மகாதிர்: கார்களின் விலை உயர்வுக்கு அரசாங்கமே காரணம், புரோட்டோன் அல்ல

கார்களின்  விலை  உயர்ந்திருப்பதற்கு  புரோட்டோனைக் குறை  சொல்லக்  கூடாது  என்கிறார்  புரோட்டோன்  தலைவர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். விலை  உயர்வுக்கு  புரோட்டோன்  காரணமல்ல  என்று  குறிப்பிட்ட  முன்னாள்  பிரதமர்,  அரசாங்கம்  நிறைய  வரி  வசூலிக்க  நினைக்கிறது  அதுதான்  காரணம்  என்றார். “உதாரணத்துக்கு  நீங்கள்  ஒரு  மெர்சிடிஸ்  பென்ஸ்  வாங்கினீர்கள் …

எம்ஏசிசி-க்குக் கண்காணிப்பு தேவை இல்லை

மலேசிய  ஊழல்  தடுப்பு  ஆணைய (எம்ஏசிசி)த்தின்  ஆலோசனை  வாரியம்,  அந்த  ஊழல்  தடுப்பு  அமைப்பை  அமலாக்க  நிறுவன  நேர்மை  ஆணைய(ஈஏஐசி)த்தின் கண்காணிப்பில் வைக்க  வேண்டும்  என்று  கூறப்பட்டிருப்பதை  நிராகரிக்கிறது. எம்ஏசிசி-யே ஒரு  சுயேச்சை  அமைப்பு  அதனால் அது  “தேவையே  இல்லை”  என  ஊழல் தடுப்பு  ஆலோசனை  வாரியத்தின்  தலைவர்…

பன்றி டிஎன்ஏ பற்றிய கவலை இருந்தாலும் மலேசியா தடுப்பூசி போடுவதைக்…

தடுப்பூசி  மருந்துகளில்  பன்றி-டிஎன்ஏ  கலந்திருக்கலாம்  என்று  பெற்றோர்  கவலை  தெரிவித்திருந்தாலும்  மலேசியா  குழந்தைகளுக்குத்  தடுப்பூசி  போடுவதை  விரைவில்  கட்டாயமாக்கும்  என்று  ஒரு  செய்தி  கூறியது. நோய் எதிர்ப்புத் திறனூட்டுவதன்வழி  தடுக்கப்படக்கூடிய  நோய்களின்  எண்ணிக்கை  உயர்ந்து  வருவதால்  தடுப்பூசி  போடுவது  அவசியமாகிறது  என்று  சுகாதார  அமைச்சின்  துணைத்   தலைமை  இயக்குனர் …

நீர்தான் கோழை: ஐஜிபியைச் சாடினார் கோபிந்த்

போலீஸ் காவலில் நிகழ்ந்த  இறப்புச்  சம்பவங்களுக்குப்  பொறுப்பான  போலீஸ்காரர்களுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்காத  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்காரைச்  சாடிய  கோபிந்த்  சிங்  டியோ(டிஏபி- பூச்சோங்),  அவரை  ஒரு  கோழை  என்று வருணித்தார். கடந்த  ஆண்டு  ஜோகூர்  போலீஸ்  லாக்- அப்பில்  சைட்  முகம்மட் …

தேசிய பாதுகாப்பு மன்றத்துக்கு விரிவான அதிகாரமளிக்கும் சட்டம்

 தேசிய பாதுகாப்பு  மன்ற(என்எஸ்சி)த்துக்கு  விரிவான  அதிகாரங்களை  வழங்கும்  புதுச் சட்டமொன்றை   பிரதமர்துறை  அமைச்சர்   ஷகிடான்  காசிம்  இன்று  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்தார். இச்சட்டம்,  மக்களுக்கு, பிரதேசங்களுக்கு, முக்கிய  கட்டுமானங்களுக்கு,  பொருளாதாரத்துக்குத்  தீங்கு  நேரும்  அபாயம்  உண்டு  என்று  கருதும்  எந்தவொரு  பகுதியையும்  பாதுகாப்புப்  பகுதியாக  பிரகடனம்  செய்யும்  அதிகாரத்தை  என்எஸ்சி-க்கு …

ஸெட்டி: 1எம்டிபிக்கு எதிராக நடவடிக்கையில் சிறிது முன்னேற்றம் உண்டு

கொடுக்கப்பட்ட  அனுமதிகளை  மீறிய  1எம்டிபிக்கு  எதிராக  நடவடிக்கை  எடுப்பதில் ஓரளவு  முன்னேற்றம்  காணப்பட்டிருப்பதாகக்  கூறுகிறார்  பேங்க்  நெகாரா  கவர்னர்  ஸெட்டி  அக்தார்  அசீஸ். “ஏற்கனவே  கூறியதுபோல்  எங்களின்  விசாரணை  முடிந்து  நடவடிக்கை  எடுப்பதில் ஓரளவு  முன்னேற்றம் காணப்பட்டுள்ளது”, என  ஸெட்டி  இன்று  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். நடவடிக்கை  எடுக்கப்பட்டுக் …

நஜிப்பின் தலைமையத்துவத்தை நிராகரியுங்கள், மகாதிரின் திறந்த மடல்

  எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் தோற்கடிக்கப்படும் சாத்தியம் இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் நஜிப்பை அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கூறுகிறார். நஜிப்பின் தலைமைத்துவம் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நிராகரிக்கப்பட…

நள்ளிரவிலிருந்து ரோன்95 விலை 10 சென் இறக்கம்

  பெட்ரோல் நிலையத்தில் நள்ளிரவிலிருந்து ரோன்95 விலை ஒரு லீட்டருக்கு 10 சென் குறைக்கப்பட்டு ரிம1.95 க்கு விற்கப்படும். ஆனால், ரோன்97 மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. டீசல் விலை ஒரு லீட்டருக்கு ரிம1.90. ரோன்97 இன் விலை ஒரு லீட்டருக்கு ரிம2.45..

மலாய் ஆதரவு 30 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது: முகைதின் எச்சரிக்கை

அம்னோவுக்கு  மலாய்க்காரர்  ஆதரவு  30விழுக்காடாகக்  குறைந்து  விட்டது  என்றும்  78 விழுக்காட்டினர்  இப்போதைய  பொருளாதா  நிலையில்  அதிருப்தி  அடைந்திருப்பதாகவும்  அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  எச்சரித்துள்ளார். மெர்டேகா  மையம்  மேற்கொண்ட  ஆய்வை  மேற்கோள்  காட்டிய  முகைதின்  அம்னோவுக்கு  மலாய்க்காரர்  ஆதரவு  எப்போதுமே  50 விழுக்காட்டுக்குமேல்தான்  இருந்து வந்துள்ளது …

பிளஸ் நெடுஞ்சாலை அடுத்த ஆண்டு 5விழுக்காடு டோல் கட்டணத்தை உயர்த்த…

பிளஸ்  நிறுவனம்  வடக்கு- தெற்கு  நெடுஞ்சாலையிலும்  அதன்  பராமரிப்பில்  உள்ள  மற்ற  நெடுஞ்சாலைகளிலும்  2016-இல்  5 விழுக்காடு  சாலைக்கட்டணத்தை  உயர்த்த  உரிமை  பெற்றுள்ளது. ஒப்பந்தப்படி   ஒப்பந்த  காலம்  2038-இல்  முடிவடையும்  வரையில்  மூன்றாண்டுகளுக்கு  ஒரு  முறை  சாலைக் கட்டணத்தை  மறுபரிசீலனை  செய்யும்  உரிமை  அதற்கு  உண்டு. இன்று  மக்களவையில் …

இந்தோனேசியப் பயணப் படகு கடலில் மூழ்கியது; 97பேர் காப்பாற்றப்பட்டனர்

இந்தோனியாவின்  பத்தாம்  தீவிலிருந்து  சிங்கப்பூருக்குச்  சென்று  கொண்டிருந்த  பயணப் படகு  கடலில்  மூழ்கியபோது  அதிலிருந்து  ஏறத்தாழ  100பேர்  காப்பாற்றப்பட்டனர். அப்படகு  கடலில்  மிதந்து  கொண்டிருந்த  ஒரு  பொருளுடன்  மோதியதால்  மூழ்கியதாக  சிங்கப்பூர்  அதிகாரிகள்  தெரிவித்தனர். பயணப் படகுச்  சேவையை  நடத்தும்  பத்தாம்பாஸ்ட்  நிறுவனம்  வேறு  இரண்டு பயணப்  படகுகளை…

அமெரிக் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதைத் தற்காத்துப் பேசுகிறார் ஐஜிபி

இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப்  போலீஸ் (ஐஜிபி)  காலிட்  அபு  பக்கார்,  வழக்குரைஞர்  அமெரிக்  சித்துவை  போலீஸ்  விசாரணைக்கு  அழைத்திருப்பதைத்  தற்காத்துப்  பேசினார். அமெரிக்,  ஒரு  வணிகரான  சார்ல்ஸ்  சுரேஷ்  மொராய்ஸ்  சத்திய  பிரமாணம்(எஸ்டி)  தயாரிக்க  உதவினார்  என்பதால்தான் விசாரணைக்கு  அழைக்கப்படுவதாக  காலிட்  கூறினார். “உண்மைதான் (சத்திய  பிரமாணத்தில் கையெழுத்திட்டது …

அம்னோ: துணைத் தலைவர் அமருமிடத்தில் மாற்றமில்லை

டிசம்பர்  8-இல்  தொடங்கும்  அம்னோ  பொதுப்  பேரவையில்  நடப்புத்  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  அமருமிடத்தில்  மாற்றம்  ஏதும்  இருக்காது. வழக்கம்போல் அவர்  தலைவரின்  பக்கத்தில்தான்  அமர்ந்திருப்பார்  எனத்  துணைப்  பிரதமர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார். “இருக்கை  ஏற்பாட்டில்  மாற்றம்  இருக்கும்  என  நினைக்கவில்லை. துணைத்  தலைவர் …

சார்ல்ஸ் மொராயிஸின் வழக்குரைஞரை விசாரணைக்கு அழைத்த போலீசுக்குக் கண்டனம்

கட்சிக்காரர்களின்  நடவடிக்கைக்கு  வழக்குரைஞர்களைப்  பொறுப்பாக்கக்  கூடாது  என வழக்குரைஞர்  மன்ற  உறுப்பினர்  ஷியாரெட்சான்  ஜொஹான்  அதிகாரிகளுக்கு  நினைவுறுத்தினார். வழக்குரைஞர்  அமெரிக்  சித்து,  அவரின்  கட்சிக்காரர்  சார்ல்ஸ்  மொராய்ஸின்  அறிக்கை  தொடர்பில்  விசாரணைக்கு  அழைக்கப்படுவார்  எனப்  போலீஸ்  படைத்  தலைவர்   காலிட்  அபு  அபு  பக்கார்  கூறியிருப்பதை  அடுத்து  அவர் …

மலாக்கா சிஎம்-முக்கு ரிம990 ஆயிரம் செலவில் ஆடம்பர கார்கள் ஏன்?

மலாக்கா  முதலமைச்சர்  இட்ரிஸ்  ஹருன்   மூன்று கார்களை,  அவற்றில்  இரண்டு  ஆடம்பர  கார்கள்,  வைத்திருப்பது  அவ்சியம்தானா  என  டிஏபி ஆயர்  குரோ  சட்டமன்ற  உறுப்பினர்  கூ  போய்  தியோங்  வினவினார். மாநில அரசின்  தலைவர்  என்ற  வகையில்  ஏற்புடைய  அதிகாரத்துவ  கார்  ஒன்றைப்  பெற்றிருக்க  அவர்  உரிமை  பெற்றிருக்கிறார். …

அம்னோ இப்போது நஜிப்பின் கட்சியாகி விட்டது- மகாதிர்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  அம்னோ  இப்போது  நஜிப்புக்குச்  சொந்தமான  கட்சியாக  மாறிவிட்டது  என்று  சொல்லி  வருத்தப்பட்டார். தாமும்  முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினும்  கட்சியிலிருந்து  நீக்கப்பட  வேண்டும்  என்று கூறப்பட்டிருப்பது  பற்றி  அவர்  கருத்துரைத்தார். “எந்தவொரு  காரணமும்  இல்லை  என்றாலும்  என்னை   விலக்கும் உரிமை …

பினாங்கு டிஏபி ஆண்டுக்கூட்டத்தில் ரிம2.6 பில்லியன் பற்றி வினவும் அட்டைகள்

பினாங்கு டிஏபி  ஆண்டுக்கூட்டம்,  அதன்  பேராளர்கள் ‘ரிம2.6 பில்லியன்  எங்கே’  என்று  எழுதப்பட்ட  அட்டைகளை  ஏந்தி  நிற்க  இன்று  கோலாகலமாக  தொடக்கம்  கண்டது. நேற்று  பிகேஆர்  தேசிய  ஆண்டுக்  கூட்டத்திலும்  இதேபோன்றுதான்  நடந்தது. அதன்  பேராளர்களும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  2013  பொதுத்  தேர்தலுக்கு முன்பு அவரது …

நடவடிக்கைக்கு அஞ்சா அம்னோ கிளர்சிக்காரர்கள் பதவி விலகல் கோரிக்கையை முடுக்கி…

அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக் பதவி  விலகக்  கோரிக்கை  விடுத்த  தெலோக்  கெமாங்  அம்னோ  கிளைத்  தலைவர்கள்  13 பேரில்  ஒன்பதின்மர்  அடுத்த  வாரம்  கட்டொழுங்கு  வாரியத்திடம்  விளக்கமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால்,  அதைக்  கண்டு  அக்குழுவினர்  அஞ்சவில்லை. அது  மட்டுமல்ல  அவர்களின்  முயற்சிகளை  முடுக்கி  விடவும்  உறுதி …

மகாதிரின் ஆள் அன்வாரின் விடுதலைக்குக் குரல் கொடுக்கிறார்

எதிரணி  தலைவர்  அன்வார்  இப்ராகிம்   பிரதமர்  ஆவதற்குத்  தகுதியற்றவர்  என்பதற்கு  ‘50 காரணங்கள்’  என்ற  நூலை  முன்பு  வெளியிட்டிருந்தவர்  இன்று  அவரை  விடுதலை  செய்யும்  கோரிக்கையை  வரவேற்கிறார். அம்னோ  பத்து  கவான் தொகுதி  முன்னாள்  தலைவர்  கைருடின்  அபு  ஹசான்,  சுங்கை  பூலோ  சிறையில் உள்ள  அன்வாரை விடுவிக்கும் …

பிகேஆர் துணைத் தலைவரே இளைஞர், மகளிர் கூட்டங்களைத் தொடக்கி வைப்பார்

அடுத்த  மாதம்  அம்னோ  பொதுப்  பேரவையின்போது  அதன்  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  கட்சியின்  இளைஞர், மகளிர்  பிரிவுக்  கூட்டங்களைத்  தொடக்கி  வைக்க  மாட்டார்  என்று  அறிவிக்கப்பட்டிருப்பதை  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  கிண்டலடித்தார். “எங்கள்  கட்சியில்   மரபு  தொடர்கிறது.  அம்னோவைப்  போல்  அல்லாமல் துணைத்  தலைவரே …

ஜாஹிட்: மகாதிர் அம்னோ ஏஜிஎம்-முக்கு அழைக்கப்படுவது உறுதி

அம்னோ  உறுப்பினர்கள்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறும்  எல்லாக்  கருத்துகளையும்  ஏற்றுக்கொள்வதில்லை ஆனாலும்  அவரை  மதிக்கிறார்கள். த  ஸ்டாருக்கு  வழங்கிய  நேர்காணல்  ஒன்றில்  அம்னோ  உதவித்  தலைவர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிட்  இவ்வாறு  கூறினார். “அம்னோவில்  பெரும்பாலோர்  இன்னும்  அவரை  மதிக்கிறார்கள். ஆனால், அவரை  மதிப்பது …

அசிசா: படமெடுத்துக் கொள்வது அல்ல, 1எம்டிபி சொத்துகளை விற்பதே தேச…

படமெடுத்துக்  கொள்வது  தேச  துரோகச்  செயலென்று  சொல்ல  முடியாது. அதனோடு  ஒப்பிடும்போது  1எம்டிபியின்  மின்  உற்பத்தி  நிறுவனமான  எட்ரா  குளோபல்  என்ர்ஜி  சென். பெர்ஹாட்டை  சீனாவின்  ஜெனரல்  நியுக்லியர்  பவர்  கார்ப்பரேசனுக்கு  விற்றதுதான்  தேச  துரோகமாகும்  என்கிறார்  பிகேஆர் தலைவர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில். “1எம்டிபி-இன்  மின்…

நூருலை அடுத்து தியான் சுவாவிடம் போலீஸ் விசாரணை

லெம்பா  பந்தாய்  எம்பி  நூருல்   இஸ்ஸா- சூலு இளவரசி  ஜெசல்  இப்ராகிம்  சந்திப்பு தொடர்பில்  போலீசார்  பிகேஆரின்  பத்து  எம்பி  தியான்  சுவாவை  அடுத்து  விசாரணைக்கு  அழைப்பார்கள்  எனப்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்   கூறினார். நேற்று  இதே  விவகாரம்  தொடர்பில்  நூருலிடம்  விசாரணை  நடத்தப்பட்டது.…