சூராவ் உரிமையாளரின் ‘பிஆர்’ பறிக்கப்பட்டது

சூராவில் பெளத்தர்கள் தியானம் செய்வதற்கு இடமளித்த கோத்தா திங்கி செடிலி புசார் ஓய்வுத்தல உரிமையாளரின் நிரந்தர வசிப்பிடத் தகுதி(பிஆர்) பறிக்கப்பட்டது. தேசிய பதிவுத்துறையுடன் அலோசனை கலந்த பின்னர் அம்முடிவு செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். “பிஆர் தகுதி நன்மை கருதி வழங்கப்படுவது.  அது ஓர்…

ரிம14.2 மில்லியன் நடைபாலத்தில் பல கோளாறுகள்

மேடான் துவாங்கு மொனோ மொனோரயில் நிலயத்தையும் சுல்தான் இஸ்மாயில் எல்ஆர்டி நிலையத்தையும்  இணைப்பதற்காக ரிம14.2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு ஜூலை 8-இல்  திறக்கப்பட்ட நடைபாலம் முறையாக செயல்படாமல் பழுதுபட்டிருக்கிறது. திறக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே பாலத்திலிருந்த பாதி விளக்குகள் எரிவதில்லை என செகாம்புட் எம்பி லிம் லிப் எங்கும் புக்கிட்…

மகாதீர் முகமட் வில்லனாகிறார்

"மகாதீர் அவர்களே பிஎன் அரசாங்கமும் போலீஸும் நன்றாக வேலை  செய்யாததால் எங்களுடைய புனிதமான சிவில் சுதந்திரங்களை நீங்கள் பறித்துக்  கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." "சுதந்திரங்களின் விலை அதிகமான துப்பாக்கிச் சூடுகள் என எச்சரிக்கிறார்  மகாதீர்" பார்வையாளன்: மலேசியாவில் குற்றச் செயல்கள் பெருகி விட்டதற்கு முன்னாள்  பிரதமர் டாக்டர்…

புதிய தேர்தல்கள் வலியைக் கொடுத்த சிரமமான முடிவு என்கிறார் லிம்

சங்கப்பதிவதிகாரி (ஆர்ஒஎஸ்) தொடுத்த நெருக்குதலினால் புதிய தேர்தல்களை  நடத்துவது என டிஏபி செய்த முடிவு 'மிகவும் வலியைக் கொடுத்தது, சிரமமானது'  என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என டிஏபி கருதியதே அதற்குக் காரணமாகும்  என்றார் அவர். 'குற்ற…

டிஏபி மறு தேர்தல் ‘பழைய’ வேட்பாளர் பட்டியல் அடிப்படையில் இருக்கக்…

சங்கப் பதிவதிகாரி (ஆர்ஒஎஸ்) நெருக்குதல் கொடுத்த டிஏபி கட்சியின் மறு தேர்தல் நடவடிக்கை பெரும்பாலும் 'பழைய வேட்பாளர் பட்டியல்' அடிப்படையில்  இருக்கக் கூடும் என அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்  கூறியிருக்கிறார். மறு தேர்தலை நடத்தும் முறை குறித்த விவரங்களை முடிவு செய்வதற்காக வரும்  வியாழக்…

ஒற்றுமை அரசாங்கம் பற்றிய ஊடகத் தகவல்களை பிரதமர் அலுவலகம் மறுக்கிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன்  ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க விரும்புவதாகக் கூறப்படுவதை பிரதமர்  அலுவலகம் மறுத்துள்ளது. ஒற்றுமை அரசாங்கப் பேச்சுக்கள் பற்றிய ஊடகச் செய்திகள் " எழுத்தாளருடைய  கற்பனையில் உதித்தவை" என அது கூறியது. "அன்வாரும் பக்காத்தான் ராக்யாட் தலைமைத்துவமும் 13வது பொதுத்…

சபா ஆர்சிஐ-யில் சாட்சியமளிக்க முன்னாள் முதலமைச்சர் ஹாரிஸ் மறுப்பு

சபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் (ஆர்சிஐ)  முன்பு சாட்சியமளிக்க முன்னாள் சபா முதலமைச்சர் ஹாரிஸ் சாலே எதிர்பாராத  வகையில் மறுத்துள்ளார் ஏற்கனவே சாட்சியமளித்துள்ள ஹாரிஸ் முன்னாள் சண்டக்கான் மாவட்ட அதிகாரி  ஹசானார் இப்ராஹிம் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிப்பதற்காக  மீண்டும் அழைக்கப்பட்டிந்தார். இன்று காலை சாட்சியமளித்த…

சுவாராம்: போலீஸ் குற்றச் செயல்களை ஒடுக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்

சுவாராமைத் 'தேர்வு செய்து ஒடுக்குவதை' நிறுத்திக் கொண்டு குற்றச் செயல்களை  முறியடிப்பதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு சுவாராம் நிர்வாக இயக்குநர் இ நளினி இன்று ஒர் அறிக்கையில்  கூறியுள்ளார். ஜுலை 19ம் தேதி சுவாரம் நடத்திய நிதி திரட்டும் விருந்து பற்றிய போலீஸ்  விசாரணை…

அரசாங்கச் சம்பளம் இல்லாமல் அமைச்சர்கள் உறவினர்களை வேலைக்குச் சேர்ப்பதற்கு ஒகே…

அமைச்சர் அல்லது அரசாங்க நிர்வாக உறுப்பினர் ஒருவர் அரசாங்க சம்பளம்  அலவன்ஸ் சம்பந்தப்படாமல் குடும்ப உறுப்பினர் ஒருவரை உதவியாளராக  வேலைக்கு சேர்ப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை என பிரதமர் நஜிப் அப்துல்  ரசாக் கூறியிருக்கிறார். "அந்த உதவியாளரை அமைச்சர் சேர்த்து அரசாங்கத்திலிருந்து சம்பளம் கொடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது," என்றார்…

டிஏபி: நிலப் பேரங்கள் தொடர்பான கேள்விகளை பேராக் சட்டமன்றம் நிராகரிக்கிறது

பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் தாம் எழுத்துப்பூர்வமாகவும் வாய்மொழியாகவும்  சமர்பிக்கும் கேள்விகளுக்கு பிஎன் வழி நடத்தும் பேராக் மாநில அரசாங்கம்  தொடர்ந்து நிராகரித்து வருவதாக அந்த மாநில டிஏபி தலைவர் இங்கா கூ காம்  குறை கூறியுள்ளார். எழுத்துப்பூர்வமான பதிலுக்கு ஆறு கேள்விகளையும் வாய்மொழியான பதிலுக்கு  மூன்று கேள்விகளையும் தாம்…

ஆர்ஓஎஸ்-ஸை நீதிமன்றத்துக்கு இழுப்பது பயனற்ற வேலை-டிஏபி

மத்திய நிர்வாகக் குழுவு (சிஇசி)க்கு மறுதேர்தல் நடத்த வேண்டுமென்ற சங்கப் பதிவகத்தின் (ஆர்ஓஎஸ்) உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் செல்வது வீணான வேலை என்கிறது டிஏபி. அதன் தொடர்பில் நீதிமன்றம் செல்லும் எண்ணம் கட்சிக்கு கிடையாது எனத் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். “சட்டவிரோத…

உதவி தேவையா, ஓரிட நெருக்கடிகால சேவை மையத்துக்கு வாருங்கள்

குடும்ப வன்செயல்களுக்கு ஆளானவர்கள் ஓரிட நெருக்கடிகால சேவை மையத்தில் தேவையான உதவிகளைப் பெறலாம். இச்சேவை மையங்கள் நாடு முழுக்க உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் அமைந்துள்ளன. 1997-இலிருந்து செயல்பட்டுவரும் அச்சேவை மையங்கள் பற்றி பெரும்பாலோர் அறிந்திருக்கவில்லை என பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் அவிவ் பஹார்டின் கூறினார். “குடும்ப…

கைரி: டிஏபி புதிய தேர்தல்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகும்

டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு புதிய தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது  'குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு சமமாகும்' என அம்னோ இளைஞர் தலைவர்  கைரி ஜமாலுதின் சொல்கிறார். அவர் இன்று சன்வே பல்கலைக்கழகத்தில் சன்வே பொதுக் கொள்கை விரிவுரை  நிகழ்வின் தொடக்க விழாவில் நிருபர்களிடம் பேசினார். ஆர்ஒஎஸ் என்ற…

‘புதுக் கிராமம்’ திரையிடப்படுவதை மலாய் மன்றம் எதிர்க்கிறது

பொது மக்களுக்கு 'புதுக் கிராமம்' திரையிடப்படுவதற்கு மலாய் ஆலோசனை  மன்றம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்தத் திரைப்படம் வரலாற்று உண்மைகளை மாற்றிக் காட்டுவதால் அதனை  கற்பனை எனக் கருத முடியாது என அதன் தலைமைச் செயலாளர் ஹசான் மாட்  சொன்னார். "நிறைய தியாகங்களைச் செய்துள்ள மலாய்க்காரர்களுக்கு 'புதுக் கிராமம்'  ஆத்திரத்தை…

போலீஸ்காரர்களில் 80 விழுக்காட்டினர் குற்றத் தடுப்பில் ஈடுபட்டுள்ளனர்

குற்றப் புலனாய்வுத் துறை உட்பட போலீஸ் படையினரில் கிட்டத்தட்ட 80  விழுக்காட்டினர் குற்றத் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய  போலீஸ் படைத் தலைவர் செயலகத்தின் நிறுவனத் தொடர்புப் பிரிவு உதவித்  தலைவர் ஏசிபி ராம்லி முகமட் சொல்கிறார். குற்றச் செயல்களை ஒடுக்குவதில் முழுப் போலீஸ் படையும் சம்பந்தப்பட்டுள்ளதால் குற்றப்…

‘ஆர்ஒஎஸ் ஏன் அம்னோவுக்கும் அதே விதிகளை அமலாக்கவில்லை ?’

"அம்னோ சட்ட விரோத அமைப்பு என நீதிபதி ஹருண் ஹஷிம் தீர்ப்பளிப்பதற்கு  வழி வகுத்த அம்னோ 1987/88 தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கிறதா ?" மத்திய நிர்வாகக் குழு தேர்தலுக்கு டிஏபி இணங்குகிறது புரோராட்: தேர்தல் என வரும் போது டிஏபி வெண்மையிலும் வெண்மையாக  தோற்றமளிக்க வேண்டும். தவறான வேட்பாளர்கள்…

‘சபா மக்கள் தொகையை மாற்றியதற்கு முஸ்தாபாவே பொறுப்பு’

பிபிஎஸ் தலைமையிலான மாநில அரசாங்கத்தை வீழ்த்தும் பொருட்டு சபா மக்கள்  தொகையை மாற்றியமைக்கும் யோசனையை முதலில் முன்மொழிந்தவர் முன்னாள்  சபா முதலமைச்சர் முஸ்தாபா ஹருண் என குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று தெரிவிக்கப்பட்டது. உஸ்னோ எனப்படும் பலவீனமாக இருக்கும் தொகுதிகளில் புதிய வாக்காளர்களை  பதியும் பொறுப்பை காலஞ்சென்ற…

கைரி தேச நிந்தனைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என பிகேஆர்…

சரவாக் டிஏபி தலைவர் சோங் சியாங் ஜென்-னுக்கு எதிராக அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் போலீசில் புகார் செய்துள்ளதன்வழி தேச நிந்தனைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என பிகேஆர் சாடியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு எதிரான அறிக்கைகளுக்காக தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என பிகேஆரின் சட்ட,…

குடும்ப வன்முறையைக் கையாள போலீசுக்கு பயிற்சி தேவை

9,983 குடும்ப வன்முறை சம்பவங்களில் 817 மட்டுமே நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து குடும்ப வன்முறை விவகாரத்தில் போலீஸ் படைக்குப் போதுமான தேர்ச்சி இல்லை என்பது தெளிவாகிறது என டிஏபி-இன் புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம் கூறினார். எனவே, மகளிருக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளைக் கையாள்வதற்கு போலீசுக்குப்…

‘கள்ளக் குடியேறிகள் பிரச்னையைத் தீர்க்க நஜிப்பின் பிஎன் இறுதியில் அரசியல்…

சபாவில் வெள்ளம் போல் குவிந்துள்ள கள்ளக் குடியேறிகள் பிரச்னையைத்  தீர்ப்பதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையிலான பிஎன் அரசியல்  உறுதிப்பாட்டைக் காட்டியுள்ளதாக அந்த மாநில துணை முதலமைச்சர் ஜோசப்  பைரின் கிட்டிங்கான் கூறினார். அவர் சபா குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் (ஆர்சிஐ)  199வது சாட்சியாக…

நஸ்ரி: ஒற்றுமை அரசாங்கம் தேவை இல்லை

பக்காத்தான் ராக்யாட்-உடன் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை  பிஎன் தெரிவிப்பது பயனற்றது, முதிர்ச்சியற்றது என சுற்றுப்பயண, பண்பாட்டு  அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் சொல்கிறார். "தேர்தல் நடைபெறும் போது முடிவுகள் மாறுகின்றன. ஒவ்வொரு முறையும் நாம்  ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தால் தேர்தலை ஏன் நடத்த வேண்டும் ?" என…

மகாதீர்: அதிகமான சுதந்திரத்தின் விலை கூடுதலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

சாலைகளில் கொலைகள் அதிகரித்துள்ள சூழ்நிலைக்கு மலேசியர்கள் தங்களைப்  பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்  முகமட் கூறுகிறார். காரணம் அந்தச் சம்பவங்கள் 'அதிகமான சுதந்திரத்தின் விலை' என அவர்  சொன்னார். அதிகமான சிவில் உரிமைகள் வழங்கப்படும் போது அத்தகைய குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு அதிகாரிகள்…

டிஏபி மத்திய நிர்வாகக் குழு மறு தேர்தலுக்கு இணங்குகிறது

சங்கப் பதிவதிகாரியுடன் (ஆர்ஒஎஸ்) நீண்ட இழுபறிக்குப் பின்னர் டிஏபி தனது  மத்திய நிர்வாகக் குழுவுக்கு மறு தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. கோலாலம்பூரில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டு மணி மத்திய நிர்வாகக் குழுக்  கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக மலேசியாகினியிடம் சில வட்டாரங்கள்  தெரிவித்தன. அந்தக் கூட்டத்துக்கு கட்சியின்…