்துவது என்று தெரியவில்லை.. அதன் காரணமாகவே …
வேலையைச் சரியாக செய்யாதவருக்குப் புதிய குத்தகையா?
குறிப்பிட்ட தரவரைவுகளுடன் இரண்டு எரிஉலைகளை உருவாக்கும் குத்தகையைச் சரியாக செய்து முடிக்காத சுமுர் முத்தியாரா நிறுவனத்துக்கு சுற்றுலா அமைச்சின் சுற்றுப்பயணத்தை மேம்படுத்தும் விளம்பரக் குத்தகை வழங்கப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிஉலைகளைக் கட்டும் நிறுவனத்துக்கு விளம்பரத் தொழில் ஒத்து வருமா என செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் கேள்வி …
மகாதிர்: பிரதமராக இருந்தபோது குறைகூறுவோர்மீது வழக்கு தொடுத்ததில்லை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தாம் பதவியில் இருந்தபோது தம்மைக் குறைகூறியவர்கள்மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டதில்லை என்றார். “நீதிமன்றம் போனதில்லை. (குறைகூறுவோருக்கு) பதில் சொல்வேன். “நான் காரியங்களைச் சரியாகச் செய்திருந்தால் எதற்காக பயப்பட வேண்டும்?”, என்றவர் வினவினார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எதிரணி எம்பிகள் டோனி …
சாலைகளின் பெயர் மாற்றத்தை நிறுத்துங்கள்
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கோலாலும்பூரில் எட்டு சாலைகளின் பெயர்களை மாற்றுவதை நிறுத்திவைக்க வேண்டுமென டிஏபி உதவித் தலைவர் தெரேசா கொக் வலியுறுத்தியுள்ளார். ஆட்சியாளர் மன்றம் கோலாலும்பூர் சாலைகளின் பெயர்களை மாற்றச் சொல்லவில்லை என ஆட்சியாளர்களின் முத்திரை காப்பாளர் சைட் தானியல் சைட் அஹ்மட் …
ரோஸ்மாவைக் கேள்வி கேட்க வழக்குரைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்களாம்: ரபிஸி கூறுகிறார்
பல இலட்சம் ரிங்கிட் பெறுமதியுள்ள வைர மோதிரம் தொடர்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் தம்மீது வழக்கு தொடுப்பதை பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி வரவேற்கிறார். மோதிரத்தைச் சுற்றி மர்மம் சூழ்ந்திருப்பதாக மலேசியாகினியிடம் தெரிவித்த அவர், “பல வழக்குரைஞர்கள் ரோஸ்மாவைக் குறுக்கு-விசாரணை செய்ய …
கருக்கலைப்புக்கு சிறை என்பது ‘காலத்துக்கு ஒத்துவராத, மட்டுமீறிய’ தண்டனை
கருக்கலைப்பு செய்துகொண்ட ஒருவரைச் சிறையில் தள்ள சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் காலாவதியான ஒரு சட்டத்தைப் பயன்படுத்தியிருப்பதை வழக்குரைஞர் குழு ஒன்று சாடியுள்ளது. “அச்சட்டம் அரிதாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் சுய விருப்பத்தின்பேரில் கருக்கலைப்பு செய்யப்படும்போது அது பயன்படுத்தப்படுவதில்லை. “சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டால் ஒழிய அது ஒரு குற்றச் செயல்தான் என்றாலும் மலேசியாவில் …
கிறிஸ்டபர் முல்லர் எம்ஏஎஸ்-ஸின் புதிய சிஇஓ
கஜானா நேசனல் பெர்ஹாட், கிறிஸ்டபர் ஆர். முல்லரை மலேசிய விமான நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக(சிஇஓ) நியமனம் செய்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அவரது நியமனம் நடப்புக்கு வருகிறது. முல்லர், இப்போது அயர்லாந்த் விமான நிறுவனமான of Aer Lingus Plc-இன் சிஇஓ-வாக இருக்கிறார்.
மஇகா புதிய தேர்தல் நடத்த வேண்டும், ரோஸ் உத்தரவு
மஇகா அதன் 23 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழுவுக்கும், 3 உதவித் தலைவர்கள் பதவிக்கும் புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்று சங்கங்களின் பதிவக அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சங்கங்கள் பதிவகத்தின் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் என்னென்ன செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கும் கடிதம் ஒன்றை மஇகாவின் தலைமைச்…
பால் லவ்: ‘தவறு, துணை அதிபர் அவர்களே’
தேச நிந்தனைச் சட்டம் எதிரணிக் கட்சிகளை ஒடுக்கும் நோக்கம் கொண்டது என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடென் தெரிவித்துள்ள கருத்தை மறுக்கிறார் பிரதமர் துறை அமைச்சர் பால் லவ். “நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. இங்கு மக்கள் சில வரம்புக்குட்பட்டு அவர்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம்”. தேச நிந்தனைச் …
அமெரிக்கத் தூதர்: நஜிப்பின் பல்டி ஒரு புரியாத புதிர்
தேச நிந்தனைச் சட்டத்தை இரத்துச் செய்யப்போவதாகக் கூறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கி அச்சட்டத்தை வைத்துக்கொள்ள முடிவு செய்ததால் அமெரிக்காவே “குழம்பிப்போயிருப்பதாக”க் கூறுகிறார் அமெரிக்கத் தூதர் ஜோசப் ஒய் யுன். “அரசாங்கம் தேச நிந்தனைச் சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டு அதனிடத்தில் தேசிய நல்லிணக்கச் சட்டம் 2012 …
பினாங்கில் ‘கொலைகார’வீடு கண்டுபிடிக்கப்பட்டது: இருவர் கைது
அண்மைய மாதங்களாக தொடர் கொலைகளால் பினாங்கே அதிர்ந்து போயிருந்தது. ஆங்காங்கே வெட்டப்பட்ட உடலுறுப்புகளும் தலையில்லா முண்டங்களும் கண்டெடுக்கப்பட்டது பெரும் பீதியை உருவாக்கியிருந்தது.. இப்போது போலீசார் புக்கிட் மெர்தாஜமில் ஒரு கம்பத்தில் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள ஒரு வீட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த வீட்டில்தான் மியான்மார் நாட்டைச் சேர்ந்த பலர் …
மலேசியாகினி திங்கள்கிழமை புது இடம் செல்கிறது
மலேசியாகினி, டிசம்பர் 8 திங்கள்கிழமை புதிய இடத்தில் குடியேறுகிறது. அதன் புதிய முகவரி: எண் 9, Jalan 51/205A Off Jalan Tandang Petaling Jaya கூட்டரசு நெடுஞ்சாலையிலிருந்து ஜாலான் டெம்ப்ளரில் திரும்பி, முதலாவது சுற்றுவட்டம் சென்று அங்கு ஜாலான் பெஞ்சாலா வழியே சென்று இடப் பக்கம் திரும்பினால் …
மகாதிர்: இப்போதெல்லாம் பணத்துக்காகத்தான் அரசியலுக்கு வருகிறார்கள்
அரசியல் கட்சிகளில் ஊழல் மலிந்து வருவதாகச் சொல்லி வருத்தப்படும் டாக்டர் மகாதிர் முகம்மட், இப்போது பணம் பண்ணுவதில்தான் குறியாக இருக்கிறார்கள் என்றார். அரசியல் என்றால் நல்ல நோக்கங்களுக்காக போராடுவது என்பதெல்லாம் இப்போதெல்லாம் கிடையாது என்று கூறிய முன்னாள் பிரதமர், குத்தகையைப் பெறுவதிலும் மற்றவற்றிலும்தான் முனைப்புக் காட்டுகிறார்கள் என்றார். “என்னுடைய …
தேச நிந்தனைச் சட்டத்தில் அக்கறை காட்டும் அமெரிக்க அதிபர்
அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென், மலேசியாவில் தேச நிந்தனைச் சட்டத்தையும் மற்ற சட்டங்களையும் பயன்படுத்தி எதிரணியினரை ஒடுக்கப் பார்ப்பது கவலையளிக்கிறது என்று டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் இப்ராகிமின் மேல்முறையீடு மீது விரைவில் தீர்ப்பளிக்கப்பட விருப்பது பற்றியும் அவர் கருத்துரைத்தார். அன்வாரின் வழக்கில் அரசாங்கம் தவறுகளைச் …
ஆர்சிஐ அறிக்கை: நம்ப முடியவில்லை கோத்தா கினாபாலு மக்களால்
சாபாவில் அடையாள அட்டைகள்(ஐசி) பெருமளவில் வழங்கப்பட்டதற்கு பணம்தான் காரணம் என்றும் அரசியல் அல்லவென்றும் அரச விசாரணை ஆணைய (ஆஎசிஐ) அறிக்கை கூறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதும் பொறியியல் பேராசிரியரான ரோசலாம் சர்பட்லி கேலிச் சிரிப்பு சிரித்தார். “பின்னாளில் பணத்தாசைதான் காரணமாக இருந்தது என்பது உண்மைதான். ஆனால்,…
கள்ளக் குடியேறிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவீர்
சாபா கள்ளக்குடியேறிகள் மீது அரச விசாரணை ஆணைய (ஆசிஐ) அறிக்கை வெளியாகியிருப்பதை அடுத்து அரசாங்கம் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஇகா இளைஞர் பகுதி கேட்டுக்கொண்டிருக்கிறது. “சட்டத்தின் முழு வீச்சையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டும். எவ்வளவு காலமானாலும் பரவாயில்லை. “வாக்காளர் பட்டியலில் உள்ள சட்டவிரோத பெயர்களையும் …
அன்வார் வழக்கில் தீர்ப்பளிக்கும் நாள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை
ஆறு ஆண்டுகளுக்குமுன் குதப்புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தள்ளுபடி செய்ய பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் செய்துகொண்ட மேல்முறையீடு மீதான தீர்ப்பு கூட்டரசு நீதிமன்றத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்குமேல் முறையீடு செய்ய இடமில்லை என்பதால் இந்த இறுதி மேல்முறையீடு மீதான தீர்ப்பை நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் …
குடியுரிமையை வாரிக் கொடுப்பதாக இருந்தால் பிஎன் எப்போதோ கிளந்தானைப் பிடித்திருக்குமே
குடியேறிகளுக்குக் குடியுரிமையை அள்ளிக்கொடுப்பது உண்மை என்றால் பிஎன் நீண்ட காலத்துக்கு முன்பே கிளந்தானை வென்றிருக்கும் என்கிறார் கிராம, வட்டார மேம்பாட்டு அமைச்சர் முகம்மட் ஷாபி அப்டால். சாபாவில் குடியேறிகளுக்குப் பெருமளவில் குடியுரிமை வழங்கியதில் பிஎன்னும் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுவதை மறுத்த அமைச்சர், பிஎன் அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதில்லை என்றார். “அது …
அன்வார் இப்ராகிம் இன்னமும் ‘டத்தோஸ்ரீ’தான்
சிலாங்கூர் சுல்தான் அவருக்குக் கொடுத்த பட்டத்தைப் பறித்துக் கொண்டிருந்தாலும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமை இன்னமும் ‘டத்தோஸ்ரீ’ என்றே அழைக்கலாம். ஏனென்றால் அவருக்கு மேலும் ஏழு டத்தோஸ்ரீ பட்டங்கள் உண்டு. பெர்லிஸ்(1995), பேராக்(1995), பகாங் (1990), பினாங்கு (1994), சாபா (1994) ஆகியவையும் மற்ற மாநிலங்களும் அவருக்கு அப்பட்டத்தைக் …
அட்னான்: நடப்புப் பெயர்கள் அர்த்தமற்றவை
கோலாலும்பூர் சாலைகளுக்கு இப்போதுள்ள பெயர்கள் பொருளற்றவை என்பதால் அவற்றை நீக்கிப் பேரரசர்களின் பெயர்கள் வைக்கப்படுவதாகக் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். இதற்குமுன் கோலாலும்பூரில் இரண்டு சாலைகள் மட்டுமே சுல்தான்களின் பெயர்களைக் கொண்டிருந்ததாக அவர் சொன்னார். “ஜாலான் மஹாமேரு. ‘மஹாமேரு’ என்றால் என்ன? மாமெரி …


