ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
பிபிபி: வெறுப்பை உண்டாக்க முனையும் அம்பிகாமீது நடவடிக்கை எடுப்பீர்
அரசாங்கம் கிறிஸ்துவர்களுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் பிபிபி தலைவர் ஒருவர். கிறிஸ்மஸ் நெருங்கிவரும் வேளையில் அவர் அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பை உருவாக்க முனைகிறார் என ஏ. சந்திரகுமணன் குற்றம் …
ஜனவரியில் எண்ணெய் விலை குறையலாம் என எதிர்பார்க்கிறார் துணை அமைச்சர்
2015 ஜனவரியில் ரோன் 95, ரோன் 97, டீசல் ஆகியவற்றின் விலை குறையலாம் என நிதி துணை அமைச்சர் அஹமட் மஸ்லான் எதிர்பார்க்கிறார். ஆனால், எரிபொருள் விலை குறைந்தாலும் பொருள்களின் விலைகள் குறைவதில்லை, அதுதான் பிரச்னை என்றவர் குறைப்பட்டுக் கொண்டார். “எனவே, இவ்விவகாரத்தில் வணிகர்களும் வியாபாரிகளும் பொறுப்புடன் நடந்து …
எஸ்ஐஎஸ்: ரிதுவானின் சிந்தனை பயங்கரவாதத்தைத் தோற்றுவிக்கும்
சர்ச்சைக்குரிய ரிதுவான் டீ அப்துல்லா போன்ற கல்வியாளர்கள் முன்வைக்கும் வாதங்களை எதிர்க்காவிட்டால் மலேசியாவிலும் இஸ்லாமிய அரசு(ஐஎஸ்) போன்ற தீவிரவாதக் குழுக்கள் தலையெடுக்கலாம் என ஒரு என்ஜிஓ எச்சரிக்கிறது. “இஸ்லாத்தில் ‘மிதவாதம்’ என்றால் ‘அல் வசத்தியா. அது மார்க்கத்தின் முக்கியமான அங்கம். அதிலிருந்து விலகிச் செல்லும்போதுதான் ‘பயங்கரவாத எண்ணங்கள்’ உருவாகின்றன”, என …
ஹுடுட்டால் கவனம் திசைமாறக் கூடாது: ரபிஸி அறிவுறுத்து
ஹுடுட் சர்ச்சையால் பக்கத்தான் ரக்யாட் தலைவர்களின் கவனம் திசைதிரும்பி விடக்கூடாது என பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி கேட்டுக்கொண்டிருக்கிறார். “இந்தக் கருத்து வேறுபாடு 1999இல் பாரிசான் அல்டர்னேடிப் (மாற்று பாரிசான்) தோன்றிய காலம் தொட்டே இருந்து வருகிறது. “மக்களின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நான் …
அம்னோ பேராளர்கள் தப்பு செய்திருந்தால் தேச நிந்தனை வழக்கை எதிர்நோக்குவர்
அண்மைய அம்னோ பேரவையில், அம்னோ பேராளர்கள் தேச நிந்தனைக்குரிய கருத்துகளை மொழிந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள்மீது தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படும் என்று உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜப்பார் கூறினார். “அவர்கள் தவறு செய்திருந்தால், போலீஸ் நடவடிக்கை எடுக்கும். மற்றவர்களிடம் நடந்துகொள்வதைப்போலவே அவர்களிடமும் நடந்துகொள்வார்கள்”, என்றாரவர்.…
சாபா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகுகிறார்?
பிகேஆர் இனானாம் சட்டமன்ற உறுப்பினர் ரொலண்ட் சியா, சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அவருடைய முகநூல் பக்கத்தில் பதவி விலகுவதாக ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது. “உடல்நலக் காரணங்களுக்காக இனானாம் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போகிறேன். கடந்த 17 மாதங்களாக வாக்காளர்களும் கட்சித் தலைமைத்துவமும் …
‘தூங்க மூஞ்சி’ தலைவர்களையா தேர்ந்தெடுப்பது? நஜிப்புக்குக் கண்டனம்
பினாங்கில் பிஎன் கடந்த தேர்தலில் சந்தித்ததைவிட பெரிய தோல்வியை சந்திக்கலாம் என எச்சரிக்கிறார் அம்னோ தலைவர் ஒருவர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கடந்த பொதுத் தேர்தலில் தோற்றவர்களையே பினாங்கில் மீண்டும் தலைவர்களாக நியமித்திருப்பதுதான் இதற்குக் காரணம் என்றாரவர். “அம்னோ தலைவரின் போக்கைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தோற்றுப்போனவர்கள் திரும்ப …
ஐஜிபி-க்கு உயர் நீதிமன்றம் இட்ட உத்தரவு முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி
எம். இந்திரா காந்தியின் பிள்ளையைக் கண்டுபிடித்து அவரிடமே ஒப்படைக்க வேண்டும் அத்துடன் பிள்ளையைத் தூக்கிச் சென்ற அவரின் மதம் மாறிய முன்னாள் கணவரைக் கைது செய்ய வேண்டும் என்ற ஈப்போ உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ்(ஐஜிபி) காலிட் அபு பக்கார் செய்திருந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட …
மஇகா மத்திய செயற்குழு கூட்டம் நடத்தப்படக்கூடாது
மஇகா அதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இரு பதவிகளைத் தவிர்த்து கட்சியின் இதர தலைமைத்துவ பதவிகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சங்கங்களின் பதிவகம் (ரோஸ்) விடுத்திருந்த உத்தரவு குறித்து விவாதிக்க எதிர்வரும் வியாழக்கிழமை கூடவிருக்கும் கட்சியின் மத்திய செயற்குழுவின் கூட்டம் நிறுத்தப்பட…
ஜிஎஸ்டி-யால் தனியார் துறை மருத்துவக் கட்டணம் கூடுவதைத் தடுப்பீர்
ஏப்ரல் 1-இல், பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைக்கு வருவதால் தனியார் மருத்துவக் கட்டணம் உயர்வதை ஆராய வேண்டுமாய் மலேசிய சோசலிசக் கட்சியின் செயல்குழு உறுப்பினரும் சுங்கை சிப்புட் எம்பியுமான டாக்டர் மைக்கல் ஜெயகுமார் பயனீட்டாளர் சங்கங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஜிஎஸ்டி-யால் தனியார் மருத்துவச் சேவைக் கட்டணங்கள் உயரும் என …
அஸ்மின் இன்னும் அன்வாரின் கூட்டை விட்டு வெளிவரவில்லை
சிலாங்கூர் மந்திரி புசார் இன்னமும் அன்வாரின் செல்வாக்குக்கு உட்பட்டவராகத்தான் இருக்கிறார் என்கிறார் அரசியல் விமர்சகரான பேராசிரியர் முஸ்தபா இஷாக். மந்திரி புசார் அஸ்மினின் 100வது நாள் நெருங்கி வரும் வேளையில் அவர் சிலாங்கூரை எந்தத் திசையில் செலுத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்குத் தெளிவான அறிகுறியே இல்லை என அப்பேராசிரியர் கூறினார்.…
யுஎம் வேந்தர் அலுவலகம் செல்ல பக்கத்தான் எம்பிகளுக்குத் தடை
ஏழு மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மீட்டுகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றை யுனிவர்சிடி மலாயா (யுஎம்) வேந்தர் அலுவலத்தில் கொடுக்கச் சென்ற பக்கத்தான் ரக்யாட் எம்பிகள் குழுவொன்று தடுத்து நிறுத்தப்பட்டது. லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா, ஷா ஆலம் எம்பி காலிட் சமட், பாடாங் செறாய் …
துதிப்பாடல் நூல்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஐஜிபியும் ஜாஹிட்டும் மவுனமாக…
ஜோகூரில் கத்தோலிக்க பாதிரியாரிடமிருந்து துதிப்பாடல் நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் உள்துறை அமைச்சர் அஹ்ட் ஜாஹிட் ஹமிடியும் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) காலிட் அபு பக்காரும் வாயை மூடிக் கொண்டிருப்பது ஏன் என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் வினவுகிறார். “அவர்களின் அதிகாரத்துக்கு …
கைருடின்: அல்லாவுக்குத்தான் பயம் வழக்குகளுக்கல்ல
1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) தொடர்பில் போலீஸ் புகார் செய்தது அம்னோ உயர்மட்ட தலைவர்களுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியிருக்கலாம் என்பது பற்றி பத்து கவான் அம்னோ துணைத் தலைவர் கைருடின் அபு ஹசான் கவலைப்படவில்லை. “அதைப் பற்றிய கவலையே இல்லை. ஏனென்றால், உண்மைக்காக போராடுவதில் நம்பிக்கை கொண்டவன் நான்”,…
ஹுடுட் சட்டம் கொண்டுவருவதில் பாஸ் பின்வாங்காது
கிளந்தானில் ஹுடுட் சட்டத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருப்பதாக பாஸ் இன்று மீண்டும் வலியுறுத்தியது. அதேவேளை, புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற விரும்பினால் பக்கத்தான் ரக்யாட் ஹுடுட்டைக் கொண்டுவரும் பாஸின் முயற்சியை நிராகரிக்க வேண்டும் என்று டிஏபி ஆண்டுக்கூட்டத்தில் கூறியதற்காக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கையும் அது சாடியது.…
அல்லாஹ்’விவகாரம் பற்றிய நேர்காணலுக்காக பிஎப்எம்-க்கு அபராதம்
‘மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் பிசினஸ் ரேடியோ நிலையத்துக்கு ரிம10,000 அபராதம் விதித்துள்ளது. 2013, அக்டோபர் 21-இல் இஸ்லாமிய கல்விமான் ரேஸா அஸ்லானின் நேர்காணலை ஒலியேற்றியதற்காக இந்த அபராதம். அந்நேர்காணலில் ரேஸா, மலேசியாவில் முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதைக் குறை கூறியிருந்தார்.
புவாட்: சைபுடின் கட்சி மாறும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் புவாட் ஜர்காஷி, பிகேஆர் முன்னாள் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தம்மை அணுகி, கட்சிமாறி எதிரணியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார் என கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று கூறினார். அப்போது தைவானில் 30 பிஎன் எம்பிகளுடன் ஒரு தங்குவிடுதியில் இருந்ததாகவும் பின்னிரவு மணி…
சட்டத்தில் இல்லாத சட்டத்தின் கீழ் பாதிரியாரிடம் விசாரணை நடத்திய ஜொகூர்…
"அல்லா" என்ற சொல் அடங்கிய துதிப் பாடல் புத்தகங்களை வைத்திருந்த ஒரு பாதிரியாரை சட்டத்திலிருந்து அகற்றப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் விசாரித்த போலீசார் ஒரு பெரும் தவறை புரிந்துள்ளனர். பாதிரியார் சிரில் மன்னயாகம் தண்டனைச் சட்டத் தொகுப்பு செக்சன் 298A கீழ் விசாரிக்கப்பட்டார் என்று ஜொகூர் மாநில…
பிஎன் எம்பி: கட்சித்தாவலைத் தடுக்கவே தைவான் பயணம்
2008-இல், பிஎன் எம்பிகள் பக்கத்தான் ரக்யாட்டுக்குக் கட்சிமாறி விடுவார்களோ என்ற பயத்தினால்தான் சுமார் 40 பேர் செப்டம்பர் 16-க்கு முன்னதாக தைவானுக்கு அனுப்பப்பட்டார்கள் என்பதை பிஎன் எம்பி ஒருவர் ஒப்புக்கொண்டார். பிரதமர் நஜிப் உள்பட, பிஎன் தலைவர்கள் நெடுகிலும் அதை மறுத்து வந்துள்ளனர். இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில், …
யுஎம் துணை வேந்தரின் கொடும்பாவி எரிப்பு
“யுஎம் எண்மர்” மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட வேண்டுமென்ற கோரிக்கைக்குப் பல்கலைக்கழகம் மறுமொழி தெரிவிக்காததால் ஆத்திரமடைந்த மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் துணை வேந்தர் ரொஹானா யூசுப்பின் கொடும்பாவியை இன்று எரித்தனர். வேந்தர் கட்டிடத்துக்கு வெளியில் கொடும்பாவியை எரித்த மாணவர்கள் சில அறிவிப்பு அட்டைகளையும் ஏந்தியிருந்ததாக இஸ்லாமிய மாணவர் சங்கத் தலைவர் …
1எம்டிபி-க்குப் பச்சை விளக்கு காண்பித்தது ஏன்? முகைதினிடம் வினவுகிறது பாஸ்
1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி) விவகாரத்தில் தம் நிலப்பாட்டைத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் எடுத்துரைக்க வேண்டுமென பாஸ் கோரிக்கை விடுத்துள்ளது. நஜிப்பைத் தூக்கவும் பிரதமர் பதவியைக் கைப்பற்றவும் அவ்விவகாரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் நோக்கத்தில் முகைதின் மவுனமாக இருக்கக் கூடாது என பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் மாபுஸ் …
‘இன வெறுப்பைத் தூண்டுவது’ முன்னாள் சிஜே-க்கு அழகல்ல: மசீச சாடல்
சீனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற தருணம் பார்த்திருப்பதாகக் கூறிய முன்னாள் தலைமை நீதிபதி(சிஜே) அப்துல் ஹமிட் முகமட்டை மசீச கடிந்து கொண்டிருக்கிறது. “இதை, மலேசியரிடையே, குறிப்பாக, மலாய்க்காரர்களுக்கும்- மலாய்க்காரர்- அல்லாதாருக்குமிடையில் வெறுப்பைத் தூண்டிவிடும் ஒரு பொறுப்பற்ற முயற்சியாகப் பார்க்கிறோம்”, என மசீச விளம்பரப் பிரிவுத் தலைவர் சாய் கிம் சென் கூறினார்.…
கைதியின் மரணம் தொடர்பில் போலீஸ் மவுனம் காப்பது வெட்கக்கேடான விசயம்
அண்மையில் போலீஸ் காவலில் இருந்த தடுப்புக்கைதி ஒருவர் இறந்துபோனது பற்றிப் போலீசாரிடமிருந்து சரியான விளக்கம் கிடைக்கவில்லை என வழக்குரைஞர் கோபிந்த் சிங் ஆத்திரமடைந்துள்ளார். சைட் முகம்மட் அஸ்லான் சைட் முகம்மட் நவம்பர் 4-இல் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்தது பற்றி விளக்கம் கேட்டு போலீசுக்குக் கடிதம் எழுதியதாகவும் ஆனால்,…


