தர்மேந்திரன் கொலையில் சந்தேகத்துக்குரிய நாலாவது நபரைத் தேடும் முயற்சி தொடர்கிறது

போலீசார், தர்மேந்திரன் கொலையில் சம்பந்தப்பட்டவராக சந்தேகிக்கப்படும் நாலாவது நபரை இன்னமும் தேடி வருவதாகக் கூறுகின்றனர். மே 22-இல் போலீஸ் காவலில் நிகழ்ந்த தர்மேந்திரனின் மரணம் தொடர்பில் மூன்று போலீஸ் அதிகாரிகள்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாலாமவர் தப்பி ஓடிவிட்டார். அவர் தலைமறைவாகி 41 நாள்கள் ஆகின்றன. அவரை இன்னமும் தேடிவருவதாக…

அன்வார் பெரித்தா ஹரியான் மீது ‘அவதூறு’ வழக்குப் போடுவார்

505 கறுப்பு தினப் பேரணிகளுக்கு பக்காத்தான் ராக்யாட் அந்நிய நிதிகளைப்  பெறுவதாக கூறப்பட்டதின் தொடர்பில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார்  இப்ராஹிம் பெரித்தா ஹரியான் நாளேடு மீது 'அவதூறு' வழக்குப்  போடவிருக்கிறார். முன்னாள் இந்தோனிசிய அதிபர் யூசோப் கல்லாவை மேற்கோள் காட்டி பெரித்தா  ஹரியான் வெளியிட்ட அந்தச் செய்தியை பிஎன்…

டிபிபிஏ-இல் கையொப்பமிட்டால் ஆர்ப்பாட்டம் செய்வோம்: பிஎஸ்எம் எச்சரிக்கை

அரசாங்கம்,  நாடாளுமன்றத்தில்  விவாதிக்காமல்  ட்ரேன்ஸ் பசிபிக் பார்ட்னர்சிப் ஒப்பந்தத்தில் (டிபிபிஏ)  கையொப்பமிட்டால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என  மலேசிய சோசலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்) எச்சரித்துள்ளது. அந்த ஒப்பந்தத்தில்  கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்காகூட காங்கிரசில் அது பற்றி விவாதித்திருக்கிறது. ஆனால், மலேசியா அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றிய…

தேசிய நல்லிணக்கச் சட்ட வரைவு ‘மத்திய கட்டத்தில்’

1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்துக்குப் பதில் அறிமுகம்  செய்யப்படும் தேசிய நல்லிணக்கச் சட்ட வரைவு 'மத்திய கட்டத்தில் இருப்பதாக  சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார். "முதல், இரண்டாம், மூன்றாம் கட்டம் மரணம் நான்காம் கட்டம் எனச் சொல்வதற்கு சட்ட வரைவு என்பது புற்று…

தடுப்புக்காவல் சட்டத்தை நிராகரிக்கிறார் ஏஜி

சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல், தடுப்புக்காவலில் வைக்க வகை செய்யும் புதிய சட்டம் உருவாக்கப்படுவதை ஆதரிக்கவில்லை. இதை இன்று வலியுறுத்திய அப்துல் கனி(நடுவில் இருப்பவர்) ,  உள்துறை அமைச்சிடமிருந்தோ வேறு அரசாங்க அமைப்புக்களிடமிருந்தோ அவசரகாலச் சட்ட(இஓ) த்துக்குப் பதிலாக தடுப்புக் காவலில் வைக்க  அனுமதிக்கும்  புதிய சட்டத்தின் வரைவையோ…

சுலு ஊடுருவலுக்கு இரண்டு வாரம் முன்னதாக அது பற்றி மாவட்ட…

இவ்வாண்டு தொடக்கத்தில் சுலு துப்பாக்கிக்காரர்கள் மேற்கொண்ட ஊடுருவலுக்கு  இரண்டு வாரங்கள் முன்னதாக அவர்கள் அதற்குத் திட்டமிடுவதாக உள்ளூர்  போலீசார் தமக்குத் தகவல் கொடுத்ததாக லஹாட் டத்து மாவட்ட அதிகாரி  சுல்கிப்லி நாசிர் கூறிக் கொண்டுள்ளார். ஆனால் அதனை ரகசியமாக வைத்திருக்குமாறு தமக்குக் கூறப்பட்டதாக சபா  கள்ளக் குடியேறிகள் மீதான…

பிஎன் மீண்டும் மீண்டும் மலாய்க்காரர் அல்லாதார் பூச்சாண்டியைக் காட்டுகின்றது

'கர்பால் சிங் நாட்டின் 'அதிபராகி' விடுவார் எனக் கூறிக் கொள்வதின் மூலம்  தாஜுடின் அப்துல் ரஹ்மான் கல்வியறிவற்ற கிராமப்புற மலாய்க்காரர்களிடையே  அச்சத்தை ஏற்படுத்துகிறார்.' பாஸ் வெற்றி பெற்றால் கர்பால் அதிபர் ஆவார் என கோலா பெசுட் மக்களுக்கு  கூறப்பட்டுள்ளது வெறும் பேச்சு வேண்டாம்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்,…

‘ஒ நஜிப் உங்கள் வலிமை எங்கே போனது ?’

"நஜிப் தீவிரவாதிகள், எஜமானரும் பொம்மலாட்டக்காரருமான மகாதீர்  ஆகியோரது விருப்பங்களுக்கு எதிராக செயல்பட முடியாது. இல்லை என்றால்  அவர் வெளியேற்றப்படுவார்" எம்பி: 'கேப்டன்' எல்லா நோக்கங்களையும் மறந்து விட்டார் ஒடின்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆழமில்லாதவர், முதுகெலும்பு இல்லாதவர்,  பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றவர் என்பது தான் பிரச்னை. அவர்…

‘IPCMC அரசமைப்புக்கு ஏற்ப அமைகிறது’

IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை  ஆணையத்தை அமைக்கும் யோசனை கூட்டரசு அரசமைப்புக்கு ஏற்ப உள்ளதாக  முன்னாள் தலைமை நீதிபதி முகமட் ஜைடின் அப்துல்லா கூறுகிறார். அவர் IPCMC, கூட்டரசு அரசமைப்பின் கீழ் சட்டப்பூர்வமானது என்பதற்கு 140வது பிரிவைச் சுட்டிக்காட்டினார். அரச மலேசியப் போலீஸ்…

தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைக்கும்போது தகவல் தெரிவிக்கப்படும்

தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைக்கும் தேர்தல் ஆணைய(இசி) த்தின் நடவடிக்கை தொடக்கக் கட்டத்தில்தான் உள்ளது. அதில் உத்தேசிக்கப்படும் மாற்றங்கள் குறித்து தகவல் அளிக்கப்படும் என்று உறுதி கூறினார் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம். நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதிகளைப் புதிதாக சேர்ப்பது பற்றி இசி இதுவரை  எந்த முடிவும்…

மகாதிரின் ஆங்கிலமொழி பல்டி: எம்பி சாடல்

கல்வி அமைச்சின் பெயர் மாற்றத்தைக் குறைகூறிய பிகேஆர் சுங்கை பட்டாணி எம்பி ஜோஹாரி அப்துல் அதே வேகத்தில் கணிதத்தையும் அறிவியலையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கையில் (பிபிஎஸ்எம்ஐ) முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அடித்த பல்டியையும் சாடினார். மகாதிர் 2003-இல் அறிமுகப்படுத்திய பிபிஎஸ்எம்ஐ 2011-இல் மீட்டுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் மகாதிரும்…

கைரி: வத்திகன் தூதரை விஸ்மா புத்ரா கண்டிக்க வேண்டும்

மலேசியாவுக்கான வத்திகன் பேராளர் பேராயர் ஜோசப் மரினோ, கிறிஸ்துவர்கள்  'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக்  கூறப்படுவது மீது அவருக்கு ஆட்சேபக் குறிப்பு ஒன்றை பிஎன் இளைஞர் பிரிவு  விஸ்மா புத்ராவை (வெளியுறவு அமைச்சு) கேட்டுக் கொண்டுள்ளது. "அது இந்த நாட்டில் மிகவும் நுட்பமான உணர்ச்சிகரமான விஷயமாகும்,"…

ஈப்போ பாராட் மஇகா பொருளாளர் கொலைவழக்கில் மூவருக்குத் தூக்கு

நான்காண்டுகளுக்குமுன் ஈப்போ பாராட் மஇகா பொருளாளர் என். சிதம்பரத்தைக் கொலை செய்த குற்றத்துக்காக ஈப்போ உயர் நீதிமன்றம் மூவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. விற்பனையாளரான ஏ.மணிமாறன்,24,  வியாபாரியான எஸ்.சரவணன்,29, பாதுகாவலரான கே.பெருமாள், 31 ஆகிய மூவரும் 2009, ஜனவரி 11-இல் இரவு மணி 11.30 அளவில் ஈப்போ, புந்தோங்கில்…

இபிஃஎப் சேமிப்பைக் கொண்டு கடனை அடைக்க முடியாது

கடன் அட்டைகளால் ஏற்பட்ட கடன்களைத்  தீர்க்க முடியாமல் நொடித்துப் போனவர்களுக்குக் கடன்களைச் செலுத்துவதற்கு உதவியாக அவர்களின் ஊழியர் சேமிப்பு நிதி (இபிஎஃப்)யிலிருந்து பணத்தை மீட்டுக்கொள்ள அனுமதிக்கும் திட்டம்  எதையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. இபிஃப் சேமிப்பு பணி ஓய்வுக் காலத்துக்காக சேமிக்கப்படுவது என்று நிதி துணை அமைச்சர் அஹமட் மஸ்லான்…

‘இனவாத’மருத்துவர்கள் பற்றிய கூற்று உண்மையா? சுகாதார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்

இரண்டு அரசு மருத்துவமனைகளில் சீன மலேசிய மருத்துவர்கள் மூவர் மலாய்க்கார நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மறுத்தார்கள் என்று கூறப்பட்டிருப்பது உண்மையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என பினாங்கு அரசு சுகாதார அமைச்சுக்குக் கடிதம் எழுதியுள்ளது. மாநிலச் சட்டமன்றத்தில் பினாங்கு துங்கால் உறுப்பினர் ரோஸ்லான் சைடின் சுமத்திய குற்றச்சாட்டு கடுமையானது…

ஜைரில்: ஒய்டிஎல்-லுக்கு ஏன் ஏகபோக உரிமை ?

பள்ளிக்கூடங்களுக்கான இணையக் கல்வி வசதிகள் மீது ஒய்டிஎல் நிறுவனத்துக்கு  ஏகபோக உரிமை வழங்கப்பட்டது ஏன் என்று டிஏபி எம்பி ஜைரில் கிர் ஜொஹாரி  கேள்வி எழுப்பியுள்ளார். அந்தத் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 9 பில்லியன் ரிங்கிட் வருமானத்தைத்  தரக் கூடியது என்றார் அவர். கடந்த மூன்று ஆண்டுகளாக…

நஸ்ரி: பக்காத்தான் மாநிலங்கள் மாற்றந்தாய் பிள்ளைகள் அல்ல

பக்காத்தான் மாநிலங்கள் மாற்றந்தாய் பிள்ளைகளாக நடத்தப்பட மாட்டா என்று  சுற்றுப்பயண அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு தரப்பிலும் இரு தரப்பையும் உள்ளடக்கிய சுற்றுப் பயணக் குழு  அமைக்கப்படும் தகவலை அறிவித்த போது நஸ்ரி அவ்வாறு கூறினார். 2014 மலேசிய வருகை ஆண்டை ஒட்டி தேசிய…

‘பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை மீது மசீச-வும் மஇகா-வும் இன விளையாட்டை…

பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்ட விவகாரத்தை மசீச-வும்  மஇகா-வும் இன விஷயமாக்கி தாங்கள் நிலைத்திருப்பதற்கு சார்பு நிலையை  தொடர்ந்து வருவதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். அந்த நிலை தேர்ச்சி பெற்ற நாட்டின் ஆற்றலுக்குப் பாதகமானது என அதன்  சொன்னார். "பல்கலைக்கழகங்களில் இடம் கொடுக்கப்படாததை அவை…

எம்பி: ரயில் திட்டம் பிரதமரது வாக்குறுதிக்கு முரணாக உள்ளது

ஜோகூர் இஸ்காண்டார் மலேசியாவில் 20 நிலையங்களை உள்ளடக்கிய புதிய  ரயில் முறையை நிர்மாணிக்கும் குத்தகை நேரடிப் பேச்சுக்கள் மூலம்  வழங்கப்பட்டுள்ளது, பிரதமர் வாக்குறுதி அளித்துள்ள திறந்த டெண்டர் முறைக்கு  முரணாக உள்ளது என டிஏபி எம்பி டோனி புவா சொல்கிறார். அந்த ரயில் திட்டம் Masteel எனப்படும் Malaysian…

சிவில் வழக்கைப் பேசித் தீர்த்துக்கொள்ளும் முயற்சியில் அரசாங்கமும் பெர்சேயும்

அரசாங்கமும் பெர்சேயும்,  கடந்த ஆண்டு பெர்சே இயக்கக் குழு உறுப்பினர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட சிவில் வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியில் பேசித் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன. இன்று அதன்மீது நடைபெறவிருந்த விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 16, 17-க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக  பெர்சே 2.0 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்…

‘அடையாளக் கார்டுகளை மீண்டும் வழங்குவது சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களைத் தடுக்கும்…

சபா மக்களுக்கு மீண்டும் அடையாளக் கார்டுகளை வழங்குவது, அங்கு நிலவும்  கள்ளக் குடியேற்றக்காரர் பிரச்னையைத் தீர்க்காது என முன்னாள் சபா  முதலமைச்சர் சொங் கா கியாட் இன்று கூறியுள்ளார். அவரது கருத்து சபா மக்களுக்கு அடையாளக் கார்டுகளை மீண்டும் வழங்க  வேண்டும் என பல முக்கிய கடாஸான் கட்சிகள்…

அம்பிகா இல்லாவிட்டாலும் பெர்சே 4.0 பற்றி சிந்திக்கப்படும்

பெர்சே அமைப்பை நடப்பு இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வழி  நடத்துகிறோரோ இல்லையோ வாக்காளர் பட்டியல் தூய்மை செய்யப்படுவதை  உறுதி செய்ய பெர்சே 4.0 பேரணி நடத்தப்படும் என அந்த தேர்தல் சீர்திருத்த  போராட்ட அமைப்பு கூறுகின்றது. வாக்காளர் பட்டியல் தூய்மை செய்யப்படுவது முக்கியம் என வலியுறுத்திய அவர்,…

பக்காத்தான் மறுதேர்தல் வேண்டி இசி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தது

பக்காத்தான் ரக்யாட், மற்றவற்றோடு 13வது பொதுத் தேர்தல் முடிவுகள் முற்றிலும் செல்லா என்று அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணைய(இசி)த்தின் ஏழு உறுப்பினர்களுக்கு எதிராக ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது. இசி உறுப்பினர்கள் அழியா மை என்ற பெயரில் மோசடி செய்தார்கள் என்றும் ‘பாரபட்சமாக’ நடந்துகொண்டார்கள் என்றும் கூறி அதன்…