அன்வாருடைய வங்கிக் கணக்குகள் எனக் கூறிக் கொண்ட எம்பி கண்டனத்…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் 'இஸ்ரேல் தேசிய வங்கியில்' ஒன்பது  கணக்குகள் உட்பட 20 வங்கிக் கணக்குகளை வெளிநாடுகளில் வைத்துள்ளதாக  கூறிக் கொண்ட பிஎன் சிம்பாங் ரெங்காம் எம்பி லியாங் தெக் மெங் நாடாளுமன்ற  உரிமைகள், சலுகைகள் குழுவுக்கு முன்னர் நிறுத்தப்படுவதிலிருந்து தப்பித்துக்  கொண்டுள்ளார். லியாங்கை அந்தக் குழுவுக்கு…

‘பெர்க்காசா என வரும் போது போலீசாரின் இரட்டைத் தரம்’

நிருபர்களுக்கு எதிரான வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் எனக்  கூறப்படுகின்றவர்கள், தமக்கு மிரட்டல்களை விடுத்தவர்கள் ஆகியோர் மீது  குற்றம் சாட்டுவதில் போலீசார் 'செயலற்றுப் போவது' குறித்து பினாங்கு  முதலமைச்சர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார். மே 5ம் தேதி நடந்த 13வது பொதுத் தேர்தலில் தேர்தல் மோசடிகள் எனக் கூறப்படுவது…

அகமட் ஸாஹிட்-டுக்கு எதிரான குற்றச்சாட்டை வணிகர் மீட்டுக் கொண்டார்

உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி தம்மைத் தாக்கியதாக கூறப்பட்டது  தொடர்பில் தாம் சமர்பித்திருந்த இழப்பீட்டுக் கோரிக்கைகளை (claim for  damages) மீட்டுக் கொள்ள வணிகரான அகமட் பாஸ்லி அப்துல்லா ஒப்புக்  கொண்டுள்ளார். அதற்கு ஈடாக அகமட் பாஸ்லி மீது தாம் போட்டிருந்த கோரிக்கையை மீட்டுக்  கொள்ள அகமட்…

சமய, செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் அல்விவி மீது சுமத்தப்பட்டன

ரமதான் மாதத்தில் தங்கள் முகநூல் பக்கத்தில் bak kut teh வாழ்த்துக்களைத்  தெரிவிக்கும் பதிவைச் சேர்த்தது, தங்கள் வலைப்பதிவுகளில் ஆபாச படங்களை  சேர்த்தது ஆகியவை தொடர்பாக தங்கள் மீது கோலாலம்பூர் செஷன்ஸ்  நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களை சர்ச்சைக்குரிய அல்வின்  தான், விவியன் லீ ஜோடி மறுத்துள்ளது. தான்…

சுல்கிப்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத ஏஜி மீது போலீசில் புகார்

என்ஜிஓ-களின் கூட்டமைப்பு ஒன்று, சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தேர்ந்தெடுத்த முறையில் வழக்கு தொடுக்கிறார் என்று போலீசில் புகார் செய்தது. வலைப்பதிவர்கள் அல்வின் டானுக்கும் விவியன் லீ-க்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதும் பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நூர்டினுக்கு எதிராக நடவடிக்கை…

அம்பிகா: தேர்தல் சட்டத்தின் பிரிவு 9ஏ-யை அகற்றுவீர்

தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் அமைப்பான பெர்சே-இன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்,  அரசாங்கம்  வாக்காளர் பட்டியலில் “எதுவும் மூடி மறைக்கப்படவில்லை” என்பதை நிரூபிக்க 1958 தேர்தல் சட்டம் பிரிவு 9ஏ-யை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அது நீக்கப்பட்டால் தேர்தல் ஆணையம் “திருப்தியற்ற” விளக்கங்களைக் கூறிக்கொண்டிருக்க முடியாது. “9ஏ,…

இசி, மை அழியாதது என்பதை நிரூபித்துக் காட்டியது

தேர்தல் ஆணையம் (இசி), கோலா பெசுட் இடைத் தேர்தலில் பயன்படுத்தும் மை 13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தியதுபோல் அல்லாமல் தரமானது என்பதை நிறுவ செய்முறைக் காட்சி ஒன்றை இன்று நடத்தியது. பல செய்தியாளர்கள் அதில் பங்கேற்றனர். மலேசியாகினி செய்தியாளர், அந்த மையை ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் நீரில்…

எம்பி-க்கு 3வாரங்கள்; மந்திரி புசார் விசயத்தில் 3 ஆண்டுகள் ஆகியும்…

மூன்றே வாரங்களில் அதிகாரிகள் டிஏபி எம்பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்கள். ஆனால், ரிம10 மில்லியனை சட்டவிரோதமான வழியில் வெளிநாட்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் நெகிரி செம்பிலான் மந்திரி புசா முகம்மட் ஹசன்மீது மூன்று ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தாலும் இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அங்கலாய்த்துக்கொண்ட…

‘Project IC’-இல் மூசா அமானுக்கும் தொடர்புண்டாம்

சாபா ஆர்சிஐ சாபா முதலமைச்சர் மூசா அமானுக்கும் 'Project IC'-இல் தொடர்புண்டு என்று அரச விசாரணை ஆணைய (ஆர்சிஐ)த்திடம் இன்று தெரிவிக்கப்பட்டது. 1991-இல் வெளிநாட்டவருக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டதும் அவர்களை அம்னோ உறுப்பினர்களாக பதிவுசெய்ய அமைக்கப்பட்ட பணிக்குழுவுக்கு மூசா தலைவராக இருந்தார் என முன்னாள் பார்டி பெர்சத்து சாபா(பிபிஎஸ்) அரசியல்வாதி…

புவா: இதயம் என்பதே இல்லையா அரசாங்கத்துக்கு?

ஏழு மாதங்களில் 11 பேர் போலீஸ் தடுப்புக்காவலில் இறந்துபோன பிறகும்  போலீஸ் புகார்கள் மற்றும் தப்பான நடத்தைமீது விசாரணை ஆணையம் (IPCMC) அமைப்பது தேவைதானா என்று வாதமிட்டு வருவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் டிஏபி எம்பி டோனி புவா. “போலீஸ் காவலில் மலேசியர்கள் இறந்துபோவதைக் கண்டும் அதற்கெதிராக…

டாக்டர் சுப்ரமணியம்: மத்திய செயற்குழு மாற்றங்கள் ‘கேள்விக்குரியன’

மஇகா  மத்திய செயற்குழுவிலிருந்து எஸ்.வேள்பாரியும் புத்ரி தலைவர் உஷா நந்தினியும் நீக்கப்பட்டது பற்றிக் கருத்துரைத்த கட்சித் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், “அது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டிருந்தால் நல்லதுதான். ஆனால், சந்தேகத்துக்குரிய வேறு நோக்கங்கள் இருக்குமானால் அதை ஆராய வேண்டியதுதான்”, என்றார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம்…

அழியா மை விநியோகிப்பாளர் ஊடகங்களைச் சந்திக்க விரும்பவில்லை

அழியா மை விநியோகிப்பாளர் என நேற்று நாடாளுமன்றத்தில் பெயர்  குறிப்பிடப்பட்ட Integrated Challenger (M) Sdn Bhdன் அலுவலகத்திற்குச் சென்ற  பல நிருபர்களைச் சந்திக்க அதன் அதிகாரிகள் மறுத்துள்ளனர். நிறுவனத் தேடலில் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் மலேசியாகினி ஷா  அலாம், செக்சன் 9ல் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில்…

பிலிப்பினோக்காரர், முஸ்லிம் பெயரைப் பெற்றதும் மலேசியர் ஆனார்

பிலிப்பின்ஸில் பிறந்த கிறிஸ்துவர் ஒருவர், ஆவண நடைமுறைகளை சுமூகமாக்கும் பொருட்டு தமது தந்தையின் நண்பரால் முஸ்லிம் பெயர்  கொடுக்கப்பட்ட பின்னர் மலேசியப் பிரஜையானதாக சபா குடியேற்றக்காரர்கள்  மீதான அரச விசாரணையத்திடம் இன்று கூறப்பட்டது. தாம் 9 வயதாக இருந்த போது முகமட் யூசோப் என்னும் பெயரைக் கொண்ட ஒர்  ஆடவர்…

இலங்கைப் போர் திரைப்படம் தொடர்பில் கோமாஸ் தலைவர் விசாரிக்கப்படுவார்

இலங்கை உள்நாட்டுப் போரைச் சித்தரிக்கும் திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டது  தொடர்பில் உள்துறை அமைச்சு, மனித உரிமை அமைப்பு ஒன்றின் இயக்குநரை  விசாரணைக்கு அழைத்துள்ளது. அதனைக் கண்டித்த கோமாஸ் இயக்குநர் தான் ஜோ ஹான், அது ஒரு வகையான  அச்சுறுத்தல் என வருணித்தார். வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக உள்துறை அமைச்சு…

”பக்காத்தான் தேர்தல் வழக்கு அரசமைப்புக்கு உட்பட்டது’

இசி எனப்படும் தேர்தல் ஆணையத்தின் ஏழு உறுப்பினர்களுக்கு எதிராக தான்  தொடுத்துள்ள வழக்கு அரசமைப்புக்கு உட்பட்டது என பக்காத்தான் ராக்யாட்  வலியுறுத்தியுள்ளது. 'காமன்வெல்த் நாடுகள் அனைத்திலும்' உச்ச நீதிமன்றங்கள் தேர்தல் அதிகாரிகளுடைய தவறான தேர்தல் நடத்தை சம்பந்தப்பட்ட வழக்குகளை  விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக பிகேஆர் சுபாங் எம்பி சிவராசா…

தாஜுடின் வெளியிட்ட ‘அதிபர்’ கருத்து தொடர்பில் கர்பால் போலீசில் புகார்

தேச நிந்தனைக் கருத்து எனக் கூறப்படுவது தொடர்பில் விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் துணை  அமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மானுக்கு எதிராக டிஏபி தேசியத் தலைவர்  கர்பால் சிங், இன்று இன்று போலீசில் புகார்  செய்தார். டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் -உடன் சென்ற கர்பால், கோலாலம்பூர் துன்…

‘பழைய அடையாளக் கார்டு முறைக்கு’ புத்துயிரூட்டப்பட வேண்டும்’

சபாவில் வாழும் மக்களை தீவகற்பத்தையும் சரவாக்கையும் சேர்ந்தவர்களிடமிருந்து  வேறுபடுத்திக் காட்டுவதற்கு 'பழைய அடையாளக் கார்டு முறைக்கு'  புத்துயிரூட்டப்பட வேண்டும் என சபா மாநில சீர்திருத்தக் கட்சி (Star) தலைவர்  ஜெப்ரி கிட்டிங்கான் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வேறுபாட்டைச் செய்வதின் மூலம், சபா சுதேசிகளை அடையாளம் கண்டு  அவர்களுடைய உரிமைகள்…

கடலோர நிலம் தொடர்பில் பாஸ் துணைப் பிரதமருக்குச் சவால்

திரங்கானுவில் நான்கு பிஎன் பேராளர்களுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும்  கடலோர நிலத்தை மீண்டும் எடுத்துக் கொள்ளுமாறு திரங்கானு மந்திரி புசார்  அகமட் சைட்-டுக்கு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் உத்தரவிட வேண்டும் என பாஸ் மத்தியக் குழு உறுப்பினர் டாக்டர் சுல்கெப்லி அகமட் சவால்  விடுத்துள்ளார். அந்த நிலம் 'மிகவும் மதிப்பு…

பத்து காஜாவில் 26-வயது ஆடவர் போலீஸ் காவலில் மரணம்

2013-இலிருந்து படிப்படியாகக் கூடிவரும் தடுப்புக் காவல் மரண எண்ணிக்கை மேலும்  அதிகரித்துள்ளது.  பத்து காஜாவில் போலீஸ் காவலில் இருந்த 26-வயது ஆடவர் ஒருவர் நேற்றிரவு இறந்து போனார். இறந்துபோனவரின் தந்தை சியு பா  காலை மணி 8.30க்கு மகனை அடையாளம் காட்ட பத்து காஜா மருத்துமனை சென்றார். அதன் தொடர்பில் அவர் போலீஸ்…

நீங்கள் செக்ஸ் வலைப்பதிவாளர்களாக இருந்தால் தண்டனை விரைவாகும்- ஆர்கே ஆனந்த்

தாங்கள் bak kut teh சூப் சாப்பிட்ட படத்தை இணையத்தில் சேர்த்த செக்ஸ்  வலைப்பதிவாளர்களான முஸ்லிம் அல்லாத ஜோடி மீது அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். முஸ்லிம்களுடைய உணர்வுகளை அல்வின் தான், விவியன் லீ என்ற அந்த ஜோடி  மதிக்கவில்லை என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளதாக பல தரப்புக்கள்  குற்றம்…

‘தேச நிந்தனைச் சட்டத்துக்கு பதிலாக அமையும் சட்டத்தில் மூன்று முக்கிய…

தேச நிந்தனைச் சட்டத்துக்கு பதில் கொண்டு வரப்படும் தேசிய நல்லிணக்கச்  சட்டத்தில் தேச நிந்தனைச் சட்டத்தின் மூன்று முக்கிய அம்சங்கள் தொடர்ந்து  வைத்திருக்கப்படும். மலாய் ஆட்சியாளர்கள் அவமானப்படுத்தப்படுவது அல்லது அவர்களுக்கு  விசுவாசம் காட்டாதது ஆகியவை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சமாளிப்பதும்  அவற்றுள் அடங்கும். இனப் பதற்ற நிலையை உருவாக்கும் தீய…

ஜஹிட் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது உரிமைக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்

உள்துறை அமைச்சர் ஜஹிட் ஹமிடி, போலீஸ்மீதான புகார்களையும் அவர்களின் தப்பான நடத்தையையும் விசாரிக்கும் சுயேச்சை குழு (IPCMC) தொடர்பில் அளித்த பதிலுக்காக மக்களவையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் அவரை நாடாளுமன்ற உரிமை மற்றும் சலுகைகள் குழு முன் நிறுத்த வேண்டுமென்று கோரப்போவதாக ஒரு டிஏபி எம்பி கூறினார்.…

ஹசான் அலி: வத்திகன் பேராளர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது போதாது

நீடித்து வரும் அல்லாஹ் விவகாரம் மீது தாம் வெளியிட்ட கருத்துக்காக வத்திகன்  பேராளர் பேராயர் ஜோசப் மரினோ மன்னிப்புக் கேட்டுக் கொண்டது போதாது  என ஜாத்தி தலைவர் ஹசான் அலி சொல்கிறார். காரணம் அது முஸ்லிகளுடைய ஆத்திரத்தையும் மகிழ்ச்சியின்மையையும்  நிறுத்தவில்லை என்றார் அவர். இந்த நாட்டில் கிறிஸ்துவர்கள் 'அல்லாஹ்'…