பாக் லா பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல டாக்டர் மகாதீர்…

முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி தமது புத்தகத்தில் இன்னொரு  முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர் முகமட்டைக் குறை கூறியுள்ளார். இப்போதைக்கு அதற்குப் பதில் அளிக்க டாக்டர் மகாதீர் மறுத்து விட்டார். "நான் அந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். நான் அது குறித்து காலப்  போக்கில் கருத்துச் சொல்வேன்,"…

சாமிவேலு: என் ஒய்வுத் தேதி என் தனிப்பட்ட உரிமை

2008 பொதுத் தேர்தலுக்கு ஒராண்டு முன்னதாகத் தம்மை ஒய்வு பெறுமாறு  முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி கேட்டுக் கொண்டதாகக்  கூறப்படுவதை முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு மறுத்துள்ளார். "பாக் லா ஒய்வு பெறுமாறோ அல்லது வேறு எதுவுமோ என்னைக் கேட்டுக்  கொள்ளவில்லை. நான் எப்போது ஒய்வு…

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

அன்புள்ள வாசகர்களுக்கு  எங்களின் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள். இணையத் தளத்தில் கண்ட ராஜா முகமதுவின் வாழ்த்துக் கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.    இறைவனுக்கு வாக்களித்த கடமைதனை நிறைவேற்றி முப்பது நோன்பிருந்து பசி தாகம் தான் அறிந்து ஏழை மக்கள் துயரம் தன்னை ஒரு மாதம் அனுபவித்து…

மலேசியாவும் அம்னோவும் டாக்டர் மகாதீர் இசைக்கும் ‘பல்லவிக்குத் தாளம்’ போடுகின்றன

'மகாதீர் மலேசியாவின் புல்லாங்குழல் கலைஞர். அவரது பல்லவிக்கு தாளம்  போடுவதை நாம் நிறுத்தா விட்டால் அவர் அம்னோவையும் நாட்டையும்  புதைகுழிக்கு கொண்டு செல்வார்.' 'டாக்டர் மகாதீர் தலைக்கனம் பிடித்த முழுக்க முழுக்க முரண்பாடுகளைக்  கொண்டவர்' ஆறாம் அறிவு: வாழ்த்துக்கள் ! முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஏன்…

‘இந்த நோன்புப் பெருநாளில் Apa Lagi Malaysia Mau? என்ற…

இந்த பெருநாள் காலத்தில் Apa Lagi Malaysia Mau? என்ற கேள்வியை எழுப்பி  அதற்கான விடை காண எல்லா இனங்களையும் சார்ந்த மலேசியர்கள் முயல  வேண்டும் என மூத்த அரசியல்வாதியான லிம் கிட் சியாங் கேட்டுக்  கொண்டுள்ளார். "இந்த நாட்டை நேசிக்கின்ற இன்னொரு நாட்டுக்கு குடிபெயர விரும்பாத எல்லா…

இந்திய வணிகர்களின் கண்டனத்தால் விற்பனைச் சந்தையைத் தடுக்க முடியவில்லை

ஜூலை 16-இல், நாடு முழுவதுமுள்ள இந்திய வணிகர்கள் வெளிநாட்டவர்களால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி கடை அடைப்பின் மூலம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.. அந்த எதிர்ப்பு பலனளிக்கவில்லைபோல் தெரிகிறது.  ஏனென்றால்,  அனைத்துலக விற்பனைச் சந்தை இன்று தொடங்கி சனிக்கிழமைவரை  பாயான் பாருவில் உள்ள பினாங்கு அனைத்துலக விளையாட்டு அரங்கில்…

வேள்பாரி: ‘ஜஸ்பால், மைக்கா பற்றி சொன்னதை நிரூபியுங்கள்’

புதிதாக மூண்டுள்ள ஒரியண்டல் கேப்பிட்டல் அஸுரன்ஸ் பெர்ஹாட் பிரச்னை  தொடர்பாக தாம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை செனட்டர் ஜஸ்பால் சிங் ஏழு  நாட்களுக்குள் நிரூபித்தால் தாம் இப்போது வியூக இயக்குநராக பணியாற்றும்  மஇகா-விலிருந்து விலகிக் கொள்வதாக முன்னாள் மைக்கா ஹோல்டிங்ஸ் தலைமை  நிர்வாக அதிகாரியான எஸ் வேள்பாரி வாக்குறுதி அளித்துள்ளார்.…

நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் என்னைச் சந்தியுங்கள் என குவான் எங்…

நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் டிஏபி தலைவரை சந்திக்குமாறு ஆர்ஒஎஸ்  தலைவர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மானுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. "கணக்காயர் நிறுவனம் ஒன்று உறுதி செய்த புள்ளிவிவரங்களுக்குப் பதில்  ஆதாரமற்ற பொய்களை" தாம் நம்புவதற்கான காரணத்தை விளக்குவதற்கு அப்துல்  ரஹ்மான் தம்மைச் சந்திக்கலாம் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம்…

சொத்துக்களை அறிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கர்பால் நிராகரித்தார்

டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், நீதித்துறை லஞ்சம் பற்றிய  குற்றச்சாட்டுக்களைப் போக்குவதற்காக தமது சொத்துக்களை அறிவிக்க வேண்டும்  என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ளார். அத்தகைய கோரிக்கைகள் 'முக்கியமில்லாதவை' என அவர் குறிப்பிட்டார். "முக்கியமில்லாத கோரிக்கைகளுக்கும் முக்கியமில்லாத நபர்கள் வெளியிடும்  அறிக்கைகளுக்கும் பதில் சொல்வதற்கு எனக்கு நேரமில்லை," என கர்பால்…

அப்துல்லா: அம்னோவுக்குச் சீர்திருத்தங்கள் தேவை

அம்னோவுக்குச் சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாக அதன் முன்னாள் தலைவரும்  முன்னாள் பிரதமருமான அப்துல்லா அகமட் படாவி சொல்கிறார். அம்னோ தற்போது திருப்பு முனையில் உள்ளது. அதனை உடனடியாகச்  சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றார் அவர். இவ்வாறு அப்துல்லா "விழிப்பு: மலேசியாவில் அப்துல்லா படாவியின் ஆண்டுகள்"  என்னும் தலைப்பிலான தமது புத்தகத்தில்…

சிஐடி தலைவர்: நான் அவனைவிட அழகானவன்

கோலாலும்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா-வும்  பிரபல வணிகர் கொலையில் தேடப்படும் சந்தேகத்துக்குரிய நபரும்  ஒரே மாதிரியாக  இருப்பதாக இணையத்தில் பலரும் கருத்துத்  தெரிவித்துள்ளனர். ஆனால் கூ,  இருவருக்கும் முக்கிய வேறுபாடு இருப்பதாக  நினைக்கிறார். “நான் அவனைவிட அழகானவன்”, என்றவர் த ஸ்டார் ஆன் லைன்னுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில்…

அப்துல்லா: நான் சாமிவேலுவை ஒய்வு பெறச் சொன்னேன். ஆனால் அவர்…

2008 பொதுத் தேர்தலுக்கு ஒராண்டு முன்னதாக மஇகா தலைவர் பொறுப்பிலிருந்து  விலகிக் கொள்ளுமாறு எஸ் சாமிவேலுக்கு தாம் யோசனை சொன்னதாகவும்  ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்து விட்டதாகவும் முன்னாள் பிரதமர்  அப்துல்லா அகமட் படாவி கூறுகிறார். "தேர்தலுக்கு ஒராண்டு முன்னதாக பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்ததற்காக நான்  அவருக்கு…

ஓராங் அஸ்லிகளுக்கு புதிய ஆணையம் தேவை: சுஹாகாம்

மலேசிய  மனித  உரிமை  ஆணையமான சுஹாகாம், ஓராங் அஸ்லிகள் தொடர்பான சட்டங்கள், கொள்கைகள் ஆகியவை பற்றி அரசாங்கத்துக்கு ஆலோசனை கூற ஒரு புதிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது. பூர்விகக் குடியினரின் நில உரிமைகள் குறித்து இரண்டாண்டுகளாக விசாரணை நடத்திய சுஹாகாம், 18 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை…

மினாரா அம்னோ உரிமையாளர் கார்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்

ஜூன் 13 மினாரா அம்னோ கட்டிடத்திலிருந்து இடிதாங்கி விழுந்ததில் சேதமடைந்த கார்களைப் பழுதுபார்க்கும் செலவுகளைக் கொடுக்கக் காப்புறுதி நிறுவனங்கள் மறுத்துவிட்டன. எனவே, மினாரா அம்னோ கட்டிட உரிமையாளரான ஜேகேபி சென்.பெர்ஹாட்தான் அச்செலவுகளை ஈடு செய்ய வேண்டும் என டிஏபி தஞ்சோங் எம்பி இங் வை எய்க் வலியுறுத்தியுள்ளார். அது…

அமைச்சர்: சிலாங்கூர் அரசாங்கத்திடம் கேளுங்கள்

சிலாங்கூர் டெங்கிலில் தங்களது அடுக்குமாடி வீடுகள் இடியக் கூடும் என்ற  அச்சத்தினால் கூடாரங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், மாற்று வீடுகளைக்  கட்டுவதற்குப் பொருத்தமான இடத்தைக் கொடுக்குமாறு சிலாங்கூர் அரசாங்கத்தை  வற்புறுத்த வேண்டும் என நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர்  அப்துல் ரஹ்மான் டஹ்லான் சொல்கிறார். நிலம் கிடைக்கவில்லை என்றால்…

மாய்ஸ் நான்கு ஷியா மய்யங்களை கண்டு பிடித்துள்ளது

சிலாங்கூரில் ஷியா போதனைகள் பரப்பப்படும் நான்கு மய்யங்களை மாய்ஸ்  எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகார மன்றம் கண்டு பிடித்துள்ளது. அந்த மய்யங்களில் ஷியா நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகின்றன என்று மாய்ஸ் தலைவர் முகமட் அட்ஸிப் முகமட் ஈசா  தெரிவித்தார். அம்பாங், கோம்பாக், கிள்ளான், பூச்சோங் ஆகியவற்றில் அந்த மய்யங்கள்…

லீ குவான் இயூ: இன அடிப்படை அரசியல் மலேசியாவுக்குப் பாதகமானது

மலேசியாவின் இன அடிப்படை கொள்கைகள் அதனை பாதகமான சூழ்நிலையில்  வைத்துள்ளதாக முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ சொல்கிறார். "எல்லா இனங்களையும் சேர்ந்த ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் சமூகத்தை  உருவாக்குவதற்குத் தேவைப்படும் ஆற்றலையும் வளத்தையும்  அது சுருக்கி விடுகின்றது"  என சிங்கப்பூரில் நேற்று வெளியிடப்பட்ட தமது புதிய…

முகநூலில் கிறிஸ்துவர்களை இழிவுபடுத்தியவர் அடையாளம் காணப்பட்டார்

கிறிஸ்துவர்களையும் ஏசுநாதரையும் இழிவுபடுத்தும் முகநூல் பக்கத்தின் உரிமையாளரை அரசாங்கம் அடையாளம் கண்டுபிடித்துள்ளது. இதைத் தெரிவித்த அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் இவோன் இபின், அமைச்சின்கீழ் இயங்கும் சைபர் சிக்யூரிடி துணை நிறுவனம் அவரைப் பற்றிய முழு விவரங்களையும் இணையவெளியிலிருந்து பெற்றிருக்கிறது என்றார். அந்த முகநூல் பக்கத்தில் ஏசுநாதர் ஒரு…

இஸ்தானா வந்த கூட்டத்தை போலீஸ் தடுத்துவைத்து விசாரணை

பேரரசரின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு இஸ்தானா நெகாராவுக்கு வெளியில் திரண்ட ஒரு கூட்டத்தை போலீஸ் பிடித்து வைத்துள்ளது. “அவர்களின் நோக்கம் என்னவென்பது தெரிய வேண்டும். அதற்காக தடுத்து வைத்திருக்கிறோம்”,என கோலாலும்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா கூறினார். இரண்டு சிறார்கள் உள்பட 12 பேரடங்கிய அக்கூட்டம் மூன்று…

அடிக்கடி தூங்கி விடுவது ஏன்? காரணத்தை நூலில் விளக்குகிறார் பாக்…

முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி, கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கும்போதே  தூங்கி விடுவார்.பலரும் இதைச் சுட்டிக்காட்டி குறைசொன்னதும் உண்டு, கேலி செய்ததும் உண்டு. ஏன் இப்பழக்கம் என்பதை "Awakening, the Abdullah years in Malaysia" என்னும் நூலில் அவரே விளக்கியுள்ளார் அப்துல்லாவுக்கு sleep apnea என்ற குறைபாடு இருந்ததாம்.…

நஜாடியின் கொலையாளியை போலீஸ் அடையாளம் கண்டிருக்கிறது

அரேப்- மலேசியன் வங்கியின் நிறுவனர் அஹ்மட் உசேன் நஜாடியைச் சுட்டுக்கொன்றவன் 44-வயது கொங் சுவி குவான் என போலீசார் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இப்போது கொலைக்கான நோக்கத்தைக் கண்டறிவதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். கொலை பற்றித் தகவலளிக்கக் கூடியவர்கள் என்று நம்பப்படும்  மூவரைக் கைது செய்திருப்பதாக கேஎல் சிஐடி தலைவர்…

பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சொத்துக்களை அறிவிப்பர்

பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்களும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும். இன்றைய ஆட்சிக்குழு கூட்டத்தில் அவ்வாறு முடிவுசெய்யப்பட்டதாக முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். “சொன்னதைச் செய்து வாக்குறுதிகளைக் காக்கும் அரசு என்ற முறையில் நாங்கள் அனைவரும் சொத்து விவரங்களை அறிவிப்போம்”, என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர்…

2000 ஏக்கர் நிலம்: மற்றுமொரு ம.இ.கா ஹோல்டிங்ஸ் உருவாக்கமா?

-மு. குலசேகரன், ஆகஸ்ட் 6, 2013. எனக்குக் கிடைத்த ஒரு குறுஞ்செய்தி தகவல் வழி 60,938 ரிங்கிட்டை பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் சார்பாக அதன் இயக்குனர் ஒருவர் (பெயர் குறிப்பிடப் படவில்லை) தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2 ஆயிரம் ஏக்கருக்கு நில வரியாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.…