ஷரிசாட் நியமனம்: பிடிகொடுக்காமல் பேசுகிறார் நஜிப்

இன்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சாவின் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்,  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம், அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் அவரின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுவாரா என்று இரண்டாவது தடவையாக கேட்கப்பட்டது. அதற்குப் பிரதமர் நேரடியாக பதிலுரைக்காமல், அந்த முன்னாள்…

போலீஸ்: துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வழக்கமான நடைமுறைகள்தான் பின்பற்றப்பட்டன

நேற்று ஒரு அடுக்குமாடி வீட்டில் ஒரு குண்டர் கும்பலின் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் வழக்கமான நடைமுறைகள்தான் பின்பற்றப்பட்டன என பினாங்கு போலீசார் உறுதியாகக்  கூறுகின்றனர். இதனை வலியுறுத்திய பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி, “எங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சந்தேக நபர்களை நோக்கி 30 தடவை சுட்டதாகக்…

பாஸ்: எகிப்திய நெருக்கடி மீது நாடாளுமன்றக் கூட்டம் நடத்துக

மலேசியா, அவசர நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தி  எகிப்திய இராணுவம் பொதுமக்கள்மீது படைபலத்தைப் பயன்படுத்தியதைக் கண்டிப்பதுடன் அந்நெருக்கடி குறித்து விவாதிக்க இஸ்லாமிய மாநாட்டு நிறுவனத்தின் அவசரக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது.. இதன் தொடர்பில் பாஸ், மகஜர் ஒன்றைப் பிரதமர் அலுவலகத்தில் இன்று சமர்ப்பித்தது. மகஜரைக்…

சிலாங்கூர் போலீசார் சிறப்பு நடவடிக்கையின் கீழ் 683 பேரைக் கைது…

சிலாங்கூரில் ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய Ops Cantas Khas நடவடிக்கையின்  கீழ் இன்று காலை ஆறு மணி வரையில் மொத்தம் 683 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். 211 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்தத் தகவலை சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஏ தெய்வீகன் இன்று வெளியிட்டார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்…

தேசிய சேவைப் பயிற்சியாளர்களுக்கான கருத்தரிப்பு சோதனையைக் கைவிடுங்கள் என்கிறது SIS…

தேசிய சேவை பெண் பயிற்சியாளர்கள் அனைவரும் கருத்தரிப்பு சோதனைக்கு  உட்பட வேண்டும் என்ற முடிவை மறு ஆய்வு செய்யுமாறு Sisters in Islam (SIS)  என அழைக்கப்படும் இன்னொரு மகளிர் அமைப்பும் கேட்டுக் கொண்டுள்ளது. கருத்தரிப்பு சோதனை 'பொருத்தமற்ற நடவடிக்கை' என அது வருணித்தது. 2004ம் ஆண்டு தேசிய…

மஇகா தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என…

செப்டம்பர் 22ம் தேதி நிகழும் மஇகா தலைவர் தேர்தலில் அந்தப் பதவியைத்  தாம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என ஜி பழனிவேல் நம்பிக்கை  தெரிவித்துள்ளார். துணைத் தலைவராக டாக்டர் எஸ் சுப்ரமணியமும் எதிர்ப்பின்றி தேர்வு பெறுவார்  எனத் தாம் எண்ணுவதாகவும் அவர் சொன்னார். "காரணம் தலைவர், துணைத்…

‘சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடலில் ஏராளமான துப்பாக்கிக் குண்டு காயங்கள் இருப்பது ஏன்?’

பினாங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து சந்தேக நபர்களின் உடல்களை அவர்களின் குடும்பத்தார் பெற்றுக்கொண்டார்கள். உடல்களைப் பெற்றுக்கொள்ளுமுன்னர் அவர்கள் போலீசில் புகார் செய்ததாக அக்குடும்பத்தார் சார்பில் பேசிய ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் கூறினார். அந்த ஐவரும் இரகசிய கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறும் போலீசார் அதை நிரூபிக்க…

சூராவ்-வை இடிக்கும் ஆணையை பாத்வா மன்றம் ஆதரிக்கிறது

கோத்தா திங்கி செடிலியில் Tanjung Sutera ஒய்வுத் தலத்தில் தியானம் செய்வதற்கு  பௌத்த சுற்றுப்பயணிகள் குழு ஒன்று பயன்படுத்திய இடிப்பதற்கு ஜோகூர்  அரசாங்கம் ஆணையிட்டதை தேசிய பாத்வா மன்றம் ஆதரித்துள்ளது. சூராவ் அல்லது பள்ளிவாசல் தவறாகப் பயன்படுத்தப்படும் போது அல்லது  மாசுபடுத்தப்படும் போது அதனை இடிப்பது தான் விவேகமாகும்…

சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட விதம் குறித்து கேள்வி எழுப்புகிறார் வேதா

இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, பினாங்கில் ஐந்து சந்தேக நபர்களை போலீசார் சுட்டுக் கொன்ற முறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அச்சம்பவத்தைக் காண்பிக்கும்  நிழல்படங்களைத் தாம் பார்க்க நேர்ந்ததாகவும் அவற்றைப் பார்க்கையில் போலீசுக்கும் சந்தேக நபர்களுக்குமிடையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்படுவதை நம்ப முடியவில்லை என்றும் அவர் சொன்னார். “ஒவ்வொரு…

‘புதுக் கிராமம்’ திரைப்படம் ‘சரியான செய்தியைத் தர வேண்டும்’

கம்யூனிசக் கிளர்ச்சியின் வரலாற்று அம்சத்தை 'புதுக் கிராமம்' திரைப்படம்  சித்தரிக்கிறது என்றால் அதனை வெளியிட திரைப்படத் தணிக்கை வாரியம்  அனுமதிக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி (ஒய்வு  பெற்ற) முகமட் அஸுமி முகமட் சொல்கிறார். உண்மையில் நடந்ததை அந்தத் திரைப்படம் துல்லிதமாகக் காட்டா விட்டால் அது…

EMGS என்னும் சேவை நிறுவனத்தை கலையுங்கள்

EMGS எனப்படும் மலேசியக் கல்வி அனைத்துலகச் சேவை நிறுவனத்தை கலைக்க  வேண்டும் என மலேசிய போட்டித் திறன் ஆணையம் அரசாங்கத்துக்கு அழுத்தம்  கொடுக்க வேண்டும் என செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் கேட்டுக்  கொண்டுள்ளார். அந்த நிறுவனம் பின்பற்றும் வழிமுறைகள் போட்டி நடைமுறைகளுக்கு மாறாக  இருப்பதாக அவர்…

ரொஹானி: ஷரிசாட் என் அமைச்சின் ஆலோசகர் அல்லர்

மகளிர்,  குடும்ப,  சமூக மேம்பாட்டு  அமைச்சர்  ரொஹானி அப்துல் கரிம்,  அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல்  ஜலில்  தம் அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுவதை மறுத்துள்ளார். அந்த அமைச்சின் முன்னாள் அமைச்சரான ஷரிசாட் பிரதமருக்கு மகளிர் விவகாரங்களில் ஆலோசனை கூறும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாக செய்தி…

கெடா, கூப்பாங்-கில் இலேசான நிலநடுக்கம்

ரைக்டர் அளவைக் கருவியில் 3.8 எனப் பதிவான இலேசான நில நடுக்கம் இன்று காலை மணி 8.26க்கு கெடாவில் கூப்பாங்கைத் தாக்கியது. அந்நில நடுக்கம் பாலிங்குக்கு 11கிலோ மீட்டர் தெற்கே மையம் கொண்டிருந்ததாக வானியல் ஆய்வு நிலையம் அறிவித்தது. பாலிங் வட்டாரத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. -பெர்னாமா

‘தேசிய சேவை கருத்தரிப்பு சோதனை பெண்கள் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்க…

தேசிய சேவையில் பங்கு கொள்ளும் இளம் பெண்கள் கட்டாயமாக கருத்தரிப்பு  சோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது 'அவர்களுடைய தனிப்பட்ட  உரிமையை மீறுவதுடன்' பெண்களுக்கு நன்மையைக் காட்டிலும் தீமையையே  கொண்டு வரும் என மகளிர் உரிமைப் போராட்ட அமைப்புக்கள் கருதுகின்றன. "காரணம் தாய்மை அடைந்துள்ளதை கண்டு பிடிக்காமல் தடுக்க…

நஜிப் மகாதீருடன் கருத்து வேறுபாடு சுற்று 1

"எம்ஏஎஸ்-ஸுக்குத் தேவைப்படுவது அரசியல் தலையீட்டிலிருந்து விடுபட்ட சிறந்த  நிர்வாகக் குழுவாகும்- ஆனால் அது கிடைக்காது" நஜிப்: எம்ஏஎஸ் தனியார் மயமாக்கப்பட மாட்டாது உங்கள் அடிச்சுவட்டில்: எம்ஏஎஸ் (மலேசியன் ஏர்லைன்ஸ்) பற்றிய விவாதங்களில் நாம் முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறோம். அது தனியார்  மயமாக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது பிரச்னையே…

சந்தேக நபர்களை நீதிமன்ற ஆணையுடன் 72 நாள்கள் தடுத்து வைக்கலாம்

1959 ஆம்  ஆண்டு  குற்றத்தடுப்புச் சட்டம் (1983-இல் திருத்தப்பட்டது)  சந்தேக நபர்களை  72 நாள்கள் விசாரணைக்காக தடுத்து வைக்க வகை செய்வதாகக் கூறுகிறார்  இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார். ஆனால், அவ்வாறு தடுத்துவைக்க நீதிமன்ற உத்தரவைப் பெறுவது அவசியமாகும். அச்சட்டத்தின்கீழ் இப்போது நாடு முழுக்க…

ஆலயப் பணம் ‘அபேஸ்’ என்று கூறிய சிஎம்-மீது தெங் சீற்றம்

பினாங்கு பிஎன்னின் முன்னாள் தலைவர், தெங் சாங் இயோ,  பத்து கவானில் உள்ள 134-ஆண்டுகள் பழமையான ஆலயத்துக்குக் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த 500,000 ரிங்கிட்டைத் தாம்  “விழுங்கி  ஏப்பமிட்டு  விட்டதாக” பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கும் இரண்டு சீனமொழி நாளேடுகளும் குற்றம் சாட்டியிருப்பது குறித்து  சீற்றமடைந்துள்ளார். அதன்…

சாபாவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக மிகப் பெரிய நடவடிக்கை

சாபாவில், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை ஒன்று விரைவில் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மூசா அமான் இன்று தெரிவித்தார். அதில், இராணுவம், போலீஸ், குடிநுழைவுத் துறை மலேசிய கடலோரச் சட்ட செயலாக்கத் துறை, ரேலா, தேசியப் பதிவுத் துறை, சிவில் தற்காப்புத் துறை ஆகியவை பங்கேற்கும். சாபா…

கைரி நஸ்ரியைக் குறை கூறுகின்றவர்களைச் சாடுகிறார்

தமது புதல்வரை தமது சிறப்பு அதிகாரியை நியமித்த சுற்றுப்பயண, பண்பாட்டு  அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸை குறை கூறுகின்றவர்கள் முதலில் தங்களைப்  பார்த்துக் கொள்ள வேண்டும் என இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி  ஜமாலுதின் வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் நஸ்ரியின் வாக்கு வன்மைக்கு குறிப்பாக நாடாளுமன்றத்தில் அவருடைய சொல் வன்மைக்கு…

நஜிப் டாக்டர் மகாதீருக்கு பதில் அளிக்கிறார் சமநிலை பேணப்படும் என…

தனிநபர் மனித உரிமைகளுக்கும் குற்றச் செயல்களைக் குறைக்கும் பொது  நலனுக்கும் இடையில் சமநிலையை நிலை நிறுத்தப் போவதாக பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளார். தடுப்புக் காவல் சட்டங்கள் அகற்றப்பட்டது தொடர்பில் கருத்துரைத்த முன்னாள்  பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது "சிவில் சுதந்திரத்தின் விலை அதிகமான  துப்பாக்கிச்…

‘பாதிரியார் பொய்கள்’ தொடர்பில் டிஏபி உத்துசான் மீது வழக்குப் போடும்

'கற்பனையான' தந்தை அகஸ்டஸ் சென் எழுதிய கையேடு ஒன்றில் காணப்படும் 'அவதூறான பொய்களுக்காக' டிஏபி அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான்  மலேசியா நாளேடு மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தனது  வழக்குரைஞர்களுக்கு ஆணையிட்டுள்ளது. டிஏபி தொடர்ந்து மறுத்த போதிலும் 'பொய்களை மறுசுழற்சி செய்வது' என அந்த  நாளேடு முடிவு செய்துள்ளதால் வழக்குப்…

ஷரிசாட் திரும்ப வருகிறாரா? பிரதமர் மெளனம்

அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில் மகளிர் விவகார சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுவது பற்றி வினவியதற்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சரியாகப் பதிலளிக்கவில்லை. “அதன் தொடர்பில்  எதுவும் அறிவிப்பதற்கில்லை. அதை அப்படியே விட்டு விடுங்கள்”, என்றார். ஷரிசாட், மகளிர் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும்  நஜிப்பின்…

பாஸ்: நஜிப்பிடம் தெளிவான கடப்பாடு இல்லை

13வது பொதுத் தேர்தல் முடிந்து 100 நாட்களாகியும் தேசிய சமரசத்தை ஏற்படுத்த  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெளிவான கடப்பாடு எதனையும் தெரிவிக்கவில்லை  என பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் சொல்கிறார். "தேசிய சமரசத்திற்கு அவர் ஏதும் சொல்வதாகத் தெரியவில்லை. மாறாக  அரசியலில் நெருப்புக்கு வீசிக் கொண்டிருக்கிறார்,"…