பட்டத்திளவரசர்:கவனம் செலுத்த வேண்டியது 1எம்டிபிமீது, என் மீது அல்ல

புத்ரா  ஜெயா, துணிச்சலாகக்  கருத்துத்  தெரிவிக்கும்  அரச குடும்பத்தாரைக்  கவனித்துக்  கொண்டிராமல் 1எம்டிபி  மீதும்  மற்ற  தேசிய  விவகாரங்கள்மீதும்  கவனம்  செலுத்துவது  நல்லது  என ஜொகூர் பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிம்  வலியுறுத்தினார். “என்னைப்  பயன்படுத்தி 1எம்டிபி-இலிருந்தும்  மற்ற  தேசிய  விவகாரங்களிலிருந்தும்  கவனத்தைத்  திசைதிருப்ப  முயலாதீர். “நாட்டுக்கு …

பெகிரின் சொத்து மதிப்பு ரிம1.185 பில்லியன்

சரவாக்  ஆளுனர்  அப்துல்  ரஹ்மான்  தயிப்  மஹ்மூட்டின் மகன்  மஹ்முட்  அபு  பெகிர்,  தம்  முன்னாள்  மனைவி  ஷானாஸ்  ஏ.மஜித்தின்  கணக்காய்வாளர்  கூறுவதுபோல்  தம்  சொத்தின்  மதிப்பு  ரிம1.185 பில்லியன்தான்  என்பதை  ஒப்புக்கொண்டார். இன்று ஷானாஸின்  வழக்குரைஞர்  ரஃபி  ஷாபி  அவரது  சொத்தின்  மொத்த  மதிப்பு  என்னவென்று  வினவியதற்கு …

டிஏபி எம்பி மகாதிரைச் சாட்சியாக அழைப்பார்

தைப்பிங்  எம்பி  இங்கா  கொர்  மிங், தமக்கெதிராக  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கும்  அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூரும்  தொடுத்துள்ள  வழக்கில்  சாட்சியம்  அளிக்க  முன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகமட்டை  அழைக்கப்போவதாகக்  கூறினார். மகாதிரும்  அவரின்  வலைப்பதிவில்  ரோஸ்மா  பிரதமர்  போன்று  நடந்துகொள்வதாக பலர்  தம்மிடம்  முறையிட்டிருப்பதாக …

ஜிஎஸ்டியால் மக்கள் கூடுதலாகச் செலவிடுவதை நிதி அமைச்சு ஒப்பியது

ரிம2,000-த்துக்குக்  குறைவான  மாத  வருமானத்தைக்  கொண்டவர்கள் வருமானத்தில் ரிம51.89 அல்லது 2.59 விழுக்காட்டைப்  பொருள்,  சேவை வரிக்காகச்  செலவிடுவதை  நிதி  அமைச்சின்  ஆய்வு  ஒன்று  காண்பிக்கிறது. இது, விற்பனை, சேவை  வரி(எஸ்எஸ்டி)  இருந்த  காலத்தில்  அவர்கள் செலவிட்டதைவிடவும்  அதிகமாகும். அப்போது  அவர்கள் வருமானத்தில்  ரிம36.83 அல்லது  1.84 விழுக்காட்டை …

பாஸ் சிசி-இலிருந்த ஒரே முற்போக்காளரும் விலகினார்

பாஸ் கட்சித்  தேர்தலில் வெற்றிபெற்ற  ஒரே  ஒரு  முற்போக்காளரான  மஸ்லான்  அலிமானும் இன்று  மத்திய  செயல்குழுவிலிருந்து  விலகினார். பாஸ்  தலைமையகத்தில், செய்தியாளர்களிடம்  பேசிய மஸ்லான்,  பெல்டாவைக்  கண்காணிக்கும்  என்ஜிஓ-வான  அனாக்-கில்  கவனம்  செலுத்துவதற்காக பதவி  துறந்ததாகக்  கூறினார். ஆனால், அவர்  இன்னமும்  பாஸ்  உறுப்பினர்தான்.  

பணத்தைக் காண்பியுங்கள்: 1எம்டிபி-க்கு மகாதிர் கோரிக்கை

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  1எம்டிபி  அதன்  முதலீடுகளுக்கும்  செலவுகளுக்கும்  ஆவணச்  சான்றுகளைக் காண்பிக்க  வேண்டும்  எனக்  கோரிக்கை  விடுத்துள்ளார். ஆவணச்  சான்றுகளின்றி  அறிக்கைகள்  விடுவது  மட்டும்  போதாது  என்றாரவர். “1எம்டிபி  செய்த  எல்லா  முதலீடுகளுக்கும், செலவுகளுக்கும்  ஆதாரம்  தேவை. “ஆனால், மின்  ஆலைகள்  வாங்கியது,  கோலாலும்பூரில்…

நஸ்ரி: ஹுடுட் சட்டவரைவுக்கு பேரரசர் அனுமதி தேவை

பேரரசரின்  அனுமதியின்றி பாஸ்  தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின்  ஹுடுட்  சட்டவரைவை மக்களவையில்  விவாதிக்க  முடியாது. சமயம்  தொடர்பான  எந்தவொரு  சட்டவரைவையும்  நாடாளுமன்றத்தில்  கொண்டுவர  ஆட்சியாளர்கள்  மன்றத்தின் ஒப்புதல்  தேவை  எனப் பண்பாட்டு, சுற்றுலா  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  கூறினார். “கூட்டரசு  நிலையில்  ஆகோங்-தான்  இஸ்லாத்தின்  தலைவர்.…

தோற்றுப்போன பாஸ் தலைவர்கள் அம்னோவின் வீழ்ச்சியைக் காண விரும்புகிறார்கள்

பாஸ் கட்சித்  தேர்தலில்  தோற்றுப்போன  முற்போக்காளர்களும்  அவர்களின்  ஆதரவாளர்களும் நேற்றிரவு  ஒரு நிகழ்வில்  கலந்துகொண்டபோது  அனைவருமே  அம்னோவை  வீழ்த்த  வேண்டுமென  முழக்கமிட்டனர். கோலாலும்பூரில்  நடைபெற்ற  அந்நிகழ்வில்  பேசிய பாஸ்  முன்னாள்  துணைத் தலைவர்  முகம்மட்  சாபுவும்  மற்றவர்களும்  அடுத்த  பொதுத்  தேர்தலில்  அம்னோ  வெற்றி பெறுவதை  எவ்வகையிலும்  தடுக்க …

1எம்டிபி பற்றி அம்னோவுக்கு விளக்கும் பிரதமர் நாடாளுமன்றத்திடம் விளக்கமளிக்காதது ஏன்?

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று  அம்னோ  தொகுதித்  தலைவர்களுக்கு 1எம்டிபி  பற்றி  விளக்கமளிப்பார்  என்று  சண்டே  ஸ்டாரில்  ஒரு  செய்தி வெளிவந்திருக்கிறது. அச்செய்திமீது  கருத்துரைத்த டிஏபி  பெருந் தலைவர்  லிம்  கிட்  சியாங்,  சர்ச்சைக்குரிய  1எம்டிபி  பற்றி  அம்னோ  தொகுதிகளின்  பிரதிநிதிகளிடம்   விளக்கமளிக்கத்  தயாராக  உள்ள  பிரதமர் …

ரிங்கிட்டின் சரிவுக்கு மகாதிரே காரணம்: அஹ்மட் மஸ்லான் குற்றச்சாட்டு

ரிங்கிட்  கடந்த  ஒன்பதாண்டுகளில்    மிக  மோசமான  அளவுக்கு  மதிப்புக்  குறைந்திருப்பதற்கு  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்மீது  குறைகூறி வருவதுதான்  காரணமாம். இவ்வாறு  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  தெரிவித்ததாக  உத்துசான்  மலேசியாவின்  வார இறுதிப்  பதிப்பான  மிங்குவான்  மலேசியா  அறிவித்துள்ளது. இவ்வாரம்  டாலருக்கு …

பிகேஆர் இளைஞர் தலைவர், ஆனால் அரசியலில் விருப்பமற்றவர்

மெலிஸா   சசிதரன் ஜோகூரைச்  சேர்ந்த  ஓர்  இளம்  வழக்குரைஞர். அரசியலில்  பெரிதாக  ஆர்வம்  இருந்ததில்லை. அரசியல்  கட்சியில்  சேரும்  எண்ணம்  இருந்ததே  இல்லை. “13வது  பொதுத்  தேர்தலில்  தேர்தல்  முகவராக  இருந்தேன். அவ்வளவுதான்  நம் அரசியல். அதற்குமேல் போவதில்லை  என்பதுதான்  என்  முடிவாக  இருந்தது. “அரசியல்  விழிப்புணர்வு  இருந்தாலும் …

சொல்வதை முகத்துக்கு நேராக சொல்லுங்கள்: இணையப் பயனர்களுக்கு நஸ்ரி சவால்

துணிச்சலாக  பேசும் குணமுள்ளவரான பண்பாட்டு, சுற்றுலா  அமைச்சர்  முகம்மட்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்,  சமூக  வலைத்தளங்களில்  ஒளிந்துகொண்டு தம்மைக்  குறைகூறுவோரை  நேருக்கு  நேர்  வந்து  பேசுமாறு  அறைகூவல்  விடுத்துள்ளார். “டிவிட்டரோ  முகநூல்  பக்ககோ  இல்லாத  ஒரே அமைச்சர்  நானாகத்தான்  இருப்பேன். “முகநூலில்  எனக்கு  நம்பிக்கை. நேருக்கு நேர்  பேசுவதில்தான் …

‘மாற்றத்தைக் கொண்டுவரும் மாவீர’ரை வரவேற்கிறது டிஏபி

தேசிய  இலக்கியவாதி  ஏ.சமட் இஸ்மாயில் இப்போது  டிஏபி உறுப்பினர்  என்பதை  லிம்  கிட்  சியாங்  இன்று  அறிவித்தார். கிளந்தான், குவா  மூசாங்கில்  நடைபெற்ற  ஒரு  நிகழ்வில்  80-வயது  கவிஞரிடம்  அவரின்  உறுப்பினர்  அட்டையை  வழங்கிய  லிம்,  அவரை "Perwira Ubah" (மாற்றத்தைக்  கொண்டுவரும்  மாவீரர்)  என்றும்  வருணித்தார்.

டிஏபி சீனர்களின் கட்சி என்ற முத்திரையை உடைக்க பாக் சமட்…

தேசிய  இலக்கியவாதியான  ஏ. சமட்  சைட்  டிஏபி-இல்  சேர்ந்தது, டிஏபி  சீனர்களின் கட்சி  என்ற  முத்திரையை உடைப்பதற்கான  அக்கட்சியின்  முயற்சிகளுக்குப்  பெரிதும்  உதவியாக  இருக்கும். இதனைத்  தெரிவித்த அரசியல்  நோக்கர்  வான் சைபுல்  வான்  ஜான்,  அதற்காக  மலாய்க்காரர்கள்  டிஏபி-க்குள்  சென்று  குவிந்து விடப்போவதில்லை  என்றும்  குறிப்பிட்டார். ஆனாலும் …

அமைச்சர்: ஷா ஆலம் அதிரடிச் சோதனை ‘இனவாதமிக்கது’அல்ல

உள்நாட்டு  வாணிக, பயனீட்டாளர்  விவகார  அமைச்சர்  ஹசன்  மலேக், ஷா ஆலம்  குடியிருப்புப் பகுதியில்  அதிகாரிகள்  நடத்திய  அதிரடிச்  சோதனை  இனவாத  நோக்கத்துடன்  மேற்கொள்ளப்பட்டதாகக்  கூறப்படுவதை  மறுக்கிறார். அமைச்சு  வேண்டுமென்றே  மலாய்க்காரர்கள்  நிறைய  வசிக்கும்  அப்பகுதியைத்  தேர்ந்தெடுத்து  போலிப்  பொருள்களையும் ஜிஎஸ்டி-மீறல்களையும்  கண்டுபிடிப்பதற்கான  அந்த  அதிரடிச்  சோதனையை  நடத்தியுள்ளது …

முகைதினையும் ஷாபியையும் விலக்குவது நஜிப்புக்குத்தான் ஆபத்து

துணைப்  பிரதமர்  முகைதின் யாசினையும்  புறநகர், வட்டார  மேம்பாட்டு அமைச்சர்  ஷாபி  அப்டாலையும்  அமைச்சரவையிலிருந்து  வெளியேற்றுவது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்க்குத்தான்  ஆபத்தாக  முடியும்  என  எச்சரிக்கிறார்கள்  அரசியல்  ஆய்வாளர்கள். “நஜிப்  முகைதினையும்  ஷாபியையும்  விலக்குவது  அவர்  தமக்குத்  தாமே  எதிர்ப்பை  உருவாக்கிக்கொள்வதாக  அமையும். அவ்விருவரும்,  வேறு  வழியின்றி…

விளையாட்டாளர்களைக் குறை சொல்லாதீர்: குறைசொல்வோர்மீது கைரி பாய்ச்சல்

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை  ஃபாரா  என்  அப்துல்   ஹாடி-யைத்  தற்காக்க  முன்வந்த  இளைஞர், விளையாட்டுத்  துறை  அமைச்சர் கைரி  ஜமாலுடின், பார்க்க  வேண்டியது  விளையாட்டாளர்களின்  சாதனையைத்தானே  தவிர  உடையை  அல்ல  என்று  குறைகூறுவோரைச்  சாடினார். “ஜிம்னாஸ்டிக்  போட்டியில்  ஃபாரா  நீதிபதிகளையே  வியக்க  வைத்து  நாட்டுக்குத்  தங்கப்  பதக்கம்  பெற்றுத்  தந்துள்ளார்.…

மகாதிர்: 1எம்டிபியின் அருள் பொய் சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும்

  1எம்டிபி நிறுவனம் பற்றி தாம் கூறியது பொய்யா என்பதை நிர்ணயிப்பது மகாதிரின் வேலைஅல்ல என்று அந்நிறுவனத்தின் தலைவரும் செயல்முறை இயக்குநருமான அருள் கந்தா கந்தசாமி கூறிய போதிலும், அவர் பொய் கூறியது மக்களுக்கு தெரிந்ததுதான் என்று மகாதிர் கூறினார். "அவர் பொய் சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும்.…

அமைச்சரவை மாற்றமெல்லாம் இல்லை என்கிறார் நஸ்ரி

சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  அமைச்சர்  முகம்மட்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்,  ஹரி  ராயாவுக்குப்  பின்னர்  அமைச்சரவை  திருத்தி  அமைக்கப்படலாம் என்று  கூறப்படுவதை  நிராகரித்தார். அதற்கான  அறிகுறி  எதுவும்  இல்லை  என்றாரவர். “அதற்கான  வாய்ப்பில்லை.  பிரதமர்  எந்த  நேரத்திலும்  அது  பற்றிப்  பேசியதில்லை. “இன்றைய  அமைச்சரவைக்  கூட்டத்தில்கூட  அதற்கான  அறிகுறி …

என்எஸ்டி: அமைச்சரவை மாற்றம் நிகழலாம்

ஹரி  ராயாவுக்குப்  பின்னர்  அமைச்சரவை  திருத்தி  அமைக்கப்படலாம்  என  அம்னோ  தொடர்புடைய  நியு  ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ்,  பெயர்  குறிப்பிடப்படாத   வட்டாரங்களை  மேற்கோள்காட்டி  அறிவித்துள்ளது. பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  1எம்டிபி  குளறுபடிகளைக்  குறைகூறும்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினை  அமைச்சரவையிலிருந்து  வெளியேற்றுவார்  என்ற  ஊகம்  பரவிவரும்  வேளையில்  இச்செய்தி …

அஸ்மின்: சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படாது

பாஸ்- டிஏபி பிரச்னைகளின்  காரணமாக  சிலாங்கூர்  சட்டமன்றம் கலைக்கப்படும்  சாத்தியம்  இருப்பதாகக்  கூறப்படுவதை  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  மறுத்தார். அவற்றின்  பிரச்னையைத்  தீர்ப்பதற்கு  முயற்சிகள்  நடப்பதாக அவர்  சொன்னார். பிகேஆர்  துணைத்  தலைவருமான  மந்திரி  புசாரிடம், பக்கத்தான்  ரக்யாட்டை  ஆட்டிப்படைக்கும்  நெருக்கடிக்குத் தீர்வுகாண  அவர்  எப்போது  டிஏபி-யையும் …

பிஏசி-இன் 1எம்டிபி விசாரணை: நேரடி ஒளிபரப்பில்லை

பொதுக் கணக்குக் குழு, 1எம்டிபி-இடம்  நடத்தும்  விசாரணையை  நேரடி  ஒளிபரப்பு  செய்ய  வேண்டும்  என்ற  பரிந்துரைக்கு  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  அனுமதி அளிக்க  மறுத்து  விட்டார். நாடாளுமன்றக்  குழுக்களில்   விவாதிக்கப்படுவதை  நேரடி  ஒளிபரப்புச் செய்வதை  நிலை ஆணை 85  தடுக்கிறது  என்று  பண்டிகார்  கூறினார். குழுவிடம்…

பாஸ் ஜெலுபு தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறினர்

ஜெலுபு  பாஸ்  தலைவர்கள்  ஐவர்  பதவி  துறப்பதாகவும்  கட்சியிலிருந்து  வெளியேறுவதாகவும்  அறிவித்துள்ளனர். இஸ்லாமியக்  கட்சியின்  அண்மைய நடப்புகளால், குறிப்பாக  கட்சித்  தேர்தலில்   உலாமா  அணியிடம்  முற்போக்காளர் அணி  கிட்டதட்ட  முற்றாக  தோல்வி அடைந்ததன்  விளைவாக,  அவர்கள் இம்முடிவுக்கு வந்துள்ளனர். “புதிய  பாஸ்  தலைமையிடம்  எங்களுக்கு  நம்பிக்கை  இல்லை”, என…