வேள்பாரி மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டது மீது அரசு சாரா இந்திய…

மஇகா-வில் வலிமை வாய்ந்த மத்திய செயற்குழுவிலிருந்து எஸ் வேள்பாரியை  கட்சித் தலைவர் ஜி பழனிவேல் நீக்கியிருப்பது குறித்து அரசு சாரா இந்திய  அமைப்புக்கள் கூட்டணி ஒன்று வருத்தம் தெரிவித்துள்ளது. துணிச்சலுடன் பேசிய சில மஇகா தலைவர்களில் வேள்பாரியும் ஒருவர் என வர்கா  அமான் தலைமைச் செயலாளர் எஸ் பாரதிதாசன்…

குதப்புணர்ச்சி வழக்கு இரண்டு விவகாரம்: அரசாங்க முறையீடு நாளை விசாரிக்கப்படும்

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் குதப்புணர்ச்சி வழக்கு இரண்டில்  எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து  அரசாங்கம் செய்து கொண்ட முறையீடு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது. புத்ராஜெயாவில் உள்ள முறையீட்டு நீதிமன்றத்தில் அரசாங்க முறையீடு  விசாரிக்கப்படும். 2008ம் ஆண்டு ஜுன் 26ம் தேதி பிற்பகல் மணி 3.10க்கும்…

முன்னாள் ஐஜிபி: ஏஜி சொல்வது தப்பு, தடுப்புச் சட்டம் தேவைதான்

கடந்த ஆண்டு அகற்றப்பட்ட 1969 அவசரக்காலச் சட்ட(இஓ)த்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டமும் தடுப்புக்காவலில் வைப்பதற்கும் இடமளிக்க வேண்டும் என்கிறார் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப்துல் ரஹிம் நூர். “இஓ  எடுக்கப்பட்டதும் குண்டர்கும்பல் சம்பந்தப்பட்ட வன்முறைக் குற்றங்கள் பெருகியிருப்பதைப் பார்க்கிறோம். போலீசாரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்களின் கைகள்…

“பிரிவு 9ஏ அரசாங்கம் ஏமாற்ற உதவுகின்றது என இசி சொல்லி…

"வான் அகமட் அவர்களே தேர்தல்களை நியாயமாகவும் நேர்மையாகவும்  நடத்துவது தான் உங்கள் வேலை. கூடிய விரைவில் அதனை முடிப்பதல்ல" இசி: தேர்தல் தாமதங்களைத் தடுக்க பிரிவு 9ஏ அவசியம் ஹலோ: தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார்  அபத்தமாகப் பேசுகிறார். 1999 தேர்தலைத்…

ஆகவே கடத்தல்காரர்கள் யாத்ரைக்காக பணம் கேட்டனரா ?

"சமயப் பற்றுடைய அந்த கிரிமினல்கள் இங் குடும்பத்திடமிருந்து ஏன் 3,000  ரிங்கிட் பிணைப் பணம் பெற முயற்சி செய்தனர் என்பதை ஐஜிபி விளக்குவாரா ?  அவர்கள் யாத்ரை செல்லத் திட்டமிட்டுள்ளனரா ?" அந்த 'hina Islam' கடத்தல் அல்விவியுடன் தொடர்புடையது என்கிறார் ஐஜிபி  (தேசியப் போலீஸ் படைத் தலைவர்)…

அழியா மை தொடர்பில் ராபிஸி மீது இசி வழக்குப் போடலாம்

13வது பொதுத் தேர்தலுக்கான  அழியா மை விநியோகிப்பாளர் தொடர்பான  குற்றச்சாட்டுக்கள் மீது பாண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயிலுக்கு சட்ட  நடவடிக்கை எடுப்பது பற்றி தேர்தல் ஆணையம் இன்னும் சிந்தித்து வருகிறது. "நோன்பு மாதத்தில் அவர் என்ன சொன்னாலும் சொல்லட்டும். அவர் விளைவுகளை எதிர்நோக்குவார்." அந்த அழியா மையை விநியோகம்…

சிறையில் உதயா முடக்கு வாதத்தால் பாதிக்கப்படலாம் என மனைவி கவலை

சிறையில் உள்ள இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாரின் மருத்துவ தேவைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்று கூறிய அவரின் துணைவியார் எஸ். இந்திரா தேவி, அதனால் உதயா முடக்குவாதத்தால் பாதிக்கப்படலாம் என்று கவலை கொண்டுள்ளார். இன்று பிரிக்பீல்ட்சில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய இந்திரா, தம் கணவர் கடுமையான முதுகுவலியை உண்டுபண்ணும்…

இசி: தேர்தல் தாமதங்களைத் தடுக்க பிரிவு 9ஏ அவசியம்

வாக்காளர் பட்டியலை எதிர்த்து வழக்குப் போடுவதின் மூலம் தேர்தல்  நடைமுறையை தேக்கி வைக்க மக்கள் முயலுவதை தடுக்க தேர்தல் சட்டத்தின்  பிரிவு 9ஏ தேவைப்படுவதாக தேர்தல ஆணைய (இசி) துணைத் தலைவர் வான்  அகமட் வான் ஒமார் சொல்கிறார். "வாக்காளர் பட்டியலை எதிர்த்து வழக்காடுவதற்கு நாம் திறந்து விட்டால்…

கோலா பெசுட்டில் இன்று முன்கூட்டிய வாக்களிப்பு

கோலா பெசுட் இடைத்தேர்தல்: நாள் ஒன்பது  தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார், இன்று கொங் கெடாக் அரச மலேசிய ஆகாயப்படைத் தளத்துக்குச் சென்று அங்கு முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறுவதைப் பார்வையிட்டார். அங்கு சென்றடைந்ததும், வான் அஹ்மட் தம் இடக் கை சுட்டுவிரலை உயர்த்தி…

ரபிஸி: திரெங்கானுவிடம் பணம் நிறைய உண்டு; பயன்படுத்தத் தெரியவில்லை

நிறைய பணம் வைத்துள்ள திரெங்கானு அரசுக்கு அப்பணத்தைச் செலவு செய்யத் தெரியவில்லை என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி சாடினார். பணம் தேவையற்ற திட்டங்களில் வீணடிக்கப்படுவதாக நேற்றிரவு கோலா பெசுட்டில் ஒரு செராமாவில்  ரபிஸி கூறினார். எண்ணெய் வருமானத்தின்வழி  ஆண்டுக்கு ரிம 2பில்லியன் பெறும் திரெங்கானு மலேசியாவின்…

கோத்தா கினாபாலு TPPA எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 14 பேர் கைது

TPPA எனப்படும் பசிபிக் வட்டாரப் பங்காளித்துவ ஒப்பந்தத்திற்கு ஆட்சேபம்  தெரிவித்த 14 போராளிகள் இன்று காலை கோத்தா கினாபாலுவில் கைது  செய்யப்பட்டனர். கடுமையாகக் குறை கூறப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தின் 18 அம்சங்கள் பற்றிய  பேச்சுக்கள் நிகழும் சூத்ரா துறைமுக ஹோட்டலுக்கு வெளியில் கூடிய அவர்கள்  கைது செய்யப்பட்டதாக மனித…

மனிதக் கடத்தல் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து விடுபட மலேசியாவுக்கு இறுதி வாய்ப்பு

மலேசியா மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான தனது கடமைகளை நிறைவேற்றாமல்  போனால் தற்போது அமெரிக்க வெளியுறவுத் துறையின் மனிதக் கடத்தல்  ஆய்வறிக்கையில் தற்போது 'இரண்டாம் கட்டத்தில்' உள்ள மலேசியாவின் நிலை  மேலும் சரியக் கூடிய அபாயம் உருவாகியுள்ளது. மனிதக் கடத்தலை தடுப்பதற்கான முயற்சிகளில் அரசியல் உறுதியும் மலேசியாவில்  காணப்படவில்லை எனக்…

ஐஜிபி: சுல்கிப்லி மீதான புலனாய்வு நிறுத்தப்பட வேண்டும் என ஏஜி…

இந்து சமயத்தை இழிவுபடுத்தியதாக கூறப்பட்ட பெர்க்காசா உதவித் தலைவர்  சுல்கிப்லி நூர்டின் மீதான புலனாய்வு அறிக்கையை போலீஸ் ஏஜி எனப்படும்  சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு சமர்பித்தது என்றும் ஆனால்  விசாரணையை நிறுத்திக் கொள்ளுமாறு அதற்கு உத்தரவிடப்பட்டது என்றும் ஐஜிபி  என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித்…

இசி மை: பெயர்ப் பலகை கூட இல்லாத ஒரு நிறுவனம்…

"பெயர்ப் பலகை கூட இல்லாத ஒரு நிறுவனத்துக்கு 7 மில்லியன் ரிங்கிட் அழியா  மை குத்தகை கொடுக்கப்பட்டதா ? ஒரு வேளை அதன் பின்னணியை ஆராய  இசி மறந்து விட்டதோ ?' அழியா மை விநியோகிப்பாளர் ஊடகங்களைச் சந்திக்க மறுப்பு அனோன்xyz: உலகம் முழுவதும் குத்தகைகள் தொடர்புகள் அடிப்படையில்…

குவாலா பெசுட் சட்டமன்ற இடைத்தேர்தல் முன்கூட்டிய வாக்களிப்பு இன்று நடைப்பெறுகிறது.

திரங்கானு குவால பெசூட் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று இராணுவத்தினரும் காவல் துறையினரும் தங்கள் துணைவியருடன் முன்கூட்டியே வாக்களிக்கவிருக்கின்றனர். இன்று காலை மணி எட்டு முதல் மாலை ஐந்து வரையில் வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது. 24 ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் மொத்தம் 17 ஆயிரத்து 683 பேர் வாக்களிக்க…

அல்விவி ஜாமீன் கோரி மறு ஆய்வு விண்ணப்பத்தைச் சமர்பித்தார்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அல்வின் தான், விவியன் லீ ஜோடி, தங்களது  ரமதான் bak kut teh வாழ்த்து, ஆபாசப் படங்கள் மீது மூன்று தங்களுக்கு எதிராக  மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பின்னர் தங்களுக்கு ஜாமீன்  வழங்குவதில்லை என செஷன்ஸ் நீதிமன்றம் எடுத்த முடிவை மறு ஆய்வு செய்ய  வேண்டும்…

505 கறுப்பு தினப் பேரணி தொடர்பில் இரண்டு எம்பி-க்கள், பக்காத்தான்…

ஜுன் 22ம் தேதி பாடாங் மெர்போக்கில் நிகழ்ந்த 505 கறுப்பு தினப் பேரணி தொடர்பில் இரண்டு எதிர்க்கட்சி எம்பி-க்கள், பக்காத்தான் ராக்யாட் ஊழியர்  ஒருவர் ஆகியோர் மீது அமைதியாக கூடும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும். சிரம்பான் எம்பி அந்தோனி லோக், பாண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில்,  பக்காத்தான் ராக்யாட்…

நுருல் இஸ்ஸா, மலேசியாகினி மீது நோங் சிக் வழக்குப் போடுகிறார்

லெம்பா பந்தாய் அம்னோ தொகுதித் தலைவர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல்  அபிடின், புக்கிட் கியாராவில் நிலக் கொள்முதல் ஒன்று தொடர்பில் தமக்கு எதிராக  அவதூறு கூறியதாக லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் மற்றும் இருவர் மீது வழக்குப் போட்டிருக்கிறார். ஜுலை 17ம் தேதி மெஸர்ஸ்…

மரினோ போக வேண்டும் என பெர்க்காசா கோரிக்கை

வத்திகன் மலேசியாவுக்குப் புதிய தூதரை நியமிக்க வேண்டும் எனக் கோரும்  ஆட்சேபக் குறிப்பு ஒன்றை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி தலைமையில்  சென்ற 30 பேர் கொண்ட குழு ஒன்று கோலாலம்பூரில் உள்ள வத்திகன்  தூதரகத்தில் வழங்கியுள்ளது. ஆனால் அந்தக் குழுவைச் சந்திக்க தூதரக அதிகாரிகள் யாரும் வராததால்…

தேர்தல் பஞ்சாயத்தின் உறுப்பினர்கள் யார்? ஜூலை 25-க்குள் தெரிந்துவிடும்

பெர்சே, பொதுத் தேர்தலில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் தேர்தல் மோசடிகளை விசாரணை செய்யும் மக்கள் பஞ்சாயத்தின் உறுப்பினர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதனை மலேசியாகினியிடம் தெரிவித்த பெர்சே இயக்கக்குழு உறுப்பினர் எண்ட்ரு கூ, ஜூலை 25-க்குள் அவர்களின் பெயர்களை அறிவிக்க முடியும் என்று நம்புகிறார். “அது இறுதிசெய்யப்பட்டதும் அறிவிப்பு செய்வோம்.…

சுவாராம்: மற்ற தடுப்புக்காவல் மரணங்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

இவ்வாண்டில் இதுவரை 12 தடுப்புக்காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ள போதிலும் ஒரே ஒரு மரணம் தொடர்பில்தான் மூன்று போலீஸ்காரர்கள்மீது குற்றம் சாட்டப்படுள்ளது என்று கூறும் சுவாராம் தடுப்புக்காவல் மரணங்கள் எல்லாவற்றுக்குமே போலீஸ் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. “என்.தர்மேந்திரன் மரணம் தொடர்பில் மூன்று போலீஸ்காரர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றவாளி என்ற…

ஆகாயப் படை பள்ளிவாசலில் நிக் அஜிஸ் தொழுகை நடத்த தடை

கோலா பெசுட்டிற்கு அருகில் உள்ள கோங் கெடாக்கில் அமைந்துள்ள அரச  மலேசிய ஆகாயப் படைப் பள்ளிவாசாலில் நேற்றிரவு தமது Maghrib  தொழுகையை நடத்துவதற்கு பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்  அனுமதிக்கப்படவில்லை முன்னாள் கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அஜிஸ் அந்தப் பள்ளிவாசலுக்கு  ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்ததாக…

பெர்சே பொதுத் தேர்தல் பஞ்சாயத்து மன்றம்: ஆதாரங்களை அனுப்புங்கள்

13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்த  தங்கள் ஆதாரங்களை அனுப்புமாறு பெர்சே அமைத்துள்ள மக்கள் பஞ்சாயத்து  மன்றம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் மோசடிகள், முறைகேடுகள் தொடர்பாக ஆதாரங்களையும் சாட்சிய  அறிக்கைகளையும் அவர்கள் அனுப்பலாம். வாக்காளர்கள் எதிர்நோக்கிய சூழ்நிலைகள் பட்டியலையும் பெர்சே வெளியிட்டது.  அவற்றுள்:…