பாக் சமட்: பட்டத்தைப பறிக்க வேண்டுமா, தாராளமாக செய்யுங்கள்

ஏ.சமட் சைட், அவரது தேசிய இலக்கியவாதி பட்டத்தைப் பறிக்க வேண்டும் எனச் சில தரப்பினர் கூக்குரல் இடுவது பற்றிக் கவலையே படவில்லை. “என் தேசிய இலக்கியவாதி பட்டத்தைப் பறிக்க வேண்டுமா, தாராளமாக நடக்கட்டும்”, என்றாரவர். அரசாங்கம் தம் குடியுரிமையைப் பறிக்க முடிவு செய்தால்கூட கவலை இல்லை என அந்த…

ஜாஹிட்: அரசியலில் ஈடுபட்டுள்ள இரகசிய சங்க உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அரசியல்வாதிகளாக உள்ள   இரகசிய சங்க உறுப்பினர்களை  உள்துறை அமைச்சு  அடையாளம் கண்டிருக்கிறது  என அதன் அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். “அந்த அரசியல்வாதிகள் இரகசிய சங்கங்களின்  முன்னாள்  உறுப்பினர்களாக இருந்து இப்போது திருந்தியவர்களாக இருந்தால், அவர்களை  இரகசிய சங்கங்களுடன் இணைந்துப் பேசுவது நியாயமாக இருக்காது. “ஆனால்,…

சாலை வரியை அகற்ற பெட்ரோல் விற்பனையாளர்கள் கோரிக்கை

மலேசிய பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் (பிடிஏஎம்), அரசாங்கம் சாலை வரியை இரத்துச் செய்து 2000 சிசி கார்களுக்கான காப்புறுதிக் கட்டணத்தையும் குறைக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொண்டுள்ளது. அது, குறைந்த- நடுத்தர வருமானம் பெறும் மக்கள் நடப்புப் பொருளாதாரச் சூழலைச் சமாளிக்க உதவியாக இருக்கும் என அதன் தலைவர் ஹஷிம் ஒத்மான்…

பழனிவேல், 2016-க்குப் பின்னர் இருக்கப்போவதில்லை என மீண்டும் ஒரு பல்டி

2016-க்குப் பின்னரும் மஇகா தலைவராக இருக்கும் சாத்தியம் இருக்கிறது என்று கூறி ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜி.பழனிவேல், இப்போது அடுத்த மஇகா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்பதைத் தெளிபடுத்தியுள்ளார். துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவார் என்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.  

இஓ இரத்தான பின்னர் வன்முறை குற்றங்களில் 5 விழுக்காடு உயர்வு

தடுப்புச் சட்டங்கள் அகற்றப்பட்ட பின்னர், நாட்டில் வன்முறை சார்ந்த குற்றங்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு உயர்ந்தது என போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பக்கார் கூறினார். அவசரகாலச் சட்ட  விதிகள் (இஓ)  இரத்துச் செய்யப்படுவதற்கு   20 மாதங்களுக்கு முன்பு, 43,313 வன்முறை குற்றங்கள் பதிவு…

கைரி: வர்த்தகத்துறைக்கான உதவித் தொகையையும் குறைக்க வேண்டும்

உற்பத்திக்குக் கொடுக்கப்படும் உதவித் தொகையையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கேட்டுக்கொண்டிருக்கிறார். உதவித் தொகைக் குறைப்பால் ஏற்படும் சுமையை மக்கள் மட்டும் அல்ல எல்லாத் தரப்பினருமே ஏற்க வேண்டும் என்றவர் கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.  

காலிட்: பிள்ளைகளை விசாரிக்க பெற்றோரின் அனுமதி தேவையில்லை

போலீஸ் சிறுவர்களை விசாரணை செய்ய பெற்றொர் அனுமதியோ அவர்கள் உடன் இருப்பதோ தேவை இல்லை என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இன்று கூறினார். எஸ்கே பள்ளி மாணவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்திய சம்பவம் பற்றிக் கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு கூறினார். “ஏன் நாங்கள்…

‘உடைக்கப்பட்ட’ கோயிலைக் கண்டு இராமசாமி ஆத்திரம்

‘தலைநகரில், 100 ஆண்டு  பழமைவாய்ந்த  ஸ்ரீமுனீஸ்வரர்  காளியம்மன்  கோயிலுக்கு வருகை புரிந்த  பினாங்கு துணை முதலமைச்சர் II  பி.இராமசாமி,   அப்பகுதியில்  ஒரு கடைதான்  உடைக்கப்பட்டது,  விக்கிரங்கள்  சேதப்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ள கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூரை  “அப்பட்டமான பொய்யர்” என்று சாடினார். “தெங்கு அட்னான் அமைச்சராக…

கோயில் விவகாரத்தில் ‘பொய் சொல்கிறார்’ தெங்கு அட்னான்: மஇகா குற்றச்சாட்டு

கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் 101-ஆண்டு பழமை வாய்ந்த முனீஸ்வரர் கோயிலின் ஒரு பகுதியை உடைக்கவில்லை, ஒரு கடையைத்தான் உடைத்தது என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் ஒரு பொய்யைப் பரப்பி வருகிறார் என மஇகா இளைஞர் பகுதி குறைகூறியுள்ளது. அதன் செயலாளர் சி.சிவராஜா, கோயில்…

பாக் சமட்டிடம் இப்படியா நடந்துகொள்வது? அம்பிகா ஆத்திரம்

தேசிய இலக்கியவாதியான ஏ.சமட் சைட் இரவு பின்னேரத்தில் தடுத்துவைக்கப்பட்டது பற்றிக் கருத்துரைக்க முனைந்த பெர்சே இணைத் தலைவர் எஸ்.அம்பிகாவால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. “மரியாதைக்குரிய ஒரு மனிதரிடம் இப்படியா நடந்துகொள்வது”, என்றவர் பொறிந்து தள்ளினார். “பின்னிரவு 12.30க்கு அவரது வீட்டுக்குச் சென்று விசாரணைக்காக அவரைக் கைது செய்து இரண்டு…

‘துணிச்சலற்ற’ மஇகா ஸ்ரீபிரிஸ்தானா விவகாரத்தை மசீச-விடம் விட்டு விட வேண்டும்

ஸ்ரீபிரிஸ்தானா பள்ளியில் குளியலறை சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரத்துக்குத் தீர்வு காணும் பொறுப்பை மசீச ஏற்பது நல்லது என இந்திய என்ஜிஓ ஒன்று கூறுகிறது. மஇகா தலைவர்கள் “துணிச்சலற்றவர்கள்” என்பதால் அவ்விவகாரத்துக்கு அவர்கள் தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை என மலேசியன் தமிழ் டுடே அமைப்பின் செயலாளர்…

குறைந்த எண்ணெய் விலை கொண்ட நாடுகளின் வரிசையில் மலேசியாவுக்கு எட்டாவது…

அரசாங்கம் எரிபொருளுக்கு வழங்கும் உதவித்தொகையின் காரணமாகத்தான்  குறைந்த எண்ணெய் விலை கொண்ட நாடுகளின் வரிசையில் மலேசியா எட்டாவது இடத்தில் உள்ளது. ரோன்95 பெட்ரோலின் விலையும் டீசலின் விலையும் 20 சென் உயர்ந்துள்ள போதிலும் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியாவில் எண்ணெய் விலை குறைவுதான் என்று துணை நிதி அமைச்சர்…

இறை இல்லங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனக் கூறும் விதிமுறை…

இறை இல்லங்களில் அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் அங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை வரையறுக்கும் சிறப்பு விதிமுறை எதுவும் இல்லை என்கிறது கூட்டரசு பிரதேச அமைச்சு. அப்படி ஒன்றை டிபிகேஎல்-இடம் பேசித்தான் உருவாக்க வேண்டும் என்று அதன் துணை அமைச்சர் டாக்டர்…

சமட் சைட் விசாரணைக்குப் பின்னர் பின்னிரவு 2.30க்கு விடுவிக்கப்பட்டார்

தேசிய இலக்கியவாதியான ஏ.சமட் சைட்,  விசாரணைக்காக டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். “டாங் வாங்கி போலீஸ் நிலயத்துக்குச் செல்கையில் என்னைக் கைது செய்தார்கள்”, என்று சமட்  மலேசியாகினியிடம் தெரிவித்தார். இரவு 12.30க்கு போலீசார் அவரைக்  கைது செய்தனர். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டு இரவு…

குற்றச்செயல் உயர்வுக்குக் காரணம் சட்டமா, அமலாக்கமா?

உங்கள் கருத்து: ‘நம் அண்டை நாடுகளிடமிருந்து, அவர்கள் குற்ற விகிதத்தை எப்படிக் கட்டுக்குள் வைத்துள்ளார்கள் என்று  பாடம் கற்பது நல்லதாக இருக்கும்போல் தெரிகிறது. அவர்கள் சட்டம் போதுமானதாக இல்லை என என்றும் குறை சொன்னதில்லை’ ஜாஹிட்: போலீஸ் கரத்தை வலுப்படுத்த பிசிஏ திருத்தப்படும் சாது3: மலேசியாவில் குற்றங்கள் பெருகுவதற்கு…

இலவச பெட்ரோல் வேண்டாம் என்று கூறும் துணிச்சல் எந்த அமைச்சருக்காவது…

அமைச்சர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கக் கூடாது. அவர்களும் பெட்ரோலுக்குப் பணம் கொடுக்க வேண்டும் எனப் பிரதமர் நஜிப் உத்தரவிட வேண்டும் என்கிறார்  பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி. . சுமார் 70 அமைச்சர்களுக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் இலவச பெட்ரோல் கிடைக்கிறது என்பதால் டீசல் மற்றும் ரோன்95…

சொய் லெக்: எண்ணெய் விலையேற்றத்தை அரசியலாக்காதீர்

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்,  எண்ணெய் விலை உயர்வை அரசியலாக்கி அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பை விதைக்க வேண்டாம் என மாற்றரசுக் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ரோன்95. டீசல் ஆகியவை விலை உயர்ந்தது தொடர்பில் பல தரப்பினர், குறிப்பாக மாற்றர்சுக் கட்சியினர் கேள்வி எழுப்புவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட…

உடலில் பச்சை குத்தப்பட்டிருப்பதை அகற்ற குண்டர்கூட்டம் குடுகுடு ஓட்டம்

‘ஆப்ஸ் கண்டாஸ்’ நடவடிக்கை மிகவும் பயனளித்துள்ளது. அது, குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்களைத் தங்கள் கும்பலை அடையாளம் காட்ட உடலில் குத்தியுள்ள பச்சையை அகற்ற அண்டைநாடுகளுக்கு ஓட்டம் பிடிக்க வைத்துள்ளது. அப்படி ஓடிசெல்ல முனைந்த சிலர் பிடிபட்டிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார். உள்நாட்டில் பச்சையை…

ஜாஹிட்: போலீஸ் கரத்தை வலுப்படுத்த பிசிஏ திருத்தப்படும்

குற்றத்தை எதிர்ப்பதில் போலீசின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில்  1959 ஆம் ஆண்டு குற்றத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். “தீவகற்பத்தில் மட்டுமே அமலில் உள்ள இச்சட்டம் சாபா, சரவாக்குக்கும் விரிவுபடுத்தப்படும்”, என்றாரவர்.…

‘ஓடி ஒளியவில்லை, வீட்டில்தான் இருந்தேன்’: பாக் சமட்

தேசிய இலக்கியவாதி சமட் சைட் போலீசுகுப் பயந்து  ஓடி ஒளிந்துகொண்டார்  என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறி இருந்தார்.  ஆனால், பாக் சமட் அதை மறுக்கிறார். போலீஸ்  வீட்டுக்கு வரவில்லை  என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார் . போலீஸ் தலைவர்  “பொய்யான செய்திகளைப் பரப்பி தம்…

வாங்க, விலை உயர்வு பற்றி விவாதிக்கலாம்: அம்னோவுக்கு ரபிஸி அழைப்பு

பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி இஸ்மாயில், ஆகக் கடைசியாக ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி அம்னோவுடன் பொதுமேடையில்  விவாதிக்க விரும்புகிறார். டிவிட்டரில் தம் விருப்பத்தை வெளியிட்டிருக்கும் ரபிஸி, “பொது விவாதத்துக்கு (அம்னோ இளைஞர் தலைவர்) கைரி (ஜமாலுடின்)-யை அழைக்கலாம் என்று நினைக்கிறேன். அல்லது அம்னோவில் வேறு…

இன்னும் என்னவெல்லாமோ விலை உயரப் போகிறது

உங்கள் கருத்து  ‘ஏற்கனவே பலவித விலை உயர்வால் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இது வேறு. பெட்ரோல் விலை உயர்வு எல்லா சேவைகளையும் பொருள்களையும் பாதிக்கும் என்பதால் எல்லாமே விலை உயரப் போகிறது’ டீசல் ரோன்95 20 சென் உயர்ந்தது ஸ்விபெண்டர்: 1மலேசியா பிரதமர் கூறுகிறார், பிஆர்ஐஎம்(பந்துவான் ரக்யாட்…

ஐஜிபி: பாக் சமட் போலீஸ் கண்ணில் படாமல் ‘பதுங்கி விட்டார்’

ஆகஸ்ட் 30-இல், டாட்டாரான் அருகே, சாங் சாகா மலாயா கொடி பறக்கவிடப்பட்டதன் தொடர்பில் விசாரணைக்கு உதவ போலீஸ் தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட்டைத் தேடி வருகிறது. நேற்றிரவு அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது சமட் அங்கில்லை என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.…