மகாதிரிடமிருந்து நஜிப்பைக் காப்பாற்றுங்கள்: அம்னோ தலைவர்களுக்கு அறைகூவல்

அம்னோ  தொகுதித்  தலைவர்கள்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குறைகூறும்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்குப்  பதிலடி  கொடுக்க  வேண்டும். அவர்கள்  பிரதமருக்குத்  தனிப்பட்ட  முறையில்  ஆதரவு  தெரிவிப்பதைவிட  இதைச்  செய்வதே  முக்கியமாகும்  என்கிறார்  செராஸ்  அம்னோ  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷி. தொகுதித்  தலைவர்கள்  சிலர்  நஜிப்பை …

இப்ராகிம் அலி வழக்கு தள்ளுபடி: ரிம50,000 செலவுத்தொகை கொடுக்க உத்தரவு

பெர்காசா தலைவர்  இப்ராகிம்  அலி,  த  சன் நாளேட்டுக்கு  எதிராக  தொடுத்திருந்த  அவதூறு  வழக்கை  ஷா  ஆலம்  உயர்  நீதிமன்றம்  தள்ளுபடி  செய்தது. நீதித்துறை  ஆணையர்  எம். குணாளன்,  அச்செய்தித்தாளில்  வந்திருந்த  கட்டுரை இப்ராகிம்  பற்றியது  அல்ல  என்றும்  மலாய்க்காரர் உரிமைக்குப்  போராடும்  பெர்காசா  பற்றியது  என்றும்  தீர்ப்பளித்தார்.…

7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்றத்தில் அசிசா

நாடாளுமன்றத்தின்  இரண்டாவது கூட்டத்தொடர்  இன்று தொடங்கியபோது  புதிதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட  எம்பிகள்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில் (பிகேஆர்- பெர்மாத்தாங்  பாவ்), ஹசான்  அரிப்பின் (பிஎன் -ரொம்பின்) ஆகிய  இருவரும்  எம்பிகளாகப்  பதவி ஏற்றனர். அவர்களின்  பதவியேற்புச் சடங்கு  மக்களவைத் தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  முன்னிலையில் நடந்தது. அசிசா …

நஜிப்: எட்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட அல்தான்துயா விவகாரத்தை ஏன் மகாதிர்…

  மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை நடந்து எட்டு ஆண்டுகளாகி விட்டன. முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் ஏன் அது குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார் என்று பிரதமர் நஜிப் திருப்பிக் கேட்கிறார். ஏன் செல்வாக்குமிக்க சில தனிப்பட்டவர்கள் தம்மை சிக்கவைப்பதற்காக இந்த வழக்கிற்கு புத்துயிர் அளிக்கின்றனர் என்று…

முகைதின்: மியான்மார் ரோஹின்யா பிரச்னையை நம்மீது சுமத்தக் கூடாது

மியான்மார்  ரோஹின்யாக்களின்  பிரச்சனைக்கு  உள்ளுக்குள்ளேயே  தீர்வு  காண  வேண்டுமே  தவிர  ஆசியான்  அண்டைநாடுகளிடம்  அதைத்  தள்ளிவிடக் கூடாது  என்று  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின் கூறினார். சிலாங்கூர், கிளன்மேரியில்  செய்தியாளர்களிடம்  பேசிய  முகைதின்  இவ்விவகாரம்  சிக்கலானது  என்றார். “வருகின்றவர்கள் இங்கு  வரவேற்கப்படுகிறார்கள்  என்ற  தப்பான  சமிக்ஞையை  நாம்  காட்டிவிடக்கூடாது.…

TRX-BM நிலங்கள் ரிம42 பில்லியன் பெறுமா? கதை விடுகிறார் நஜிப்

நேற்று கிள்ளானில்  அம்னோ  சிலாங்கூர் உறுப்பினர்களிடம்  பேசிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், “1எம்டிபி-இன்  ரிம42 பில்லியன்  எங்கும்  காணாமல்  போகவில்லை. அது துன் அப்துல்  ரசாக்  இணைப்பு  மையத்தில்(TRX) 70 ஏக்கர்  நிலமாகவும்  பண்டார்  மலேசியாவில் 500 ஏக்கர்  நிலமாகவும் இருக்கிறது”  என்றார். முதலில், TRX, பண்டார் …

ரொஹின்யா விவகாரத்தில் நஜிப்பின் பேச்சில் உள்ள வேகம் செயலில் இல்லை

ரோஹின்யா  அகதிகள்  விவகாரத்தில்  தாய்லாந்து  ஒரு  சந்திப்புக்கு  ஏற்பாடு  செய்துள்ளது. பார்க்கப்போனால் ஆசியான்  தலைவரான  மலேசியாதான்  அப்படிப்பட்ட  நடவடிக்கை  முன்னின்று  எடுத்திருக்க  வேண்டும். ஆனால், எடுக்கத் தவறிவிட்டது  என  பாஸ்  கட்சி  சாடியுள்ளது. “மனிதநேயத்துக்கு ஒரு  மோசமான  நெருக்கடி  ஏற்பட்டுள்ளது. மலேசியா இதற்கு  உருப்படியான  தீர்வு  காண  வேண்டும்.…

நஜிப்பை சொற்போருக்கு அழைக்கிறார் மகாதிர்

  நாட்டின் மிக முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் நஜிப் ரசாக்குடன் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கூறுகிறார். முகத்தில் புன்னகை தழுவ, தாமும் ஒரு சிறந்த சொற்போர் வீரர் என்றார். "என்னிடமும் விவாதம் செய்வதற்கான திறமை கொஞ்சம் இருக்கிறது. நீர் விவாதம்…

‘எம்ஏசிசி, நெத்திலி கிடக்கட்டும் சுறாமீன்களைத் தேடிப் போங்க’

உங்கள்  கருத்து ‘அரசியல் செயலாளர்கள்மீது. ஏன்  நடவடிக்கை? எஜமானர்கள் சொல்வதைத்தானே  அவர்கள்  செய்கிறார்கள்’ அமைச்சர்களின்  உதவியாளர்கள் பணத்தில்  புரள்கிறார்கள் ஆர்சிஎஸ்: மலேசியாவில்  கேட்பார்  மேய்ப்பாரின்றி  ஊழல்  ஆட்சி  செய்கிறதாம். நமக்கு எப்பவோ  தெரிந்த  ஒரு  விசயத்தை  அந்த  அம்னோ  உறுப்பினர்  இப்போ சொல்கிறார்.  மிகப்  பெரிய  கொள்ளை  நடப்பது …

நஜிப்: அது பேங்க் நெகாராவின் யோசனை; அரசியல் நோக்கம் அதற்கில்லை

1மலேசியா  மக்கள் உதவித்  திட்டம்(ப்ரிம்) வாக்காளர்களைக்  கவரும்  ஒர்  அரசியல்  தந்திரம் என்று  கூறப்படுவதை மறுத்த  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அது  தம்முடைய  யோசனை  அல்லவென்றும்  அது பேங்க்  நெகாராவின்  யோசனையாகும்  என்றும்  தெரிவித்தார். “நான்  அதற்குப்  பரிந்துரைக்கவில்லை. பரிந்துரைத்தது  நிதிக்  குழுவும் பேங்க்  நெகராவும்  ஆகும்.…

தேர்தல் தொகுதி தீர்ப்புக்கு எதிராக இசி மேல்முறையீடு செய்யலாம்

சரவாக்கில்  தேர்தல் தொகுதி  எல்லைகளைத்  திருத்தும் பணியைத்  திரும்பவும் செய்ய  வேண்டுமென்ற  நீதிமன்றத்  தீர்ப்புக்கு  எதிராக தேர்தல்  ஆணையம் (இசி) மேல்முறையீடு  செய்யுமெனத்  தெரிகிறது. இதன்  தொடர்பில்  இசி-யிலும்  சட்டத்துறைத்  துறை  அலுவலகத்திலும்  இதுவரை  முடிவெடுக்கப்படவில்லை. அவர்கள் சட்டத்துறைத்  தலைவர்  அப்துல்  கனி  பட்டேய்லின்  உத்தரவுக்காகக்  காத்திருக்கிறார்கள். “அனேகமாக,…

@KINIயில் “உலக ஊடக விழா”, கலந்து கொள்ள வாரீர்

  உலக ஊடக சுதந்திர தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டதை அடுத்து நாளை ( மே 16) "உலக ஊடக விழா" கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கெராக்கான் மீடியா மாரா (கெராம்) மலேசியாகினியுடன் இணைந்து செய்கிறது. இவ்விழாவில் ஊடக சுதந்திரம் பற்றிய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று…

இராமசாமி: இந்தியர்களுக்கான ரிம3 பில்லியன் எங்கே போயிற்று?

  இந்தியர்களின் மேம்பாட்டிற்காக நிதி அமைச்சு கிட்டத்தட்ட ரிம3 மில்லியன் ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த ஒதுக்கீட்டால் இந்திய சமூகம் பயனடைந்ததா என்று பினாங்கு மாநில அரசு அறிய விரும்புகிறது. 2012 ஆண்டிலிருந்து 2015 வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படும்  அந்நிதி என்னவாயிற்று என்று பிரதமர் நஜிப் விளக்கம்…

மகாதிர்: பிரதமர் பற்றிக் கருத்தா? இப்போதல்ல, பிறகு

டாக்டர்  மகாதிர் மலேசிய  மண்ணுக்குத்  திரும்பியதுமே  பிரதமர்  அப்துல்  ரசாக்மீது  தாக்குதல்  தொடுக்க வேண்டாம்  என்று நினைத்தார்  போலும். நஜிப்பைப்  பற்றிக்  கேட்டதும் “பிறகு  பார்ப்போம்”,என்று புன்சிரிப்புடன் கூறிவிட்டார்.. முன்னாள்  பிரதமரும்  அவரின்  துணைவியார்  டாக்டர்  சித்தி  ஹஸ்மா  அலியும்  உம்ரா  கடமையை  நிறைவேற்றிவிட்டு  இன்று  பிற்பகல்  நாடு  …

எதிரணித் தலைவர் ஆகிறார் வான் அசிசா

பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில், பக்கத்தான் ரக்யாட்  தலைவர்களின்  பரிந்துரையை  ஏற்று  நாடாளுமன்றத்தில்  எதிரணித்  தலைவர்  ஆகிறார். “நடைமுறை மரபுப்படி  பார்த்தால் டிஏபி-யைச்  சேர்ந்த  ஒருவர்தான்  அப்பதவியை  ஏற்க  வேண்டும். ஆனால், அவர்களே  என்னைப்  பரிந்துரைப்பதால்  அதை  நான்  ஏற்கிறேன்”, என்றாரவர். திங்கள்கிழமை  நாடாளுமன்றக் …

படகு மக்கள் விவகாரத்தில் மத்திய அரசு எவ்வழியோ பினாங்கும் அவ்வழியே

படகுமக்கள் விவகாரத்தை  அரசியல்  ஆதாயமாக்கிக்கொள்ள  பினாங்கு  அரசு  விரும்பவில்லை. அதைத்  தேசிய  பாதுகாப்பு  விவகாரமாகவே அது  பார்க்கிறது. முதலமைச்சர்  லிம்  குவான்  எங்,  மலேசிய கடல்  எல்லைக்கு  அருகில்  படகுமக்கள்  கடலில்  சிக்கிக்கொண்டு  தவிக்கும்  விவகாரம் கூட்டரசு  அரசாங்கத்தின்  அதிகாரத்துக்கு   உள்பட்டதாகும்  என்றார். இதுபோன்ற  தேசியப்  பாதுகாப்பு  விவகாரங்களில் …

மேலும் பல சரவாக் அரசியல்வாதிகள் கைதாகலாம்

சரவாக்கில் மேலும்  பல  அரசியல்வாதிகள்  விசாரணைக்கு அழைக்கப்படலாம்  அல்லது  அவர்களின்  வங்கிக் கணக்குகள்  முடக்கப்படலாம்  என  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்  கூறியுள்ளது. சரவாக்கில்  இப்போது  ஒரே  ஒரு  சட்டமன்ற  உறுப்பினரின்  வங்கிக்  கணக்கு  மட்டும்  முடக்கப்பட்டுள்ளது.ஆனால்,  மேலும்  பல  அரசியல்வாதிகள்மீது  நடவடிக்கை  எடுக்கப்படும்  வாய்ப்பு  இருப்பதாக  எம்ஏசிசி-இன்  பேச்சாளர் …

எம்ஏசிசி-இன் ஊழல் எதிர்ப்பு: பாக் லா காலத்தில் நடந்தது நினைவுக்கு…

சரவாக்  பிகேஆர் தலைவர்  ஒருவர், அம்மாநிலத்தில்  சட்டவிரோதமாக மரங்கள்  வெட்டப்படுவதற்கு  எதிராக மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்  தொடங்கியுள்ள ‘ஒப்ஸ்  கெர்காஜி’ இயக்கம் அப்துல்லா அஹ்மட்  படாவி பிரதமராக  இருந்த  காலத்தில்  நடந்த  சம்பவத்தை  நினைவுப்படுத்துவதாக  கூறினார். கைச்சுத்தமானவர்  என்று கருதப்பட்ட  பாக்  லா  எனச்  செல்லமாக  அழைக்கப்பட்ட  அப்துல்லா,…

முன்னாள் அமைச்சர் புதுக் கட்சி தொடங்கினார்

முன்னாள்  தகவல் அமைச்சர்  அப்துல்  காடிர்  ஷேக்  பாட்சிர், Parti Ikatan Bangsa Malaysia(ஈக்காத்தான்)  என்ற  பெயரில்  புதிய  கட்சி  ஒன்றைத்  தொடங்கியுள்ளார். அது  மக்கள்- ஆதரவுக்  கட்சி என்றவர்  கூறிக்கொண்டார். “ஈராண்டு  போராட்டத்துக்குப்  பின்னர்  நீதிமன்ற  ஆணையின் உதவியுடன்  ஈக்காத்தான்  ஒருவழியாகப்  பதிவாகியுள்ளது”, என காடிர்  ஸ்ரீகெம்பாங்கானில் …

எம்ஏசிசி அரசியல், தனிச் செயலாளர்களைக் கண்காணிக்கிறது

அமைச்சர்களின்  அரசியல்  செயலாளர்களும்  தனிச்  செயலாளர்களும் வருமானத்துக்குமீறிய  வாழ்க்கை வசதிகளுடன்  வாழ்வதாகக்  குற்றச்சாட்டுகள்  எழுந்திருப்பதை  அடுத்து மலேசிய  ஊழல்  தடுப்பு  ஆணையம்  அவர்களை  அணுக்கமாகக்  கண்காணித்து  வருகிறது. எம்ஏசிசி  பேச்சாளர்  ஒருவர் மலேசியாகினியிடம்  இதை  உறுதிப்படுத்தினார். அதற்காக  அவர்கள்மீது  உடனே  நடவடிக்கை  எடுத்துவிட  முடியாது. “அவர்களை  அணுக்கமாகக்  கண்காணிக்கிறோம். …

‘பிரதமரை வறுத்தெடுக்கிறார்கள், 1எம்டிபி வாரியம் என்ன செய்கிறது?’

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தைப்  பீடித்துள்ள  பிரச்னைகளுக்கு பிரதமர்  அப்துல்  ரசாக்கை  மட்டுமே  பொறுப்பாக்குவது  நியாயமல்ல  என  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  ஒருவர்  கூறினார். அந்நிறுவனத்தின்  இயக்குனர்  வாரியம்  பொறுப்பேற்க  முன்வர  வேண்டும்.. 1எம்டிபி  நிறுவனம்  தொடர்பான  விவகாரங்கள்  ஒவ்வொன்றாக  வெளிவந்தபோது  விளக்கமளிக்கத்  தவறியது  வாரியத்தின்  தவறாகும்  என்று  ரீஸால் …

மாட் சாபு: திடீர் தேர்தல் வந்தால் பிஎன் புட்டுக்கொள்ளும்

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  நாடாளுமன்றத்தைக்  கலைத்து  திடீர் தேர்தலை  நடத்தினால்  வெற்றி  பக்கத்தான்  ரக்யாட்டுக்குத்தான் என்கிறார்  பாஸ் துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு. பெர்மாத்தான்  பாவ், ரொம்பின்  இடைத் தேர்தல்  முடிவுகள்  அவருக்கு இந்த நம்பிக்கையைக்  கொடுத்துள்ளன. “நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால்  புத்ரா  ஜெயா  எங்கள்  கைக்கு  வந்து …

பணத்தில் புரள்கிறார்களாம் அமைச்சர்களின் உதவியாளர்கள் : குமுறுகிறார் அம்னோ தலைவர்

சரவாக்கில் அதிரடி  நடவடிக்கைகளில்  இறங்கிய  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி) அம்னோ  அமைச்சர்களின்  உதவியாளர்களையும்  விசாரிக்க  வேண்டும்  என்று விரும்புகிறார்  அம்னோ  தொகுதித்  தலைவர்  ஒருவர். தம்  பெயரை   வெளியிடக்  கூடாது  என்ற  நிபந்தனையுடன்  மலேசியாகினியிடம்  பேசிய  அவர், அமைச்சர்களின்  அரசியல்  மற்றும்  தனிச்  செயலாளர்களில்  சிலர்  வரவுக்குமீறிய …