மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை மக்கள் எதிர்கொள்ள உதவும் வகையில், சரவாக் அரசு புதிய நிவாரணத் தொகுப்பை வழங்கவுள்ளதாக கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) பொதுச் செயலாளர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற தனது ஹரி ராயா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் சரவாக் பிரீமியர் அபாங் ஜொஹாரி ஓபெங் இத்திட்டத்தை அறிவித்ததாக…
மீண்டும் நடக்கக்கூடாது: ஐஜிபி-க்கு பிரதமர் உத்தரவு
நேற்று லவ் யாட் பிளாசாவில் நிகழ்ந்ததைப் போன்ற வன்செயல்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்காருக்கு உத்தரவிட்டுள்ளார். அச்சம்பவத்தை ஒரு குற்ற விவகாரமாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர இன விவகாரமாகப் பார்க்கக் கூடாது …
லவ் யாட் கடைக்காரர் ஏமாற்றினார் என்பதற்கு ஆதாரமில்லை
லவ் யாட் பிளாசாவில் கைபேசி திருடியதற்காகக் கைது செய்யப்பட்ட ஆடவனைக் கடைக்காரர் ஏமாற்றினார் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்பதைப் போலீஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. “எங்கள் விசாரணையில் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. அதற்கான ஆதாரம் கிடைத்தால் அதையும் ஆராய்வோம். “இப்போதைக்கு இது ஒரு திருட்டு வழக்குத்தான்”, என கோலாலும்பூர் போலீஸ் …
குற்றவாளிக்கு உடந்தையாக இருந்தவரை விடுவித்த போலீஸ் அதிகாரிமீது நடவடிக்கை
லவ் யாட் பிளாசாவில் கைபேசியைத் திருடிய இளைஞனுக்கு உடந்தையாக இருந்தவனைப் போலீஸ் பொறுப்பு-அதிகாரி விடுவித்தார் என்பதை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் ஒப்புக்கொண்டார். மேலதிகாரிகளிடம் ஆலோசனை கலக்காமல் அவ் வதிகாரி அந்த இளைஞனை விடுவித்து விட்டார் என காலிட் கூறினார். அதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.…
ரபிஸி: இனப் பதற்றத்தைத் தணிப்பது 1எம்டிபி-யை விட முக்கியமானது
1எம்டிபி சர்ச்சையைவிட லவ் யாட் பிளாசா வன்செயலுக்குத் தீர்வுகாண்பது முக்கியமானது என நினைக்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி. இந்த விவகாரத்துக்குச் சரியான தீர்வு காணவில்லையென்றால் அது இன உறவுகளை மேலும் மோசமாக பாதிக்கும் என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “அந்த வகையில் இவ்விவகாரம் இப்போதைக்கு 1எம்டிபி-யைவிடவும் பெரிது.…
கைதியின் மரணம் குறித்து மெளனம் சாதிக்கும் சிஜே-க்கு இண்ட்ராப் கண்டனம்
இண்ட்ராப் சிறைக் கைதி ஒருவர் காலமாகி இரண்டு மாதங்கள் ஆகியும் “வாயைப் பொத்திக்கொண்டிருக்கும்” தலைமை நீதிபதி(சிஜே)க்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. கைதியின் மரணம்மீது விசாரணை நடத்த வேண்டும் என சிஜே-க்குக் கடந்த மாதம் கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறிய இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கடிதத்துக்கு இன்னும் பதில் இல்லை என்றார். “எஸ்.…
பாஸில் தோல்வியுற்றோர் உருவாக்கிய புதிய அமைப்பு- ஹராபான் பாரு
கடந்த மாதம் பாஸ் கட்சித் தேர்தலில் தோற்றுப்போன நிபுணர் அணி ‘கெராக்கான் ஹராபான் பாரு’ என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பைத் தோற்றுவித்துள்ளது. பாஸின் முன்னாள் துணைத் தலைவர் முகம்மட் சாபு முன்னின்று உருவாக்கியுள்ள அவ்வமைப்பு, ஒரு புதிய இஸ்லாமிய கட்சியை உருவாக்கவும் இரண்டாவது பக்கத்தான் ரக்யாட் கூட்டணியை …
ஹரி ராயா உபசரிப்புக்கு அன்வாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிறையில் உள்ள அன்வார் இப்ராகிமுக்கு வெள்ளிக்கிழமை ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பி வைத்துள்ளார். அன்வாரின் முகநூல் பக்கத்தில் அந்த அழைப்பு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அன்வாரின் மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பிகேஆர் தலைவர், நாடாளுமன்றத்தில் …
WSJ-க்கு அனுப்பப்பட்ட கடிதத்தைத் தற்காத்துப் பேசுகிறார் அம்னோ வழக்குரைஞர்
கடந்த வாரம், வால் ஸ்திரிட் ஜர்னலுக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பப்பட்டது சரியான நடவடிக்கைதான் என்று வாதாடுகிறார் அம்னோ வழக்குரைஞர் முகம்மட் ஹவாரிசாம். மற்ற வழக்குரைஞர்களும் இப்படிச் செய்ததுண்டு என்று குறிப்பிட்ட ஹவாஇசாம், அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர் சங்கரா நாயர் அப்படிச் செய்திருக்கிறார் என்றார். “முதலாவது செய்தி அறிக்கையில் …
கசிந்த 1எம்டிபி ஆவணங்கள் உண்மையானவையா? போலீஸ் ஆராய்கிறது
வெளியில் கசிய விடப்பட்டுள்ள 1எம்டிபி ஆவணங்கள் உண்மையானவையா, ஜோடிக்கப்பட்டவையா என்பதை போலீஸ் ஆராய்ந்து உறுதிப்படுத்தும். ஜனநாயக நடைமுறைகளைக் கீழறுப்புச் செய்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கவிழ்ப்பதற்கு ஒரு சதித் திட்டம் இருக்கும் சாத்தியத்தை மறுக்க போலீஸ் தயாராக இல்லை எனப் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு …
‘பாஸ் தலைவர்கள் மைய நீரோட்ட ஊடகங்களுக்குப் பிரியமானவர்களாகி விட்டார்கள்’
பாஸின் உயர்த் தலைவர்கள் இருவர் வரிந்து கட்டிக்கொண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தற்காப்பதைப் பார்க்கும்போது டிஏபி-யுடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்ட பாஸ் ஷுரா மன்றத்தின் முடிவு ஒரு சாதாரண நிகழ்வுதான் என்கிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங். அவ்விரு தலைவர்களும் இப்போது மைய நீரோட்ட …
பாஸ், டிஏபி: லவ் யாட் விவகாரத்தை இன விவகாரம் ஆக்காதீர்
நேற்றிரவு கோலாலும்பூர், புக்கிட் பிந்தாங்கில் நடந்த சம்பவங்களை அடுத்து அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பாஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது. இனங்களுக்கிடையில் அமைதி காப்பது அவசியம் எனக் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் குறிப்பிட்டார். “அனைவரையும், குறிப்பாக புக்கிட் பிந்தாங்கில் உள்ளவர்களை அமைதி காக்கும்படியும் புதிதாக சீண்டிவிடும் நடவடிக்கைகளில் …
லவ் யாட் பிளாஷா அருகில் கும்பல் வன்செயல்
நேற்றிரவு லவ் யாட் பிளாஷா அருகில் நடந்த கும்பல் வன்செயலில் பல செய்தியாளர்களும் பார் ஊழியர்களும் காயமுற்றனர். நள்ளிரவு மணி 1.00 அளவில், போலீசார் பலரை கைது செய்தனர். அந்த வன்செயலில் ஈடுபட்டிட்ருந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பல்வேறு திசைகளில் பரவியுள்ளனர். தாங்கள் மலாய் அரசு சார்பற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்கள்…
கோபிந் சிங்: ஹுஸ்ஸேய்ன் நஜாடி கொலை வழக்கு மீண்டும் திறக்கப்பட…
சட்டத்துறை தலைவர் கனி பட்டேயில் 2013 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட அம்பேங் நிறுவனர் ஹுஸ்ஸேய்ன் நஜாடியின் வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குரைஞரும் டிஎபி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ கூறினார். இக்கொலை சம்பந்தமான விசாரணை இன்னும் முற்றுப்பெறாமல்…
பெர்காசா: ஹாடி பிரதமர் வேட்பாளராக வேண்டும், அன்வார் அல்ல
டிஎபியுடனான உறவை முறித்துக் கொண்ட பின்னர் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்மையும் பாஸ் கட்சி நிராகரிக்க வேண்டும். எதிரணியின் பிரதமர் வேட்பாளராக பாஸ் அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை முன்வைக்க வேண்டும் என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறுகிறார். கடந்த வெள்ளிக்கிழமை, பாஸ்…
பாக்கத்தான் அழிந்து விட்டதற்காக கிட் சியாங் வருத்தம்
கூட்டணியை ஒன்றாக வைத்திருக்க பாக்கத்தான் ரக்யாட் தவறி விட்டதற்காக டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். பாக்கத்தான் "காலமாகிவிட்ட" போதிலும் டிஎபி அக்கூட்டணியின் பொதுக் கொள்கை திட்டத்தை தொடர்ந்து பின்பற்றும் என்று நேற்றிரவு ஷா அலாமில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஒன்றில்…
1எம்டிபி த ஸ்டாரை எச்சரிக்கிறதா?
விசாரணை அதிகாரிகள் 1எம்டிபி-யைக் குறைகூறியதை மேற்கோள்காட்டி இரண்டு செய்தி அறிக்கைகளை வெளியிட்டிருந்த த ஸ்டார் நாளேட்டை 1எம்டிபி நிறுவனம் சாடியுள்ளது. த ஸ்டார் “அலட்சியமாக” செய்திகளை வெளியிடுவதாக ஓர் அறிக்கையில் சாடிய 1எம்டிபி, அது “உரிமம் பெற்று ஒழுங்குமுறையுடன் நடத்தப்படும்” நாளேடு என்பதை நினைவுறுத்தியது. “த ஸ்டார் போன்று …
ஸைட்: பிரதமரை விசாரணைக்கு அழைக்கும் தைரியம் நூர் ஜாஸ்லானுக்கு உண்டா?
1எம்டிபி விவகாரத்தை விசாரித்து வரும் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் நூர் ஜாஸ்லான் பிரதமர் நஜிப் ரசாக்கை விசாரணைக்கு அழைக்க உறுதியாக இருக்கிறாரா என்று கேட்டால், பதில் நிச்சயமாக "இல்லை" என்று திடமாகக் கூறலாம் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறுகிறார். அவ்வாறு செய்வதற்கு…
முறைகேடு பிடிக்காமல் 1எம்டிபி அதிகாரிகள் இருவர் பதவி விலகினார்களாம்
1எம்டிபி இயக்குனர்கள் இருவர், 2009-இல் பெட்ரோசவூதியுடன் கூட்டாக அமைக்கப்பட்ட (ஜேவி) நிறுவனத்துக்குச் செல்ல வேண்டிய யுஎஸ்$700 மில்லியன் வேறொரு நிறுவனத்துக்கு மாற்றிவிடப்பட்டடது பிடிக்காமல் பதவி விலகினர். 1எம்டிபி பணக் கையாடல்மீதான விசாரணையில் இது தெரிய வந்திருப்பதாக த ஸ்டார் அறிவித்துள்ளது. 1எம்டிபி வாரியத் தலைவர் முகம்மட் பக்கே சாலே, …
பிரதமர் தொடர்ந்து மெளனம் சாதித்தால் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக மாணவர்கள் மிரட்டல்
வால் ஸ்திரிட் ஜர்னலின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெளிவான விளக்கம் கொடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மாணவர் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். நஜிப் மூன்று முக்கிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என கெராக்கான் மஹாசிஸ்வா செலாமாட்கான் மலேசியா-வின் தலைவர் முகம்மட் லுக்மான் நூல் ஹகிம் சுல் ரசாலி …
நாட்டைப் பீடிக்கும் நோய்களைக் குணப்படுத்த வேண்டும்: டாக்டர் மகாதிரின் பிறந்த…
இன்று 90வது பிறந்த நாளைக் கொண்டாடும் டாக்டர் மகாதிர் முகம்மட் இவ்வளவு காலம் வாழ்வதை நினைத்துக்கூட பார்த்ததில்லை என்றார். “90வது பிறந்த நாளைக் கொண்டாட முடிந்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன்”, எனப் புன்னகைத்தார். “இது நான் எதிர்பார்க்காத ஒன்று”, என மகாதிர் தேசிய பள்ளிவாசலில் சந்தித்த மலேசியாகினியிடம் தெரிவித்தார். அவரது …
பாஸின் ‘முற்போக்கு’ உலாமாக்கள் புதிய நம்பிக்கையில் சேரக்கூடும்
பாஸ் கட்சித் தேர்தலில் தோற்றுப்போன 18 பேரடங்கிய ‘ஹராபான் பாரு’(புதிய நம்பிக்கை) அணி கட்சித் தலைவர்களிடம் அதிருப்தி அடைந்துள்ள உலாமாக்களை இன்று சந்திக்கிறது. இந்த உலாமாக்கள், புதிய நம்பிக்கை புதுக் கட்சி அமைப்பதையும் டிஏபி-யுடனும் பிகேஆருடனும் சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்குவதையும் ஆதரிக்கிறார்கள் என பாஸ் பாரிட் புந்தார் …
கணவரின் போராட்டம் முடிவுக்கு வர வேண்டும்: அதுவே சித்தி ஹஸ்மாவின்…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று 90வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் யார் உடன் இருப்பார்களோ இல்லையோ 59ஆண்டுகளாக அவரது வாழ்வின் ஒளியாக இருந்துவரும் சித்தி ஹஸ்மா அலி மட்டும் கண்டிப்பாகக் கூட இருப்பார். பிறந்த நாளுக்காக கணவருக்குச் சிறப்புப் பரிசு கொடுத்து …
1எம்டிபி விசாரணைக் குழுவிலிருந்து ஐஜிபி விலக வேண்டும்
விசாரணை பாரபட்சமின்றி நடக்க வேண்டும். அதற்கு 1எம்டிபி ஊழலைப் புலனாய்வு செய்யும் சிறப்புப் பணிக்குழுவிலிருந்து தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அனுமதியில்லாமல் தகவலைப் பெற்றதற்காக வால் ஸ்திரிட் ஜர்னலுக்கு (WSJ) எதிராக விசாரணை நடத்த வேண்டும் என ஐஜிபி …


