சரவாக் ரிப்போர்ட்: ரோஸ்மா வங்கிக் கணக்கில் ரிம2மில்லியன் வைக்கப்பட்டுள்ளது

  ஒரு புதிய திடுக்குறச் செய்யும் குற்றச்சாட்டில் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூருடையது என்று கூறப்படும் ஒரு வங்கிக் கணக்கில் ரிம2மில்லியன் வைக்கப்பட்டுள்ளதாக சரவாக் ரிப்போர்ட் கூறிக்கொண்டுள்ளது. இத்தகவல் அஃப்பின் பேங்க் பெர்ஹாட்டிலுள்ள ஒரு வங்கிக் கணக்கை அடிப்படையாகக் கொண்டது என்று அந்த வலைத்தளம் கூறிற்று. இந்த…

உள்ளூர் டிஎபி பாஸ் மாற்றுக் கட்சிக்கு ஆதரவு

  நிபோங் திபாலிருந்து ஐந்து டிஎபி கிளைத் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக பாஸ் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹிட் யுசுப் ராவாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நிபோங் திபால் துணைத் தலைவர் தியோ சியாங் ஹூய் தலைமையில் சென்ற டிஎபி பிரதிநிதிகள் பரிசுப் பொருள்களை பரிமாறிக் கொண்டனர்.…

பணிப்படை: பிரதமரின் வங்கிக் கணக்குகள் மூடப்பட்டு விட்டதால் அவை முடக்கப்படவில்லை

  பிரதமர் நஜிப் ரசாக் அம்பேங் இஸ்லாமிக்கில் வைத்திருந்த அவரது சொந்த கணக்குகள் முறையே ஆகஸ்ட் 30, 2013 லும், மார்ச் 9, 2015 லும் மூடப்பட்டு விட்டன என்று பணிப்படை இன்று வெளிப்படுத்தியது. இருப்பினும், அந்த கணக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்ககளை வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகவலை பணிப்படையின் உறுப்பினர்களாகிய…

உயர்மட்ட இலஞ்ச எதிர்ப்பு மாநாட்டில் நஜிப் உரையாற்றப் போகிறார்

  அரசு நிதியிலிருந்து யுஎஸ்$700 மில்லியன் (ரிம2.6 பில்லியன்) கையாடல் மோசடி குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக எழுந்துள்ள வேளையில், பிரதமர் நஜிப் ரசாக் ஓர் உயர்மட்ட இலஞ்ச எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 2 லிருந்து 4 வரையில் புத்ரா ஜெயாவில் நடைபெறவிருக்கும் 16…

ரோஸ்மாவிடமிருந்து சிருல் கட்டளை பெறுகிறாரா?

  மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஆஸ்திரேலியா குடிநுழைவுத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போலீஸ் கமாண்டோ சிருல் அஸ்ஹார் ஒமார் தான் அல்தான்துயாவை கொலை செய்தது பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின் உத்தரவுப்படிதான் என்று ஒப்புக்கொள்ளப் போவதாக சமூக…

ஸைட்: பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி விபரீதத்துடன் விளையாடுகிறார்

  1எம்டிபியின் நிதியிலிருந்து யுஎஸ்$700 மில்லியன் பிரதமர் நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்று வால் ஸ்திரிட் ஜெர்னல் அம்பலப்படுத்தியுள்ள விவகாரத்தில் பேங்க் நெகாராவின் கவர்னர் ஸெட்டி அக்தார் அஸிஸ் அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை அவர் செய்ய வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறினார்.…

பிரதமர்: சொந்த நலனுக்கு 1எம்டிபி பணத்தைப் பயன்படுத்தியதில்லை

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  1எம்டிபி  பணத்தை  எடுத்து  சொந்தத்துக்கு  என்றும்  பயன்படுத்தியது  இல்லை  என்பதை  வலியுறுத்தியுள்ளார். “மீண்டும்  வலியுறுத்த  விரும்புகிறேன். 1எம்டிபி பணத்தைச்  சொந்த  நலனுக்குப்  பயன்படுத்தியதில்லை. “வால் ஸ்திரிட் ஜர்னலின்  கூற்று தீய  நோக்கம்  கொண்டது.அதற்கு  நாட்டில்  உள்ள  சில  தரப்பினர்,  பிரதமர்  பதவியிலிருந்தும்  அம்னோ …

புதிய பக்கத்தானுக்கு முன்னோட்டமாக பெர்லிசில் பேரணி

பாஸின்  புதிய நம்பிக்கை(ஹராபான் பாரு)ஹரி ராயா-வின்  மூன்றாவது  நாளில் பாரு) டிஏபி, பிகேஆர்  ஆகியவற்றுடன் சேர்ந்து  புதிய  எதிரணி  ஒன்றை உருவாக்குவதற்கு  ஆதரவு  திரட்டும்  நோக்கில் பெர்லிசில்  மக்கள்  பேரணி  ஒன்றுக்கு  ஏற்பாடு  செய்யும். அக்கூட்டத்தில் பாஸ்  தலைவர் முகம்மட்  சாபுவும்  ஜூன்  மாதம்  பாஸ்  கட்சித் தேர்தலில் …

1எம்டிபி தலைமையகத்தில் போலீஸ் அதிரடிச் சோதனை

போலீஸ் கோலாலும்பூரில்  ஜாலான்  சுல்தான்  இஸ்மாயிலில்  உள்ள  1எம்டிபி  தலைமையகத்தில்  அதிரடிச்  சோதனை  நடத்தியுள்ளது. காலை  மணி  11.30க்கு மெனாரா ஐஎம்சி-இல்  உள்ள   அலுவலகத்தில்  அந்த அதிரடிச்  சோதனை நிகழ்ந்ததாக த  ஸ்டார்  ஆன்லைன்  கூறிற்று. அக்கட்டிடத்துக்கு  வெளியில்  மூன்று  போலீஸ்  வாகனங்கள்  நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தன.  செய்தியாளர்கள்  அக்கட்டிடத்துக்குள் …

ஐஜிபி: எம்பேங் நிறுவனர் கொலைக்கும் 1எம்டிபி-க்கும் தொடர்பு இல்லை

எம்பேங்க் நிறுவனர் ஹுசேன் அஹ்மாட் நஜாடி  1எம்டிபி  ஊழலை  அம்பலப்படுத்த  விரும்பினார்  அதானல்தான கொல்லப்பட்டார்  என்ற  வதந்திகளைப்  போலீசார்  நிராகரித்தனர். அக்கொலைக்கும் 1எம்டிபி நிறுவனத்தின் பணம் பிரதமர் நஜிப்பின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுவதற்கும்  சம்பந்தம் இல்லை என தேசிய  போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் தெரிவித்தார்.…

பிஎன் தேர்தல் வெற்றிக்கு எதிராக பிகேஆர் வழக்கு தொடுக்கும்

பிஎன்  கடந்த பொதுத்  தேர்தலில்  வென்றது  செல்லாது  என்று  அறிவிக்கக் கோரி  பிகேஆர்  சிவில்  வழக்கு  ஒன்றைத்  தொடுக்கவுள்ளது.  1எம்டிபி  பணம்  பொதுத்  தேர்தல்  பரப்புரைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக்  கூறும்  வால்  ஸ்திரிட்  ஜர்னல் செய்தியை  அடிப்படையாகக்  கொண்டு  அது  அவ்வழக்கைத் தொடுக்கும். “இயன்ற விரைவில்” வழக்கு  தொடுக்கப்படும்  என …

‘வங்கிக் கணக்கைக் காட்டுங்கள், போதும்’- நஜிப்புக்கு மகாதிர் அறிவுறுத்து

பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக், அரசாங்கப்  பணத்தில்  யுஎஸ்$700 மில்லியனை(ரிம2.6 பில்லியன்)  எடுத்துக்  கொண்டார்  என்ற  குற்றச்சாட்டுக்கு  முடிவுகட்ட  அவரது  வங்கிக்  கணக்குகளைக்  காட்டினாலே  போதுமானது  என்கிறார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். “மக்கள்  அவர்மீது  குற்றம்  சுமத்தினால்  அதை  ஒரு  சதி  என்கிறார். அப்படிச்  சொல்வது…

வங்கி ஆவணக் கசிவு தொடர்பில் WSJ-இடம் போலீஸ் விசாரணை

பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ரிம2.6 பில்லியன் மாற்றம் செய்யப்பட்டதாகக்  கூறப்படும்  செய்தியுடன்  தொடர்புள்ள ஆவணங்களை  வெளியிடப்பட்டிருப்பது  குறித்து  போலீசார் வால் ஸ்ட்ரீட் ஜார்னலிடம் விசாரணை  நடத்துவர். கணினிச்  சட்டத்தின்கீழ்   WSJ-இடம்  விசாரணை  நடத்தப்படும்  எனப்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார் …

மகாதிர்: நாட்டை அசிங்கப்படுத்தியவர் நஜிப், நானல்ல

1எம்டிபி  குழப்படி  மூலம்  நாட்டை  அசிங்கப்படுத்தியவர்   பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்  என டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறினார். “மற்ற  நாடுகள்  என்றால்  இப்படிப்பட்ட  ஊழலில்  சம்பந்தப்பட்ட  தலைவர்  பதவி  விலகுவார், மன்னிப்பு  கேட்பார். “ஆனால், மலேசியாவில்  தக்கக்  காரணமின்றி  தங்கள்  தலைவரை  விழுந்து  விழுந்து  பாதுகாப்பார்கள், தங்கள் …

நஜிப் பற்றி விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் தேவை

அரசாங்கத்துக்குச்  சொந்தமான  1எம்டிபி  நிதி  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  தனிப்பட்ட  கணக்குக்கு மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படுவது  பற்றி   விவாதிக்க  சிறப்பு  நாடாளுமன்றக்  கூட்டத்துக்கு  ஏற்பாடு  செய்யப்பட   வேண்டும். வால்  ஸ்திரிட்  ஜர்னலின்  கூற்று கடுமையானது  என்பதால்  அதை  விவாதிக்க  சிறப்பு  நாடாளுமன்றக்  கூட்டம்  அவசியம்  என  எதிரணித்  தலைவர் …

முடக்கப்பட்ட 6 கணக்குகளில் மூன்று நஜிப்பினுடையவை

1எம்டிபி-இன்  ரிம2.6 பில்லியன்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  சொந்த கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படுவது  பற்றி  விசாரணை  நடத்திவரும்  சிறப்புப்  பணிக்குழு  அவ்விவகாரத்தின்  தொடர்பில்  ஆறு  வங்கிக்  கணக்குகளை  முடக்கி  வைத்திருப்பதாக  தெரிவித்தது. ஆனால், அவ்வங்கிக்  கணக்குகள்  யாருடையவை  என்பதை  அது  தெரிவிக்கவில்லை. அந்த  ஆறில்  மூன்று  பிரதமருக்குச் …

பணிக்குழு: ரிம2.6 பில்லியன் புலனாய்வில் 6 கணக்குகள் முடக்கம்

1எம்டிபி  பணம்  கையாடப்பட்டதாகக்  கூறப்படுவதை  விசாரிக்கும்  சிறப்புப்  பணிக்குழு  அவ்விவகாரத்தில்  தொடர்புடைய  ஆறு  வங்கிக்  கணக்குகளை  முடக்கி  வைத்திருப்பதாக  அறிவித்துள்ளது. “இவ்வழக்கில்  சம்பந்தப்பட்டவர்கள்  என்று  நம்பப்படுவோருக்குச்  சொந்தமான  ஆறு  வங்கிக்  கணக்குகளையும்  முடக்கி  வைக்க  ஜூலை  6-இல்  உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது”, எனப்  பணிக்குழு இன்று  ஓர்  அறிக்கையில்  கூறியது.…

நஜிப் விடுப்பில் செல்ல எம்பி-கள் ஏற்பாடு செய்தல் வேண்டும்

எதிரணி  எம்பிகள் துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினைச்  சந்தித்து  பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்கை விடுப்பில்  அனுப்பி  வைக்குமாறு  கேட்டுக்கொள்ள  வேண்டும். “எதிரணி  எம்பிகள்  துணைப்  பிரதமரைச்  சந்திக்க  வேண்டும். அவரிடம்  பிரதமரை  விடுப்பில்  செல்லுமாறு  அறிவுறுத்துங்கள்  என  வலியுறுத்த  வேண்டும்”, என  நெகாரா  கூ  என்ஜிஓ-வின்  புரவலரான …

தலைவருக்கு எதிரான கட்டுக்கதைகளை நம்பாதீர்: கட்சி உறுப்பினருக்கு தெங்கு அட்னான்…

தங்கள்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கு  எதிராக  பல்வேறு  குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டாலும்  அம்னோ  உறுப்பினர்கள்  அமைதி காக்க  வேண்டும். இவ்வாறு  கேட்டுக்கொண்ட  கட்சித் தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர். அம்னோ கட்சியினர்  தலைமைக்குப்  பிளவுபடாத  விசுவாசத்தைக்  காட்டிட  வேண்டும்  என்றார். குற்றச்சாட்டுகளுக்கு  எதிராக  சிறந்த  நடவடிக்கை …

எம்பி-கள் நாடாளுமன்றத்துக்கு வெளியில் கூட்டம் நடத்தினர்

நாடாளுமன்றத்தில்  சர்ச்சைக்குரிய  1எம்டிபி  விவகாரம்  பற்றி  எம்பிகள்  கூட்டம்  நடத்துவதற்கு  முன்னதாக  போலீஸ்  பாதுகாப்பைக்  கடுமையாக்கி  இருந்தனர். எம்பிகள்  கூடிப்பேச  ஓர் அறைகூட  கிடைக்கவில்லை  என  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லி   கூறினார். எம்பிகள்  பயன்படுத்த  நினைத்த  மண்டபத்தை  இளைஞர், விளையாட்டு  அமைச்சு  ஏற்கனவே  முன்பதிவு  செய்திருந்தது. எனவே.…

ரசாக் உருவாக்கிய பெல்டாவை அவரின் மகன் அழித்துக் கொண்டிருக்கிறார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அவரின்  தந்தையார்  அப்துல்  ரசாக் உசேன்  உருவாக்கிய  பெல்டாவை  அழித்துக்  கொண்டிருக்கிறார். இன்று  மகாதிரைச்  சந்தித்தபோது  அவர்  இவ்வாறு  குறிப்பிட்டதாக அனாக்  தலைவர்  மஸ்லான்  அலிமான்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார். “நஜிப்  ஒழுக்கக்கேடு மிக்க  ஒருவரை  பெல்டா  தலைவராக  நியமித்தது  ஏன்  என்று  மகாதிர் …

தீர்ப்பை நிறுத்திவைக்க பழனிவேல் செய்த மனு தள்ளுபடி

மறுதேர்தல்  நடத்த  வேண்டும்  என்ற  சங்கப்  பதிவகத்தின்  உத்தரவை  நிலைநிறுத்தும்  நீதிமன்றத்  தீர்ப்பை நிறுத்திவைக்கக்  கோரி ஜி.பழனிவேலும்  மேலும்  மூவரும் செய்திருந்த  மனுவை  இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. நீதிபது  அஸ்மாபி  முகம்மட்  அவரது  அறையில்  இம்முடிவைச்  செய்தார். இன்னமும்  தம்மை  மஇகா  தலைவர்  என்று  அழைத்துக் …

ஜோகூரில் டிஏபி நிகழ்வுமீதான தாக்குதலை போலீஸ் விசாரிக்கிறது

ஜொகூர், மாசாயில்  ஒரு காப்பிக் கடையில் நடந்த  டிஎபி நிகழ்வில் தாக்குதல் நடத்தியவர்களை  போலீஸ்  தேடுகிறது. டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை பேச விடாமல் தடுக்க முயன்றவர்களை  அடையாளம்  காணும்  முயற்சியில்  போலீஸ்  ஈடுபட்டிருப்பதாக  ஸ்டார்  ஆன்லைன்  செய்தி  ஒன்று  கூறிற்று. ஜோகூர்  டிஏபி  நடத்தி …