மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை மக்கள் எதிர்கொள்ள உதவும் வகையில், சரவாக் அரசு புதிய நிவாரணத் தொகுப்பை வழங்கவுள்ளதாக கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) பொதுச் செயலாளர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற தனது ஹரி ராயா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் சரவாக் பிரீமியர் அபாங் ஜொஹாரி ஓபெங் இத்திட்டத்தை அறிவித்ததாக…
தி எட்ஜ்: சதித் திட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை
தி எட்ஜ் நிதியியல் நாளேடு, 1எம்டிபி தொடர்பில் ஆகக் கடைசியாக வெளியிட்டிருக்கும் செய்தியில் அரசியல் சதி என்று கூறப்படுவதில் தனக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்திருப்பதுடன் செல்வந்தர் ஜோ லவ்வும் பெட்ரோசவூதி இண்டர்நேசனல் (பிஎஸ்ஐ) நிறுவனமும் மலேசியாவிடமிருந்து பில்லியன் கணக்கில் கொள்ளையிட வகுத்திருந்ததாகக் கூறப்படும் ஒரு திட்டத்தையும் நினைவுபடுத்தியது.…
பாஸ்: கிளர்ச்சிக்காரர்களால் பிஎன்னுக்குத்தான் நன்மை
கெராக்கான் ஹராபான் பாரு(ஜிஎச்பி) அமைந்திருப்பது பிஎன்னுக்குத்தான் நன்மையாக முடியும் என்று சிலாங்கூர் பாஸ் ஆணையர் இஸ்கந்தார் சமட் கூறினார். ஜிஎச்பி, பாஸ் உறுப்பினர்களிடையே தன்னை வலுப்படுத்திக் கொள்வதில்தான் கவனமாக இருக்குமே தவிர அம்னோவையும் பிஎன்னையும் எதிர்ப்பதில் அதன் கவனம் செல்லாது. ஜூன் மாதம் பாஸ் தேர்தலில் தோல்வியுற்ற முற்போக்காளர்கள் …
‘என்னுடையது ஜோடிக்கப்பட்ட மின்னஞ்சல் என்றால் உங்களுடையதைக் காண்பியுங்கள்’
சரவாக் ரிப்போர்ட் தலைமைச் செய்தியாசிரியர் கிளேர் ரியுகாஸல் பிரவுன், தம்மை ஜோடிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு செய்திகள் வெளியிட்டதாகக் குற்றஞ் சாட்டுபவர்களால் அதற்கான ஆதாரங்களைக் காண்பிக்க முடியுமா என்று சவால் விடுத்துள்ளார். “லெஸ்டர் மெலாஞி நான் அனுப்பிய மின்னஞ்சலைப் பயன்படுத்திப் பொய்களைப் பரப்பியபோது நான் உடனடியாக என்னுடைய உண்மையான மின்னஞ்சலை …
ஜஸ்டோவை சந்தித்தேன் என்று நேரடியகச் சொல்லுங்கள், பாரிசானுக்கு புவா சவால்
பெட்ரோசெளதி இண்டர்நேசனலின் இயக்குனர் சேவியர் ஆண்ட்ரே ஜஸ்டோவை சந்தித்தவர்களின் தானும் ஒருவர் என்று நேரடியாகக் கூறுமாறு பாரிசான் அமைச்சர்களுக்கு டிஎபி பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா சவால் விடுத்தார். மறைமுகமாக இது பற்றி கூறப்படுவதைத் தொடர்ந்து, நகர்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…
முன்னாள் பாஸ் முஸ்லிம்-அல்லாதவர் பிரிவு தலைவர் கட்சியுடனான உறவை முறித்துக்…
பாஸ் ஆதரவாளர்கள் கிளப்பின் கூட்டு நிறுவனரான ஹு பாங் சௌ பாஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டுள்ளார். பாஸ் ஆதரவாளர்கள் கிளப் பின்னர் அக்கட்சியின் நான்காவது பிரிவாக தரம் உயர்த்தப்பட்டது. கட்சியுடனான உறவை தாம் முறித்துக் கொண்டதை அவர் தொடர்பு கொண்ட போது உறுதிப்படுத்தினார். தாம் கட்சியின் புதிய…
அன்வாருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் பெருநாள் கொண்டாட்டம் இல்லை
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், ஹரி ராயாவின் முதல் நாளில் அவரும் அவரின் குடும்பத்தாரும் அவரின் கணவர் அன்வார் இப்ராகிமைச் சந்திக்க அனுமதிக்கப்படாததை எண்ணி வருத்தமடைந்துள்ளார். முன்பு அன்வார் சிறையில் இருந்தபோது ஹரி ராயா முதல் நாளில் அல்லது இரண்டாவது நாளில் அவரைச் சந்திக்க …
அம்னோ ஆள் பெட்ரோசவூதி ஆவணங்களை வாங்கினாராம்
பெட்ரோசவூதி இண்டர்நேசனலிடமிருந்து திருடப்பட்ட ஆவணங்களை அதன் முன்னாள் இயக்குனர் சேவியர் எண்ட்ரி ஜுஸ்டோவிடமிருந்து விலைக்கு வாங்கிய 10 பேரடங்கிய ஒரு குழுவில் அம்னோ-வைச் சேர்ந்த ஒருவரும் இருந்ததாக சிங்கப்பூரின் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. தம்மிடமிருந்த தகவல்களை வெளியிடாமலிருக்க 2.5 மில்லியன் சுவீஸ் பிரான்க் கொடுக்க வேண்டும் என்று பெட்ரோசவூதியை …
ஜுஸ்டோசைச் சந்தித்த எதிரணி ஆள் யார் என்பது போலீசுக்குத் தெரியும்
பெட்ரோசவூதி இண்டர்நேசனல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சேவியர் எண்ட்ரி ஜுஸ்டோவைச் சந்தித்த எதிரணித் தலைவரின் அடையாளம் தெரிய வந்திருப்பதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் இன்று தெரிவித்தார். அவரின் பெயரை வெளியிட மறுத்த காலிட், அவர் போலீசுடன் ஒத்துழைக்க வேண்டும் மறுத்தால் போலீசாரால் தடுத்து வைக்கப்படுவார் …
ஹரி ராயா நல்வாழ்த்துகள்
செம்பருத்தி.கோம் ஹரி ராயா நல்வாழ்த்துகள் செம்பருத்தி.கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசிய மக்களுக்கும் அதன் ஹரி ராயா நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
நஜிப் மீது குண்டுகளைப் பொழிகிறார் மகாதிர்
ரமதான் மாதத்தில் நஜிப்பை தாக்குவதிலிருந்து ஒதுங்கியிருந்த மகாதிர் ஹரிராயா தொடக்கத்தில் நஜிப் மீது குற்றச்சாட்டு குண்டுகளை பொழியத் தொடங்கியுள்ளார். தாம் கூறுவதை செவிமடுக்காத நஜிப் பினாங்கில் பிறந்த கோடீஸ்வரன் ஜோ லவ் மற்றும் சிங்கப்பூர் தரப்பினர் கூறுவதை கேட்டுக்கொள்வதில் நஜிப் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறார் என்று மகாதிர்…
1எம்டிபி தாக்குதல் அன்வாருக்காக நடத்தப்படுகிறதாம்: காணொளி கூறும் பரபரப்பான தகவல்
1எம்டிபி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே ஜோடிக்கப்பட்டவை என்றும் எதிரணித் தலைவர்கள் பலர் அதன் பின்னணியில் இருப்பதாகவும் லெஸ்டர் மெலாஞி காணொளி ஒன்றில் கூறியுள்ளார். லெஸ்டர், தாம் சரவாக் ரிப்போர்டில் வேலை செய்ததாகவும் கிளேர் ரியுகாஸலைத் தலைமைச் செய்தியாசிரியராகக் கொண்டு செயல்படும் அந்த இணையத் தளத்துக்குச் செய்திகளை இட்டுக்கட்டிக் …
சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர்: என் மின்னஞ்சலில் மாற்றம் செய்திருக்கிறார்கள்
சரவாக் ரிப்போர்ட் தலைமை செய்தியாசிரியர் கிளேர் ரியுகாஸல், தாம் 1எம்டிபி பற்றியும் பிரதமருடன் தொடர்புள்ளவர்களையும் பற்றியும் தகவல்களை இட்டுக்கட்டி வெளியிடுவதாக தம்மீது குற்றம் சாட்ட, பாரிசான் நேசனல் ஒரு மின்னஞ்சலில் சில மாற்றங்களைச் செய்து அதைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், சரவாக் ரிப்போர்டின் முன்னாள் செய்தியாசிரியர் …
ரபிஸி: இது என்னை மாட்டிவிடுவதற்கான பயங்கர சூழ்ச்சி
பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி, 1எம்டிபி தொடர்பாக பொய்யான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தம்மையும் தொடர்புப் படுத்திச் செய்யப்பட்ட போலீஸ் புகாரை ஒரு “கொடிய சதி” என்று நிராகரித்தார். போலீஸ் புகாரில் சரவாக் ரிப்போர்டின் “முன்னாள் செய்தி ஆசிரியர்” என்று கூறப்பட்டுள்ள லெஸ்டர் மெலாஞி-யைச் சந்தித்ததே …
பிஎன் ஏற்பாடு செய்யும் பெருநாள் நிகழ்வுகளை பிகேஆர் புறக்கணிக்கும்
பிகேஆர், அதன் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறைக்கு அனுப்பப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிஎன் ஏற்பாட்டில் நடக்கும் ஹரி ராயா நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்துள்ளது. “அன்வார் இப்ராகிம் குற்றஞ்சாட்டப்பட்டதற்கும் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டிருப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கத்தில், கூட்டரசு நிலையிலும் மாநில அளவிலும் பாரிசான்…
லவ் யாட் விவகாரம்: அம்னோ தலைவர் ஒருவரும் வலைப்பதிவர்களும் இன்னமும்…
லவ் யாட் பிளாசா மோதல் தொடர்பில் கைதானவர்களில் 24பேர் நேற்று போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மூவர் மட்டும் 1948 தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கோலாலும்பூர் சிஐடி தலைவர் சைனுடின் அஹ்மட் கூறினார். வான் முகம்மட் அஸ்ரி வான் டெரிஸ்(பாபாகோமோ), சமூக ஆர்வலர் முகம்மட் அலி பஹாரோம்(அலி …
ஆஸி செய்திதாள்கள் மகாதிர்மீது குற்றஞ்சாட்டாதது ஏன்?
மலேசிய அதிகாரிகள் ஊழல் விவகாரத்தில் ஈடுபட்டதாக செய்தி வெளியிடும் ஆஸ்திரேலிய செய்திதாள்கள் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் பெயரை இழுக்காதது ஏன் என்று பிரதமர் அலுவலகம்(பிஎம்ஓ) கேள்வி எழுப்பியுள்ளது. ஊழல் நடந்ததாகக் கூறப்படும் 1999-க்கும் 2004க்குமிடையிலான காலத்தில் மகாதிர்தான் பிரதமராக இருந்தார் என பிஎம்ஓ இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.…
அடிபட்டவருக்குப் பழி வாங்கும் எண்ணமில்லை
ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் பெட்ரிக் லிம், புக்கிட் பிந்தாங் பகுதியில் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு நண்பர்கள் இருவருடன் காரில் வீடு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தார். திடீரென 100 பேரடங்கிய கும்பல் ஒன்று அவரது காரின்மீது பாய்ந்தது. அதன்பின் நடந்ததைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.…
பிஎம்ஓ: ஆஸி ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது
1999க்கும் 2004ஆம் ஆண்டுக்குமிடையில் நடந்த கையூட்டு ஊழலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்டிருந்ததாக ஆஸ்திரேலிய செய்தித்தாள்கள் கூறிக் கொண்டிருப்பதைப் பிரதமர் அலுவலகம்(பிஎம்ஓ) மறுத்துள்ளது. ஆனால், பிஎம்ஓ, ஆஸ்திரேலிய புலனாய்வாளர்களுடன் ஒத்துழைக்க மலேசிய அதிகாரிகள் மறுப்பதாக தி எட்ஜும் சிட்னி மார்னிங் ஹரால்டும் கூறியிருப்பது குறித்துக் கருத்துரைக்கவில்லை. மலேசியாவைச் …
பணிக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என எம்ஏசிசி…
1எம்டிபி மற்றும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது விசாரணை நடத்தும் சிறப்புப் பணிக் குழு அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படும். மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்தை(எம்ஏசிசி) மேற்பார்வையிடும் ஐந்து குழுக்களில் ஒன்றான ஊழல்மீதான குழு(ஜேகேஎம்ஆர்) இவ்வாறு தெரிவித்தது. சிறப்புப் பணிக்குழுவில் எம்ஏசிசி-யும் இடம்பெற்றுள்ளது. “எம்ஏசிசி 2009-இன்படி ஒவ்வோர் …
சாட்சியங்களை மறைத்தல் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதற்கு ஒப்பாகும்
சாட்சியங்களை மூடி மறைப்பவர்கள் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்றுதான் பொருள்படும் என எச்சரிக்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். “அவர்கள் குற்றவாளிக்கு உதவுகிறார்கள், உடந்தையாக உள்ளார்கள். அவர்களும் குற்றஞ்சாட்டப்பட வேண்டும், விசாரிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும். “வழக்கு முடிந்தவுடன் ஒப்படைக்கலாம் என்று திரட்டப்பட்ட சாட்சியங்களைத் தங்கள் வசமே வைத்துக்கொண்டிருப்பதுகூட உடந்தை …
மாபூஸ்: சிலாங்கூர், பினாங்கு அரசுகளை விட்டு பாஸ் வெளியேற வேண்டும்
பாஸ் கட்சி உடனடியாக முடிவெடுத்து சிலாங்கூர், பினாங்கு அரசுகளிலிருந்து வெளியேற வேண்டும் என அதன் முன்னாள் தகவல் தலைவர் மாபூஸ் ஒமார் கூறினார். பாஸின் ஆண்டுக்கூட்டத்தில் டிஏபியுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஷுரா மன்றம் ஏற்றுக்கொண்டிருப்பதால் இனியும் அது தாமதிக்கக் கூடாது என்றாரவர். “வெளியேற முடிவு செய்ய …
லவ் யாட் பிளாசா வழக்க நிலைக்குத் திரும்பியது
வார இறுதி சச்சரவுகளால் நேற்று வெரிச்சோடிக் கிடந்த மின்னியல் பொருள் விற்பனைக்குப் பேர்போன லவ் யாட் பிளாசா இன்று வழக்க நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. கடைக்காரர்கள் விற்பனைக்காக அவர்களின் பொருள்களை அழகாக அடுக்கி வைப்பதையும் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்குமுன்னர் பேரம் பேசுவதையும் மலேசியாகினி கவனித்தது. ஆனால், சச்சரவுக்கு மையமாக …
லவ் யாட் பிளாசாவில் கைபேசி திருடிய ஆசாமி விசாரணை கோரினான்
கோலாலும்பூர், மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று, லவ் யாட் பிளாசாவில் கைபேசி ஒன்றைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆடவன் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினான். ஷாருல் அன்வார் அப்துல் அஜீஸ், 22, ஜூலை 11இல் மாலை மணி 4.47 அளவில் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. திருட்டுக் குற்றங்களுக்கான குற்றவியல் …


