WSJ செய்திக்கு பிரதமர் பதிலளித்தே ஆக வேண்டும்

1எம்டிபி பணம்  13வது பொதுத்  தேர்தல் பரப்புரைக்குப்  பயன்படுத்திகொள்ளப்பட்டதாகக்  கூறும்  வால்  ஸ்திரிட் ஜர்னல் (WSJ) செய்தி  குறித்து  பிரதமர் மெளனமாக  இருக்க  முடியாது  என்கிறார்  டிஏபி  பெருந் தலைவர்  லிம்   கிட்  சியாங். “அச்செய்திக்குப் பிரதமரும்  பிரதமர்  அலுவலகமும்  பதிலளிக்காமல்  இருப்பது  பிரதமரின்  நம்பகத்தன்மைக்கு மட்டுமல்ல  அனைத்துலக …

அசிஸ் பாரி: இளவரசர்களும் தேச நிந்தனைச் சட்டத்திற்கு உட்பட்டவர்களே

  ஜொகூர் மாநிலம் மலேசியாவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று கோருபவர்களுக்கு தேச நிந்தனைச் சட்டம் 1948 லிருந்து விலக்கு ஏதும் அளிக்கப்படவில்லை என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி கூறினார். சாபாவும் சரவாக்கும் பிரிந்து செல்ல வேண்டும் என்று கூறியவர்களுக்கு எதிராக போலீஸ் மேற்கொண்ட…

1எம்டிபி பணத்தை நஜிப் தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொண்டாரா?

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  1எம்டிபி நிதிகளை  13வது  பொதுத்  தேர்தல் பரப்புரைக்குப்  பயன்படுத்திக்  கொண்டதாக  வால் ஸ்திரிட்  ஜர்னல் (WSJ) செய்தி வெளியிட்டிருக்கிறது. 2012-இல்  கெந்திங் குழுமத்திடமிருந்து  மின்  உற்பத்தி  நிலையம் ஒன்று  அதிக  விலைக்கு  வாங்கப்பட்டதாம். அதன்பின்னர்  கெந்திங்,  நஜிப்பின்  கட்டுப்பாட்டில்  இருந்த  ஒரு  அற…

சிருலை மலேசியாவுக்குக் கொண்டுவர இன்னும் மனுச் செய்யவில்லை

போலீஸ்  அதிரடிப் படையின்  முன்னாள்  உறுப்பினர்களான  சிருல்  அஸ்ஹார்  உமருக்கும்  அஸிலா ஹட்ரிக்கும்  தூக்குத்  தண்டனை விதித்து  ஆறு  மாதங்கள்  ஆகின்றன. ஆனால், ஆஸ்திரேலியாவுக்குத்  தப்பியோடிய  சிருலை  அங்கிருந்து  அழைத்துவர  மலேசிய  அரசாங்கம்  இதுவரை  விண்ணப்பம்  எதுவும்  செய்து  கொள்ளவில்லையாம். கொல்லப்பட்ட  அல்டான்துன்யா  ஷரிபூ-வின்  தந்தையாரின்  வழக்குரைஞர்  ராம் …

‘அன்வார் வெளிநாட்டு ஊடகங்களை நாடியபோது ஆத்திரப்பட்டாரே டாக்டர் மகாதிர்’

துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  தூக்கப்பட்டபோது அன்வார்  இப்ராகிம்   தம்  மனக்குறைகளை  வெளிநாட்டு  ஊடகங்களிடம்  வெளியிட்டார்  என்பதற்காக அப்போதைய  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  அவர்மீது  மிகவும்  ஆத்திரமடைந்ததாக  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  அனுவார்  மூசா  கூறினார். ஆனால், அதே  மகாதிர்  இப்போது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  கொண்ட …

‘சீர்திருத்தம் பேசும்’ பண்டிகார் ஏன் பங்கை அடக்கி வைக்கவில்லை?

புதன்கிழமை  நாடாளுமன்றத்தில்  “கொலை மிரட்டல்”  விடுத்த  கினாபாத்தாங்கான் எம்பி பங்  மொக்தார் ரடின்மீது மக்களவைத்  தலைவர்  நடவடிக்கை  எடுத்திருக்க  வேண்டும். பங்  மொக்தார் தம்  வீட்டுக்கு  முன்புறத்தில்  நடந்த  ஆர்ப்பாட்டம்  பற்றி  நாடாளுமன்றத்தில் பேசியபோது விடுத்த  அம்மிரட்டல்  குறித்துக்  கருத்துரைத்த    பல  வழக்குரைஞர்கள்  இவ்வாறு  தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரரகள்  தம்  குடும்பத்தாருக்குத் …

மூன்றாவது திருமணம் நீண்ட காலம் நிலைத்திருக்கலாம்

2001-இல், டிஏபி  தீர்க்க முடியாத  கருத்து  வேறுபாடுகள்  நிலவுவதாகக்  கூறி  பாஸ் கட்சியுடன்  உறவுகளைத்  துண்டித்துக்  கொண்டது. பதினான்கு  ஆண்டுகளுக்குப்  பின்னர்  இரண்டாவது  திருமணமும்  அதே  காரணங்களால் முறிந்து  போனது. பாஸும்  டிஏபி-யும்  ஒன்று  மற்றொன்றின்  கொள்கைகளுடன்  ஒத்துப்போக  முடியாது.  ஆனாலும்,  அவற்றுக்கிடையே விரும்பவும்  முடியாத  வெறுக்கவும்  முடியாத …

எம்டி ஒர்கிம் ஹார்மனி-இன் 22 பணியாளர்களும் விடுவிக்கப்பட்டனர்

எண்ணெய்த் தாங்கிக்  கப்பலான எம்டி ஒர்கிம் ஹார்மனி-இன்  22  பணியாளர்களும்  இன்று  அதிகாலை  மணி 2.30க்கு  விடுவிக்கப்பட்டனர். மலேசிய கடற்படை  கடத்தல்காரர்களுடன்  பேச்சு  நடத்தியதை  அடுத்து  பணியாளர்கள்  அனைவரும் விடுவிக்கப்பட்டதாக  மலேசிய  கடலோர  அமலாக்க  நிறுவனத்  துணைத்  தலைவர்  அஹ்மட்  பூசி  கூறினார். இதனிடையே, கடத்தல்காரர்கள்  கப்பலில்  இருந்த …

பிகேஆர்-பாஸ் ஒத்துழைப்புப் பற்றிக் கருத்துரைக்க டிஏபி மறுப்பு

டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங், சிலாங்கூரிலும்  கிளந்தானிலும்  பாஸ்- உடன்  ஒத்துழைக்கும்  பிகேஆரின்  முடிவை  டிஏபி  ஏற்கிறதா அல்லது  நிராகரிக்கிறதா   என்பது  குறித்து  கருத்துரைக்க  மறுத்தார். பக்கத்தான்  ரக்யாட்  செத்துவிட்டது  என  டிஏபி  தெளிவாகவே  கூறியிருக்கிறது  என்று  குறிப்பிட்ட  லிம்,  ஆனால்  அது  பிகேஆருடனும்  ஒத்த …

பேராக்கில் ஆட்சிக்கவிழ்ப்பு எதிர்ப்பாளர்களுக்கு அரச மன்னிப்பு

பேராக்  சுல்தான்  நஸ்ரின்  ஷா,  அம்மாநிலத்தில் 2009-இல்  ஆட்சிக்கவிழ்ப்பை  எதிர்த்து  ஆர்ப்பாட்டம்   நடத்தியதற்காக  சிறையிடப்பட்ட  11 சமூக  ஆர்வலர்களுக்கு அரச  மன்னிப்பு  வழங்கினார். சிறையிடப்பட்டவர்களில்  ஒருவரான  பத்  லத்திப்  மன்சூரின்  துணைவி,  நஷிடா முகம்மட்  நூர்  இதைத்  தெரிவித்தார். “தாப்பா  சிறையில்  உள்ளவர்களுக்கு  பேராக்  சுல்தானும்  பேராக்  மன்னிப்பு …

உள்துறை அமைச்சு: அன்வாருக்கு வரும் கடிதங்களைத் தடுப்பதில்லை

சிறையில்  உள்ள  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  வரும்  கடிதங்கள் தடுக்கப்படுவதாகக்  கூறப்படுவதை  உள்துறை  அமைச்சு  மறுத்துள்ளது. அன்வார்,  பிப்ரவரி 10-இல்  அவர்  சிறையிடப்பட்டதிலிருந்து  இதுவரை  சுங்கை  பூலோ  சிறைச்சாலைக்கு  எதிராக  எந்தப்  புகாரும்  செய்ததில்லை  எனவும்  அமைச்சு  இன்று  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தது. “சிறைக்கு  வெளியில்  உள்ள  சில …

1எம்டிபி இரகசியக் காப்புச் சட்டத்தின் பின்னால் பதுங்கிக் கொள்வதாக மகாதிர்…

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட், முதலீட்டு  நிறுவனமான  1எம்டிபி  தம்  குறைகூறல்களிலிருந்து  தப்பிக்க  “அரசாங்க இரகசியச் சட்ட”த்தின்  பின்னே  ஒளிந்து  கொள்கிறது  எனச்  சாடியுள்ளார். “என்னுடைய  எல்லாக்  குறைகூறல்களையும்  தவறு  என்கிறது  1எம்டிபி. ஆனால், அதற்குச்  சான்றுகள் எதையும் காண்பிக்கவில்லை. கேட்டால் அது அரசாங்க இரகசியம்  என்று …

நஜிப்புக்கு எதிரான வழக்கை விசாரணைக்குக் கொண்டுவர பாலாவின் துணைவியார் மீண்டும்…

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக், அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்  ஆகியோர்மீதும்  மேலும்  எழுவர்மீதுமான    ரிம1.9மில்லியன்  இழப்பீட்டு  வழக்கை விசாரணைக்கு  ஏற்க  வேண்டும்  என  பி.பாலசுப்ரமணியத்தின்  விதவை மனைவி  கூட்டரசு  நீதிமன்றத்தில்  மனு  செய்துள்ளார். அந்த  வழக்கை  நிலைநிறுத்த  ஏ.செந்தமிழ்ச்  செல்விக்கும்  அவரின்  இரண்டு  பிள்ளைகளுக்கும்  இதுவே இறுதி…

அருள் ஓர் அசாதாரணமான பொய்யர், புவா கூறுகிறார்

முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் 1எம்டிபி தலைவரான அருள் கந்தா கந்தசாமியை ஒரு பொய்யர் என்று வர்ணித்திருந்தார். அவரை விட ஒரு படி மேலே சென்று அருளை ஓர் "அசாதாரணமான பொய்யர்" என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா இன்று கூறினார். 1எம்டிபி நிதி…

‘செக்ஸி’ பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்க பங்கின் வீடு நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள்…

கினாபாத்தாங்கான்  எம்பி  பங்  மொக்தார்  ரசினின் ‘செக்ஸி’  கருத்துகளால்  ஆத்திரமடைந்த  தரப்பினர்  அம்பாங்கில்  உள்ள  அவரின்  வீட்டுக்குமுன் கூடி  ஆர்ப்பாட்டம்  செய்வதற்கு  விரைந்து  கொண்டிருக்கிறார்கள். இன்று  காலை  நாடாளுமன்றத்துக்கு  வெளியில்  கூடி  கண்டனம்  தெரிவித்த  அவர்கள்  அங்கிருந்து  அவரின்  வீட்டை  நோக்கிப்  படையெடுத்தனர். “நேராக  பங்  மொக்தாரின்  வீட்டுக்குத்தான் …

இரகசியங்களை வெளியிடாதீர்: அரசு அதிகாரிகளுக்குப் பிரதமர் அறிவுறுத்து

அரசாங்க  இரகசியங்களை  வெளியிடக் கூடாது  எனப்  பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்  அரசாங்க  அதிகாரிகளைக்  கேட்டுக்கொண்டார். இன்று  புத்ரா  ஜெயா  மாநாட்டு  மையத்தில்  உரையாற்றிய  பிரதமர், அண்மையில்  சில  இரகசியங்கள் “கசிந்திருப்பதாக”க்  கூறினார். “கடந்த  சில  நாள்களாக  பல  இரகசியங்கள்  வெளியாகியுள்ளன. அதனால்  அரசாங்க  இரகசியங்களைத்  தயவு  செய்து …

அமைச்சரும் இளவரசரும் சர்ச்சையை நிறுத்த வேண்டும்

ஜோகூர்  பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிமும்  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீசும்  சர்ச்சையிடுவதை  நிறுத்த  வேண்டும்  என  அம்னோ  உச்சமன்ற உறுப்பினர்  ஒருவர்  கோரிக்கை விடுத்துள்ளார். “இருவரும் இதற்கு  ஒரு  முடிவுகட்டும்  தருணம்  வந்து விட்டது”, என  ரிஸால்  மரைக்கான்  நைனா  மரைக்கான்  கூறினார். “ஒருவரை  மற்றவர் …

பிரதமரின் சகோதரர் புதிய கட்சி தொடங்கப் போகிறாராம்

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  இளவல், நாசிர்  அப்துல்  ரசாக்  எல்லா  இனங்களையும்  உள்ளடக்கி  ஒரு  புதிய  கட்சியைத் தொடங்க  விருப்பதாக  ஏசியா  செண்டினல்  அறிவித்துள்ளது. அப்புதிய  கட்சி,  நாட்டைப்  பிளவுபடுத்தும்  இன  அரசியலை முடிவுக்குக்  கொண்டுவரும்  நோக்கத்தைக்  கொண்டது  என   அச்  செய்தி  கூறியது. கட்சியை  வழிநடத்த …

பிகேஆரில் பக்கத்தான் ‘சாவு’ பற்றிப் பேசத் தடை

பிகேஆரின்  அரசியல்  பிரிவு  பக்கத்தான் ரக்யாட்டிலிருந்து  வெளியேறும்  டிஏபி  முடிவு  பற்றி இன்றிரவு  விவாதிக்கும்வரை  கட்சியில்  வேறு  யாரும் அது  பற்றிப்  பேசக்கூடாது  என்று  பிகேஆர்   தடை  விதித்துள்ளது. அம்முடிவின்மீது கட்சித்  தலைமை  நாளைக்குள் தனது  நிலைப்பாட்டை  அறிவிக்கும்  என  அதன்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  தெரிவித்தார்.…

‘பக்கத்தான் சாகவில்லை, உயிருடன்தான் இருக்கிறது’

எதிரணித்  தலைவர்களில் பலர்  பக்கத்தான்  ரக்யாட்  ஓர்  அரசியல்  சக்தியாக  தொடர்ந்து  நிலைபெற்றிருப்பதைக்  காணவே  விரும்புகின்றனர். பக்கத்தான்  கதை  முடிந்ததாக  லிம்  குவான்  எங்  அறிவித்த  சில  நிமிடங்களிலேயே  பாஸ், பிகேஆர்  தலைவர்கள் பக்கத்தான்  என்று  சொல்லவே  பெருமையாக  இருக்கிறது  என்றும்  தாங்கள்  இன்னமும்  அக்கூட்டணியில்தான்  இருப்பதாகவும்  கூறிக்கொண்டனர்.…

பிஎன் ‘பரப்புரை’ பிரிவுகளை ஒழித்துக்கட்டுவீர்: டிஏபி வலியுறுத்து

டிஏபி எம்பிகள்  பலர், தேசிய  குடிமையியல்  பிரிவையும் (பிடிஎன்) சிறப்பு  விவகாரப்  பிரிவையும்(ஜாசா)  ஒழித்துக்கட்ட  வேண்டும்  எனக்  கோரிக்கை  விடுத்துள்ளனர். “அரசியல் நோக்கத்திற்காகவே  அவை  உருவாக்கப்பட்டன  என்பது  தெளிவு, ஜாசாவுக்கு  ஆண்டுக்கு  ரிம21.7 மில்லியன்  ஒதுக்கீடு  செய்யப்படுகிறது. அவ்விரண்டு  பரப்புரை  பிரிவுகளுக்காகவும் ஆண்டுக்கு  ரிம80 மில்லியன்  செலவிடப்படுகிறது. “இனவாதம் …

‘மகாதிர்தான் என் தந்தையைப் பயன்படுத்திக் கொண்டார்’-காலஞ்சென்ற சுல்தானின் புதல்வர்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட், காலஞ்சென்ற  ஜோகூர்  ஆட்சியாளர் சுல்தான்  இஸ்கண்டார்  சுல்தான்  இஸ்மாயிலைப் பயன்படுத்தி  உச்ச  நீதிமன்றத் தலைவராக  இருந்த  நீதிபதி  சேலே  அப்பாஸை, 1988-இல்  பதவியிலிருந்து  வெளியேற்றினாராம். காலஞ்சென்ற  ஜோகூர்  சுல்தானின்  மகன்  துங்கு  அப்துல்  மஜிட்  இட்ரிஸ் இஸ்கண்டார்  முகநூலில்  இவ்வாறு  கூறினார்.…

ஜோகூரில் இன்று இளவரசர்- ஆதரவு பேரணி

ஜோகூர்  பட்டத்திளவரசருக்கும்  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீசுக்குமிடையில்  சர்ச்சை  வலுத்துவரும்  வேளையில் இளவசரருக்கு  ஆதரவு  தெரிவிக்கும்  பேரணி  ஒன்றுக்கு இன்று  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. அப்பேரணி  மாலை  மணி  4-க்கு  புக்கிட்  செரேன்  அரண்மனையில்  நடைபெறும். சுல்தான்  இப்ராகிம்  சுல்தான்  இஸ்கண்டாருக்கும்  சுல்தான்  குடும்பத்துக்கும்  அன்பையும்  ஆதரவையும்  தெரிவிக்கத்  திரண்டு…