மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, தனியார் துறையினர் தற்காலிகமாக 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' (WFH) முறையைச் செயல்படுத்துமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார். இன்று மாலை தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், பொதுச் சேவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவினருக்கு இந்த முறை படிப்படியாக அமல்படுத்தப்படும். "பொதுத்துறை மட்டுமின்றி, சில நிறுவனங்கள்…
ஜாஹிட்: கடிகாரங்கள் நிறுவனத்துறையில் இருந்தபோது வாங்கியவை
தம்மிடமுள்ள சொகுசு கடிகாரங்கள் எல்லாம் முன்பு நிறுவனத்துறையில் வேலை செய்தபோது வாங்கப்பட்டவை என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். “இதை (அரசியல்வாதிகளின் கடிகாரங்களை) ஏன் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்?”, என்றவர் செர்டாங்கில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது வினவினார். “நான் அரசியலுக்கு வருமுன்னர் நிறுவனத் துறையில் இருந்தேன்”,…
பல்லில்லா புலிகள்கூட அல்ல; வெறும் பூனைக்குட்டிகள்
பொதுக் கணக்குக்குழுவும் (பிஏசி) மனித உரிமை ஆணையமும்(சுஹாகாம்) புலிபோல் செயல்பட்டு அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தி வைக்க உருவாக்கப்பட்ட அமைப்புகள். ஆனால், அவை புலிகளாகவா இருக்கின்றன? பல் பிடுங்கப்பட்ட புலிகள்போல் அல்லவா காட்சியளிக்கின்றன. பிஏசியும் சுஹாகாமும் முன்வைக்கும் பரிந்துரைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்வது உண்மைதான். ஆனால், அது எல்லாமே வெறும் ஒப்புக்காகத்தான்.…
சட்டமன்ற உறுப்பினர்: முக்ரிஸின் பதவிக்குக் குறி வைக்கவில்லை
கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரின் பதவி விலகலுக்குக் கோரிக்கை விடுத்த புக்கிட் லாடா சட்டமன்ற உறுப்பினர் அஹ்மட் லெபாய் சூடின், மாநில மந்திரி புசார் ஆகும் விருப்பத்தில் அக்கோரிக்கையை விடுக்கவில்லை என மறுக்கிறார். முக்ரிஸ் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை ஆதரிக்காவிட்டால் பதவி விலகுவதே நல்லது என …
கேஜெ: நான் 1மலேசியா அணி, 2020 தொலைநோக்கு அணி அல்ல
அம்னோ இளைஞர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து அதன் தலைவர் கைரி ஜமாலுடின் தாம் ‘1மலேசியா அணி’யின் ஒரு பகுதி என்பதையும் ‘2020 தொலைநோக்கு அணி’யில் தாம் இல்லை என்பதையும் பெருமையாக அறிவித்தார். ‘1மலேசியா’ நஜிப் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சுலோகம். ‘2020 தொலைநோக்கு’ …
எம்ஏசிசி: ரோஸ்மாமீதே விசாரணை நடத்தியவர்கள், எதற்கும் அஞ்சோம்
தான் ஒரு காகித புலி அல்ல என்பதை வலியுறுத்தும் மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) விசாரணை என்று வந்து விட்டால் வேண்டியவர் வேண்டாதவர் எனப் பாகுபாடு காட்டுவதில்லை என்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் ரிம24.4 மில்லியன் வைர மோதிரம் வாங்கியதாக எதிரணியினர்…
போலீஸ் ராஜ்யமாகிறதோ என மகாதிர் கவலை
குறைசொல்வோருக்கும் எதிர்ப்புக் காட்டுவோருக்கும் எதிரான போலீஸ் நடவடிக்கையைப் பார்த்து மலேசியா போலீஸ் ராஜ்யமாக மாறுகிறதோ என்று கவலையுறுகிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். பதிவர்கள் முன்னாள் பிரதமரை நேர்காணல் கண்டு பதிவேற்றம் செய்த யுடியுப் காணொளி ஒன்றில், தி எட்ஜ் ஊடக குழுமத்தின் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டதை மகாதிர் கண்டித்தார்.…
பிரதமர் நஜிப்-மகாதிர் திறந்த விவாதம் நடத்த வேன்டும்
பிரதமர் நஜிப் அவரை கடுமையாக விமர்சித்து வரும் முன்னாள் பிரதமர் மகாதிருடன் திறந்த விவாதம் நடத்த வேண்டும் என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் பிரதமரை வலியுறுத்தினார். திறந்த விவாதம் நஜிப் அவருக்கு எதிராக மகாதிர் தொடுத்து வரும் கடும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க…
பெர்காசா: முன்னாள் தலைமை நீதிபதி 1எம்டிபி ஆர்சிஐ-க்குத் தலைமை தாங்க…
மலாய் உரிமைகளுக்குப் போராடும் தரப்பான பெர்காசா, 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தைப் புலனாய்வு செய்ய அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்குச் சுயேச்சைத் தரப்புகள் தலைமை தாங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட்டை ஆணையத்துக்குத் தலைவராக நியமிக்கலாம் எனவும் …
அம்னோ ஆதரவாளர்களின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு
கடந்த ஆண்டு பினாங்கு சட்டமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த 16 அம்னோ ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்ட எளிய தண்டனைக்கு எதிராக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது. அக்குற்றத்துக்காக 15 அம்னோ ஆதரவாளர்களுக்கு ஆளுக்கு ரிம1,500 அபராதமும் மேலும் ஒருவருக்கு ரிம1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. “குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராக மேல்முறையீடு …
செம்பாகாவை எளிதாக வென்ற பாஸ் இப்போது ரொம்பினைக் குறி வைக்கிறது
செம்பகா இடைத் தேர்தலில் அம்னோ போட்டிபோடாமல் பாஸுக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம் ஆனால், ரொம்பினில் பாஸ் விட்டுக் கொடுக்காது. அம்னோவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பாஸ் உதவித் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார். “ஏனென்றால் அம்னோவால் வழிநடத்தப்படும் பிஎன் அரசாங்கம் பொருள், சேவை வரியைக் கொண்டுவந்து மக்களுக்குச் …
அய்டானா ஹெலிகாப்டர் ஓட்டுவதில் உதவினார்
ஏப்ரல் 4-இல் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் பயணம் செய்த மர்ம பயணி அய்டானா பைஸியாவா, அந்த ஹெலிகாப்டரை ஓட்டுவதிலும் உதவியாக இருந்தார் என நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது. செமினி அருகில் நிகழ்ந்த அவ்விபத்தில் ரொம்பின் எம்பி ஜமாலுடின் ஜர்ஜிஸ், பிரதமரின் தலைமை தனிச் செயலாலர் அஸ்லின் அலியாஸ் …
கைரி: ஜோ லவ்மீது விசாரணை தேவை
“அம்னோவில் உள்ளவர்கள் கதைகட்டுவதில் வல்லவர்கள்” என்று ‘ஈரோமனி’-க்கு அளித்த நேர்காணலில் கூறிய ஜோ லவ்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். டிவிட்டரில் அம்னோ இளைஞர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை ஆதரிப்பதாகக் கூறிய கைரி 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி) …
அம்னோ புத்ரிகள் நஜிப்புக்கு ஆதரவு மகாதிரிடம் அன்பு
புத்ரி அம்னோவும் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. இன்று காலை கட்சித் தலைவர் அளித்த விளக்கக்கத்தை அடுத்து அது இந்த ஆதரவைத் தெரிவித்தது. ஆனாலும், டாக்டர் மகாதிர் முகம்மட்டை இன்னும் மதிப்பதாகக் கூறிய புத்ரி அம்னோ தலைவர் மாஸ் எர்மியாதி சம்சுடின், …
பாஸ்: சிங்கப்பூரின் மதுச் சட்டத்தை மலேசியா பின்பற்ற வேண்டும்
சிங்கப்பூரில் உள்ளது போன்ற மதுக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைப் பின்பற்றாத அரசாங்கத்தை பாஸ் கடுமையாக சாடியுள்ளது. “மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மலேசியா, சிங்கப்பூர் அரசாங்கம் இரவு மணி 10.30 திலிருந்து மறுநாள் காலை 7 மணிவரை மது அருந்துவதைத் தடை செய்யும் புதிய சட்டமொன்றைக் கொண்டு வந்திருப்பதைக் கண்டு…
ஹாடி எதிர்ப்பாளர்கள் அஹ்மட் தலைவராவதை விரும்புகிறார்கள்
பாஸ் கட்சியில் அப்துல் ஹாடி ஆவாங்கைத் தலைவர் பதவியிலிருந்து இறக்கி கட்சியின் மூத்த உறுப்பினர் அஹ்மட் ஆவாங்கைத் தலைவராக்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அஹ்மட் தலைவர் பதவிக்குப் போட்டியிட போதுமான நியமனங்களைப் பெற்றிருக்கிறார். அஹ்மட் கட்சியைக் காப்பாற்றுவார் என அவரின் ஆதரவாளர்கள் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாக மத்திய …
முக்கியமான சட்டவரைவுகளை விவாதிக்க போதுமான நேரம் தேவை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (பொடா), தேச நிந்தனை (திருத்த) சட்டம் போன்ற முக்கியமான சட்டவரைவுகளை விவாதிக்க போதுமான நேரம் ஒதுக்கப்படுவது அவசியம் என மலேசிய செனட்டர்கள் மன்றத் தலைவர் அப்துல் ரஹிம் அப்துல் ரஹ்மான் கூறினார். “என் கருத்தைக் கேட்டால் இப்படிப்பட்ட முக்கியமான சட்டவரைவுகள் முறையாக விவாதிக்கப்பட வேண்டும்.…
அம்னோ இளைஞர்களைச் சந்திக்கிறார் நஜிப்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று பிற்பகல், கட்சித் தலைமையகத்தில் அம்னோ இளைஞர்களைச் சந்திக்கிறார். எதற்காக சந்திக்கிறார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை என்றாலும் அச்சந்திப்பின்போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் தாக்குதல்கள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்படும் என அனுமானிக்கலாம். அம்னோ இளைஞர் பிரிவை அதன் தலைவர் கைரி ஜமாலுடின் …
மகாதிர் மரியாதையுடன் விசாரிக்கப்படலாம்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்மீது விசாரணை எதுவும் நடத்தப்பட்டால் மரியாதைக்குரிய முறையில் அது நடத்தப்படும் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் கூறினார். வலைப்பதிவில் பிரதமர் நஜிப்பைக் குறைகூறி வருவதன் தொடர்பில் மகாதிருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள புகார்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு …
பணி ஓய்வு பெற்றவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே நஜிப்பை ஆதரிக்கிறார்கள்
இன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஓய்வூதியர் அறவாரியத்தைத் தொடக்கிவைத்த ஒரு விழாவில் அறவாரியத்தின் தலைவர் அசே சே மாட் விழாவுக்கு வந்திருந்தவர்களை நஜிப்புக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். “எல்லாரும் எழுந்து நிற்கிறீர்களா?”, என்றவர் சொன்னார். ஆனால், எல்லாரும் எழுந்திருக்கவில்லை; எல்லாருமே கைகளை உயர்த்தவுமில்லை. இதைக் கவனித்த நஜிப்,…
மஸ்லான்: ரோலெக்ஸ் நமக்குக் கட்டுப்படியாகாது
நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் எந்தக் காலத்திலும் ரோலெக்ஸ் கடிகாரம் அணிந்ததில்லையாம். அது தமக்குக் கட்டுப்படி ஆகாது என்றாரவர். “நான் ரோலெக்ஸ் வைத்திருந்ததில்லை. அணிந்ததும் இல்லை. ரோலேக்ஸ் வாங்கும் அளவுக்கு என்னிடம் பணமில்லை”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். அவர் ரிம30,000-திலிருந்து ரிம40,000 வரை மதிப்புள்ள ரோலேக்ஸ் சப்மெரினர் …
ஹிஷாமுடின்: மகாதிருக்குப் பதில் அளிப்பது வீண் வேலை
டாக்டர் மகாதிர் முகம்மட் சுமத்தும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. “ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டுமானால் 7 நாளும் 24 மணி நேரமும் அதுதான் வேலையாக இருக்கும்”, எனத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார். “இதன் முடிவுதான் என்ன? (குற்றச்சாட்டுகளின்) நோக்கம்தான் என்ன?”, என்றவர்…
பாரிசான் தோற்றால், பலர் குற்றம் சாட்டப்படுவர்
அடுத்த பொதுத் தேர்தலில் பாரிசான் கூட்டணி தோல்வியுற்றால், பலர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் ஒப்புக்கொண்டார். 1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் விவகாரம் பற்றி கருத்துரைத்த மகாதிர் பிரதமர் நஜிப் பதவி துறக்க மறுத்தால் அந்த பெர்ஹாட் விவகாரம் அடுத்த பொதுத் தேர்தலில்…
மகாதிர்: ஜோ லவ் அரசாங்கத்தின் ஓர் அங்கமா?
பிரதமர் நஜிப்புக்கு எதிரானத் தாக்குதலைத் தொடரும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் சர்சைக்குள்ளாகியிருக்கும் 1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் விவகாரத்தை விசாரிக்க "முற்றிலும் சுயேட்சையான ஆணையம்" அமைக்கப்படுவது அவசியமாகிறது என்று அவரது மிக அண்மையத் தாக்குதலில் கூறியுள்ளார். குறிப்பாக, பணம் எங்கே சென்றிருக்கிறது என்பதோடு இந்த வணிகர் ஜோ…


