போலீஸ் குறிப்பை அம்பலப்படுத்தவிருந்தாராம் சஞ்சீவன்

கடந்த வாரம் நெகிரி செம்பிலானில் சுடப்பட்ட குற்றத் தடுப்பு ஆர்வலர் ஆர். ஸ்ரீசஞ்சீவன், போதைப் பொருள் கும்பல்களுடன் தொடர்புள்ள போலீஸ் அதிகாரிகள் பற்றி விவரங்கள் அடங்கிய குறிப்பு ஒன்றை  இவ்வாரம் அம்பலப்படுத்த விருந்தார். இதனைத் தெரிவித்த பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி,  “அது போலீசிலிருந்து பெறப்பட்ட இரகசிய…

‘தாம் மாட்டி விடப்படுவதாக தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் சொல்வது விசாரிக்கப்படும்’

தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த என் தர்மேந்திரன் கொலையில்  தாம் மாட்டிவிடப்படுவதாக இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் கூறிக் கொண்டுள்ளது  பற்றி விசாரிக்கப்படும் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு  பாக்கார் கூறுகிறார். "நாங்கள் அதனை புலனாய்வு செய்வோம். நான் ஏற்கனவே சொன்னது போல  நாங்கள்…

ஹரி கிருஷ்ணன் தப்பியோடவில்லை என்கிறார் அவரின் மனைவி

தடுப்புக்காவலில்  இறந்துபோன என். தர்மேந்திரன் வழக்கில்  சம்பந்தமுள்ளவர் எனச் சந்தேகிக்கப்படும் நாலாவது நபரான இன்ஸ்பெக்டர் எஸ். ஹரிகிருஷ்ணன் எங்கும் தப்பியோடவில்லை  என  அவரின்  துணைவியார்  இன்று கூறினார். இடைநீக்கம்  செய்யப்பட்டிருப்பதாக   தெரிவிக்கப்பட்டதால்,   விடுப்பில் இருந்த ஹரிகிருஷ்ணன் விடுப்பு  முடிந்ததும் வேலைக்குத் திரும்பவில்லை என்று ஷார்மினி பாலகிருஷ்ணன்(படத்தில் வலம் இருப்பவர்)  மலேசியாகினியிடம்…

பொதுத் தேர்தல் மனுதாரர்களுக்கு விதிக்கப்படும் செலவுத் தொகைத் தண்டனை ‘ஒடுக்குமுறையானது’

13வது பொதுத் தேர்தல் மனுக்களை நிராகரிக்கும் தேர்தல் நீதிமன்றங்கள்  மனுதாரர்கள் கொடுக்க வேண்டும் என ஆணையிடும் செலவுத் தொகை தண்டனை  மிகவும் அதிகமாக இருப்பதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்  சொல்கிறார். 'ஒடுக்குமுறையான' அந்த செலவுத் தொகை தண்டனை மனுக்கள் கொடுக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.…

லிம்: ‘கம்யூனிஸ்ட்களுடன் கைரிக்கு உள்ள பிணைப்பை அம்னோ இளைஞர் பிரிவு…

கம்யூனிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் அம்னோ இளைஞர் பிரிவு,  அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா ஆகியவற்றின் உண்மையான  நிலை குறித்து டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.. பாரிசான் நேசனல் இளைஞர் பிரிவுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர்  அணிக்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்த…

வலிய கூட்டத்துக்கு எதிராக தன்னந் தனியராக பழனிவேல்

ஜி. பழனிவேலும் டாக்டர் எஸ். சுப்ரமணியமும் மோதத் தயாராகும் மஇகா தேர்தல் பேரார்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போதைக்குத் தேர்தல் களத்தில் பழினிவேல் தன்னந்தனியாக நிற்பதுபோல் தெரிகிறது. அவருக்கு எதிராக சுப்ரமணியம், வி. சரவணன் தலைமையில் வலுவான அணி ஒன்று திரண்டுள்ளது. சரவணன், பழனிவேலைக் கவிழ்க்கும் பரப்புரையில் முழுமூச்சாக இறங்கியுள்ளார்.…

தப்பியோடிய போலீஸ் அதிகாரி சரண், நாளை குற்றம்சாட்டப்படுவார்

போலீஸ் காவலில்  இறந்துபோன என். தர்மேந்திரன் வழக்கில் சம்பந்தமுள்ளவர் எனச் சந்தேகிக்கப்படும் நாலாவது நபர் சரணடைந்துள்ளார். ஹரி கிருஷ்ணன், இன்று காலை மணி 10.30க்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் சரணடைந்தார். நாளை அவர்  நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்  என  இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.…

சஞ்சீவன் மருட்டல் குறித்து ‘போலீசில் புகார் செய்யவில்லை’

சனிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிர் பிழைத்துள்ள மை  வாட்ச் அமைப்புத் தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவன் தமது டிவிட்டர் பதிவில்  குறிப்பிட்டுள்ளது போல தமக்கும் தமது குடும்பத்துக்கும் விடுக்கப்பட்டுள்ளதாகக்  கூறப்படும் மருட்டல் குறித்து போலீசில் புகார் செய்யவில்லை என நெகிரி  செம்பிலான் மாநில போலீஸ் படைத்…

இசி-யைபோன்று ஆர்ஓஎஸ்ஸும் பிஎன்னின் ஏவலர்போல நடந்துகொள்கிறது

உங்கள் கருத்து  ‘டிஏபி உறுப்பினர்கள் பிரிந்து சென்று புதிய கட்சி அமைக்கட்டும், அமைக்காமல் போகட்டும். அரசாங்கப் பணியாளரான ஆர்ஓஎஸ் இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மானுக்கு என்ன வந்துவிட்டது?’. உறுப்பினர்கள் புதிய கட்சியை விரும்புவதை நிரூபியுங்கள்: ஆர்ஓஎஸ்ஸுக்கு டிஏபி சவால் ஆரிஸ்46: சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்)  இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மானின்…

அம்னோ மகளிர் தலைவி பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு ஷாரிஸாட்டுக்கு வேண்டுகோள்

ஷாரிஸாட் அப்துல் ஜலில் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி பதவியிலிருந்து  விலகிக் கொள்ள வேண்டும் என அந்தப் பிரிவின் முன்னாள் செயலாளர் பாரிடா  அபு ஹசான் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்தப் பதவிக்கு முன்னாள் புத்ரி தலைவு அஸாலினா ஒஸ்மான் தொடுத்துள்ள  சவாலைத் தடுக்க "தாய்-மகள் உறவுகளில் பிளவு" போன்ற…

‘கூடா’ (Kuda) மய்யங்களை மூடுமாறு ‘உத்தரவு’ பிறப்பிக்கப்பட்டுள்ளது

‘kedai mesin kuda’ என அழைக்கப்படும் சட்ட விரோத சூதாட்ட மய்யங்களை  மூடுமாறு நாடு முழுவதும் 'உத்தரவு' பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நன்யாங் சியாங்  பாவ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. யார் அந்த உத்தரவைப் பிறப்பித்தது என்பதை அந்தச் செய்தி குறிப்பிடவில்லை  என்றாலும் அது அரசியல் நோக்கம் கொண்டது என்றும் நடப்பு…

அம்னோ தேர்தல் நெருங்குகிறது, அதிகமான இனவாதக் ‘கடிகளை’ எதிர்ப்பார்க்கலாம்

"அம்னோ பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களின் கைப்பாவை என்ற உண்மையான வரலாற்றை காட்டும் திரைப்படத்தை யாராவது தயாரிக்க வேண்டும்" சீனர் புதுக் கிராமம் பற்றிய திரைப்படத்தை அம்னோ இளைஞர் பிரிவு  சாடுகின்றது சிவிக்: நான் அந்த 'புதுக் கிராமம்' திரைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆகவே நான்  அது குறித்து எதுவும் சொல்லப் போவதில்லை.…

சஞ்சீவனை கொலை செய்ய விரும்புவது யார் ? ஏகே ஆனந்த்

தகவல்களை அம்பலப்படுத்தும் ( whistleblower ) ஆர் ஸ்ரீ சஞ்சீவனைக் கொலை  செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் உள்துறை அமைச்சும் போலீசும்  சம்பந்தப்பட்டுள்ளனரா ? அந்தக் கேள்வியை மலேசிய இந்து இயக்கத் தலைவர் எஸ் சஞ்சய் எழுப்பியுள்ளார். குற்றச் செயல்களைக் கண்காணிக்கும் மை வாட்ச் அமைப்புத் தலைவர் மீது  சனிக்கிழமை…

‘புதுக் கிராமம்’ ( ‘The New Village’ ) திரையீடு…

'புதுக் கிராமம்' ( 'The New Village' ) என்னும் திரைப்பட வெளியீடு  தள்ளி  வைக்கப்பட்டுள்ளது. திரைப்படத் தணிக்கை வாரியம் அந்தப் படத்தை மறு ஆய்வு செய்வதற்கான  அதன் திரையீடு ஒத்தி வைக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட்  ஹமிடி தெரிவித்தார். அந்தத் திரைப்படத்தின் கரு, செய்தி ஆகியவற்றின்…

சஞ்சீவன் கூறிக் கொண்டுள்ள போக்கிரி போலீஸ்காரர் விஷயத்தை விசாரிப்பதாக ஐஜிபி…

மை வாட்ச் எனப்படும் குற்றத் தடுப்பு அரசு சாரா அமைப்புத் தலைவர் ஆர் சஞ்சீவன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலையும் தம்மை மடக்குவதற்கு போக்கிரி போலீஸ்காரர்கள் முயலுவதாக அவர் கூறிக் கொண்டுள்ளதையும் முழுமையாக விசாரிப்பதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் வாக்குறுதி அளித்துள்ளார்.…

தேர்தல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவது மீது அன்வார் ஆத்திரம்

13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகளுக்கு எதிராக பக்காத்தான் ராக்யாட் வேட்பாளர்கள் சமர்பித்த தேர்தல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் விதம் குறித்து பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆத்திரமடைந்துள்ளார். "எங்கள் வழக்குரைஞர்கள் கோலாலம்பூரில் ஒர் அறிவிப்பை வெளியிடுவார்கள். நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதித்துக்…

ஹலோ, உண்மையைச் சொல்வது தேச நிந்தனை அல்ல

பொது நலன் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான ஒரு விஷயத்தில் முதுநிலை போலீஸ் அதிகாரி ஒருவரைத் தவறாக மேற்கோள் காட்டுவது தேசநிந்தனையாகக் கருதப்படலாம்' தாம் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக இடைக்கால போலீஸ் தலைவர் சொல்கிறார் கலா: சொன்னது, சொல்லாதது குறித்து விளக்கமளித்த சிலாங்கூர் போலீஸ் படை இடைக்காலத் தலைவர் ஏ தெய்வீகனுக்கு…

முன்னாள் பிரதமர் தாம் உருவாக்கிய பேய்களை ஒட்ட முயலுகிறார்

'உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது சீனர்களுடைய இக்கட்டான சூழ்நிலை அல்ல. மகாதீருடைய பயங்கரக் கனவாகும். சீனர்களை சாடுவதின் மூலம் தாம் உருவாக்கிய பேய்களை ஓட்ட அவர் முனைகிறார்' மகாதீர்: சீனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகின்றனரா அல்லது பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனரா ? துணிச்சலான மலேசியன்: அந்த போலி…

ஜெம்போல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை, போலீஸ்காரர்கள் பற்றி அம்பலமான தகவல்களுடன்…

குற்றச் செயல் தடுப்பு அரசு சாரா அமைப்பான மை வாட்ச் MyWatch தலைவர்  ஆர் ஸ்ரீ சஞ்சீவனைக் கொலை செய்வதற்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட  முயற்சிக்கும் அண்மையில் அவர் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய  போலீஸ்காரர்களைப் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்தியதற்கும் தொடர்பு  இருக்கலாம் என முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர்…

சாப்ரி: இணையம் தவறாகப் பயன்படுத்தப்படுவது கடுமையான கட்டத்தை எட்டியுள்ளது

மலேசியாவில் இணையத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு கடுமையான  கட்டத்தை எட்டி விட்டதாக பல்லூடக, தொடர்பு அமைச்சர் அகமட் சாப்ரி சிக்  எச்சரித்துள்ளார். அதனால் மலேசியாவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணைய வசதிகளை  மறு ஆய்வு செய்வதற்கு தமது அமைச்சு தயங்காது என அவர் சொன்னார். இணையத்தை விவேகமற்ற முறையில் பயன்படுத்துவதால்…

மகாதீரின் வக்ர புத்தி!

-மு. குலசேகரன், 28 ஜூலை, 2013. நேற்றைய (26-7-13) ஓர் ஆங்கில நாளிதழில் பிரசுரமான கட்டுரை ஒன்றில், முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது 10 லட்சம் தகுதியில்லாத சீனர்களுக்கும், இந்தியர்களுக்கும்  குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக  குதர்க்கமாக எழுதியுள்ளார்.   எப்பொழுதுமே மகாதீர் தன்னுடைய எழுதுக்களில் சீனர்களும் இந்தியர்களும் விரும்பத்தகாதவர்கள் போலவும்…

“இசி போக்குவரத்து அலவன்ஸை நியாயப்படுத்துவதால் வாக்குகளுக்கு பணம் கொடுப்பது அதிகரிக்கும்”

அண்மையில் முடிந்த கோலா பெசுட் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு  'போக்குவரத்து அலவன்ஸ்' கொடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் (இசி) தவறு  இல்லை எனக் கூறியிருப்பதால் எதிர்காலத் தேர்தல்களில் வாக்குகளை வாங்கும்  நடவடிக்கைகள் பெருகுவதற்கு வழி வகுக்கும் என பாஸ் கட்சி சொல்கிறது. "தேர்தல் சட்டங்களை அமலாக்கும் பொறுப்பை ஏற்க இசி…

குளியலறை கேண்டீன் சர்ச்சையில் ஆசிரியர் சங்கம் தலையிடுகின்றது

தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றில் குளியலறை கேண்டீனாக பயன்படுத்தப்பட்டதை  அம்பலப்படுத்திய பெற்றோர்களுடைய பிள்ளைகளான மாணவர்களுடன் தொடர்பு  கொள்ளும் போது ஆசிரியர்கள் தொழில் ரீதியாக நடந்து கொள்ள வேண்டும் என  தேசிய ஆசிரியர் தொழிற்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. "ஆசிரியர்கள் தொழில் ரீதியாக செயல்பட்டால் இது நிகழாது," என அந்த சங்கத்தின் தலைமைச்…