சபா மற்றும் சரவாக்கில் டீசல் விலையை லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாகத் தக்கவைக்கும் அரசாங்கத்தின் முடிவை சபா டிஏபி துணைத் தலைவர் சான் புங் ஹின் வரவேற்றுள்ளார். இந்த மானியம் சலுகை அல்ல, மாறாக அங்குள்ள எதார்த்த நிலையையே பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். கோத்தா கினாபாலு நாடாளுமன்ற உறுப்பினரான…
பாஸ் டிஏபியுடன் உறவுகளை முறித்துக்கொண்டதா? குழப்பம்தான் நீடிக்கிறது
பக்கத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சியான டிஏபியுடன் உறவுகளை முறித்துக்கொள்ளும் விவகாரத்தில் பாஸ் தலைவர்கள் பேசும் பேச்சு குழப்பத்தைத்தான் தருகிறது. அண்மையில் நடந்து முடிந்த பாஸ் முக்தாமாரில் பேசியவர்களில் சிலர் பாஸ் இன்னும் பக்கத்தானில்தான் இருக்கிறது என்றும் வேறு சிலர் அது டிஏபியுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியதாக …
இன்னுமொரு பாஸ் தலைவர் பினாங்கு அரசிலிருந்து விலகினார்
பாஸின் முற்போக்குத் தலைவர்களான முகம்மட் சாபு, முஜாஹிட் யூசுப் ராவைத் தொடர்ந்து இன்னொரு தலைவரும் பினாங்கு அரசில் வகித்த வந்த பதவியைத் துறந்துள்ளார். பினாங்கு பாஸ் தகவல் தலைவர் ரொஸிடி ஹுசேன், பினாங்கு இளைஞர் மேம்பாட்டு கார்ப்பரேசன் இயக்குனர் பதவியிலிருந்து வெளியேறினார். பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் …
மகாதிர்: பிரதமர் பதவி விலகி, குற்றமற்றவர் என நிரூபித்து மீண்டும்…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், நஜிப் அப்துல் ரசாக் மீண்டும் பிரதமராவதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தில் எந்தத் தவறும் நிகழவில்லை என்பது நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்குமுன் 1எம்டிபி நிதி விவகாரங்களில் முழு புலனாய்வு நடப்பதற்கு வழி வகுத்து நஜிப் பதவி விலக வேண்டும் …
அம்னோவுடன் தேநீர் அருந்தினால் அவர்களுடன் ஒன்றிணைகிறோம் என்று அர்த்தமல்ல
பாஸ் கட்சியினர் அவர்களின் தலைவர்கள் அம்னோவுடன் கைகோக்க விரும்புகிறார்கள் என்று குற்றஞ்சாட்டக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார் புதிய உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மட். பாஸ் தலைவர்கள் ஜன்ம பகைவர்களான அம்னோவுடன் அமர்ந்து தேநீர் அருந்துவதை வைத்து உறுப்பினர்கள் அவசரப்பட்டு அப்படி ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது என்றாரவர்.…
பாஸ் பினாங்கிலும் சிலாங்கூரிலும் அரசுப் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது
பாஸ் கட்சியின் இரண்டு முக்கிய புள்ளிகள் அரசுப் பதவிகளிலிருந்து விலகியிருக்கலாம். ஆனால், அக்கட்சியில் உள்ள பலர் அவ்விருவரையும் முன்மாதிரியாகக் கொள்ளத் தயாராக இல்லை. முன்னாள் பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுவும் மத்திய செயல்குழு உறுப்பினர் முஜாஹிட் யூசுப் ராவாவும் டிஏபியுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள முக்தாமாரில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு…
அமைச்சரவையில் மாற்றமா?
1எம்டிபி சர்ச்சையால் அம்னோவில் நிலவும் மாறுபட்ட கருத்துகளின் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என்ற ஊகங்களை மூத்த அமைச்சர்களான ஹிசாமுடின் ஹுசேனும், நஸ்ரி அப்துல் அஸிசும் நிராகரித்தனர். இது குறித்து ஹிசாமுடினிடம் கேட்டதற்கு, அவர் சிரித்ததோடு இது போன்ற கூட்டுச் சதித் திட்ட புனைவியல்களுக்கு தாம் இடம்…
நஜிப்: மகாதிருடன் பொதுவில் வாதமிடுவது நன்றாய் இராது
முதல் தடவையாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடந்த வெள்ளிக்கிழமை 1எம்டிபி கலந்துரையாடலில் கலந்துகொள்ளாததற்கான காரணத்தை விளக்கியுள்ளார். அறைக்குள் நடப்பதாக இருந்த கலந்துரையாடல் பொது விவாதமாக உருமாறியதுதான் காரணமாம். ‘ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற தலைப்பிடப்பட்டிருந்த அந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் தாம் பொதுவில் விவாதமிடுவது முறையாகாது …
‘பதவி விலகுங்கள், பினாங்கு விழுகிறதா என்பது தெரிந்து விடும்’- பாஸுக்கு…
பாஸ், அதன் ஆதரவின்றி பினாங்கு அரசு நிலைக்காது என்று கூறுவதை அபத்தம் என்கிறார் தஞ்சோங் எம்பி இங் வை ஏய்க். “பாஸ் பினாங்கு அரசில் உள்ள அதன் உறுப்பினர்களை பதவி விலகச் சொல்லுங்கள். பாஸ் ஆதரவின்றி டிஏபி-பிகேஆர் அரசு விழுகிறதா இல்லையா என்பது தெரிந்து விடும்”, என பினாங்கு …
‘ரோஸ்மா வைத்திருப்பது ரிம820,000 கைப்பை அல்ல’
ரோஸ்மா மன்சூரின் கைப்பையும் ஒர் ஏல விற்பனையில் ரிம820,000-க்கு விற்கப்பட்ட ஹெர்மிஸ் பிர்கின் கைப்பையும் ஒன்றல்ல என அவரின் உதவியாளர் ரிஸால் மன்சூர் கூறினார். அதே போன்ற கைப்பையை ரோஸ்மா வைத்திருப்பதையும் கைப்பை ஏலத்துக்கு விடப்பட்ட நிகழ்வையும் காண்பிக்கும் படம் இணையத்தளத்தில் உலா வந்து கொண்டிருப்பது பற்றி அவர் …
அரசாங்கம் மனிதக் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விடும்
அரசாங்கம் மனிதக் கடத்தல் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து மனிதக் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட திட்டமிடுகிறது. இதன்வழி அமெரிக்க வெளியுறவு அமைச்சின் மனிதக் கடத்தல் மீதான அறிக்கையில் அடுக்கு 3-இல் இடம்பெற்றுள்ள மலேசியா இரண்டாம் அடுக்குக்கு முன்னேற முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மனிதக் கடத்தல் சட்டத்திலும் …
‘நிக் அசீஸ் முக்தாமார் தீர்மானத்தை ஆதரித்திருக்க மாட்டார்’
பக்கத்தான் ரக்யாட்டில் இருப்பதை மறுபரிசீலனை செய்யும் எண்ணம் பாஸின் பழமைவாதிகளிடம் நீண்ட காலமாகவே இருந்து வந்திருப்பதாகக் கூறுகிறார் அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் அஹ்மட் ஆவாங். டிஏபியுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ளும் தீர்மானம் இதற்குமுன்பே டேவான் உலாமா முக்தாமாரில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டிருந்ததாம் ஆனால், பாஸ் ஆன்மிக தலைவர் நிக் அப்துல் …
ரோஸ்மா பெர்மாத்தாவின் புரவலர் மட்டுமே அதன் தொடர்பில் முடிவு செய்பவர்…
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் அரசாங்க நிதியுதவியுடன் நடக்கும் பெர்மாத்தாவின் முன்னேற்றத்துப் பாடுபடுகிறாரே தவிர அது என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்றெல்லாம் முடிவு செய்பவர் அல்லர். பெர்மாத்தாவை நிர்வகிப்பதும் அதன் கொள்கைகள் பற்றி முடிவெடுப்பவர்களும் அரசு அதிகாரிகளே என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம். ரோஸ்மா, நான்கு வயதுக்குக் …
ஆள்குறைப்பை நிறுத்தாவிட்டால் வேலை நிறுத்தம்: எம்ஏஎஸ்-ஸுக்கு எச்சரிக்கை
மலேசிய விமான நிறுவனம் அதன் பணியாளர்களுக்குக் கொடுத்த பணிமுடிப்புக் கடிதங்களை 48-மணி நேரத்தில் மீட்டுக்கொள்ளாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மலேசிய விமானப் பணியாளர் தேசிய சங்கம் (நுபாம்) அறிவித்துள்ளது. அதைக் “கருவிகளைத் தொடாத கண்டன நடவடிக்கை” என்று வருணித்த நுபாம் தலைவர் இஸ்மாயில் நசருடின் அதற்கு மேல் விவரிக்கவில்லை. “பொறுத்திருந்து …
மகாதிர்: ஒரு பொய்யர் கொடுக்கும் 1எம்டிபி புள்ளிவிவரத்தை ஏற்கமுடியவில்லை
1எம்டிபி தலைவரும் செயல்முறை இயக்குனருமான அருள் காந்தா அந்நிறுவனம் வாங்கிய 41.8 பில்லியன் எப்படிச் செயலிடப்படடது என்று கணக்கு கொடுத்திருந்தாஅலும் முன்னாள் பிரதமர் டாகடர் மகாதிர் முகம்மட் அதை நம்பத் தயாராக இல்லை. அருள் பல்வேறு தருணங்களில் பொய் சொல்லியிருப்பதால் அவர் சொல்தில் நம்பிக்கை வரவில்லை என்றாரவர். “1எம்டிபி…
கிட் சியாங்: பொதுவான கொள்கை இல்லை என்றால் பக்கத்தானும் இல்லை
பக்கத்தான் ரக்யாட் பொதுவான கொள்கை இல்லாமலும் கருத்தொற்றுமை காண வகை இல்லாமலும் தொடர்ந்திருக்க முடியாது என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். கடந்த பொதுத் தேர்தலில் பக்கத்தானுக்கு வாக்களித்த மலேசியர்கள் அக்கூட்டணி ஒன்றுபட்டு உழைப்பதில் உறுதியாக இருக்கும் என்று நம்பியே வாக்களித்தனர் என்று லிம்…
பாஸ் இல்லாவிட்டாலும் பக்கத்தான் தேர்தலில் வெல்லும்
சிலாங்கூரில் பாஸ் பக்கத்தான் ரக்யாட் கூட்டணியிலிருந்து விலகி சிலாங்கூரில் ஒரு திடீர் தேர்தல் நடந்தால்கூட பக்கத்தானால் வெல்ல முடியும் என ஒரு என்ஜிஓ-வான குவாசா தலைமைச் செயல் அதிகாரி பிரபா கணேசன். சிலாங்கூரின் பக்கத்தான் அரசு நல்லாட்சி நடத்தியுள்ளது என்று கூறிய பிரபா மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்றார்.…
பிரதமர்: 1எம்டிபி பணச்சலவை செய்ததா? நான் அறியேன்
1எம்டிபி கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் பணச் சலவை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். “பணச்சலவை நடந்திருப்பதாக சில தரப்பினர் குற்றம் சுமத்துவதைத் தலைமைக் கணக்காய்வாளரும் பொதுக் கணக்குக் குழுவும்தான் கண்டுபிடித்துக் கூற வேண்டும். “ஆனால்,…
நஜிப்: என் ‘பெரிய சீர்குலைவு’க்குக் காரணமே மகாதிர்தான்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம்முடைய தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் ’பெரிய சீர்குலைவு’க்குக் காரணமே முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்தான் என்று கூறினார். “துன் குறிப்பிடும் சீர்குலைவு அவரது கைங்கரியதால் ஏற்பட்டது. அவரால் சாடல்களால் எதிரணியினரின் பொய்களையும் அவதூறுகளையும் அப்படியே எடுத்துரைப்பதால் விளைந்தது. “அக்குற்றச்சாட்டுகளை இணையத்தளம் மேலும் …
‘உறவுத் துண்டிப்பு’தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய அன்வார் வேண்டுகோள்
பக்கத்தான் ரக்யாட்டின் நடப்புகளால் கவலையடைந்துள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், அண்மையில் பாஸ் முக்தாமாரில் டிஏபியுடனான உறவுகளைத் துண்டித்துக்கொள்ளக் கொண்டுவரப்ப்பட்ட தீர்மானத்தை பாஸ் மறுசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இன்று பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரன் வழி விடுத்த அறிக்கையில் அன்வார், பாஸ், டிஏபி, பிகேஆர் …
நஜிப்: பாஸுடன் பேச்சு நடத்த அம்னோ தயார்
பாஸ் கட்சி அண்மையில் அதன் கட்சித் தேர்தலில் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ள வேளையில், அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் தம் கட்சி முஸ்லிம்களுக்கு நன்மையளிக்கும் விவகாரங்களை பாஸுடன் விவாதிக்க ஆயத்தமாக இருப்பதாய்க் கூறினார். “மக்களின் நன்மைக்காக புதிய பாஸ் தலைமையுடன் ஒத்துழைப்பது பற்றிப் பேச அம்னோ தயாராகவுள்ளது”, எனப் …
ஹாடியின் சட்டவரைவுக்கு எதிராக தடுப்பாணை பெற நால்வர் முயற்சி
பொதுநலம் கொண்ட நான்கு குடிமக்கள் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள தனி உறுப்பினர் சட்டவரைவை அரசமைப்புக்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரும் மனுவை கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர். மன்சூர் சாஆட், அஸிரா அசிஸ், ஹஸ்பீமபுத்ரா அபு பக்கர், ஹஸ்வானி ஜமாலுடின் ஆகிய …
மாட் சாபு: டிஏபியை வெட்டிவிடுதல் என்பது ஒரு தந்திரம்
கடந்த வாரம் பாஸ் முக்தாமாரில் டிஏபியுடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளபோவதாக வீறாப்புப் பேசியதெல்லாம் கட்சித் தேர்தலில் உயர் பதவிகளை வெற்றி பெறுவதற்காகப் போடப்பட்ட நாடகமாகும் என்று கூறுகிறார் தோல்வியுற்ற முன்னாள் துணைத் தலைவர் முகம்மட் சாபு. கட்சியில் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கிணங்க டிஏபி தலைமையில் செயல்படும் பினாங்கு அரசாங்கத்தில் தாம் வகித்த …
1எம்டிபி வாரியம் பதவி விலகுமாம்
1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்தின் இயக்குனர் வாரியம் ஜூலை மாத வாக்கில் பதவி விலகுமாம். அடையாளம் கூறப்படாத வட்டாரங்களை மேற்கோள்காட்டி தி எட்ஜ் நிதியியல் நாளேடு இவ்வாறு தெரிவித்துள்ளது. இயக்குனர் வாரியத்தைப் பதவிதுறக்கச் சொல்வது யார் அல்லது எந்த அமைப்பு என்பதை அது தெரிவிக்கவில்லை. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் …



