ஜோகூர் மந்திரி புசாராக அப்துல் கனி-க்குப் பதில் காலித் நோர்டின்!

வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடப்பு ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மானுக்குப் பதில் புதியவர் நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் வலுவடைந்து வருகின்றன. அதனால் அந்த மாநில பிஎன் இன்னொரு சுற்று உட்பூசலில் மூழ்கும் வாய்ப்புக்கள் கூடியுள்ளன. 1995ம் ஆண்டு முதல் மந்திரி புசாராக இருந்து வருகின்ற…

பாக் லா-வுக்கும் நஜிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள்

 "சீர்திருத்தங்கள் குறித்து பாக் லா உண்மையான போக்கைக் காட்டினார். ஆனால் அதனை அமலாக்குவதற்கான உறுதி இல்லை. அதே வேளையில் நஜிப், சீர்திருத்தங்கள் பற்றி எப்போதும் உண்மையாக நடந்து கொண்டதில்லை. ஆகவே அதனைப் பின்பற்றுவது வேறு விஷயம்."     நான் வலிமையை காட்டியிருக்க வேண்டும் என பாக் லா…

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் இணைவதாக பக்காத்தான் ராக்யாட் அறிவித்தது

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் பக்காத்தான் ராக்யாட் பங்கு கொள்ளும். கோலாலம்பூரில் பக்கத்தான் தலைமைத்துவ மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அதனை அறிவித்தார். தேர்தல் சீர்திருத்தங்கள் மீது தான் கொண்டுள்ள கடப்பாட்டை அரசாங்கம் நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பளிக்க பக்காத்தான் கூட்டணி…

அன்வார்: நஜிப், அது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல

நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென தாம் அனுப்பிய சப்பீனாவை தள்ளுபடி செய்வதற்கு நஜிப் அப்துல் ரசாக விண்ணப்பித்துக் கொண்டிருப்பது "ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல" என்று அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். தோற்றத்தை சரிப்படுத்த பிரதமர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் அது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சப்பீனா அனுப்பப்பட்டால் குதப்புணர்ச்சி வழக்கு ll சாட்சியமளிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும்…

விசாரணையின்போது சித்திரவதை செய்ததாக போலீஸ்மீது வழக்கு

மூன்றாண்டுகளுக்குமுன் பிரபாகர் பாலகிருஷ்ணா, செய்யாத குற்றத்துக்காக இவ்வளவு துன்பத்தை அனுபவிப்போம் என்பதைக் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார். 2008 டிசம்பர் 23-இல் போலீசாரால் அவரும் இன்னொருவரான சாலமன் ராஜ் சந்திரனும் பிடித்துச் செல்லப்பட்டனர். அது ஒரு வழக்கமான  போலீஸ் சோதனைதான் விரைவில் முடிந்துவிடும் என்றவர் நினைத்தார். ஆனால் அடுத்த…

நஜிப், ரோஸ்மா சபீனாவை தள்ளுபடி செய்வதற்கு விண்ணப்பித்துள்ளனர்

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு விசாரணையில் தாங்கள் சாட்சிகளாக நீதிமன்றத்தில் ஆஜராவதைக் கட்டாயப்படுத்தும் சபீனாவை தள்ளுபடி செய்வதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் விண்ணப்பித்துக் கொண்டுள்ளனர். அந்தத் தகவலை நஜிப்பையும் ரோஸ்மாவையும் பிரதிநிதிக்கும் நான்கு வழக்குரைஞர்களில் ஒருவரான சலேஹுடின்…

அழிக்க முடியாத மையைப் பயன்படுத்துவதை ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு…

உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப இருக்குமானல் கை விரலில் அழிக்க முடியாத அந்த மையை போடுவதால் ஆரோக்கியத்திற்கு எந்தக் கேடும் விளையாது என ஆசிய தேர்தல்களை கண்காணிக்கும் சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய கட்டமைப்பு கூறுகிறது. அழிக்க முடியாத அந்த மையின் முக்கிய கலப்புப் பொருளான சில்வர்…

பாஸ்: வாக்கு தவறிவிட்டார் பிரதமர், மாட் சாபு விவகாரமே சான்று

புக்கிட் கெப்போங் சம்பவம் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படும் தகவல்களுக்கு எதிராக பேசியதற்காக பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுமீது  அவதூறு வழக்கு தொடுப்பதானது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஜனநாயக சீரமைப்புகள் செய்யப்போவதாக அளித்த வாக்குறுதியை மீறிவிட்டார் என்பதைக் காண்பிக்கிறது. பாஸ் தகவல் தலைவர் துவான் இப்ராகிம் துவான்…

பாக் லா: நான் சீர்திருத்தங்கள் குறித்து தெளிவாக இருந்தேன்

முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி, தாம் பதவியில் இருந்த போது அமலாக்க விரும்பிய சீர்திருத்தங்கள் மீது மிகவும் தெளிவாக இருந்ததாக கூறியிருக்கிறார். "ஒரு வேளை தாம் பதவியில் இருந்த போது எதிர்நோக்கிய எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் வலிமையைக் காட்டியிருக்க வேண்டும்," என அவர் நேற்றிரவு விடுத்த அறிக்கை குறிபிட்டது.…

ஸாக்கி: பேராக் நெருக்கடியில் சம்பந்தப்படவில்லை

முன்னாள் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி, பேராக்கின் அரசமைப்பு நெருக்கடி தொடர்பில் எந்த வழக்கிலும் தாம் சம்பதப்பட்டதில்லை என்றும் அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட வழக்கு எதுவும் தம் விசாரணைக்கு வந்ததில்லை என்றும் கூறுகிறார். ஒரு காலத்தில் அம்னோ சட்ட ஆலோசகராகவும் அதன் ஒழுங்கு வாரியத் தலைவராகவும் இருந்த அஸ்மி, …

மாட் சாபு மீது கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்டது

தாசெக் குளுகோரில் ஆகஸ்ட் 21 இல் நடந்த ஒரு செராமாவில் 1950 ஆம் ஆண்டு புக்கிட் கெப்போங்கில் நடந்த ஒரு சம்பவத்தின் அதிகாரத்துவ நிலைப்பாட்டின் மீது கேள்வி எழுப்பியதற்காக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு மீது பட்டர்வொர்த் செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்றுகாலையில் கிரிமினல் அவதூறு குற்றம்…

ஆக்கோப் தமிழ்ப்பள்ளிக்கு மாற்று இடம் : சேவியர் ஜெயகுமார்

காப்பாரிலுள்ள ஆக்கோப் தமிழ்ப்பள்ளியில் நேற்று நடைபெற்ற இளந்தளிர் இதழ் அறிமுக நிகழ்வில் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கலந்து சிறப்பித்தார். அத்துடன் அந்நிகழ்வில் இளந்தளிர் இதழில் வெளிவந்த குறிப்புகளை கொண்டு நடத்தப்பட்ட அறிவு புதிர் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் எடுத்து…

60,000 போலி அடையாளக் கார்டுகள்: இசா சட்டம் தேவைப்படும் போது…

"நஜிப், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை விரைவாக ரத்துச் செய்ய வேண்டாம். அதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய மக்கள் அவர்கள்."       ஆளும் கட்சிக்கு வாக்களிக்குமாறு குடியுரிமை விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர் பார்வையாளன்: முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டும் அவரது பிள்ளைகளான முக்ரிஸ், மரினா- தந்தையினுடைய…

மாட் சாபு பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்

புக்கிட் கெப்போங் சம்பவம் குறித்த அதிகாரத்துவ தகவல்களுக்குச் சவால் விடுத்ததற்காக நீதிமன்ற அழைப்பாணையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நேற்று பினாங்கு போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். மாட் சாபு என்றும் அழைக்கப்படும் முகமட்டுக்கு எதிராக கைது ஆணையை போலீசார் வெளியிட்டுள்ளதாக அந்த மாநில போலீஸ் படைத் தலைவர் அயூப்…

நஸ்ரி: விசாரணை இன்றி தடுப்புக் காவலில் வைப்பது தொடரும்

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (இசா) மற்றும் அதுபோன்ற இதரச் சட்டங்கள் அகற்றப்பட்டாலும், விசாரணை இன்றி தடுத்து வைக்கப்படும் நடைமுறை தொடரும் என்று சட்டத்துறைக்கான அமைச்சர் முகமட் நஸ்ரி கூறினார். இசா சட்டத்திற்கு மாற்றாக தாக்கல் செய்யப்படவிருக்கும் இரு புதிய சட்டங்கள் விசாரணை இன்றி தடுத்து வைப்பதை அனுமதிக்கும் ஏனென்றால்…

முன்னாள் EC தலைவர் 60,000 போலி அடையாளக் கார்டுகளை வெளியிட்டார்

முன்னாள் தேர்தல் ஆணைய(EC)த் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், அம்னோ ஆணைக்கு இணங்க 60,000க்கு மேற்பட்ட போலி மலேசிய அடையாளக் கார்டுகளை வெளியிட்டதை ஒப்புக் கொண்டுள்ளார் என்னும் அதிர்ச்சி தகவலை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதரகம் வாஷிங்டனில் உள்ள வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பிய அரசதந்திரக் குறிப்பில்…

நஸ்ரி: பாக் லா-வின் சீர்திருத்த திட்டம் “தெளிவாக இல்லாததால்” எதிர்ப்புத்…

முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி தமது சீர்திருத்தத் திட்டம் மீது தெளிவாக இல்லாததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அப்துல்லாவின் திட்டங்களுக்கு "ஒரளவு" எதிர்ப்பு இருந்ததை நஸ்ரி ஒப்புக் கொண்டார். அந்தத் திட்டத்தில் என்ன விஷயங்கள் சம்பந்தப்பட்டிருக்கும்…

லிம் குவான் எங்-கின் உதவியாளர் விசாரிக்கப்பட்டார்

பினாங்கு டிஏபி தலைமையகம் மீது கடந்த மாதம் சாயம் வீசப்பட்டதற்கு அம்னோ மீது குற்றம் சாட்டியதாகவும் அதற்குச் சில நாட்கள் கழித்து நடத்தப்பட்ட தீ வைப்புச் சம்பவம் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் அம்னோ சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சொன்னதாக கூறப்படுவது தொடர்பில் போலீசார் அவருடைய…

கெராக்கன் இளைஞர் தலைவர் கார் பற்றிய கருத்துக்காக மன்னிப்பு கேட்டார்

பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா பென்ஸ் எஸ்-கிளாஸ் கார் வைத்திருக்கிறார் என்று தாம் சொன்னதாகக் கூறப்படுவதை மறுத்த கெராக்கான் இளைஞர் தலைவர் லிம் சி பின்,  அவர் அந்தக் காரைப் பயன்படுத்துகிறார் என்றுதான் கூறியதாக விளக்கம் அளித்தார். Read More

37 வங்காளதேசிகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது

 1998-இலிருந்து 37 வங்காளதேசிகள் மட்டுமே குடியுரிமை பெற்றிருக்கிறார்கள் என்று தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) நேற்று அறிவித்தது. Read More

மாட் சாபு வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

நேற்றிரவு, ஷா ஆலம் செக்‌ஷன் 19-இல் உள்ள பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு வீட்டின்மீது பெட்ரோல் குண்டு ஒன்று வீசப்பட்டது.இதனால் வீட்டின் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்தது. நள்ளிரவைத் தாண்டி 12.30க்கு நிகந்த அச்சம்பத்தை அவரின் மகள் நூருல் ஹுடா உறுதிப்படுத்தினார்.குண்டு வெடிப்பால்  தீ மூண்டதாகவும் அதை அண்டைவீட்டார்கள்…

ஸாக்கி:நீதித்துறை நேர்மைக்கு அரசுக்கு எதிரான தீர்ப்புகளே சான்று

நீதிமன்றங்கள் பெரும்பாலும் அரசுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பளிக்கும் என்று அடிக்கடி கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல என்கிறார் அண்மையில் பணி ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி. கூட்டரசு அரசாங்கத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் கணக்கெடுத்துப் பார்த்தால் பெரும்பாலான வழக்குகளில் அரசுக்கு எதிராக தீர்ப்பு கூறப்பட்டிருப்பதைக் காணலாம். மலேசியாகினியுடனான நேர்காணலில்…

புக்கிட் கெப்போங் உரை தொடர்பில் மாட் சாபு மீது குற்றம்…

பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, புக்கிட் கெப்போங் சம்பவம் குறித்து ஆகஸ்ட் 21ம் தேதி பினாங்கில் ஆற்றிய உரைக்காக அவர் மீது நாளை காலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறது. புக்கிட் கெப்போங் சம்பவம் பற்றிய அதிகாரத்துவ விளக்கங்கள் மீது அவர் தமது உரையில் கேள்வி எழுப்பியிருந்தார். தவறான…