ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
வெள்ளப் பேரிடர்: அன்வார் மன்னிப்பு கோரினார்
வெள்ளப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு உடனடியாக நாடு திரும்ப இயலாமல் போனதற்காக எதிரணித் தலைவர் மன்னிபு கோரினார். ஆனால், இதனை ஒரு பிரச்சனையாக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஒத்துழைப்பு மற்றும் உதவி செய்ய விரும்புபவர்களுக்கு இடமளித்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்ட அன்வார்,…
ஏர்ஏசியா விபத்து: முதல் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது
சுரபாயா-சிங்கப்பூர் பயணத்தின் போது விபத்திற்குள்ளான ஏர்ஏசியா பயணிகள் மற்றும் விமானப் பணியார்கள் ஆகிய 162 பேரில் முதலில் மீட்கப்பட்ட சடலம் இன்று அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஹயாதி லுட்பியா ஹமிட் என்பவரின் சடலம் சுரபாயா மருத்துவமனையிலிருந்து கிழக்கு ஜாவா, செடாத்தி மாவட்டத்திலுள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதை கமாண்டர்…
பாஸ்: மரங்கள் வெட்டப்பட்டதுதான் கிளந்தான் வெள்ளத்துக்குக் காரணம் என்பது சரியல்ல
மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டது கிளந்தானில் வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்ட பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப் ஆனால், அதுவே தலையாய காரணமாக இருக்க முடியாது என்பதையும் வலியுறுத்தினார். ஏனென்றால் மற்ற மாநிலங்களிலும் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது என்றாரவர். “ஜோகூரில் பெரிய வெள்ளப்பெருக்கு …
பிகேஆர்: அரசாங்க உதவி நிபந்தனையற்று வழங்கப்பட வேண்டும்
பாஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள கிளந்தான் வெள்ளத்தால் சீர்குலைந்து கிடக்கும் வேளையில் கூட்டு அரசாங்கம் அமைக்கலாம் என்றொரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை முன்வைத்தவர் ஓர் அரசியல்வாதி அல்ல. அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத் தலைவர். ஆனால், பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி அப்பரிந்துரையை ஒதுக்கித் தள்ளினார்.…
அன்வார்: இதுவே வரலாற்றில் மிக மோசமான வெள்ளம்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், தம் புத்தாண்டுச் செய்தியில் கடந்த ஆண்டில் நிகழ்ந்த பல துயரச் சம்பவங்களைக் குறிப்பாக வெள்ளப் பேரிடரை நினைவுகூர்ந்தார். “2014, துன்பமும் துயரமுமாக, அதுவும் கிழக்குக்கரையை குறிப்பாக கிளந்தானை வெள்ளக்காடாக்கிவிட்டு முடிவுக்கு வந்துள்ளது. “நூறாயிரம் பேருக்குமேல் பாதிக்கப்பட்ட இவ்வெள்ளப் பேரிடரை வரலாற்றின் மிக …
மரங்களை வெட்டாதீர்:நஜிப் எச்சரிக்கை
ஆதாயம் கிடைக்கிறது என்பதற்காக மரங்களை விருப்பம்போல் வெட்டிச் சாய்க்கக் கூடாது; சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை அனைவரும் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நினைவுறுத்தியுள்ளார். “மரங்களை ஆதாயம்தரும் பொருள்களாகப் பார்க்காதீர்கள். மரங்களுக்கென பணிகள் உண்டு. இயற்கை அன்னைக்குத் துரோகம் இழைத்தால் இதுபோன்ற பேரிடரைத்தான் …
QZ8501: மேலும் ஒரு சடலம் கிடைத்தது, தேடும் பகுதி விரிவுபடுத்தப்பட்டது
பெலிதோங் தீவுக்கும் களிமந்தானுக்குமிடையில் கரிமாத்தா நீரிணையில் விழுந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஏர் ஏசியாவின் QZ8501 விமானத்தில் பயணம் செய்த மேலும் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக இந்தோனேசியாவின் இணைய செய்தித்தளமான டெம்போ அறிவித்துள்ளது. அவை சுரபாயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும். தேடும் இடம் இப்போது 13,500 சதுர கடல்மைலுக்கு விரிவடைந்திருப்பதாக மலேசிய …
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
செம்பருத்தி.கோம் அதன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனைத்து மலேசியர்களுக்கும் அதன் புத்தாண்டு 2015 நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜனவரி 1 லிருந்து ரோன் மற்றும் டீசல் விலை குறைப்பு
உலகளவில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவினைத் தொடர்ந்து மலேசியாவிலும் ரோன்95 மற்றும் டீசல் விலை குறைக்கப்படுகிறது. ரோன் விலை 1 லீட்டருக்கு 35 சென்னும், டீசல் 1 லீட்டருக்கு 30 சென்னும் குறைக்கப்படும். இந்த விலை குறைப்பு ஜனவரி 1, 2015 இல் அமலாக்கம் பெறுகிறது. இதன்…
பிகேஆர்: ரோன்95 மற்றும் டீசலின் விலை ரிம1.90-க்கும் குறைவாக இருத்தல்…
பார்க்கப்போனால் மலேசியர்கள் ரோன்95-க்கும் டீசலுக்கும் ரிம1.90க்கும் குறைவான விலையைத்தான் கொடுக்க வேண்டும் என்கிறார் பிகேஆர் எம்பி ரபிஸி ரம்லி. நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான், ஜனவரியிலிருந்து அவ்விரு எரிபொருள்களின் விலை ரிம்1.90-க்கும் ரிம1.95க்குமிடைப்பட்டு இருக்கும் என்று கூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது ரபிஸி இவ்வாறு கூறினார். ரோன்95-இன் விலை …
வெள்ள நிலவரம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு 11-வது மலேசிய திட்டம் முன்னுரிமை அளிக்கும் என திரெங்கானு, கெமமானில் கூறினார்.. அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரைச் சந்திக்க திரெங்கானு சென்றிருப்பதாக பெர்னாமா கூறியது. கிளந்தானில் டிசம்பர் 26-க்கும் 29-க்குமிடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த வேளையில் பேரங்காடிகளில் சூறையாடிய 99 பேரை …
மரங்கள் வெட்டப்படுவதுதான் வெள்ளத்துக்குக் காரணம் என்பதை கிளந்தான் எம்பி மறுக்கிறார்
கிளந்தான் மாநிலத்தில் முன் எப்போதுமில்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்குக் கட்டுப்பாடின்றி மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டதுதான் காரணம் என்பதை கிளந்தான் மந்திரி புசார் அஹ்மட் யாக்கூப் நிராகரித்தார். வெள்ளம் பெருகக் கவனக் குறைவு காரணமாக இருக்கலாம் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உள்பட, பல தரப்புகள் குறைகூறியுள்ளன.…
QZ8501: இதுவரை ஏழு சடலங்கள் மீட்கப்பட்டன
கடலில் விழுந்து நொறுங்கிய ஏர் ஏசியா QZ8501 விமானத்திலிருந்து இதுவரை ஏழு சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டிருப்பதாக தேடல், மீட்புக் குழுத் தலைவரை மேற்கோள்காட்டி சிங்கப்பூரின் சேனல் நியுஸ் ஏசியா அறிவித்துள்ளது. ஒரு சடலம் விமானப் பணியாளருடையது என்று தெரிவிக்கப்பட்டது. இன்னொரு சடலம், நீரில் மூழ்காமல் மிதக்க வைக்கும் காப்புச் சட்டை …
பாதை மாறியது புயல். அதனால் தப்பியது கிழக்குக் கரை
சாபாவின் வடக்குப் பகுதியை நோக்கிச் சீறிப் பாய்ந்துவந்த வெப்ப மண்டல புயல் ஒன்று சனிக்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்குக் கரை மாநிலங்களைத் தாக்கும் என அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பாதை விலகிச் சென்று விட்டது. மணிக்கு 74 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் தெற்கு பிலிப்பீன்சைத் தாண்டி …
“40 சடலங்கள்” என்பது தவறு, ஜாக்கர்த்தா கூறுகிறது
சுரபாயா-சிங்கப்பூர் பயணத்தின் போது விபத்திற்குள்ளான ஏர்ஏசியா பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் ஆகியோரை தேடும் நடவடிக்கையின் போது 40 சடலங்கள் இந்தோனேசிய கடற்படைக் கப்பல் பங் தோமோவால் மீட்கப்பட்டதாக முன்னதாக வெளியிடப்பட்ட செய்தி கூறிற்று. அத்தகவல் தவறானது என்று இந்தோனேசியாவின் தேடி மீட்கும் அமைப்பான சாரின் தலைவர்…
ஏர் ஏசியா விபத்து: 40 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன
கடந்த ஞாயிற்ருக்கிழமை சுரபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் விபத்திற்குள்ளாகியது. அந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய கடற்படை இன்று மாலை மணி 6.30 வரையில் 40 சடலங்களை மீட்டுள்ளதாக தெரிவித்தது. தேடும் பணி வெளிச்சம் குறைந்து இருள் சூழத் தொடங்கிவிட்டதால் நிறுத்தப்படுவதாகவும் நாளை…
ஐஜிபி: வெள்ளத்துக்கு இதுவரை 21பேர் பலியாகியுள்ளனர்
கிழக்குக் கரை மாநிலங்களில் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த சாலைகளைத் திருத்தி அமைக்க இராணுவத்தினர் பயன்படுத்தப்படலாம் எனத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார். “சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதை எண்ணித்தான் கவலையடைகிறேன். உணவுப் பொருள்களைக் கொண்டுசெல்வது சிரமமாக இருக்கிறது. ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவற்றையும் வானிலை நன்றாக …
விமானத்தின் உடைந்த பகுதிகளும் இறந்தவர் சடலங்களும் மிதக்கக் காணப்பட்டன
காணாமல்போன ஏர் ஏசியா விமானத்தின் உடைந்த பகுதிகள் காணப்பட்டதாக ஜாகார்த்தா அறிவித்ததை அடுத்து தேடும்பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய ஆகாயப்படையின் இணை விமானி ஒருவர் டஜன் கணக்கான உடல்கள் கடலில் மிதப்பதைக் கண்டிருக்கிறார். “பயணிகள் உயிருடன் இருப்பதுபோலவும் உதவிகேட்டு கைகளை அசைப்பதுபோலவும் இருந்தது. ஆனால், அருகில் சென்று பார்த்தபோது அவை …
கூட்டரசு சாலைகளில் 90 பகுதிகள் மூடப்பட்டுள்ளன
அரசாங்கம் கிழக்குக் கரையில் வழக்கத்துக்கு மாறாக இவ்வளவு மோசமான வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஆழமாக ஆராயும் எனத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறுகிறார். வெள்ளம் வடிந்த பின்னர், அந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்ததாக பெர்னாமா அறிவித்தது. ஆய்வில், பருவ நிலை மாற்றங்கள், காடழிப்பு நடவடிக்கைகள்,…
1967-ஐவிட இவ்வாண்டு வெள்ளம் மோசமானது
“எனக்குத் தெரிந்து இரண்டு பெரிய வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இதுதான் மிகப் பெரிது”, என்கிறார் கிளந்தானைச் சேர்ந்த முகம்மட் சாலே. முகம்மட் சாலே கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், 80-வயதான அம்மூத்த குடிமகனார் பல வெள்ளங்களைக் கண்டவர். அவரை பாசிர் மாஸ், கம்போங் கோட்டாவில் உள்ள அவரது …
பிரதமரை மட்டுமே சந்திப்போம்: சான்றோர் 25 திட்டவட்டம்
தாங்கள் முன்வைத்த விவகாரங்கள் தொடர்பில் பிரதமரை மட்டுமே சந்திக்க விரும்பும் ‘சான்றோர் 25’ குழுவினர், மலாய் ஆலோசனை மன்றம் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை என்றும் சொன்னார்கள். “பிரதமரை மட்டுமே சந்திக்க விரும்புகிறோம். வேறு யாரையும் அல்ல”, என முன்னாள் அரசதந்திரிகளான கமில் ஜாப்பாரும் நூர் பரிடா அரிப்பினும் இன்று …
கர்ப்பவதி பெண்ணும் குழந்தையும் நிலச் சரிவுக்குப் பலி
இன்று காலை கேமரன் மலையில் ஏற்பட்ட நிலச் சரிவில் ஒரு கர்ப்பவதியும் அவரது ஒரு வயது மகனும் கொல்லப்பட்டனர். அவரின் கணவருக்குக் கால் முறிந்தது. காலை மணி 5.30க்கு, எம். நித்யவதி(24)யும் அவரின் மகன் ஆர். ரூபனீஸ்வரனும் அவர்களின் வீட்டுக்குப் பின்புறம் ஏற்பட்ட நிலச் சரிவில் புதையுண்டு போனதாக…
விமானத்தைத் தேடும்பணி தொடர்கிறது
155 பயணிகளையும் ஏழு பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு இந்தோனேசியாவின் சுராபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்தபோது காணாமல்போன ஏர் ஏசியா விமானம் பற்றி இதுவரை தகவல் ஏதும் இல்லை. அதைத் தேடும்பணி மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. தேடும் பணியில் உதவ அமெரிக்காவும் ஒரு கப்பலை அனுப்பி வைத்துள்ளது. யுஎஸ்எஸ் செம்ப்சன் என்னும் அந்த …


