ஜோகூர் இளவரசரைத் தற்காக்கிறார் ‘Nothing2Hide’ ஏற்பாட்டாளர்

அரசியல்வாதிகள்  முதலில்  மக்களுக்குச்  சேவை  செய்ய   வேண்டும்  என்று  ஜோகூர்  பட்டத்திளவரசர்  கூறியிருப்பதை  ஜோகூர்  அம்னோ  இளைஞர்  துணைவர்  கைருல் அன்வார்  ரஹ்மாட் வரவேற்கிறார். “இஸ்லாம்  நம் கருத்துகளையே  வெறித்தனமாக  பற்றிக்  கொண்டிருக்க  வேண்டும்  என்றோ  மற்றவர்களின்  கருத்துகளுக்கெதிராகக்  கண்ணை  மூடிக்கொள்ள  வேண்டும்  என்றோ  சொல்லவில்லை. “நற்பேறும்  நிறைவளமும் …

சிறுநீர் விவகாரம் தொடர்பில் கூறப்படும் சாக்குப்போக்குகளை ஏற்பதற்கில்லை

சுங்கைப் பட்டாணியில்  மூத்த  ஆசிரியர்  ஒருவர் முஸ்லிம்- அல்லாத மாணவர்களை நோன்பு மாதத்தில் தண்ணீர் அருந்துவதென்றால் கழிப்பறையில் சென்று அருந்தும்படியும், கழிப்பறையில் நீர் அருந்தும்பொழுது சிறுநீரை அருந்திவிடாதீர்கள் என்றும் முட்டாள்தனமாகக்  கூறி  வைத்ததைச்  சமூக  வலைத்தளங்களில்  பெரும்பாலோர்  கண்டித்துள்ளனர். கெராக்கான்  உதவித்  தலைவர்  ஏ.கோகிலன்  பிள்ளை  ஆசிரியருக்கு  எதிராகக் …

மாரா ஊழல்மீது ஆஸ்திரேலிய போலீசார் நடவடிக்கை

ஆஸ்திரேலியாவில் சொத்துகள்  வாங்கியதில்  ஊழல்கள் நிகழ்திருப்பதாகக்  கூறப்படுவதன்மீது  அந்நாட்டுப்  போலீசார்  அதிரடிச்  சோதனைகளை   நடத்தி  வருவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று  காலை  மெல்பர்ன், வெர்மண்ட்  சவுத்-இல்  உள்ள  ஒரு  வீட்டைச்  சோதனையிட்ட  அதிகாரிகள்  விசாரணைக்கு  உதவியாக கணினிகளையும்  கோப்புகளையும்  கைப்பற்றியதாக  ஆஸ்திரேலிய  நாளேடான  த  எஜ்  கூறியது. ஆஸ்திரேலிய  போலீசார்…

விரைவில் வருகிறது அனைவருக்குமான புதிய இஸ்லாமிய கட்சி

புதிய  இஸ்லாமியக்  கட்சி  ஒன்று  விரைவில்  உருவாகலாம். அதன்  போராட்டத்தை  ஏற்றுக்கொள்ளும்  அனைவருமே  அதில் உறுப்பினராகலாம். பாஸைப்  போல் அல்லாது  புதிய  கட்சியின் நோக்கங்கள்  ஊழலை  எதிர்ப்பது,  நீதிக்காகப்  போராடுவது  போன்று  வாழ்வியல் சம்பந்தப்பட்டவையாக  இருக்கும். ஆனாலும், இஸ்லாமிய  கோட்பாடுகளின்  அடிப்படையில்தான்  அக்கட்சி  செயல்படும்  என  பாஸ்  எம்பி …

யாப்:பள்ளியில் சிலுவையை அகற்ற முடியாது

கல்வி  துணை  அமைச்சர்  மேரி  யாப்,  சாபா  தொடக்க நிலைப் பள்ளி  ஒன்றில் இருக்கும்  சிலுவையை  அகற்ற  வேண்டும்  என்ற  கோரிக்கைக்கு  முடியாது  என்று  திட்டவட்டமாகக்  கூறி  விட்டார். “சிலுவை  அங்கேதான் இருக்கும்”, என்றவர்  சொன்னதாக  சாபாவில்  வெளிவரும்  டெய்லி  எக்ஸ்பிரஸ்  கூறிற்று. இதில்  சம்பந்தப்பட்ட  பள்ளி  சண்டகானில்…

மாரா மேலும் இரண்டு துணை நிறுவனங்களைக் கண்காணிக்கிறது

மாரா, மாரா இன்க்  தவிர  மேலும்  இரண்டு  வணிக துணை நிறுவனங்களிலும்  முறைகேடுகள்  நிகழ்ந்திருக்கும்  சாத்தியத்தை  ஆராய்ந்து  வருவதாக  அதன்  தலைவர்  அனுவார்  மூசா  கூறினார். ஆனால், அந்நிறுவனங்களின்  பெயர்களை  அவர்  வெளியிடவில்லை. “இரண்டு  துணை  நிறுவனங்கள்  வணிக  நடவடிக்கைகளில்  தீவிரமாக  ஈடுபட்டு  வருகின்றன. மாரா  மன்றம் அவற்றைக் …

மன்னிப்பு வாரியம் முடிவை மறுஆய்வு செய்ய அன்வார் கோரிக்கை

அன்வார்  குடும்பத்தார், அவர்களின்  கோரிக்கையை  நிராகரித்த  மன்னிப்பு  வாரியம்  அதன்  முடிவை  மறு ஆய்வு  செய்ய  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்ளும்  மனுவை  இன்று  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  பதிவு செய்தனர். சட்டத்துறை  தலைவர்(ஏஜி)  அப்துல் கனி  பட்டேய்ல்  அன்வாரின்  வழக்கில்    சம்பந்தப்பட  மாட்டார்  என்று  அப்துல்லா  படாவி  பிரதமராக …

பக்கத்தான் தலைவர்கள் பக்கத்தான் 2.0 பற்றிப் பேசுகிறார்களா?

பிகேஆர், டிஏபி. பாஸ்  முற்போக்காளர்கள்  ஒன்றாக  அமர்ந்திருக்கும் நிழற்படமொன்று  நேற்று  சமூக வலைத்தளங்களில்  வலம்  வந்தது. அப்படத்தைப்  பதிவிட்டிருந்த  சிபூத்தே  எம்பி  தெரேசா கொக், அது  நேற்றிரவு பாஸ்  தும்பாட்  எம்பி  கமருடின்  ஜாபாரின்  வீட்டில்  நோன்பு  திறக்கும்  நிகழ்வின்போது  பிடிக்கப்பட்டது  என்று  கூறினார். “பாஸ்  காங்கிரஸ்  டிஏபியுடன்  உறவுகளை …

மாரா தலைவர்: சொத்து கொள்முதலுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்

  ஆஸ்திரேலியாவில் மாரா வாங்கிய சொத்துகளுக்கு பிரதமர் நஜிப் ரசாக் ஒப்புதல் அளித்தார். அச்சொத்துகள் அதிகப்படியான விலைக்கு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாரா மேற்கொள்ளும் அனைத்து முதலீடுகளுக்கும் நிதி அமைச்சு அல்லது நஜிப்பின் தலைமையில் இயங்கும் அரசாங்க பொருளாதார மன்றத்தின் ஒப்புதல் இருந்தாக வேண்டும் என்று மாரா தலைவர் அனுவார்…

சுல்தான் சிலாங்கூரில் நிலைத்தன்மையை விரும்புகிறார்: எம்பி அதற்கு உத்தரவாதம்

நேற்று  சிலாங்கூர்  மாநில  ஆட்சியாளர்  சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷாவுடன்  நடந்த  சந்திப்பின்போது  சுல்தான்  மாநில  நிலைத்தன்மையை  மிகவும்  வலியுறுத்தியதாக  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  தெரிவித்தார். சிலாங்கூர்  தொடர்ந்து  மேம்பாடு  காணவும் மாநில  அரசு  மக்களுக்கு  அதன்  பொறுப்புகளை  நிறைவேற்றவும்  அது  அவசியம்  என்றாரவர். சிலாங்கூரில்  பக்கத்தான் …

புதிய நண்பர்களுடன் எழுச்சி பெறுவோம், முன்னிலும் வலிமை பெறுவோம்

மூன்று  வெவ்வேறு  கொள்கைகள்  கொண்ட  கட்சிகளை  ஒன்றிணைந்து  பக்கத்தான் ரக்யாட்டை  உருவாக்கியவரான  அன்வார்  இப்ராகிமுக்கு  அக்கூட்டணி  உடைந்து  போனாலும்  அதன்மீதுள்ள  நம்பிக்கை இன்னும்  குறையவில்லை. ஐந்தாண்டு  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு  சிறையில்  இருந்து  வரும்  அன்வார்,  கூட்டணி  அதன்  சாம்பலிலிருந்து  முன்னிலும்  வலிமை  பெற்றதாக  எழுச்சி  பெறும்  என்றார். அரசியல்…

அம்னோ உறுப்பினர்கள் டிஏபி கொடியை எரித்தனர்

பினாங்கு  அரசாங்க  அலுவலகம்  அமைந்துள்ள  கொம்டார்  கட்டிடத்தில்  டிஏபி  கொடி  ஒன்று தீ வைத்து  எரிக்கப்பட்டது. பினாங்கு  அம்னோ  செயலாளர்  மூசா  ஷேக்  பாட்சிர்  தலைமையில்  50 அம்னோ  உறுப்பினர்களும்  ஆதரவாளர்களும்  மகஜர்  ஒன்றை  பினாங்கு  மாநகர்  மன்றத்திடம்  கொடுப்பதற்காகச்   சென்றபோது  அச்சம்பவம்  நடந்தது. மாநகர்  மன்றம்  மினாரா …

கட்சியில் கிளர்ச்சி செய்பவர்கள் மூழ்கி மறைந்து போவார்கள்: ஹாடி எச்சரிக்கை

புதிய  கட்சி  அல்லது  அமைப்பில் புகலிடம்  தேடிச்  செல்லும்  பாஸ்  தலைவர்களும்  உறுப்பினர்களும்  “மூழ்கி மறைந்தொழிவார்கள்”  எனக்  கட்சித்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  எச்சரித்துள்ளார். பாஸ்  உறுப்பினர்களுக்கான  ஒரு  திறந்த  மடலில் அவர்  இந்த  எச்சரிக்கையை  விடுத்திருந்தார். “பாஸின்  வரலாறு  தெரிந்தவர்களுக்கு  அடைக்கலம்  நாடிச்  சென்ற  தலைவர்கள்,…

முஸ்லிம்-அல்லாத மாணவர்களை ஒளிந்துகொண்டு நீர் அருந்தச் சொல்வது அபத்தம்

கெடாவில்  ஆசிரியர் ஒருவர்  முஸ்லிம்- அல்லாத  மாணவர்களிடம்  ‘ஜோக்’அடித்ததாகச்  சொல்லப்படுவதும்  வகுப்பறையில்  தண்ணீர்  அருந்தக்கூடாது  என்று  பணித்ததும்  பொருத்தமற்றவை  என தேசிய  ஆசிரியர்  பணியாளர்  சங்க(என்யுடிபி)த்  தலைவர்  ஹஷிம்  அட்னான்  கூறினார். ஆசிரியர்கள்  அவை  அறிந்து  நகைச்சுவையாக  பேச  வேண்டும். முஸ்லிம்- அல்லாத  மாணவர்கள்  நோன்பிருக்கவில்லை  என்பதால் எங்கும் …

பிஏசி 1எம்டிபி தலைவர்களிடம் WSJ செய்தி பற்றி விசாரிக்கும்

பொதுக் கணக்குக்  குழு(பிஏசி) அதனிடம்  வாக்குமூலம்  அளிக்க வரும் 1எம்டிபி  நிர்வாகிகளிடம்  கடந்த  வாரம் வால்  ஸ்ட்ரீட்  ஜர்னலில்  வெளிவந்த  செய்தி  பற்றியும்  விசாரிக்கும். ஆனால், அதன்  தொடர்பில்  சாட்சியமளிக்க  இப்போதைக்கு  யாயாசான்  ரக்யாட்  1மலேசியா அதிகாரிகள்  உள்பட  புதிய  சாட்சிகளை  அக்குழு  அழைக்காது. இப்போதைக்கு  பிஏசி, 1எம்டிபி-இன் …

உங்கள் கருத்து: ‘எவ்வளவு மட்டமான புத்தி. அதுதான் கல்விமுறையே குப்பை…

  குற்றவாளி எனத்  தெரிந்தால் ஆசிரியர் முழுமையாக தண்டிக்கப்பட  வேண்டும்   ‘சிறுநீரைக்  குடிக்குமாறு  முஸ்லிம்-அல்லாத  மாணவர்களிடம்  கூறினார்  ஆசிரியர்’ ரேட்: கல்வி துணை  அமைச்சர்  பி.கமலநாதன்  அவர்களே,  ஒரு  தடவையாவது  சொன்னபடி  செய்வீர்களா?  மேற்காணும்     வார்த்தைகளை  ஆசிரியர்  சொல்லியது  உண்மைதான் என்பது  நிரூபணமானால்  அவரது …

‘சிறுநீரைக் குடியுங்கள்’ என்று ஆசிரியர் ‘ஜோக்’ அடித்தாராம்: எக்ஸ்கோ, போலீஸ்…

கெடா  ஆட்சிக்குழு  உறுப்பினர்  ஒருவரும்  போலீசாரும்,   மாணவர்களிடம் ‘சிறுநீரைக் குடியுங்கள்’ என்று  கூறிய  ஆசிரியரைத்  தற்காத்துப்  பேசியுள்ளனர். அவர்  வேடிக்கையாகச்  சொன்னதை  மாணவர்கள் விபரீதமாகக்  கருதி  விட்டனராம். அந்த  ஆசிரியர்  முஸ்லிம்  மாணவர்களிடம்  நோன்பிருக்க  வேண்டியதன்  அவசியத்தை  வலியுறுத்தி முஸ்லிம்- அல்லாத  மாணவர்களிடம்  முஸ்லிம்  மாணவர்களின்  முன்னிலையில்  தண்ணீர் …

‘1எம்டிபி பணம் காணாமல் போகவில்லை; WSJ செய்தியே சான்று’-நஸ்ரி

அமைச்சர்  ஒருவர்  1எம்டிபி  பணம் 13வது  பொதுத்  தேர்தல்  பரப்புரைக்குப்  பயன்படுத்திக்  கொள்ளப்பட்டதாகக்  கூறும்  வால்ஸ்ட்ரிட்  ஜர்னல்(WSJ) செய்தியை “நல்ல” செய்தியாகப்  பார்க்கிறார். அச்செய்தியின்படி பார்த்தால்,  அந்த  நிறுவனத்தின்  பணம்  காணாமல்  போகவில்லை; மக்களுக்குத்தான்  பயன்பட்டிருக்கிறது என்றாகிறது எனச்  சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  கூறினார்.…

மந்திரி புசார் அஸ்மின் அலி சுல்தானைச் சந்தித்துப் பேசினார்

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி,  இன்று  சிலாங்கூர்  சுல்தானைச் சந்தித்திருக்கிறார். அச்சந்திப்பில்  பக்கத்தான்   ரக்யாட்டுக்குப்  பிந்திய  சிலாங்கூர்  மாநில  அரசு  பற்றிப்  பேசப்பட்டதா  என்ற  விவரம்  தெரியவில்லை. இன்று  காலை  ஷா ஆலம்  இஸ்தானா  காயாங்கானில்  சிலாங்கூர்  ஷியாரியா  நீதிமன்றத்துக்கு  நீதிபதிகள்  நியமனம்  செய்யும்  சடங்கில்  கலந்துகொண்ட…

மகாதிர் சொல்வது தவறு, வழக்கைக் கண்டு அஞ்சுபவர் அல்லர் நஜிப்

பதவி  இறங்கினால்  வழக்கு  தொடரப்படும்  என்று  அஞ்சியே  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவியைப்  பிடித்துக்  கொண்டிருக்கிறார்  என்று  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  சுமத்தும்  குற்றச்சாட்டை  அம்னோ  தலைவர்  ஒருவர்  வன்மையாக  மறுக்கிறார். மாறாக, நஜிப், நாட்டின்  பிரச்னைகளைத்  தீர்ப்பதற்காக  பதவியில்  இருக்க  நினைக்கும்  “ஓர்  ஆண்மகன்”  என்று…

மாணவர்களிடம் சிறுநீரை அருந்தச் சொன்னாராம் ஆசிரியர்

கெடா, சுங்கைப் பட்டாணி தொடக்கநிலைப் பள்ளி ஒன்றின்  ஆசிரியர்,  முஸ்லிம்-அல்லாத மாணவர்களிடம் தண்ணீர் அருந்துவதாக  இருந்தால்  வகுப்பில்  அருந்தக் கூடாது என்றும், கழிப்பறைக்குச் சென்று அருந்தலாம்  என்றும் கூறியுள்ளார். மேலும், தண்ணீர் இல்லாவிட்டால்  அவர்கள் “குழாய் நீரையோ  சொந்த சிறுநீரையோ”  அருந்தலாம் என்றும்  சொன்னாராம். இவ்வளவுக்கும்  அவர்  மாணவர்…

பாஸின் போக்கில் மாற்றம் இல்லையேல் புதிய கட்சி அமையும்

பாஸ்  தலைமையின்  போக்கில் 100 நாள்களில் மாற்றம்  காணப்படாவிட்டால்  கட்சியில்  உள்ள  முற்போக்குவாதிகள்  பக்கத்தான்  ரக்யாட்டுக்கு  ஆதரவாக  செயல்படும்  புதிய  கட்சி  ஒன்றை  அமைக்கக்கூடும்  என்று ஷா ஆலம்  எம்பி  காலிட்  சமட்  இன்று  எச்சரித்தார். பாஸ்  சிலாங்கூரின்  முன்னாள்  துணை  ஆணையரான  காலிட், பாஸ்  தலைமைக்கு  100-நாள் …

கஸ்தூரி பட்டு: பிடிஎன் விவகாரத்தில் நஜிப் ஒரு கபட வேடதாரி

  இனவாத படடைப்புகளை தயாரித்து வழங்கும் தேசிய குடியியல் பிரிவு (BTN)விவகாரத்தில் பிரதமர் நஜிப் ரசாக் கபட வேடம் போடுகிறார் என்று டிஎபி பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு சாடியுள்ளார். 1மலேசியா தத்துவத்தை விடாமல் ஓதிக்கொண்டு, மிதவாதத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டு  இருக்கும் பிரதமர் நஜிப்…