11வது மலேசியத் திட்டத்தில் 1எம்டிபி-யைக் காணோம்

ஐந்தாண்டுகளுக்குமுன்  10வது  மலேசியத்  திட்டத்தைத்  தாக்கல்  செய்த  நஜிப்  அப்துல்  ரசாக், கோலாலும்பூர்  அனைத்துலக  நிதி  மாவட்டமும் (இப்போது  துன் அப்துல் ரசாக் எக்ஸேஞ்ச்)  பண்டார்  மலேசியாவும்  நாட்டின்  உருமாற்றத்  திட்டத்துக்கு உதவப்  போகும் முக்கிய  வளர்ச்சித்  திட்டங்கள்  என்றார். ஐந்தாண்டுகளுக்குப்  பிறகு,  நஜிப்பால்  உருவாக்கப்பட்டு  இன்று  கடனில் …

1எம்டிபி பற்றி மக்களுக்கு விளக்கமளிக்கும் கடப்பாடு நஜிப்புக்கு உண்டு- அன்வார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி)  தொடர்பான  பிரச்னைகளுக்குத்  தீர்வு  காண  வேண்டும்  என  முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கேட்டுக்கொண்டிருக்கிறார். இன்று  நீதிமன்றம்  வந்திருந்த  அன்வார்  இப்ராகிம், தம்  மகள்  நூருல் இஸ்ஸா  மூலமாக விடுத்த  அறிக்கையொன்றில், அவ்விவகாரம்  குறித்து  மக்களுக்கு  விளக்கமளிக்கும் …

பண்டிகார் இன்னமும் அவைத் தலைவராக இருப்பதில் நஜிப்புக்கு மகிழ்ச்சி

பதவி விலக  விரும்பிய மக்களைவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா பதவியில்  தொடர்ந்திருக்க  முடிவு  செய்திருப்பது  மகிழ்ச்சி  அளிப்பதாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். இன்று  நாடாளுமன்றத்தில்  11வது  மலேசியத்  திட்டத்தைத்  தாக்கல்  செய்த  உரையாற்றிய  நஜிப், பண்டிகாரைக்  குறிப்பிட்டும்போது  “அவைத்  தலைவர்  அவர்களே”  என்று  சொல்லிச் …

ஒட்டுமொத்த 1எம்டிபி வாரியம் நீக்கப்பட வேண்டும்

துணைப்பிரதமர்  முகைதின்  யாசின், 1எம்டிபி  இயக்குனர்கள்  விலக்கப்பட்டு  அவர்களைப்  போலீசார்  புலனாய்வு  செய்ய  வேண்டும்  என விரும்புகிறார். “இது  என்  தனிப்பட்ட  கருத்து”, என  இன்று  நாடாளுமன்றத்தில்  சந்தித்தபோது  தெரிவித்தார். இதற்கு  நஜிப்  என்ன  சொன்னார்  என்று  வினவியதற்கு, “ஒன்றுமில்லை. நான்  சொன்னதை  மட்டுமே  கவனியுங்கள்”, என்றார்.. மேலும் …

பின்வாங்கப்போவதில்லை: நஜிப் சூளுரை

தம் கொள்கைகளையும்  ஆட்சிமுறையையும்  போற்றுபவர்  போற்றட்டும்  புழுதிவாரி  தூற்றுபவர்  தூற்றட்டும்  அதற்காக  முன்வைத்த காலைப் பின்னுக்கு  இழுக்கப்போவதில்லை  என்பதில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  உறுதியாக  இருக்கிறார். “அண்மைக்  காலமாக  பலவித  சவால்களும் தடங்கல்களும்  எதிர்பட்டபோதும் அரசாங்கமும்  நானும்  தேர்ந்தெடுத்துள்ள  பாதை  ஒன்றே  ஒன்றுதான் -முன்னோக்கிச் செல்லல். “நாங்கள் …

மஇகா: உடைக்கப்பட்ட கோயிலுக்கு சிலாங்கூர் அரசு நிலம் தர வேண்டும்

  சமீபத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்பிபிஜே) உடைத்த சிறீ மகா மதுரை வீரன் கோயிலுக்கு சிலாங்கூர் அரசு மாற்று நிலம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பக்கத்தான் ரக்யாட் அனைத்து வழிபாட்டுதலங்களுக்கும் நிலம் வழங்க உறுதி அளித்திருந்தது. ஆகவே, இக்கோயிலுக்கு உதவ வேண்டும் என்று மஇகா…

நிழல் அமைச்சரவை: டிஏபி எதையும் அறிவிக்குமுன்னர் உள்ளுக்குள் கலந்து ஆலோசிக்க…

டிஏபி  தலைமைச்  செயலாளர்  நிழல்  அமைச்சரவை  பற்றிக்  கருத்துரைக்குமுன்னர்  அக்கட்சியின்  ஏற்பாட்டுக் குழுச்  செயலாளர்  அந்தோனி  லோக்கிடம் ஆலோசனை  கேட்க வேண்டும்  என்று  பாஸ்  தகவல்  தலைவர்  மாபூஸ் ஒமார்  கூறினார். பக்கத்தான்  ரக்யாட்  பரஸ்பர  மரியாதையின்  அடிப்படையில்  உருவானது  என்று  குறிப்பிட்ட  மாபூஸ்,  பக்கத்தானில்  நிழல்  அமைச்சரவை …

‘மரியாதை குறைந்தது அதனால் மகாதிர்-நஜிப் சர்ச்சை மோசமடைந்தது’

ஒருவரை  மற்றவர்  மரியாதையாக  சாடுவது  என்ற  வகையில்தான் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கும்  முன்னாள்  பிரதமர்  டாக்டர் மகாதிர்  முகம்மட்டுக்குமிடையிலான  சர்ச்சை  தொடங்கியது. இப்போது  சேற்றை  வாரி  இறைக்கும்  அளவுக்குச்  சென்று  விட்டது. மரியாதைப் பண்பு  குறைந்ததுதான்  இதற்குக்  காரணம்  என்கிறார்  முன்னாள்  அமைச்சர்  ரயிஸ்  யாத்திம். மரியாதைப்…

சிறையில் அன்வாரின் 100வது நாள்

பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  சிறைசென்று  இன்றுடன்  நூறு  நாளாகிறது.  அவரின்  ஆதரவாளர்கள் சுங்கை  பூலோ  சிறைக்கூடத்துக்கு  வெளியில் ஒன்றுகூடி இந்த  100வது  நாளை  நினைவுகூரத்  திட்டமிட்டுள்ளனர். பெர்மாத்தாங்  பாவ்  எம்பியாக  இருந்த  அன்வார், அவரின்  உதவியாளரிடம்  குதப்புணர்ச்சியில்  ஈடுபட்ட  குற்றத்துக்காக  ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனை  விதிக்கப்பட்டு  சுங்கை …

பிகேஆர் ஒற்றுமை அரசு அமைக்க விரும்பியதில்லை

பிஎன்னுடன்  சேர்ந்து  ஒற்றுமை  அரசாங்கம்  அமைக்கும்  எண்ணம் அன்வார்  இப்ராகிமுக்கு இருந்ததாகக்  கூறப்படுவதை  பிகேஆர்  வன்மையாக  மறுக்கிறது. அன்வார்  அதற்கு  ஒப்புக்கொண்டிருந்ததாக  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி நேற்று  கூறியிருப்பதை  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  மறுத்தார். “அன்வாருக்கோ  அல்லது வேறு  எந்தத்  தலைவருக்கோ  பிஎன்னுடன் சேர்ந்து …

வரலாற்றைத் திரித்துக் கூறியதால் ‘நியு வில்லேஜ்’ படம் தடை செய்யப்பட்டது

உள்ளூரில்  தயாரிக்கப்பட்ட  ‘த நியு  வில்லேஜ்’  சீனப்படம், வரலாற்றைத்  திரித்துக் கூறி  மலாயா  கம்முனிஸ்டுக்  கட்சியின்(சிபிஎம்)  புகழ்பாடுவதுபோல்  இருந்ததால்தான்  தடை  செய்யப்பட்டதாக  உள்துறை  அமைச்சு  கூறிற்று. “அப்படம் சிபிஎம்  போராட்டத்தைப்  பெருமைப்படுத்துவதாகவும்  பிரிட்டிஷ்  ஆட்சியாளர்களின்  கொடுமைகளைச்  சித்திரித்த  படம்  சிபிஎம்-மின்  கொடுமைகளை  அறவே  காண்பிக்கவில்லை  என்றும்  அதற்கு  எதிராக …

பால் ஸ்டேட்லனுக்கு அரசாங்கம் பணம் கொடுத்ததில்லை

அப்கோவின்  முன்னாள் தலைவர்  பால்  ஸ்டேட்லன் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  ஊடகத்  தொடர்பான  நடவடிக்கைகளையெல்லாம்  கவனித்துக்  கொண்டார்  என்றும்  அதற்காக  அவருக்குப் பணம்  கொடுக்கப்பட்டது  என்றும் கூறப்படுவதை  அரசாங்கம்  மறுக்கிறது. “இதுவரை  பால்  ஸ்டேட்லனுக்கு  ஊதியம்  என்ற  வகையில்  அரசாங்கம்  எதுவும்  கொடுத்ததில்லை”, என  பிரதமர் துறை …

ஹாடி: டிஎபிக்கு எதிரான கோபத்திற்கு அல்லாவின் அனுமதி உண்டு

  கிளந்தான் மாநிலத்தில் ஹூடுட் சட்டம் அமலாக்கப்படுவதை எதிர்க்கும் டிஎபிக்கு எதிராகத் தங்களுடைய சினத்தை வெளிப்படுத்துவது முஸ்லிம்களின் கடமையாகும் என்று பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று கோலாலம்பூரில் கூறினார். இஸ்லாமிய சட்டம் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டது. அதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சம்பந்தமில்லை என்று அவர் வாதிட்டார்.…

கழிப்பறைகூட இல்லாதது பண்டிகாரின் ஆத்திரத்துக்குக் காரணமாக இருக்கலாம்

மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியாவின்  அலுவலகத்தில்  முறையான  மேசை  நாற்காலி  கிடையாது, கழிப்பறைகூட  கிடையாது. இது  மக்களவைத்  தலைவர்   பதவி  விலகுவதற்கு ஒரு  காரணமாக  இருந்திருக்கலாம்  என்கிறார்  பிஎன்  எம்பி  ஷாரிர்  அப்துல்  சமட். “அதுதான்  அவரை  அந்த  முடிவுக்குக்  கொண்டு  சென்றிருக்கலாம். வேறு  விவகாரங்களும்  இருக்கலாம்”,…

பண்டிகார்: மகாதிர் பொய் சொல்லவில்லை; நானும் சொல்லவில்லை

மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா, தம்  பதவி விலகல்  பற்றி  முன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தெரிவித்தது  பொய்யல்ல  என்கிறார். “மகாதிர்  பொய்  சொல்லவில்லை, நானும்  சொல்லவில்லை. “இதெல்லாம்  பிரதமருக்குத்  தெரியும்”, என  பண்டிகார்  இன்று  அவரது  இல்லத்தில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். பண்டிகார்  பதவி  விலகப்போவதாக …

1எம்டிபி : இப்போதைக்கு பிரதமர், ஜோ லோ விசாரணைக்குத் தேவையில்லை

பொதுக் கணக்குக்குழு(பிஏசி) இப்போதைக்குப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கையோ  தொழில் அதிபர்  ஜோ  லோ-வையோ  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்  மீதான விசாரணைக்கு  அழைக்காது. அதற்கு  அவசியமில்லை  என்றார்  பிஏசி  தலைவர் நூர்  ஜஸ்லான்  முகம்மட். விசாரணை  தொடரும்போது  தேவைக்கேற்ப  சாட்சிகள்  விசாரணைக்கு  அழைக்கப்படுவார்கள்  எனச்  செய்தியாளர்களிடம்  நூர்  ஜஸ்லான் …

குவான் எங்: நிழல் அமைச்சரவைக்குப் பெருந் தடையாக இருப்பவர் ஹாடி

 பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  இருக்கும்வரை பக்கத்தான்  ரக்யாட்டால்  நிழல்  அமைச்சரவை  அமைக்க  முடியாது  என்கிறார்  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங். டிஏபி, ஹுடுட் சர்ச்சை  உருவானபோது,  பாஸ்  தலைவர்  நம்பத்தக்கவர்  அல்லர்  என்றும்  கொடுத்த  வாக்கை  மீறிவிட்டார்  என்றும்  கூறி  குற்றம்சாட்டி  ஹாடியுடன் …

பண்டிகார் வீட்டில் செய்தியாளர் கூட்டம்; ஊகம் வலுக்கிறது

மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  இன்று  பிற்பகல் திடீர்  செய்தியாளர்  கூட்டமொன்றுக்கு  ஏற்பாடு  செய்துள்ளார். முன்னாள்   பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  பண்டிகார்  பதவி விலகி  விட்டார்  என்று  கூறிக்  கொண்டிருப்பதைத்  தொடர்ந்து  இக்கூட்டம்  நடைபெறுவதால் இது  பல  ஆருடங்களுக்கு  இடமளித்துள்ளது. பதவி  விலகியதாகச்  சொல்லப்படுவதை  பண்டிகார் …

ஐஎஸ் நடவடிக்கைகளில் குழந்தைகள் உள்பட 154 மலேசியர்கள்

உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  குழந்தைகள் உள்பட  154 மலேசியர்கள்  ஐஎஸ் நடவடிக்கைகளில்  ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். “1-இலிருந்து 60வயதுள்ளவர்  வரை ஐஎஸ் கிளர்ச்சிக்  கும்பலில்  இருக்கிறார்கள். “குழந்தைகளும்  அதில்  இருப்பதுதான்  கவலையளிக்கும் விசயமாகும்”, என்  ஹமிடி, அம்னோவின்  தானா   ராத்தா  எம்பி இக்மால் ஹிஷாமுக்கு  வழங்கிய  எழுத்துவடிவிலான …

நான்கு மாதமாயிற்று. கீர் தோயோ வழக்கில் தீர்ப்பு வரவில்லை

பதவியைப்  பயன்படுத்தி  நிலம்  வாங்கியதாக  கீழ்  நீதிமன்றங்களில்  குற்றம்  சாட்டப்பட்டு அதற்காக  12 மாதச்  சிறை விதிக்கப்பட்ட  முன்னாள்  சிலாங்கூர்  மந்திரி  புசார் டாக்டர்  முகம்மட்  கீர்  தோயோ, தீர்ப்பை  எதிர்த்து  மேல்முறையீடு  செய்திருந்தார். ஆனால், மேல்முறையீடு  மீதான  கூட்டரசு  நீதிமன்றத்தின்  தீர்ப்பு  இன்னும்  வரவில்லை. கீரின்  முறையீடு …

1எம்டிபி மீட்புத் திட்டம் பலனளிக்கும்: நஜிப் நம்பிக்கை

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தின்  கடன்களைக்  குறைக்கும்  திட்டம்  பலனளிக்கும்  என்று  நம்புகிறார். “நடவடிக்கை  எடுத்து  1எம்டிபி-இன்  மொத்த  கடனைக்  குறைக்க  முடியும். அதைத்தான் அரசாங்கம்  செய்து  வருகிறது. “விரைவிலோ அல்லது  சற்று  காலம்  தாழ்த்தியோ 1எம்டிபி  மீட்பு  நடவடிக்கைகளின்  நோக்கத்தை  அடைய  முடியும் …

தேவாலய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏன் விலங்கிடப்படவில்லை: அரசாங்கம் விளக்கம்

அரசியல்வாதிகளும்  சமூக  ஆர்வலர்களும்  போலீஸ்  விசாரணைக்காக  தடுத்து  வைக்கப்படும்போது  தாமான்  மேடான் தேவாலயத்தில்  ஆர்ப்பாட்டம்  செய்தவர்களிடம்  அதேபோன்று  நடந்து  கொள்ள  வேண்டிய  அவசியமில்லை  என போலீஸ்  நினைத்தது. ஏனென்றால்  போலீஸ்  நிலையத்துக்கு  அழைத்ததும்  ஆர்ப்பாட்டக்காரர்கள்  வந்தனர். முழுமையாக  வாக்குமூலம்  தந்தனர்  என  உள்துறை  அமைச்சு  கூறியது. “அதனால்  விசாரணைக்காக…

மகாதிர்: பண்டிகர் என்னை ஒரு பொய்யராக்கி விட்டார்

  நாடாளுமன்ற மக்களவையின் தலைவர் பண்டிகர் அமின் முலியா முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கி விட்டார். நாடாளுமன்ற அவைத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுவதை பண்டிகர் மறுத்திருப்பது தா ம் ஒரு பொய்யை கூறியிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று…