அரசு துணை அமைச்சர் ஸ்னோடன் லவன் (Snowdan Lawan), இந்த விவகாரம் 'அரசியலமைப்பு ரீதியிலான பரிசீலனைகளை உள்ளடக்கியது' என்று கூறுகிறார். சரவாக் மாநில துணை அமைச்சர் ஸ்னோடன் லாவன் கூறுகையில், "பெற்றோர்களில் ஒருவர் பூர்வீகக்குடியாக இருந்தால், கலப்புத் திருமணத்தில் பிறந்த குழந்தைகளும் பூர்வீகக்குடிகளாக (பூமிபுத்ரா) அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்யும்…
‘ரொம்பினை வைத்து நஜிப் ஆட்சிமீது வாக்காளர்களின் உணர்வுகளை மதிப்பிட முடியாது’
ரொம்பின் இடைத் தேர்தல் முடிவுகளை வைத்து பரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்தைப் பிடித்தாட்டும் விவகாரங்கள் வாக்காளர் உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக முடிவு செய்துவிட இயலாது. பிஎன்னின் பெரும்பான்மை குறைந்தது உண்மைதான். அதற்கு வாக்காளர்கள் குறைந்த எண்ணிக்கையில் வாக்களிக்க வந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என ஜனநாயக, பொருளாதார…
இசி: நீண்ட வாரக் கடைசி வாக்காளர் குறைவுக்குக் காரணம்
ரொம்பின் இடைத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 53,926 வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 74 விழுக்காட்டினர்தான் வாக்களித்திருக்கிறார்கள். வாரக் கடைசி நீண்டு போனது இதற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசிஸ் யூசுப் கூறினார். 2013 பொதுத் தேர்தலில் 86…
ரோம்பின் இடைத்தேர்தல்: பிஎன் வெற்றி
ரோம்பின் தொகுதிக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாரிசான் வேட்பாளர் வெற்றி பெற்றார். ஆனால், அவருடைய பெரும்பான்மை வாக்குகள் வெகுவாக குறைந்துள்ளன. அதற்கான காரணம் வாக்காளர்கள் ஜிஎஸ்டி வரி மீதான கோபமாக இருக்கக்கூடும். இரவு மணி 10.15 க்குப் பின்னர் தேர்தல் ஆணையம் பாரிசான் வேட்பாளர் ஹசான் அரிப்பின் வெற்றி…
விரைவு ரயில் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது
சிங்கப்பூரும் கோலாலும்பூருக்குமிடையில் 2020-இல் கட்டி முடிப்பதாக இருந்த அதிவேக ரயில் திட்டத்தைத் தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது சிக்கல்மிக்க திட்டம் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக இரு நாட்டுப் பிரதமர்களும் அறிவித்தனர். ஆண்டு இறுதிக்குள் ஓர் உடன்பாட்டுக்கு வந்து ரயில் திட்டத்தை கட்டி முடிக்கும் புதிய காலவரிசையை அறிவிக்க முடியும் …
மைனர்கள் கைது பற்றி அமைச்சர் மெளனம்
கடந்த வெள்ளிக்கிழமை பொருள், சேவை வரி எதிர்ப்புப் பேரணியின்போது ஆறு மைனர்கள்(21 வயது ஆகாதவர்கள்) ஓர் இரவு முழுக்க தடுத்து வைக்கப்பட்டது பற்றி மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ரொஹானி அப்துல் கரிமிடம் வினவியதற்கு அவர் மெளனம் சாதித்தார். பின்னர், “அதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமே விட்டு விடுகிறோம்”,…
வாக்காளர் எண்ணிக்கை குறையலாம் என பக்கத்தான் கவலை
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே எஞ்சியுள்ள வேளையில் பக்கத்தான் ரக்யாட்டுக்கு பயம் வந்து விட்டது. வாக்காளிப்பு நாளில் வாக்களிக்க வருவோர் எண்ணிக்கை குறைந்தால் அது தன் வேட்பாளர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கலாம் என்று …
வாக்காளர்களுக்குப் போக்குவரத்து உதவித்தொகை கொடுப்பது குற்றமாகாது
ஒரு தேர்தலில் வாக்காளர்களுக்குப் போக்குவரத்துப் படி வழங்குவது எந்தத் தேர்தல் சட்டத்தையும் மீறுவதாகாது என்கிறார் தேர்தல் ஆணைய(இசி) தலைவர் அப்துல் அசிஸ் யூசுப். “குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வாக்காளருக்குப் பணம் கொடுப்பதும் அவ்வாக்காளர் அக்கட்சிக்கே வாக்களிப்பதும்தான் குற்றமாகும். “வாக்காளர்கள் திரும்பி வந்து வாக்களிக்க உதவித் தொகை வழங்குவது பற்றி…
இன்று ரொம்பினில் இடைத் தேர்தல்
இன்று ரொம்பின் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஜமாலுடின் ஜர்ஜிஸ் ஏப்ரல் 4-இல் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானதை அடுத்து இவ்விடைத் தேர்தல் நடைபெறுகிறது. அத்தொகுதியில் 52,744 வாக்காளர்கள் உள்ளனர். வாக்களிப்பு காலை மணி 8-க்குத் தொடங்கியது. மாலை மணி 5-க்கு முடிவுறும். ரொம்பின்…
பிஎஸ்டி புதிதாக ஆள் சேர்ப்பதை நிறுத்தியுள்ளது, பண முடையா?
புதிதாக ஆள் சேர்ப்பதை நிறுத்துமாறு 15 அரசுத் துறைகளுக்கு உத்தரவிடப் பட்டிருப்பதாக சின் சியு டெய்லி செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இதில் கல்வி அமைச்சு, போலீஸ், ஆயுதப் படைகள் ஆகியவையும் உள்ளிட்டிருப்பதாக அச்செய்தி கூறிற்று. ஏப்ரல் 22 தேதியிடப்பட்ட அரசாங்கச் சுற்றறிக்கையின்படி அரசுத் துறைகளுக்குப் புதிதாக ஆள் சேர்ப்பது …
10 ரிங்கிட்டுக்கு 10 ரிங்கிட் முன் கட்டண அட்டை :…
ரிம10 முன் கட்டண அட்டைக்கு மக்கள் 10 ரிங்கிட் மட்டுமே செலுத்துவதை உறுதிப்படுத்தப்போவதாக தொடர்பு, பல்லூடக அமைச்சர் அஹமட் சபரி சிக் கூறினார். தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சந்திக்கும்போது இந்த நிலைப்பாட்டை முன்னிறுத்தியே பேச்சு நடத்தப்போவதாக அமைச்சர் கூறினார். அதன் பின்னர் அது அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்பட்டு ஒரு முடிவெடுக்கப்படும்.…
வேட்பாளர்களுக்கு பிஎம் கிரெடிட் தேவை என்பது அபத்தம்
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் எஸ்பிம் தேர்வில் பகாசா மலேசியா பாடத்தில் குறைந்தது கிரெடிட் பெற்றிருக்க வேண்டும் என்பது சுத்த அபத்தம் என்கிறார் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி(எஸ்யுபிபி)த் தலைவர் டாக்டர் சிம் குய் ஹியான். ஆனால், எம்பிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றாக எழுத,படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பதை அவர் …
வான் அஸிஸாவின் வெற்றி பல்லின மக்களின் வெற்றி!-
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 4, 2015 அடுத்த மூன்று நாட்களில் பகாங் ரொம்பின் மற்றும் பினாங்கு பெர்மாத்தாங் பாவ் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களை மலேசிய மக்கள் எதிர்க்கொண்ட பொழுதும், பினாங்கு பெர்மாத்தாங் பாவ்தொகுதி இடைத்தேர்தல் நாட்டு மக்களின் கவனத்தை மட்டுமின்றி உலக…
ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணி: இப்போது மாட் சாபு கைது செய்யப்பட்டுள்ளார்
மே 1 இல் நடைபெற்ற ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றதற்காக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் மாட் சாபு இன்று கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு வரும்படி போலீசார் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து தாமாகவே டாங் வாங்கி போலீஸ் நிலையத்திற்கு காலை மணி 11.30 க்கு சென்றதாக மாட் சாபு…
நாளை அனைவரும் கருப்பு ஆடை அணிய பெர்சே கோரிக்கை
தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே, அண்மையில் மே தினப் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மலேசியர்கள் நாளை கருப்பு ஆடை தரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது. ‘ஒப்ஸ் ஹித்தாம் 505’ என அழைக்கப்படும் இக் கண்டன இயக்கம் 13வது பொதுத் தேர்தலில் …
இறுதிக் கட்ட பரப்புரையில் ஹுடுட்டை வைத்து ஆடுகிறது பாஸ்
ஹுடுட் செயலாக்கத்துக்கு ஆதரவளிக்கும் எம்பிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதற்காகவாவது பாஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என ரொம்பின் வாக்காளர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நேற்று முவாட்ஸாம் ஷாவில் ஒரு செராமாவில் உரை நிகழ்த்திய பாஸ் உதவித் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், பாஸ் எம்பி ஒருவர் இருப்பது பாஸ் …
அஸ்மின்: ஐஜிபி, அம்னோவின் கையாளா நீங்கள்?
பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் ஒரு வேட்பாளர் அல்லர். ஆனால், நேற்று அங்கு பிகேஆர் செராமா ஒன்றில் அவரைப் பற்றித்தான் முழுக்க முழுக்க பேசப்பட்டது. 200 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, அந்நிகழ்வில் …
அம்னோ, மசீச குறைகூறலால் எரிச்சலடைந்தார் இஸ்மாயில் சப்ரி
விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், எதிரணியினர் தொகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவதில்லை என்ற தம் கொள்கையை அம்னோ, மசீச உறுப்பினர்களும் குறை சொல்கிறார்களே என “வருத்தம்” அடைந்துள்ளார். தாம் சொல்லியதைத் திரித்துக் கூறி விட்டார்கள் என்றும் பினாங்கு அரசாங்கம்தான் பிஎன் வசமுள்ள தொகுதிகளை …
புக்கிட் அமான் கோழைகள்: அம்பிகா சாடல்
இரவு முழுக்க போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட அனுபவத்தை நினைவுகூர்ந்த வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், உத்தரவுப்படி நடந்துகொள்ளும் அடிநிலை போலீஸ் அதிகாரிகளைக் குறைகூற விரும்பவில்லை என்றார். அவரது ஆத்திரமெல்லாம் புக்கிட் அமானில் உள்ள அவர்களின் மேலதிகாரிகளின்மீதுதான். “என்னை பொறுத்தவரை, உத்தரவுகள் இடுகிறார்களே முகமும் பெயரும் …
வான் அஸிஸாவே பெர்மாத்தாங் பாவ் வாக்காளர்களின் சிறந்த தேர்வாக இருக்க…
பினாங்கு பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கெஅடிலான் வேட்பாளரான டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் பக்காத்தான் எதிர்க்கட்சிக் கூட்டணியைப் பிரதிநிதித்து போட்டியிடுகிறார். கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவரான வான் அஸிஸா, இந்த நாடாளுமன்ற தொகுதியின் ஒரு முன்னாள் உறுப்பினர் என்பது மட்டுமன்றி, காஜாங் தொகுதி சட்டமன்ற…
சந்தியாகு: கைது நடவடிக்கை அரசாங்கம் மக்களைக் கண்டு அச்சமைடந்திருப்பதைக் காட்டுகிறது
பொருள்கள் மற்றும் சேவைகள் வரிக்கு (ஜிஎஸ்டி) எதிர்ப்பு தெரிவிக்கவும் தொழிலாளர் தினத்தை கொண்டாடவும் மே தினத்தன்று 20,000க்கு மேற்பட்டோர் அமைதியான பேரணியில் பங்கேற்றனர். அப்பேரணியில் ஒரு தனிப்பட்ட புகைக்குண்டு சம்பவத்துடன் போலீசார் புகழ் பாடாத வாசகங்களும் காணப்பட்டன. அனைத்துலக தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அப்படி…
தியன் சுவா முரட்டுத்தனமான முறையில் கைது செய்யப்பட்டார்
செபராங் ஜெயா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கையில் பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பண்டார் பெர்டா, செபராங் பிறை போலீஸ் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்பு கொண்ட போது, "நான் இங்கிருக்கிறேன்,ஆனால் இப்போது பேச முடியாது" என்று தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு…
அம்பிகாவை தடுத்து வைப்பதற்கான ரிமாண்ட் மனு நிராகரிக்கப்பட்டது
நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகாவை தடுத்து வைப்பதற்கான ரிமாண்ட் உத்தரவைப் பெறுவதில் போலீசார் தோல்வி கண்டனர். ஆனால், கைது செய்யப்பட்ட இதர 29 இளைஞர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டவில்லை. வழக்குரைஞர் மிசேல் யேசுடாஸ் அளித்த…
மிரட்டினார், கையூட்டு கொடுக்க முனைந்தார் என இஸ்மாயில்மீது குற்றச்சாட்டு
விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, வாக்காளர்களை “மிரட்டியதன்”வழி தேர்தல் சட்டத்தை மீறினார் என பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளது. அதன் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார், பிகேஆர் வேட்பாளர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு வாக்களிக்க வேண்டாம் இஸ்மாயில் சப்ரி வாக்காளர்களை மிரட்டிதாகக் …


