ஏர்ஆசியா தலைவர்: இது எனது கடுந்துயரம்

இந்தோனேசியா, சுரபாயாவிலிருந்து இன்று காலையில் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர்ஆசியா விமானம் காணாமல் போய்விட்ட சம்பவத்தை தமக்கு ஏற்பட்ட மிக மோசமான கடுந்துயரம் என்று அவ்விமான நிறுவன குழுமத்தின் செயல்முறை தலைவர் டோனி பெர்னேண்டஸ் கூறினார். இக்குழுமத்தின் தலைவர் என்ற முறையில் இச்சோதனையான நேரத்தில் தாம் அங்கே இருக்கப்போவதாக அவர்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 170 ஆயிரமாக உயர்ந்தது

வெள்ள  நிலைமை  தொடர்ந்து  மோசமடைந்து  வருகிறது. பெர்னாமா  செய்திப்படி  இன்று  பிற்பகல்வரை  ஆறு  மாநிலங்களில்  மொத்தம் 168,660 பேர்  துயர்த்துடைப்பு  மையங்களில்  தங்கியிருந்தனர். கிளந்தான், பகாங்,  ஜோகூர், பேராக்  ஆகிய  மாநிலங்களில்  நிலைமை  மேலும்  மோசமாகி  வருகிறது. திரெங்கானுவிலும்  பெர்லிசிலும்  நேற்றிரவு  இருந்ததைவிட  இன்று  நிலைமை  ஓரளவு மேம்பட்டிருந்தது.…

வெளிநாடு சென்றுள்ள அமைச்சர்கள் உடனே நாடு திரும்ப உத்தரவு

நாட்டில்  வெள்ளப்  பெருக்கு  மோசமான  வேளையில்  அமெரிக்காவில்  விடுமுறையைக்  கழித்துக்  கொண்டிருந்ததற்காகக்  கடுமையான  குறைகூறலுக்கு  ஆளான  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  விடுமுறையைக்  கழிப்பதற்கு  வெளிநாடு  சென்றுள்ள  எல்லா  அமைச்சர்களையும் உடனே  நாடு  திரும்புமாறு  பணித்துள்ளார். நஜிப்,  இன்று  காலை  அவ்வுத்தரவைப்  பிறப்பித்ததாக  பெர்னாமா  கூறியது. உத்தரவு  கிடைக்கப்பெற்ற …

ஏர் ஏசியா விமானத்தைக் காணவில்லை

155 பயணிகளையும்  ஏழு பணியாளர்களையும்  ஏற்றிக்கொண்டு  இந்தோனேசியாவின்  சுராபாயாவிலிருந்து  சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்த  ஏர் ஏசியா  ஏர்பஸ் விமானம் உள்ளூர் நேரம்  காலை 5.20-க்கு (மலேசிய  நேரம் காலை 6.20)  காணாமல்  போனது. காணாமல்  போவதற்குமுன்  அவ்விமானம்,  பறக்கும்  பாதையில் அடர்த்தியா, மேகங்கள்  எதிர்ப்படுவதாகவும்  மேகங்களைத்  தவிர்க்க  சற்றே…

கிளந்தானில் ஹுடுட் மீதான சட்டமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு

வெள்ள  நிலவரம் மோசமடைந்து  வருவதால்  ஹுடுட்  சட்டவரைவு  மீதான  சிறப்புச்  சட்டமன்றக்கூட்டத்தை  கிளந்தான்  அரசு  ஒத்திவைத்துள்ளது. அதை  கிளந்தான்  மந்திரி  புசார்  அறிவித்ததாக  பெரித்தா  ஹரியான்  தெரிவித்தது. நாளை  அக்கூட்டம்  நடப்பதாக  இருந்தது.   அதில், 1993  ஷியாரியா  குற்றவியல்  சட்டத்தில்  சில  திருத்தங்களைக்  கொண்டுவர  பாஸ்  தலைமையிலான  மாநில …

வெள்ள நிலவரம்: டிஏபி வெள்ள நிவாரண நிதி தொடங்கியது

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோருக்கு  உதவ  டிஏபி  சொந்த வெள்ள  நிவாரண  நிதி  ஒன்றைத்  தொடக்கியுள்ளது. அதில்  திரட்டப்படும்  நிதி  வெள்ளத்தில்  மோசமாக  பாதிக்கப்பட்ட  பகுதிகளுக்கு  அவற்றின்  தேவைக்கு ஏற்பப் பகிந்தளிக்கப்படும்  என்று  டிஏபி ஏற்பாட்டுக்  குழுச்  செயலாளர்  அந்தோனி  லோக்  கூறினார். “டிஏபி  மத்திய  செயல்குழு  ரிம10,000  கொடுத்து  நிதியைத் …

வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்ட கிளந்தான் மந்திரி புசார்

  நாட்டின் மிக மோசமான வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள கிளந்தான் மாநிலத்தின் மந்திரி புசாரும் வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டார். அதனால் தமது தொகுதி மக்களுக்குக்கூட உதவி வழங்க முடியாத நிலையில் இருக்கிறார். அதற்காக அவர் மக்களிடம் மன்னிப்பு கோருகிறார். தமது வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்து விட்டதால் தம்மால் வீட்டை விட்டு…

சீனா பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்கிறது

  உலக அளவில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியுற்று வரும் வேளையில் எதிர்வரும் சனிக்கிழமையிலிருந்து சீனா அதன் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் டன் ஒன்றுக்கு 520 யுஆனைக் (ரிம292.39) குறைக்கவிருக்கிறது. இந்த மாற்றத்துடன், இந்த ஆண்டு ஜூலையிலிருந்து இது 10 ஆவது மாற்றமாகும், எண்ணெய் நிலையங்களில் ஒரு லீட்டர்…

கிளந்தானுக்குக் கூடுதல் ஹெலிகாப்டர்களும் படகுகளும் தேவை

வெள்ளக்காடாக  மாறியுள்ள  கிளந்தானுக்கு  இன்று  பறந்து  சென்ற  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின், அங்கு  பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  உதவ  கூடுதல்  ஹெலிகாப்டர்களையும்  படகுகளையும்  தரை  வாகனங்களும்  பயன்படுத்த  வேண்டும்  என  உத்தரவிட்டார். வெள்ளம்  எதிர்பார்க்கப்பட்டதைவிட  மோசமாக  இருப்பதாகக்  கூறிய  அவர்  இப்போது பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களும்  படகுகளும்  வாகனங்களும்  போதுமானவை …

பிரதமர் திரும்பி வருகிறார்: வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிடுவார்

வெள்ளப்  பெருக்கு  ஏற்பட்டுள்ள  வேளையில் விடுப்பெடுத்துக்  கொண்டு  அமெரிக்கா  சென்றுவிட்டார்  எனக்  கடுமையாகக்  குறைகூறப்பட்ட  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நாடு  திரும்புகிறார். இதனைத்  தெரிவித்த  பிரதமர் அலுவலக  அறிக்கை,  நாடு  திரும்பியதும் பிரதமர்  கிளந்தான்  செல்வார்  என்றது. “கிளந்தானில் பிரதமர்  தலைமையில்  கூட்டம் நடக்கும். அதில் தேசியப்…

சுனாமி பத்தாமாண்டு வழிபாடுகள் நடத்தி நினைவுகூரப்பட்டது

ஊழித்  தாண்டவம்  ஆடிய  ஆழிப்  பேரலை நிகழ்ந்து 10 ஆண்டுகள்  ஆகின்றன. 230,000  பேரைக்  காவு  கொண்டு பேரழிவை  ஏற்படுத்திய  அப்பேரலையை   நினைவுக்கூரும்  வகையில்  இந்தியப் பெருங்கடலைச்  சுற்றியுள்ள  நாடுகளில்  இன்று  சிறப்பு  வழிபாடுகள்  நடந்தன. இந்தோனேசியாவில்  ஆச்சே  மாநிலத்தில்-  அதுவே சுனாமியால்  மோசமாக  பாதிக்கப்பட்ட பகுதி- அரசாங்கத்தின் …

ரிம1 மில்லியன் வெள்ள உதவியுடன் அஸ்மின் கிளந்தான் செல்கிறார்

சிலாங்கூர்  அரசாங்கம், கிளந்தானில்  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோருக்கு  உதவியாக  ரிம1 மில்லியன்  வழங்கும்  என  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  இன்று  தெரிவித்தார். கிளந்தானுக்குப்  புறப்படுமுன்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய  அவர்,  மாநில  அரசு வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட  திரெங்கானு, பகாங்,  பேராக்  ஆகிய  மாநிலங்களுக்கும்  தலா  ரிம100,000  ஒதுக்கியிருப்பதாகக்  கூறினார்.

ரிதுவான் டீ சரவாக் செல்லத் தடை

சர்ச்சைக்குரிய  கல்வியாளர்  ரிதுவான்  டீ  அப்துல்லா,  இன்று  காலை  கூச்சிங்  விமான  நிலையத்தில்   தடுத்து  நிறுத்தப்பட்டார்.  அவர்  சரவாக்குக்குள்  நுழைய  அனுமதி  மறுக்கப்பட்டது. ரிதுவான்  அம்மாநிலத்துக்குள்  அடியெடுத்து  வைப்பதைத் தடுக்குமாறு  முதலமைச்சர்  அலுவலகத்திலிருந்து  உத்தரவு  கிடைத்திருப்பதை  சரவாக்  குடிநுழைவுத் துறை துணைத்  தலைவர் பெர்னாமாவிடம்  உறுதிப்படுத்தினார்.

அல்தான்துயா கொலை வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை

  மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை வழக்கில் அவரை கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹாட்ரி மற்றும் கோப்ரல் சிருல் அஸார் உமார் ஆகியோரை மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததற்கு எதிராக அரசாங்கம் பெடரல் உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருந்த மேல்முறையீட்டை அந்நீதிமன்றம் செவிமடுத்து நேற்றுடன் ஆறு மாதங்களாகி…

புவாட் ஸார்காஷி: அன்வார் மந்திரி புசார் பதவி கொடுக்க முன்வந்தார்

  தாம் 2008 இல் பக்கத்தான் ரக்யாட்டில் சேர்ந்துகொள்வதற்கு ஒப்புக்கொண்டிருந்தால் தமக்கு ஜொகூர் மாநில மந்திரி புசார் பதவியைத் தருவதற்கு அன்வார் முன்வந்ததாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸார்காஷி இன்று கூறினார். எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்மிற்கு எதிராக வெளிவிவகார அமைச்சர் அனிப்பா அமான் தொடர்ந்துள்ள ரிம100…

சிலாங்கூரில் பன்றி பண்ணை அமைக்க எதிர்ப்பு

  கோலலங்காட், கம்போங் செப்பாட்டில் ஒரு நவீன பன்றி பண்னை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக சுமார் 100 கிராம மக்களும், மலாய் உரிமை போராட்ட அரசு சார்பற்ற அமைப்பு பெர்காசாவும் இன்று சிலாங்கூர் மாநில மந்திரி புசாரிடம் ஒரு மகஜரை கொடுத்தனர். தாங்கள் மற்ற இனத்தினர் பன்றி இறைச்சி…

புத்தாண்டு முன்னிரவு எண்ணெய் பேரணி ஒத்திப்போடப்பட்டுள்ளது

  வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாக எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புத்தாண்டு முன்னிரவில் நடத்தப்படவிருந்த பேரணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பேரணியின் ஏற்பாட்டாளர்களான 15 அரசு சார்பற்ற அமைப்புகள் சார்ந்த துருன் என்ற கெராக்கான் துருன் கோஸ் கசாரா ஹிடுப் அமைப்பு இம்முடிவை…

ஆறு மாநிலங்களில் வெள்ளம் இங்கே, அங்கே அமெரிக்க அதிபருடன் கோல்ப்…

  கிறிஸ்துமஸுக்கு முன்தினம் பிரதமர் நஜிப் ரசாக் ஹவாயில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் கோல்ப் விளையாடினார். பிரதமர் நஜிப் தற்போது ஹாவாயில் விடுமுறையைக் கழிக்கிறார் என்று வெள்ளைமாளிகையை மேற்கோள் காட்டி த வாஷிங்டன் போஸ்ட் நேற்று செய்தி வெளியிட்டது. பிரதமர் நஜிப்பின் அதிகாரப்பூர்வமான ஜெட் விமானம், பதிவு எண்…

வெள்ளம் ஹுடுட்டைக் கொண்டுவரும் முயற்சியை பாஸ் தொடர வேண்டும் என்பதற்கு…

பாஸ்  ஹுடுட் திட்டத்தைக்  கைவிடாமல்  தொடர  வேண்டும்  என்று  இறைவன்  செய்தி  அனுப்பிவைத்த  செய்திதான்  நாட்டில்  ஏற்பட்டுள்ள  மிக  மோசமான வெள்ளப்  பெருக்காம்.   பாஸ்  பாசிர்  மாஸ் எம்பி,  நிக்  அடோ  நிக்  அப்துல்  அசீஸ்  கூறியுள்ளார். “வெள்ளப்  பெருக்கு, இறைவனின் கோபத்துக்கு  ஆளாகாதீர்கள்,  அவனிடம்  திரும்பிச்  செல்லுங்கள் …

முகைதின்: நான் கவனித்துக் கொள்வேன், கவலை விடுக

நாட்டில்  வெள்ள  நெருக்கடி  ஏற்பட்டுள்ள  வேளையில் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஆண்டு-இறுதி விடுப்பில்  வெளிநாடு  சென்றிருக்காரே  என்ற  கவலை  வேண்டாம்,  நெருக்கடியைத்  தம்மால்  சமாளிக்க  முடியும் “நம்புங்கள்”  என்கிறார்  துணைப்  பிரதமர்  முகைதின் யாசின். இன்று  சுபாங்  ஜெயாவில்,  Full Gospel Tebernacle தேவாலயத்தில்  கிறிஸ்மஸ்  வாழ்த்துத் …

போலீஸ்: தேவாலயம் தாக்கப்பட்ட செய்தி பொய்யானது

கோலாலும்பூரில், ஜாலான் ராஜா  லாவுட்-இல் ஒரு தேவாலயம்   தாக்கப்பட்டதாக ஒரு  பொய்யான  செய்தி   முகநூலில் வலம்  வந்து கொண்டிருப்பதாக  போலீஸ் கூறியது. அச்செய்தியைப்  பரப்பியவர்மீது  போலீஸ்  நடவடிக்கை  எடுக்கும்  என   போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார். “அது  உண்மை அல்ல. அம்முகநூல்  உரிமையாளர்மீது  நடவடிக்கை …

எம்பி-இன் புகார்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்: எம்ஏசிசி விளக்கம்

மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி), சரவாக்கில்  ரிம119 மில்லியன் மதிப்புள்ள  சாலை  அமைக்கும்  குத்தகை  வழங்கப்பட்டதில்  ஊழல்  நிகழ்ந்திருப்பதாக   டிஏபி  எம்பி  சோங்  சியாங்  ஜென்  கூறுவதை  வைத்து  நடவடிக்கை  எடுக்க  இயலாது  என  நேற்று  தெரிவித்தது. பண்டார்  கூச்சிங்  எம்பியான  சோங்  வழங்கிய  தகவல்  நடவடிக்கை  எடுப்பதற்குப்  போதுமானதல்ல …

வெள்ள உதவிக்கு ரிம50 மில்லியனை அமைச்சு ஒதுக்கியது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மாநிலங்களில்  துயர்துடைப்புப்  பணிகளுக்காக  ரிம50 மில்லியனை  ஒதுக்கியிருப்பதாக  நிதி  அமைச்சர்  ஹுஸ்னி  ஹனாட்ஸ்லா  அறிவித்துள்ளார். பெர்னாமா  செய்தியின்படி, கிளந்தான், திரெங்கானு, பகாங், பேராக், பெர்லிஸ்  ஆகிய  மாநிலங்களில்  90,250 பேர் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.   வெள்ள  உதவி  நிதி  மாநில  மேம்பாட்டு அலுவலகங்களிடம்  கொடுக்கப்படும்  என …