குண்டர் கும்பல்களில் அபாயமிக்கவை இந்தியர்களைக் கொண்ட 04, 08 கும்பல்களே

நாட்டில்  செயல்பட்டு வரும் இரகசிய குண்டர் கும்பல்கள் பற்றிய விவரங்களை உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்டது. 49 குண்டர் கும்பல்கள் செயல்பட்டு வந்தாலும் மிகவும் ஆபத்தானவர்கள், ரவுடித்தனத்தில் அதிகம் ஈடுபடுபவர்கள் இந்தியர்களைக் கொண்ட 04, 08 கேங்குகளே என்கிறார் உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ரஹிம் முகம்மட்…

கோகிலன்: வேதா துணை அமைச்சர் வேலையைத் தானே செய்கிறார்

பிரதமர் துறை துணை அமைச்சர் பி வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என சக  அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ள வேளையில் வேதமூர்த்தி தமது பணிகளை  தொடர வேண்டும் என கெராக்கான் உதவித் தலைவர் ஏ கோகிலன் பிள்ளை  அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பினாங்கு சுங்கை நிபோங்கில் கடந்த வாரம் சந்தேகத்துக்குரிய…

தாண்டா புத்ரா, வரலாற்று உண்மை என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்

தாண்டா புத்ரா படம் பார்த்த ஒருவர், அதில் சித்திரிக்கப்படும் மே 13 சம்பவங்கள் “வரலாற்று உண்மை” என்று நம்புகிறார். அப்படத்தில் எழுப்பப்படும் விவகாரங்கள் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றிருக்கும். அதை வருங்கால மக்கள் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும் என்று சைடி சித்திக் கூறினார். “மே 13, 1969-இல் நான்…

கைரி: நாட்டுக்கு ‘புது வேகம்’ கொடுக்க புதிய சமூக ஒப்பந்தம்…

நாட்டுக்கு மலேசியர்கள் 'புது வேகத்தை' கொடுக்க புதிய சமூக ஒப்பந்தம்  வரையப்பட வேண்டும் என இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின்  யோசனை கூறியிருக்கிறார். "அத்தகைய நடவடிக்கை மலேசியர்கள் தங்கள் ஐக்கியத்திற்கு புதிய அடித்தளம்  அமைக்க உதவும். அத்துடன் இன்றைய தலைமுறை எதிர்நோக்கும் சவால்களைப்  பிரதிபலிப்பதாகவும் அது இருக்கும்."…

பினாங்கில் தண்டா புத்ராவை திரையிடுமாறு பினாஸ் ஆணையிடும்

'தண்டா புத்ரா' திரைப்படம் உணர்வுகளைத் தூண்டும் தன்மையைக்  கொண்டிருப்பதால் அதனைத் திரையிட வேண்டாம் என பினாங்கு மாநில  அரசாங்கம் கூறியுள்ள ஆலோசனைக்கு அங்குள்ள சினிமா அரங்குகள்  கட்டுப்பட்டுள்ள போதிலும் அதனை அவை திரையிட வேண்டிய நிலை ஏற்படலாம். சர்ச்சையை உருவாக்கியுள்ள அந்தத் திரைப்படம் சனிக்கிழமை பினாங்கு  தியேட்டர்களில் காட்டப்படும்…

பெற்றோர் இல்லாமல் பிள்ளைகளை போலீசார் விசாரித்தது தவறு

"போலீஸ் அதிகாரிகள் பிள்ளைகளை 'பேட்டி' கண்டனர். அவர்களிடமிருந்து  அதிகாரத்துவ வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை. என்றாலும் மாணவர்களை  அச்சுறுத்தவில்லை என அவர்கள் கூறிக் கொள்கின்றனர். அதனை நம்ப முடிகிறதா  ?" ஒசிபிடி: ஆமாம் நாங்கள் பிள்ளைகளை விசாரித்தோம். ஆனால் மிரட்டவில்லை அப்சலோம்: போலீசார் மாணவர்களிடம் 'பேசுவதற்கு' முன்னர் தலைமை  ஆசிரியரின்…

ஸ்ரீ பிரிஸ்தானா விவகாரம்: கல்வி அமைச்சும், போலீஸ்சும் அம்னோவுக்கு ஆப்பு…

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஆகஸ்ட் 29, 2013.  கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வரும் சுங்கை பூலோ ஸ்ரீ பிரிஸ்தானா  தேசியப்பள்ளி மாணவர்கள்  குளியலறையில்  உணவு உட்கொண்ட விவகாரம், அம்னோவின்  இனவாதத்தையும் அதன்  அகந்தையையும் நாட்டு மக்களுக்கு உணர்த்துவதாக மட்டும் இல்லாமல், இனி அம்னோ தலைமைத்துவத்தால் நாட்டிற்கு எந்த…

ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளிக்கூட சம்பவம் ‘சிறிய பிரச்னையே’

உடைமாற்றும் அறையில் மாணவர்கள் உட்கொள்ளுமாறு செய்யப்பட்ட ஸ்ரீ  பிரிஸ்டினா தேசியப் பள்ளிக்கூட சம்பவம் மாணவர்களை நன்றாக  ஒருங்கிணைத்துள்ள மற்ற பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் 'சிறிய பிரச்னையே'  என்று இரண்டாவது கல்வித் துணை அமைச்சர் பி கமலநாதன் சொல்கிறார். "நேற்று வரை இந்த நாட்டில் 10,904 பள்ளிக்கூடங்கள் இயங்குகின்றன. தேசிய  ஒருங்கிணைப்புக்கு…

ஷுஹாய்மி: சினிமா அரங்குகள் அனுமதிகளை இழக்கலாம்

தண்டா புத்ரா திரைப்படம் கட்டாயமாக திரையிடப்பட வேண்டும் என்னும்  திட்டத்தின் கீழ் வருவதால் அதனை திரையிடாத சினிமா அரங்குகள் தங்கள்  உரிமங்களை இழக்க வேண்டியிருக்கும் என அதன் இயக்குநர் ஷுஹாய்மி பாபா  சொல்கிறார். "பினாஸ் எனப்படும் தேசியத் திரைப்படக் கழகத்தின் அனுமதி இல்லாமல் சினிமா  அரங்குகள் திரையிடுவதை ரத்துச்…

தண்டா புத்ரா இருட்டடிப்பு- புதிய கடிதம் வெளியிடப்பட்டது

பினாங்கு அரசாங்கம் சினிமா அரங்குகளுக்கு அனுப்பிய கடிதத்தை 24 மணி  நேரத்துக்குள் திருத்தியுள்ளது. தண்டா புத்ராவை திரையிட வேண்டாம் என அவற்றுக்கு 'ஆணையிடுவதற்கு'  பதில் அது இப்போது 'ஆலோசனை' கூறியுள்ளது. பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று நிருபர்கள் சந்திப்பில் புதிய  கடிதத்தைக் காட்டினார். முந்திய கடிதம்…

உள்துறை அமைச்சு 49 சட்டவிரோத குண்டர் கும்பல்கள் மீது போர்…

1966ம் ஆண்டுக்கான சங்கச் சட்டத்தின் கீழ் சட்ட விரோதமானவை என 49  குண்டர் கும்பல்கள் மீது உள்துறை அமைச்சு போர் பிரகடனம் செய்துள்ளது. அவற்றை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளின் தொடக்கம் அது எனக் கருதப்படுகின்றது. அது வெளியிட்டுள்ள பட்டியலில் கோலாலம்பூரிலும் ஜோகூரிலும் செயல்படும்  மிகவும் தீவிரமான குண்டர் கும்பல்களும் அடங்கும்…

2014 வரவு செலவுத் திட்டத்தில் ஜிஎஸ்டி சேர்க்கப்பவது பற்றி நஜிப்…

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அறிவிப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் வேளையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை அமலாக்குவது மீது ஏதும் சொல்ல மறுக்கிறார். "ஜிஎஸ்டி என்பது புதிய விஷயமல்ல. நாங்கள் அது பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். அது வரவு…

நிதி அமைச்சு: ஜிஎஸ்டி அவசியமாகும், தேர்வு அல்ல

நாடு முழுவதும் ஜிஎஸ்டி என்ற பொருள் சேவை வரியை அமலாக்குவது  அவசியமாகும். அது ஒரு தேர்வு அல்ல என நிதி அமைச்சின் தலைமைச்  செயலாளர் முகமட் இர்வான் சிரிஹார் அப்துல்லா கூறுகிறார். நாட்டைப் பாதுகாப்பதே அதன் முழுமையான நோக்கம் என வருணித்த அவர்,  நாட்டின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு…

மெர்டேகா-கருப்பொருளில் அமைந்த நாடகத்துக்குத் தடை

மெர்டேகாவைக் கருப்பொருளாகக் கொண்ட "MERdEKAnya KITA" என்னும்  நாடகம் “உள்ளூர் மக்களை  ஆத்திரப்பட வைக்கும்” என்பதால் அது  “தேசியப் பாதுகாப்புக்கு ஒரு மருட்டல்”  என்றுகூறி  அரசாங்கம் அதற்குத் தடை விதித்துள்ளது. அந்நாடகம்  இன  இணக்கத்தைக் கெடுப்பதுபோலவும்  சிங்கப்பூரர்கள் மலேசியர்களைச் “சிறுமைப்படுத்துவதுபோலும்” உள்ளது எனத்  தொடர்பு, பல்லூடக அமைச்சு அதிகாரிகள்…

அரசாங்கம் வகுத்த பாதையில் செல்லுங்கள் என வேதாவுக்கு நஜிப் அறிவுரை

செனட்டர் பி வேதமூர்த்தி இப்போது அரசாங்கத்தில் ஒர் உறுப்பினர். அதனால்  அவர் அரசாங்கம் வகுத்த பாதையில் செல்ல வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். "அரசாங்க உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் அரசாங்கம் வகுத்த பாதையைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் ஒரே குரலாக…

நிதிச் சுமையை ஏற்படுத்தும் பெருந் திட்டங்கள் மறுஆய்வு

ஏற்கனவே  தீர்மானிக்கப்பட்ட  சில திட்டங்கள்  மறுஆய்வு செய்யப்படும்.  அரசாங்கத்தின் நிதிநிலையைச் சீர்படுத்த அவ்வாறு செய்யப்படுகிறது. பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  தலைமையில்  திங்கள்கிழமை கூடும் நிதியியல் கொள்கைக் குழு   அதன்மீது முடிவெடுக்கும் என்றும் 2014  பட்ஜெட்டில் அது பற்றி அறிவிக்கப்படும் என்றும் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இன்றைய த…

“ஆற்றைத் தடுக்கும்” யோசனையை கெராக்கான் எதிர்க்கிறது

சுங்கை மூடா ஆறு பினாங்கிற்குள் செல்வதை தடுக்கும் யோசனைக்கு கெடா  மாநில கெராக்கான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அம்னோவின் பாக்கார் பாட்டா சட்டமன்ற உறுப்பினர்  அகமட் பாட்ஷா முகமட் ஹனீபா, அலோர் ஸ்டாரில் தெரிவித்த அந்த யோசனையை தாம் ஒப்புக் கொள்ளவில்லை  என அந்த கெராக்கான் மாநில இளைஞர்…

போலீஸ் 9 வயது பள்ளிப் பிள்ளைகளை ‘மிரட்டுகின்றது’

"போலீசார் வெட்கமே இல்லாத பள்ளிக்கூட முரடர்களாகியுள்ளனர். ஒசிபிடி  குண்டர் கும்பல்களைப் போன்ற உங்கள் அளவுள்ள ஒருவருடன் மோத  வேண்டும். 9 வயது பள்ளிப் பிள்ளைகளுடன் அல்ல" பெற்றோர்: மாணவரை விசாரிக்கவில்லை என ஒசிபிடி சொல்வது பொய் கிங்பிஷர்: பிள்ளைகளை கோழைத்தனமாக விசாரித்து விட்டு அதனை மறுத்துள்ள  ஒசிபிடி-யை வெட்கப்பட…

ஜிஎஸ்சி பினாங்கில் தாண்டா புத்ராவைத் திரையிடாது

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கின் வேண்டுகோளுக்கிணங்க  கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் (ஜிஎஸ்சி),  அம்மாநிலத்தில் தாண்டா புத்ரா படத்தைத் திரையிடுவதில்லை என முடிவு செய்துள்ளது. “அதற்காக நுழைவுச் சீட்டுகளை வாங்கியவர்களுக்குப் பணம் திருப்பிக் கொடுக்கப்படும்”, என அது ஓர் அறிக்கையில் கூறியது.

ஆற்றுநீரைத் தடுக்கும்’ பரிந்துரைக்கு கெராக்கான் எதிர்ப்பு

‘சுங்கை மூடா ஆறு பினாங்கு நோக்கி ஓடுவதைத் தடுக்க வேண்டும்  என்பதில் கெடா கெராக்கான் இளைஞர் பகுதிக்கு உடன்பாடில்லை. திங்கள்கிழமை அம்னோவின் பக்கார் பாத்தா சட்டமன்ற உறுப்பினர் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபாவால் முன்வைக்கப்பட்ட அந்த ஆலோசனையைத் தாம் ஏற்கவில்லை என மாநில கெராக்கான் இளைஞர் தலைவர் டான்…

தாண்டா புத்ராவுக்குத் தடையில்லை: குவான் எங் விளக்கம்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தாண்டா புத்ராவை பினாங்கு திரை அரங்குகள் திரையிடக்கூடாது என்பது ஓர் ஆலோசனைதானே தடைவிதிப்பு ஆகாது என விளக்கமளித்துள்ளார். “அது ஒரு வேண்டுகோள், தடை அல்ல. அதைமீறி, தாண்டா புத்ராவைத் திரையிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.…

‘உங்கள் “அச்சத்தை” புதைத்து விட்டு தண்டா புத்ராவைப் பாருங்கள்’

தண்டா புத்ரா திரைப்படம் இன்று சினிமா அரங்குகளில் திரையிடப்படுகின்றது. அதனை குறை கூறுகின்றவர்கள் தங்கள் 'அச்சத்தை' புதைத்து விட்டு அந்த  படத்தை பார்க்க வேண்டும் என அதன் தயாரிப்பாளரான பெசோனா பிக்சர்ஸ்  கேட்டுக் கொண்டுள்ளது. "சிலர் அந்தத் திரைப்படத்தை தங்கள் எதிரிகளாக கருதிக் கொண்டு அது பற்றி  முடிவு…

குவான் எங் அவர்களே, மக்கள் முடிவு செய்ய விடுங்கள்

"மலேசியாவில் ராக் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு தடை விதித்த மத்திய  அரசாங்கத்தைப் போன்று குவான் எங்-கும் செயல்படுகிறார்" தண்டா புத்ராவை திரையிட வேண்டாம் என பினாங்கு சினிமா அரங்குகளை  கேட்டுக் கொள்கின்றது பினாங்குக்காரன்: இந்த முறை நான் முதலமைச்சர் லிம் குவான் எங் பக்கம்  இல்லை. 'தண்டா புத்ராவை'…