எந்த மலேசியப் பல்கலைக்கழகமும் 100-வது இடத்துக்குள் இருந்ததில்லை

மலாயாப் பல்கலைக்கழகம்(யுஎம்)  ஒரு காலத்தில் தரம் உயர்ந்திருந்து இப்போது தாழ்ந்து போனதாகக் கூறப்படுவது உண்மையல்ல என அதன் துணை வேந்தர் கவுத் ஜஸ்மோன் மறுப்பறிக்கை விடுத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் கடந்த ஐந்தாண்டுகளில் அதன் தரம் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. QS உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 2007-இல், 246-வது…

மசீச: ஜிஎல்சி ஓர் இனத்திற்குச் சொந்தமானதல்ல

பூமிபுத்ரா சமூகத்திற்கு புத்ராஜெயாவின் பதிய பொருளாதார திட்ட அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், மசீசவின் இளைஞர் பிரிவு அரசு தொடர்புள்ள நிறுவனங்கள் (ஜிஎல்சி) இன அடிப்படையிலான இலக்குகளை உருவாக்கக் கூடாது ஏனென்றால் அவற்றுக்கான நிதி அனைத்து மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுகிறது என்று பிரதமர் நஜிப்புக்கு நினைவுறுத்தியுள்ளது. "இன்றைய உள்ளூர்…

வேதமூர்த்தி பதவியிலிருந்து வெளியேற வேண்டும்

-மு. குலசேகரன், ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 14, 2013.   வேதமூர்த்தி துணை அமைச்சர் பதவி ஏற்ற 100 நாட்களில் தன்னால் ஒன்றுமே செய்ய இயலவில்லை என்று அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.   கடைசி நிமிடம் வரை அம்னோவையும் பாரிசான் அரசையும் எதிர்த்து வந்த…

பூமிபுத்ராக்களுக்கு உதவும் திட்டத்தால் பூமி-அல்லாதார் பாதிக்கப்பட மாட்டார்கள்: பிரதமர் உத்தரவாதம்

இன்று மலாய்க்காரர்களுக்கும் மற்ற பூமிபுத்ராக்களுக்கும் உதவும் பல்வேறு திட்டங்களை அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவற்றால் மற்ற இனத்தவரின் நலன்கள் பாதிக்கப்பட மாட்டா என்பதற்கும் உத்தரவாதம் அளித்தார். “மலாய்க்காரர்களுக்குப் பொருளாதார அதிகாரத்தைக் கொடுக்கும் திட்டங்களைத் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். “இதனால் மற்றவர்களின் உரிமைகள் பறிபோகா....மற்ற இனங்களுக்குப் பாரபட்சம்…

பூமித்ராக்களுக்குத் தேர்தல்-பிந்திய வெகுமதிகளை அள்ளிக் கொடுக்கிறார் நஜிப்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பூமித்ராக்களின் பொருளாதார நிலையை மேலும் உயர்த்தும் பல்வேறு நடவடிக்கைகளை இன்று அறிவித்தார். அந்நடவடிக்கைகள்  கடந்த பொதுத் தேர்தலில் பூமிபுத்ராக்கள் அளித்த ஆதரவுக்குக் கைமாறாகும் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. அண்மைய 13வது பொதுத் தேர்தலில் மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களும் வழங்கிய ஆதரவின் அடிப்படையில் அரசாங்கம்…

நஜிப்: உத்துசானில் கூடுதல் விளம்பரங்கள் செய்வீர்! வாசகர்கள் என்ன சொல்கிறார்கள்?

சிங்கம்: மக்கள் பணம் அம்னோவுக்குத்தான் என்பதை தெளிவாக்கியுள்ளார் பிரதமர். ஆம்! உத்துசான், அம்னோவின் பத்திரிகை. அரசு விளம்பரங்கள் உத்துசானுக்குதான் போகவேண்டும் என்றால், கூஜா தூக்கிகலான மற்ற பத்திரிக்கைகளின் பிழைப்பு? நம் நாட்டில் பெரும்பாலான பத்திரிக்கைகள் அரசையும் அம்னோவையும் துதிபாடுபவை. ஆனால் இந்த உத்துசான் பொய்களையே கூறி ஓட்டாண்டியாய் போன கழிவறைப்…

தெங் பினாங்கு கெராக்கான் தலைவராவதற்கு முன்னாள் தலைமைச் செயலாளர் ஆதரவு

நாளை நடைபெறும் பினாங்கு கெராக்கான் தலைவர் போட்டியில் தம் ஆதரவு தெங் சாங் இயோவுக்கே என அக்கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சியா குவாங் சை, வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். பினாங்கு கெராக்கானுக்குத் தலைமையேற்கும் வாய்ப்பு தெங்குக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றாரவர். அதே வேளையில் தலைவர் பதவிக்குப் போட்டி இல்லாதிருப்பதையே…

தீர்வு காணப்பட்ட நிலையிலும் கம்போங் ரயில்வே குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படும் அபாயம்

கம்போங் ரயில்வே விவகாரத்துக்கு நீதிமன்றத்துக்கு வெளியில் ஒரு தீர்வு காணப்பட்டுள்ள நிலையிலும் குடியிருப்பாளர்கள்  செவ்வாய்க்கிழமைக்குள் இடத்தைக் காலி செய்தாக வேண்டும் என அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்படுவோருக்கு கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) தற்காலிக வீட்டு வசதிகளை இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதால் செவ்வாய்க்கிழமையன்று அவர்கள் வீடற்றவர்களாகத்தான் நிற்பார்கள்…

உத்துசான் மலேசியாவை காப்பற்ற மக்கள் பணமா?

நேற்று கோலாலம்பூரில் உத்துசான் மலேசியா நாளிதழ் தலைமையகத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த பிரதமர் நஜிப் ரசாக் அரசாங்க ஏஜென்சிகளும், அரசாங்க தொடர்புடைய நிறுவனங்களும் உத்துசான் மலேசியாவில் அதிகமாக விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "அனைத்து அரசாங்க ஏஜென்சிகளும், அரசாங்கம் தொடர்புடைய  ஜிஎல்சிகளும் மற்றும் தனியார்…

பெர்சே ஆர்ப்பாட்டக்காரருக்கு 16 மாதச் சிறை

கடந்த ஆண்டு  பெர்சே பேரணியின்போது ஒரு போலீஸ் வாகனத்தைச் சேதப்படுத்தியதற்காகவும் ஒரு போலீஸ்காரரையும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஒருவரையும் காயப்படுத்தியதற்காகவும் 26-வயது பால்வெட்டுத் தொழிலாளர் ஒருவருக்கு கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம்  16மாதச் சிறைத் தண்டனையும் ரிம5,500 அபராதமும் விதித்தது. முகமட் சபுவான் மாமாட் குற்றவாளிதான் என்பதை அரசுத் தரப்பு ஐயத்துக்கிடமின்றி…

உத்துசானில் கூடுதல் விளம்பரங்கள் செய்வீர்: அரசுத் துறைகளுக்கும் ஜிஎல்சி-களுக்கும் நஜிப்…

அரசுத் துறைகளும் அரசுசார்ந்த நிறுவனங்களும் (ஜிஎல்சி),  அம்னோவின் குரலாக விளங்கும் உத்துசான் மலேசியாவில் கூடுதல் விளம்பரங்களைச் செய்ய வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்தியுள்ளார். 75-ஆண்டுகளுக்குமுன் தோற்றுவிக்கப்பட்ட அந்நாளேடு தொடர்ந்து நிலைத்திருக்க அது அவசியம் என்றாரவர். ஜாலான் சான் செள லின், ஜாலான் எனாமில் உத்துசானின்…

2014 ஜூலைவரை மிகக்குறைந்த கட்டணத்தில் விமானப் பயணங்கள், எம்ஏஎஸ் வழங்குகிறது

மலேசிய விமான நிறுவனம், செப்டம்பர் 16-க்குப் பின்னர் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு தொடர்ந்து குறைந்த கட்டணங்களில் பயணங்களை வழங்குகிறது. குறிப்பிட்ட சில உள்ளூர், அனைத்துலக பயணங்களுக்கு மட்டுமே இச் சலுகை என எம்ஏஎஸ் ஓர் அறிக்கையில் கூறியது. “சில இடங்களுக்கான கட்டணங்களில் 55விழுக்காடுவரை கழிவு வழங்கப்படுகிறது”, என அந்நிறுவனத்தின்…

எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானா விவகாரத்தில் முழு விசாரணை தேவை

குளியலறை உணவு உண்ணும் இடமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் முடிவின்றி இழுத்துக்கொண்டே போவதற்கு  எஸ்கே ஸ்ரீ பிரிஸ்தானா தலைமையாசிரியரும் கல்வி அமைச்சும்தான் காரணம் என்கிறார் ஈப்போ பாராட் டிஏபி எம்பி, எம்.குலசேகரன். கல்வி அமைச்சு உடனடியாக விசாரணை மேற்கொண்டிருந்தால் விவகாரம் இவ்வளவு பெரிதாக உருவாகி இருக்காது. ஆனால், கல்வி அமைச்சு…

பாஸ்: இந்தியாவிலிருந்து ஆங்கில ஆசிரியர்களா?

அரசாங்கம்  ஆங்கிலம் கற்பிக்க இந்தியாவிலிலிருந்து ஆசிரியர்களைத் தருவித்தால்,  உள்ளூர் ஆங்கில ஆசிரியர்களின் நிலை என்ன ஆகும் என பாஸ் கேள்வி எழுப்புகிறது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட தேசிய கல்வி செயல்திட்டத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்பதை பாஸ் தகவல் தலைவர்  துவான்…

மசீச தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஒழுங்கு வாரியத்துக்கு…

அரசாங்கப் பதவிகளை ஏற்கக்கூடாது என்ற கட்சியின் முடிவை  தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் மீறினாரா என்பதை விசாரிக்கும் அதிகாரம் மசீச ஒழுங்கு வாரியத்துக்கு  உண்டு. தன்னிடம் செய்யப்படும் புகார்கள்மீது  வாரியம் விசாரணை மேற்கொள்ளும் என அதன் செயலாளர் பென்சன் பூ கூறினார். கட்சியின் அமைப்புவிதிகள் தலைவருக்கு சிறப்புச்…

ரபிஸி: எரிபொருள் விலையை உயர்த்துமுன்னர் கார் வரிகளைக் குறைக்க வேண்டும்

காருக்கு  அளவுகடந்த வரி செலுத்த வேண்டியிருப்பதால் பிஎன் அரசாங்கம் பெட்ரோலின் விலையை உயர்த்துவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பிகேஆர் எம்பி, ரபிஸி ரம்லி கூறினார். “வரிவிதிப்பின் காரணமாக மலேசியர்கள் மற்ற நாடுகளைவிட ஒரு மடங்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது”, என பிகேஆர் வியூக இயக்குனருமான ரபிஸி…

பூலாவ் திக்குஸ் கூட்டத்தில் பினாங்கு அரசுக்குக் கண்டனம்

பினாங்கு அரசு, பல சாலைகளை ஒருவழிச் சாலைகளாக மாற்றியதற்காகக் கடுமையாகக் குறைகூறப்பட்டுள்ளது. உச்ச நேரங்களிலும் வார இறுதிகளிலும் விடுமுறை காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்திருக்கும் ஜாலான் பர்மா, ஜாலான் கெலாவாய், கர்னி டிரைவ் ஆகிய சாலைகள் ஒருவழிச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. அதன் தொடர்பில் நேற்றிரவு நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில்…

100 நாள் சிறையில் இருந்தாலும் போராட்டத்தைக் கைவிடவில்லை உதயகுமார்

இந்தியர்களுக்காக குரல் கொடுப்பதில் வருத்தமே கிடையாது என்கிறார் இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார்.  அதுவும் 100 நாள் கடுமையான சிறைவாழ்க்கையை அனுபவித்த பின்னரும் அவர் அதில் உறுதியுடன் இருக்கிறார். தேச நிந்தனை குற்றம் சாட்டப்பட்டு அதற்காக இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் உதயகுமார்  செய்தி ஊடகங்களுக்கு ஒரு கடிதம்…

தேசிய சேவை முகாமைச் சீர்படுத்த ஒரு வாரக் கெடு

பாலேக் பூலாவ் White Resort முகாமைச் சீர்படுத்துமாறு அதன் இயக்குனருக்குத் தேசிய சேவை பயிற்சித் துறை (பிஎல்கேஎன்) உத்தரவிட்டுள்ளது. “அதனைச் சுத்தப்படுத்த ஒரு வாரம் அவகாசம் கொடுத்திருக்கிறோம்.  தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”, என பிஎல்கேஎன் தலைமை இயக்குனர் ரொசைனோர்  ரம்லி  கூறினார். இன்று பிற்பகல் அம்முகாமைப் பார்வையிட்ட…

பழனிவேல்: சுப்ரா போட்டியின்றி துணைத் தலைவராக வேண்டும்

மஇகா தலைவராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.பழனிவேல், துணைத் தலைவர் டாக்டர் எஸ், சுப்ரமணியமும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறார். தம் நிலைப்பாட்டுக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஒரு வேளை, அது பிரதமரின் முன்னிலையில் அவரும் சுப்ரமணியமும் செய்துகொண்ட ஏற்பாட்டின் விளைவாக இருக்கலாம். ஆனால், உதவித் தலைவர் பதவிக்கு…

மகாதிர்: அன்வார் ஏன் புரொஜெக்ட் ஐசி-யைத் தடுக்கவில்லை?

‘புரொஜெக்ட் ஐசி’ பற்றித் தாம் அறிந்திருக்கவில்லை என்றது முழுப் பொய் என்று குறை சொல்வோர், அன்வார் இப்ராகிம் அந்த விவகாரம் தொடர்பில் மெளனமாக இருக்கிறாரே அவரிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டியதுதானே என்று காட்டமாக உரைத்தார். தாம் பிரதமராக இருந்த காலத்தில் ‘புரொஜெக்ட் ஐசி’ நடந்திருந்தால் அப்போது துணைப்…

சைபுடின்: சீனமொழியை ஒழிக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை

முன்னாள் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா,  புதிதாகக் கொண்டுவரப்பட்ட கல்வி செயல்திட்டத்துக்கு சீன மொழியை ஒழித்துக்கட்டும் நோக்கம்  கிடையாது என்றே நம்புகிறார். “அது, தொடக்கநிலைப் பள்ளிகளில் சீன மொழியை ஒழிக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அனுமானிப்பது சரியல்ல. பகாசா மலேசியா, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் (மாணவர்களின்) புலமையை அதிகரிப்பதே…

புரிதல் உடன்பாட்டில் முன்னேற்றமில்லை என இண்ட்ராப் அதிருப்தி

இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி அரசாங்கப் பதவி ஏற்று 100 நாள்களுக்குமேல்  ஆகிவிட்டன ஆனால், பிஎன்னுடன் செய்துகொள்ளப்பட்ட 32-அம்ச உடன்பாட்டில், ஒரே ஒரு விசயத்தைத் தவிர்த்து,  எவ்வித முன்னேற்றமும் காணப்படாமல் இருப்பதாக இண்ட்ராப் கூறுகிறது. பிரதமர்துறையில் ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட்டது மட்டுமே ஒரு முன்னேற்றம். “அப்பிரிவின் தலைவரிடம் (வேதமூர்த்தி)…