பெர்க்காசா: ‘புதுக் கிராமம்’ மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியை மேம்படுத்தினால் அதனைத்…

'புதுக் கிராமம்' திரைப்படத்தில் கம்யூனிசத்தைப் புகழும் அம்சங்கள் உண்மையில்  இருந்தால் அதனை முழுமையாகத் தடை செய்ய  வேண்டும் எனப் பெர்க்காசா  கூறுகின்றது. "அந்தத் திரைப்படத்தில் கீழறுப்பு அம்சங்கள் இருந்து அது மலாயாக் கம்யூனிஸ்ட்  கட்சியை மேம்படுத்தினாலும் அதனைப் புகழ்ந்தாலும் அது முற்றாகத்  திரையிடப்படுவதிலிருந்து தடை செய்யப்பட வேண்டும்," என…

‘balik India, China’ விவகாரத்தில் விரைவான நடவடிக்கை தேவை என…

தமது பள்ளிக்கூடத்தில் உள்ள சீன, இந்திய மாணவர்களை 'இந்தியாவுக்கும்  சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்' எனக் கூறிய தலைமை ஆசிரியையை  உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு கெரக்கான் உதவித் தலைவர் ஏ கோகிலன் பிள்ளை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த தலைமை ஆசிரியை அந்த வார்த்தைகளை சொல்லியிருப்பதை  விசாரணைகள் கண்டறிந்தால் அவரை நீக்கவும்…

சிலாங்கூர் அம்னோ: கேண்டீன் பற்றிய தகவல்களை வெளியிட்டவர்களை தேசநிந்தனைச் சட்டத்தின்…

ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளி குளியலறை கேண்டீன் சர்ச்சையை  பெரிதுபடுத்தியதற்குப் பொறுப்பான பெற்றோர்களை 1948ம் ஆண்டுக்கான  தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனச் சிலாங்கூர்  அம்னோ கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு வேண்டுகோள் விடுத்த சிலாங்கூர் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர்  நோ ஒமார், அந்தப் பள்ளிக்கூடத்தின்…

போலீசின் வேலை குற்றத்தை எதிர்ப்பது; பிஎன் எதிரிகளைத் துரத்திக்கொண்டிருப்பதல்ல :டிஏபி

போலீஸ் படை குற்ற-எதிர்ப்பில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர பிஎன்னின் அரசியல் எதிரிகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், குற்றத்தடுப்பில் ஈடுபட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கையை 14  விழுக்காட்டிலிருந்து  50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.…

தர்மேந்திரனைக் கொலை செய்ததாக ஹரிகிருஷ்ணன்மீது குற்றச்சாட்டு

போலீஸ் காவலில் இருந்த  என்.தர்மேந்திரனைக் கொன்றதாக  இன்ஸ்பெக்டர் எஸ்.ஹரிகிருஷ்ணன்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.  ஹரிகிருஷ்ணன் அவ்வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள  நாலாவது நபராவார். வழக்கு விசாரணைக்கான நாள் பிண-பரிசோதனை அறிக்கை கிடைத்தபின்னர்  முடிவுசெய்யப்படும்  என நீதிபதி நூர் அமினாதுல் மர்டியா முகம்மட் நூர் கூறினார்.  அது ஆகஸ்ட் 2…

அதிகார அத்துமீறல் தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் மூன்று…

பல மில்லியன் ரிங்கிட் பெறும் உணவுத் தொழில் திட்டம் சம்பந்தப்பட்ட அதிகார  அத்துமீறல் எனக் கூறப்படுவது மீதான விசாரணைக்கு உதவுவதற்காக மலேசிய  ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம்  ஒன்றின் மூன்று முன்னாள் உயர் அதிகாரிகளைக் கைது செய்துள்ளது. அந்த மூவரும் நிறுவனத்தில் இயக்குநர், தலைமை…

அமைச்சரவை நியமனங்கள் மீது கேள்வி எழுப்பும் முயற்சியில் குலசேகரன் தோல்வி

இரண்டு அமைச்சர்களும் மூன்று துணை அமைச்சர்களும் செனட்டர்களாகப் பதவி  உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்கு முன்னரே நியமிக்கப்பட்டது குறித்து கேள்வி  எழுப்புவதற்கு அனுமதி கோரி டிஏபி ஈப்போ பாராட் எம்பி எம் குலசேகரன்  சமர்பித்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஸாலேஹா  யூசோப் நிராகரித்துள்ளார். நியமனங்களும் பதவி ஏற்பு…

பெயரில் என்ன இருக்கிறது ? கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் தான்

'ரோஜாப் பூவை எந்தப் பெயரில் அழைத்தாலும் அது மணக்கும். அது மலாயாக்  கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும்  எல்லாம் ஒன்றே தான்.' கைரி: கம்யூனிஸ்ட் கட்சி மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியை போன்றதல்ல பார்வையாளன்: 'புதுக் கிராமம்' என்ற அந்தத் திரைப்படம் பற்றி மற்றவர்களைப்  போல…

சுகாதார அமைச்சர்: பினாங்கு மருத்துவர்கள் இனவாதிகள் அல்ல

பினாங்கில் மலாய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இனவாத மருத்துவர்கள்  'மறுத்துள்ளதாக' கூறப்படும் புகார்களை சுகாதார அமைச்சு விசாரித்துள்ளது. அந்த விஷயத்தில் இனவாத அம்சம் ஏதுமில்லை என சுகாதார அமைச்சர் டாக்டர்  எஸ் சுப்ரமணியம் கூறியுள்ளார். "அது இனவாதமாகத் தெரியவில்லை. என்றாலும் தொடர்புகள் மோசமாக  இருந்ததற்கான அம்சங்கள் காணப்படுகின்றன. மருத்துவர்கள்…

தந்தை: அவர்கள் சஞ்சீவனைக் கொல்ல முயலுவர் என நான் எதிர்பார்க்கவில்லை

மை வாட்ச் தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவன் கொலை முயற்சிக்குப் பின்னர் செர்டாங்  மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் வேளையில் அவரது நண்பர்கள்  தங்களது பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளனர். சஞ்சீவனுடைய சக தோழரும் அந்த குற்றச் செயல் கண்காணிப்பு அமைப்பின்  ஆலோசகருமான எஸ் கோபி கிருஷ்ணன், மருத்துவமனைக்குச்…

அமைச்சர், துணை அமைச்சர்கள் நியமனம் சட்டப்படிச் செல்லுமா? நாளை விசாரணை

கடந்த மே மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக (செனட்டர்களாக) இல்லாத ஐவர் அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டது சட்டப்படிச் செல்லாது என்று டிஎபி பாரட் ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். அமைச்சர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அப்துல் வாஹிட் ஒமார் மற்றும் பால் லோ…

உதயாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லையா? மறுக்கிறது சிறைத்துறை

பி. உதயகுமாருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை  என  ஒரு நாளேட்டிலும் வலைப்பதிவிலும் வெளிவந்த தகவலை  சிறைத்துறை  மறுத்துள்ளது. உதயகுமார்  நீதிமன்றத்தில்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி என்று சிறைத்துறை கொள்கைப்பிரிவு துணை இயக்குனர் சுப்ரி ஹஷிம் கூறினார். மற்ற கைதிகள் போலத்தான்  அவரும். “சிறை மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக்கு…

எச்எம் மாணவர்களை நோக்கி ‘பாலேக் இந்தியா, பாலேக் சீனா’ என்றாராம்

குளியலறை சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் ஓயவில்லை. அதற்குள் ஷா ஆலம் இடைநிலைப் பள்ளி ஒன்றில் கடந்த திங்கள்கிழமை ஒரு  தலைமையாசிரியர் மாணவர்களை இன ரீதியாக இழிவுபடுத்தியுள்ளார். “தாம் உரையாற்றிக்கொண்டிருந்தபோது  மாணவர்கள்  அதிகம் சத்தமிட்டதால்  தலைமையாசிரியர் சினமடைந்தார்.   “எல்லா மாணவர்களையும்  திட்டிய அவர் இந்திய, சீன மாணவர்களை…

சாப்ரி: முன்னோட்டத்தை மட்டும் பார்த்து விட்டு ‘புதுக் கிராமம்’ படத்தை…

முன்னோட்டத்தின் அடிப்படையில் 'புதுக் கிராமம்' திரைப்படம் பற்றி தீர்ப்புக்  கூறுவது நியாயமாகாது என தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக்  கூறுகிறார். அதன் தலைவிதி குறித்து 'நியாயமான' முடிவு எடுக்கப்படுவது முக்கியம் என  அவர் சொன்னார். 'தண்டா புத்ரா' திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த பின்னர் டிஏபி மூத்த…

செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் சஞ்சீவன்

துப்பாக்கியால் சுடப்பட்டு சிரம்பான் துவாங்கு ஜாப்பார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த மைவாட்ச் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன், செர்டாங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மூன்று போலீஸ் வாகனங்களின் பாதுகாப்புடன் அம்புலன்ஸ் வண்டி ஒன்றில் மாலை மணி 4.30க்கு அவர் செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். உடனடியாக அவசரச் சிசிச்சை பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு…

ஐஜிபி: ‘சஞ்சீவன் சுடப்பட்டதற்கு அவசரப்பட்டு போலீஸ்மீது பழிபோடாதீர்’

ஆர்.ஸ்ரீசஞ்சீவன்மீது மேற்கொள்ளப்பட்ட  கொலைமுயற்சிக்குப்  போலீசைக் குறை சொல்ல வேண்டாம்  என தேசிய போலீஸ் படைத்  தலைவர் காலிட் அபு பக்கார் கேட்டுக்கொண்டிருக்கிறார். “மைவாட்ச் தலைவர் சுடப்பட்டதற்கு போலீஸ்தான் காரணம் என்று அவசரப்பட்டு குற்றம் சாட்டாதீர்கள்”. இன்று காலை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் காலிட் செய்தியாளர்களிடம் பேசினார். அதில்…

போலீஸ் குறிப்பை அம்பலப்படுத்தவிருந்தாராம் சஞ்சீவன்

கடந்த வாரம் நெகிரி செம்பிலானில் சுடப்பட்ட குற்றத் தடுப்பு ஆர்வலர் ஆர். ஸ்ரீசஞ்சீவன், போதைப் பொருள் கும்பல்களுடன் தொடர்புள்ள போலீஸ் அதிகாரிகள் பற்றி விவரங்கள் அடங்கிய குறிப்பு ஒன்றை  இவ்வாரம் அம்பலப்படுத்த விருந்தார். இதனைத் தெரிவித்த பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி,  “அது போலீசிலிருந்து பெறப்பட்ட இரகசிய…

‘தாம் மாட்டி விடப்படுவதாக தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் சொல்வது விசாரிக்கப்படும்’

தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த என் தர்மேந்திரன் கொலையில்  தாம் மாட்டிவிடப்படுவதாக இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் கூறிக் கொண்டுள்ளது  பற்றி விசாரிக்கப்படும் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு  பாக்கார் கூறுகிறார். "நாங்கள் அதனை புலனாய்வு செய்வோம். நான் ஏற்கனவே சொன்னது போல  நாங்கள்…

ஹரி கிருஷ்ணன் தப்பியோடவில்லை என்கிறார் அவரின் மனைவி

தடுப்புக்காவலில்  இறந்துபோன என். தர்மேந்திரன் வழக்கில்  சம்பந்தமுள்ளவர் எனச் சந்தேகிக்கப்படும் நாலாவது நபரான இன்ஸ்பெக்டர் எஸ். ஹரிகிருஷ்ணன் எங்கும் தப்பியோடவில்லை  என  அவரின்  துணைவியார்  இன்று கூறினார். இடைநீக்கம்  செய்யப்பட்டிருப்பதாக   தெரிவிக்கப்பட்டதால்,   விடுப்பில் இருந்த ஹரிகிருஷ்ணன் விடுப்பு  முடிந்ததும் வேலைக்குத் திரும்பவில்லை என்று ஷார்மினி பாலகிருஷ்ணன்(படத்தில் வலம் இருப்பவர்)  மலேசியாகினியிடம்…

பொதுத் தேர்தல் மனுதாரர்களுக்கு விதிக்கப்படும் செலவுத் தொகைத் தண்டனை ‘ஒடுக்குமுறையானது’

13வது பொதுத் தேர்தல் மனுக்களை நிராகரிக்கும் தேர்தல் நீதிமன்றங்கள்  மனுதாரர்கள் கொடுக்க வேண்டும் என ஆணையிடும் செலவுத் தொகை தண்டனை  மிகவும் அதிகமாக இருப்பதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்  சொல்கிறார். 'ஒடுக்குமுறையான' அந்த செலவுத் தொகை தண்டனை மனுக்கள் கொடுக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.…

லிம்: ‘கம்யூனிஸ்ட்களுடன் கைரிக்கு உள்ள பிணைப்பை அம்னோ இளைஞர் பிரிவு…

கம்யூனிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் அம்னோ இளைஞர் பிரிவு,  அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா ஆகியவற்றின் உண்மையான  நிலை குறித்து டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.. பாரிசான் நேசனல் இளைஞர் பிரிவுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர்  அணிக்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்த…

வலிய கூட்டத்துக்கு எதிராக தன்னந் தனியராக பழனிவேல்

ஜி. பழனிவேலும் டாக்டர் எஸ். சுப்ரமணியமும் மோதத் தயாராகும் மஇகா தேர்தல் பேரார்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போதைக்குத் தேர்தல் களத்தில் பழினிவேல் தன்னந்தனியாக நிற்பதுபோல் தெரிகிறது. அவருக்கு எதிராக சுப்ரமணியம், வி. சரவணன் தலைமையில் வலுவான அணி ஒன்று திரண்டுள்ளது. சரவணன், பழனிவேலைக் கவிழ்க்கும் பரப்புரையில் முழுமூச்சாக இறங்கியுள்ளார்.…

தப்பியோடிய போலீஸ் அதிகாரி சரண், நாளை குற்றம்சாட்டப்படுவார்

போலீஸ் காவலில்  இறந்துபோன என். தர்மேந்திரன் வழக்கில் சம்பந்தமுள்ளவர் எனச் சந்தேகிக்கப்படும் நாலாவது நபர் சரணடைந்துள்ளார். ஹரி கிருஷ்ணன், இன்று காலை மணி 10.30க்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் சரணடைந்தார். நாளை அவர்  நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்  என  இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.…