பள்ளி முதல்வர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார்

மாணவர்களிடம் “பாலே இந்தியா டான் சீனா” என்று கூறிய எஸ்எம்கே தலைமையாசிரியர் அதற்காக இன்று மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதை ஷா ஆலம் மஇகா தொகுதி துணைத் தலைவர் ஏ.பிரகாஷ் ராவ் உறுதிப்படுத்தினார். “கல்வித் துறை அதிகாரியுடன் அவரைச் சந்தித்தபோது உறுதிகூறியபடி அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அந்த விவரம்…

ஆர்ஓஎஸ் உத்தரவு சட்டப்படி கட்டுப்படுத்தாது- டிஏபி

டிஏபி  புதிய தேர்தல் நடத்த வேண்டும்  என்று உத்தரவிடும்  அதிகாரம் சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்) க்கு இல்லை என்கிறார்  அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். சங்கச் சட்டத்தின் பிரிவு 16(1), பிரிவு 16(2) ஆகியவை  அப்படி உத்தரவிடும்  அதிகாரத்தை ஆர்ஓஎஸ்ஸுக்கு அளிக்கவில்லை  என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “எனவே,…

‘குளியலறை விவகாரத்தில் பெற்றோரைக் குற்றம் சொல்வது பொறுப்பற்ற பேச்சு’

‘எஸ்கே  ஸ்ரீபிரிஸ்தானா விவகாரத்தில் தகவல் சொன்னவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற  கூக்குரல் “அறியாமையையும் பொறுப்பின்மையையும்” காட்டுகிறது என்று மஇகா இளைஞர் பகுதி  செயலாளர் சி.சிவராஜ் சாடியுள்ளார். அரசியல் நோக்கத்துடன்  தலைமையாசிரியரைத் தற்காக்கும்  அம்னோ தலைவர்களும் என்ஜிஓ-களும்  விவகாரத்தை  திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.…

‘பிட்ச் மதிப்பீடு தற்காப்புச் செலவுகளை குறைக்க வேண்டிய தேவையை உணர்த்துகின்றது’

பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் மலேசியாவுக்கு வழங்கியுள்ள 'எதிர்மறையான  எதிர்கால' மதிப்பீடு, நாடு விழித்துக் கொள்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை  என கெராக்கான் சொல்கிறது. தேவையற்ற பில்லியன் கணக்கான ரிங்கிட் தற்காப்புச் செலவுகளை குறைக்க  வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் அது தெரிவித்தது. அரசாங்கச் செலவுகளைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரவு…

பெர்க்காசா: குவான் எங் பேராளர்களைச் சந்திக்க அஞ்சுகிறார்

பேராளர்களைச் சந்திக்க அஞ்சுவதால் டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு புதிதாக  தேர்தல் நடத்த அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்  விரும்பவில்லை எனப்  பெர்க்காசா தகவல் பிரிவுத் தலைவர் ருஸ்லான் காசிம் கூறிக்   கொண்டுள்ளார். "பெரும்பாலான டிஏபி பேராளர்களைச் சந்திக்க லிம் அஞ்சுவது நிச்சயம். அதனால் தான்…

ஹிண்ட்ராப்-பிஎன் கூட்டணி மீதான 100 நாள் அறிக்கை விரைவில் வெளியாகும்

பிஎன் -உடன் தான் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியின் விளைவுகள் குறித்த 100  நாள் அடைவு நிலை அறிக்கையை விரைவில் வெளியிடப் போவதாக மலேசிய  ஹிண்ட்ராப் சங்கம் அறிவித்துள்ளது. அதன் தலைவர் பி வேதமூர்த்தி, செனட்டராகவும் பிரதமர் துறை துணை  அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட 100வது நாளில் அது வெளியிடப்படும் என…

டிஏபி துணைப் பிரதமருடைய ‘தேசநிந்தனை’ கருத்துக்கள் மீது புகார்

சர்ச்சைக்குரிய நாய் பயிற்றுநர் காணொளி தொடர்பில் துணைப் பிரதமர்  முஹைடின் யாசின் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அவர் மீது போலீசில்  புகார் செய்துள்ளது. முஹைடினின் கருத்துக்கள் குற்றவியல் சட்டத்தையும் தேசநிந்தனைச் சட்டத்தையும்  மீறியுள்ளதா என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் என அந்தப் புகாரைச்  சமர்பித்த தாமான் சிகாம்புட் டிஏபி…

நாய் பயிற்றுனர் விடுவிக்கப்படுவார்

ஹரி ராயா வாழ்த்து தொடர்பில்  விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்ட  நாய் பயிற்றுனர் மஸ்னா முகம்மட் யூசுப்,  “எந்த நேரத்திலும்”  விடுவிக்கப்படலாம். “விசாரணை  அதிகாரியுடன்  பேசினேன்.  எந்த நேரத்திலும் விடுதலை  செய்யப்படலாம் என்றார்”, என  அவரின் வழக்குரைஞர் லத்திபா கோயா மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தெரிவித்தார். மஸ்னாவைக் காவலில் வைக்கும்…

அம்னோ இளைஞர் துணைத் தலைவர் பதவிக்கு லொக்மான் போட்டி

அம்னோ இளைஞர் செயலவை உறுப்பினர் லொக்மான் நூர் ஆடம், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதை உறுதிப்படுத்தியுள்ளார். நடப்புத் துணைத் தலைவர் ரசாலி இஸ்மாயில், பதவியைத் தக்க வைத்துக்கொள்ளப்போவதில்லை என அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து அம்னோ இளைஞர் தலைவர்கள் பலர் அதற்குப் போட்டியிட ஆயத்தமாகி வருவதாக தெரிகிறது.

துணைப் பிரதமர்: குற்றச் செயல்களை ஒடுக்க அரசாங்கம் நடப்புச் சட்டங்களைப்…

அரசாங்கம் இந்த நாட்டில் கடுமையான குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு  நடப்புச் சட்டங்களைப் பயன்படுத்தும். புதிய சட்டம் அறிமுகம்  செய்யப்படுவதற்காகக் காத்திருக்காது. நாட்டின் நடப்பு சட்ட வடிவமைப்பில் '1959ம் ஆண்டுக்கான குற்றத் தடுப்புச்  சட்டம்' உள்ளது. ஆனால் அது அமலாக்கப்படவில்லை என துணைப் பிரதமர்  முஹைடின் யாசின் தெரிவித்தார். இப்போது…

அம்னோ தலைவர்கள் எதையாவது பேசுவது தான் வழக்கம்

"அதற்கான பழி பிரதமரையே சார வேண்டும். அவர் தமது சகாக்களை தமது  வழிக்குக் கொண்டு வர நிறையச் செய்ய வேண்டும். என்றாலும் ஏற்க முடியாத  அந்த நடத்தைகளில் அவருக்கு பங்கு உண்டு என எண்ணத் தோன்றுகிறது" மசீச தலைவர்: நோ ஒமாருக்குக் கிறுக்கு பிடித்திருக்க வேண்டும் ஒடின்: மசீச…

சபா ஆர்சிஐ அன்வாரை விசாரிக்கும்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்  சபாவில் போலி அடையாளக்  கார்டுகள் வழங்கப்பட்டது பற்றி விசாரிக்கும் ஆர்சிஐ என்ற அரச விசாரணை  ஆணையத்திடம் இன்று தொடக்க நிலை சாட்சியத்தை அளிப்பார். அந்தத் தகவலை அன்வார் நேற்று உறுதிப்படுத்திய அன்வார், எல்லாத் தரப்புக்களுடைய நலன்களையும் கருத்தில் கொண்டு ஆர்சிஐ குழுவுக்கு முழு  ஒத்துழைப்புக்…

அம்பிகா: நாய் பயிற்றுநரை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்

செட்ஸ் என அழைக்கப்படும் மஸ்னா முகமட் யூசோப்-பின் காணொளிப் பதிவு  குறித்த செய்தி வெளியான பின்னர் அவரைப் பற்றி அனைவரும் பேசிக்  கொண்டிருக்கின்றனர். 38 வயதான முஸ்லிமான அந்த நாய் பயிற்றுநருக்கு கொலை மருட்டல்கள்  கிடைத்துள்ளன. அவர் வாழும் பகுதியில் உள்ள இமாம் அவரை தாக்குவதற்கு  முயன்றதாகச் சொல்லப்படுகின்றது.…

சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! உரிமையை பறிக்க அரசியல் சட்ட…

கி. சீலதாஸ், செம்பருத்தி.காம்  (கட்டுரைத் தொடர்ச்சி பகுதி 2)  ஜனாநாய  முறைப்படி  பார்க்கும்போது  நீதி  அதிகாரம்  நீதிமன்றங்களிடம்  இருக்க   வேண்டுமென்பது  ஏற்றுக்  கொள்ளப்பட்ட  ஒரு  சித்தாந்தமாகும்.  அரசியல்  சட்டத்தில்  நீதி  அதிகாரத்துக்கு  முக்கியத்துவம்  கொடுத்ததானது  மலேசியா  நீதித்  துறை  சுதந்திரத்தையும்  உறுதிப்படுத்துகிறது   என்பதை   வெளிப்படுத்துவதாகவே  கருதப்பெற்றது.  ஆனால்,  10.6.1988இல் …

லியோ ஒரு கனவான்போல் நடந்துகொள்ள வேண்டும்- சுவா

மசீசவில் தமக்கு  எதிராக  ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்ற கோரிக்கை எழுந்திருப்பது குறித்து கருத்துரைக்க  முனைந்த  அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், துணைத் தலைவர்  லியோ தியோங்மீது பாய்ந்தார். “தலைவராகக் காத்திருப்பவர்” என்று அவரை வருணித்த சுவா, லியோ  பொறுமையாக இருப்பதுடன் ஒரு கனவான்…

“தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவலை ஏற்காவிட்டால்…

மஇகா, மசீச, கெராக்கான் ஆகியவை குளியலறை கேண்டீன் விவகாரத்தை  அம்பலப்படுத்திய ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளி பெற்றோர் தேசநிந்தனைச்  சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவலை ஒப்புக்  கொள்ளாவிட்டால் பிஎன் -னிலிருந்து வெளியேற வேண்டும் என டிஏபி தலைமைச்  செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.…

வேதமூர்த்தி சூளுரை: நான் தோல்வி கண்டால் பதவி விலகுவேன்

பிஎன் -உடன் ஹிண்ட்ராப் செய்து கொண்ட புரிந்துணர்வுப் பத்திரத்தில்  கூறப்பட்டுள்ளது போல தமது கடமைகளை செய்ய முடியாது போனால் தமது  பதவியிலிருந்து விலகுவதற்குத் தாம் 'தயாராக' இருப்பதாக துணை அமைச்சர் பி  வேதமூர்த்தி சொல்கிறார். மலேசியாவில் இந்திய சமூகத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப்  'பங்காற்ற முடியாது' என தாம்…

சுவாவைக் கவிழ்க்க மசீச அடிநிலை தலைவர்கள் திட்டம்

மசீச அடிநிலை தலைவர்களின் அணி ஒன்று கட்சித் தலைவர் சுவா சொய் லெக்கை பதவியிறக்கும் இயக்கமொன்றைத் தொடங்கியுள்ளது. அரசாங்கப் பதவி ஏற்கக்கூடாது என்ற கட்சியின் நிலைபாட்டை மீறியதற்காக சுவாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அது கட்சியின் ஒழுங்கு வாரியத்தைக் கேட்டுக்கொண்டது. சுவா, பினாங்கு துறைமுக ஆணையத் தலைவராக…

சஞ்சீவன் தேறி வருகிறார், ஆனால் அறுவை சிகிச்சைக்கு தயாராக இல்லை

குற்றச்செயல்களைக் கண்காணிக்கும் என்ஜிஓ-வான மைவாட்ச் அமைப்பின் தலைவர் ஆர்.சஞ்சீவனின் உடல் நிலை சீரடைந்து வந்தாலும், விலா எலும்பில் சிக்கிக்கொண்டிருக்கும் துப்பாக்கி குண்டை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு அது தயாராக இல்லை எனச் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். “அறுவை சிகிச்சை…

நஜிப்: பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ள கவலையைப் போக்க அரசாங்கம்…

மலேசியப் பொருளாதார எதிர்காலம் பற்றி பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம்  தெரிவித்துள்ள கவலைகளைப் போக்குவதற்கு 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்  திட்டத்தில் அரசாங்கம் நடவடிக்கைகளை அறிவிக்கும். அவ்வாறு அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேல் விவரங்களைத் தரவில்லை. "இப்போதைக்கு நாங்கள் பல்வேறு கொள்கைகளை ஆய்வு செய்து வருகிறோம்.  என்றாலும்…

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் அலி ருஸ்தாம் எதிர்க்கட்சிகள்…

அண்மைய காலமாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு  எதிர்க்கட்சிகளே பழியை ஏற்க வேண்டும் என முன்னாள் மலாக்கா முதலமைச்சர்  அலி ருஸ்தாம் கூறுகிறார். காரணம் அந்த எதிர்க்கட்சிகள் தடுப்புக் காவல் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட  வேண்டும் என வற்புறுத்தியதாகும். "அவசர காலச் சட்டமும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமும்…

என்ஜிஓ: அபாண்ட குற்றச்சாட்டுக்காக துணைப் பிரதமரை விசாரிக்க வேண்டும்

நாய் பயிற்றுனரின்  காணொளி தொடர்பில்  தப்பான கருத்துத் தெரிவித்துள்ள  துணைப் பிரதமர் முகைதின் யாசினை தேசிய நிந்தனை சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என்ஜிஓ-களின் கூட்டணி  ஒன்று கூறியுள்ளது. அவ்விவகாரம் தொடர்பில் விரைவில் போலீசில் புகார் செய்யப்போவதாக மலேசிய இந்தியர் முன்னேற்றச் சங்க (மிபாஸ்) தலைவர் எஸ்.பாரதிதாசன் கூறினார். “முகைதின்…

ராயா வாழ்த்து காணொளியில் நாய்களுடன் காட்சியளிப்பவர் செகாமாட் அனுப்பப்படுகிறார்

நாய்கள் உடன் வைத்துக்கொண்டு ஹரி ராயா வாழ்த்துக் கூறும் காணொளியைப் பதிவேற்றிய நாய் பயிற்றுனர் மஸ்னா முகம்மட் யூசுப், இன்று விசாரணைக்காக  செகாமாட் அனுப்பப்படுவார். தாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள புகார் செகாமாட்டில் செய்யப்பட்டது என்பதால்  அங்கு அவர் அனுப்பப்படுவதாக போலீஸ் தெரிவித்தது என மஸ்னாவின் வழக்குரைஞர் என். சுரேந்திரன்…