தடுப்புக்காவல் சட்டத்தின் தீமைகளை விளக்க நாடகம் தயாரிக்கிறது சுவாராம்

மனித உரிமை என்ஜிஓ-வான சுவாராம், தடுப்புக்காவல் சட்டங்களின் தீமைகளை விளக்கும் நாடகம் ஒன்றை அரங்கேற்றவுள்ளது. “Bilik Sulit” என்னும் தலைப்பைக் கொண்ட அந்நாடகம் செப்வம்பர் 19-இலிருந்து 22வரை கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மணடபத்தில் அரங்கேறும். அந்நாடகம் முன்னாள் தடுப்புக்காவல் கைதிகளின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன் தடுப்புக் கைதிகளை…

பிஎஸ்எம்: ரிம30 பில்லியன் ஒதுக்கீடு ஏழை பூமிகளுக்கும்கூட உதவப்போவதில்லை

இனத்தின் அடிப்படையில் சமுதாயத்தைத் திருத்தி அமைப்பதானது மற்ற இனங்களின் ஏழை மக்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் நியாயமான செயலல்ல என்பது ஒரு புறமிருக்க அதே இனத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்கும்கூட அது நியாயம் செய்வதாக இல்லை என்கிறார் மலேசிய சோசலிச கட்சியின் (பிஎஸ்எம்) தலைவர் ஒருவர். “அது, ஏழை பூமிபுத்ராக்களைக் காண்பித்து…

சின் பெங்கின் உடல் கொண்டுவரப்படுவதைத் தடுக்க முழு விழிப்பு நிலையில்…

காலஞ்சென்ற முன்னாள் மலாயா கம்முனிஸ்டுக் கட்சித் தலைவர் சின் பெங்கின் உடல் மலேசியாவுக்குள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதில் பொலீசார் தீவிரமாக உள்ளனர். “சின் பெங்கின் உடல் கொண்டுவரப்படுவதைத் தடுக்க எல்லா நுழைவுப்பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன”, என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் நேற்றிரவு டிவிட்டரில் பதிவு செய்திருந்தார்.…

விரைவு-ரயில் சேவை பற்றி தலைவர்கள் அடுத்த ஆண்டில் இறுதி முடிவு…

சிங்கப்பூரையும் கோலாலும்பூரையும் இணைக்கும் விரைவு-ரயில் சேவை மீது அடுத்த ஆண்டில் இறுதி முடிவு செய்யப்படும்  என சிங்கப்பூருக்கான மலேசிய தூதர் உஸ்னி ஸை யாக்கூப் கூறினார். ஆண்டுதோறும் தனி இடத்தில் சந்தித்துப் பேசும் வழக்கத்தைக் கொண்டுள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியான் லூங்கும்…

அன்வார்: சின் பெங் விசயத்தில் நடந்ததை மறப்போம்

காலஞ்சென்ற முன்னாள் கம்முனிஸ்டு தலைவர் சின் பெங்கின் உடல் மலேசியாவுக்குள் வரக்கூடாது எனக் கூட்டரசு அரசாங்கம் பிடிவாதமாக இருப்பது பற்றிக் கருத்துரைத்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், “கடந்தகால சம்பவங்கள் கடந்தவையாகவே இருக்கட்டுமே”, என்றார்.

குதப்புணர்ச்சி வழக்குII: நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கர்பாலின் மனு…

இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக் கோரி வழக்குரைஞர் கர்பால் செய்திருந்த மனுவை முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவரது மனுவை விசாரித்த மூவரடங்கிய நீதிபதி குழுவுக்குத் தலைமைதாங்கிய நீதிபதி ரம்பி அலி, மாற்று நீதிபதி யார் என்பது நாளை முடிவு…

சின் பெங் மலேசியக் குடிமகன் அல்ல: ஐஜிபி நினைவுறுத்தல்

காலஞ்சென்ற முன்னாள் மலேசிய கம்முனிஸ்டு கட்சி(சிபிஎம்)த் தலைமைச் செயலாளர் சின் பெங்-கின் உடல் மலேசியாவுக்குக் கொண்டுவரலாமா என்று கேட்கவே  கூடாது என்கிறார் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார். “அவர் சித்தியாவானில் பிறந்தவர் என்றாலும் அவர் ஒரு மலேசியக் குடிமகன் அல்லர். சிபிஎம்-மில் சேர்ந்தபோது அவர் குடியுரிமை …

பிரதமர்: சரவாக் உருமாற்றம் காண பிஎன் உதவும்

கூட்டரசு அரசாங்கத்துக்கும் சரவாக் அரசுக்குமிடையில் நிலவும் நெருக்கமான ஒத்துழைப்பு அம்மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு வழிகோலும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குறிப்பிட்டார். “இந்த நெருக்கமான ஒத்துழைப்பு அடுத்த 50 ஆண்டுகளில் சரவாக்  மேலும் முன்னேற்றம் காணும் என்பதற்கு உத்தரவாதமாகும்”, என்றாரவர். சாபா, சரவாக் மக்கள் பல இனங்களைச் சேர்ந்தவர்கள்…

பெர்காசா: சின் பெங்கின் அஸ்திகூட மலேசியாவுக்குள் வரக்கூடாது

காலஞ்சென்ற சின் பெங்கின் உடலை மலேசியாவுக்குள் கொண்டுவரப்படுவதை பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி எதிர்க்கிறார். “இறந்துவிட்டாலும் அவரது உடலைக்கூட இங்கு புதைக்கக் கூடாது”, என்றாரவர். சின் பெங் இன்று காலை பெங்கோக்கில் காலமானார். சின் பெங் கம்முனிஸ்டு தலைவர் என்பதுடன் வன்கொடுமையாளர், ஒரு குற்றவாளி என்று இப்ராகிம் வருணித்தார்.

முன்னாள்-சிபிஎம் தலைவர் சின் பெங் காலமானார்

மலேயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சின் பெங் இன்று தாய்லாந்து, பேங்கோக் மருத்துவமலையில் காலமானார். பேங்கோக் போஸ்ட் நாளிதழின் தகவல்படி அவர் காலை மணி 6.20 அளவில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஓங் பூன் ஹுவா என்ற இயற்பெயர் கொண்ட சின் பெங் 1924 ஆம்…

எந்த மலேசியப் பல்கலைக்கழகமும் 100-வது இடத்துக்குள் இருந்ததில்லை

மலாயாப் பல்கலைக்கழகம்(யுஎம்)  ஒரு காலத்தில் தரம் உயர்ந்திருந்து இப்போது தாழ்ந்து போனதாகக் கூறப்படுவது உண்மையல்ல என அதன் துணை வேந்தர் கவுத் ஜஸ்மோன் மறுப்பறிக்கை விடுத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் கடந்த ஐந்தாண்டுகளில் அதன் தரம் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. QS உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 2007-இல், 246-வது…

மசீச: ஜிஎல்சி ஓர் இனத்திற்குச் சொந்தமானதல்ல

பூமிபுத்ரா சமூகத்திற்கு புத்ராஜெயாவின் பதிய பொருளாதார திட்ட அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், மசீசவின் இளைஞர் பிரிவு அரசு தொடர்புள்ள நிறுவனங்கள் (ஜிஎல்சி) இன அடிப்படையிலான இலக்குகளை உருவாக்கக் கூடாது ஏனென்றால் அவற்றுக்கான நிதி அனைத்து மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுகிறது என்று பிரதமர் நஜிப்புக்கு நினைவுறுத்தியுள்ளது. "இன்றைய உள்ளூர்…

வேதமூர்த்தி பதவியிலிருந்து வெளியேற வேண்டும்

-மு. குலசேகரன், ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 14, 2013.   வேதமூர்த்தி துணை அமைச்சர் பதவி ஏற்ற 100 நாட்களில் தன்னால் ஒன்றுமே செய்ய இயலவில்லை என்று அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.   கடைசி நிமிடம் வரை அம்னோவையும் பாரிசான் அரசையும் எதிர்த்து வந்த…

பூமிபுத்ராக்களுக்கு உதவும் திட்டத்தால் பூமி-அல்லாதார் பாதிக்கப்பட மாட்டார்கள்: பிரதமர் உத்தரவாதம்

இன்று மலாய்க்காரர்களுக்கும் மற்ற பூமிபுத்ராக்களுக்கும் உதவும் பல்வேறு திட்டங்களை அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவற்றால் மற்ற இனத்தவரின் நலன்கள் பாதிக்கப்பட மாட்டா என்பதற்கும் உத்தரவாதம் அளித்தார். “மலாய்க்காரர்களுக்குப் பொருளாதார அதிகாரத்தைக் கொடுக்கும் திட்டங்களைத் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். “இதனால் மற்றவர்களின் உரிமைகள் பறிபோகா....மற்ற இனங்களுக்குப் பாரபட்சம்…

பூமித்ராக்களுக்குத் தேர்தல்-பிந்திய வெகுமதிகளை அள்ளிக் கொடுக்கிறார் நஜிப்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பூமித்ராக்களின் பொருளாதார நிலையை மேலும் உயர்த்தும் பல்வேறு நடவடிக்கைகளை இன்று அறிவித்தார். அந்நடவடிக்கைகள்  கடந்த பொதுத் தேர்தலில் பூமிபுத்ராக்கள் அளித்த ஆதரவுக்குக் கைமாறாகும் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. அண்மைய 13வது பொதுத் தேர்தலில் மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களும் வழங்கிய ஆதரவின் அடிப்படையில் அரசாங்கம்…

நஜிப்: உத்துசானில் கூடுதல் விளம்பரங்கள் செய்வீர்! வாசகர்கள் என்ன சொல்கிறார்கள்?

சிங்கம்: மக்கள் பணம் அம்னோவுக்குத்தான் என்பதை தெளிவாக்கியுள்ளார் பிரதமர். ஆம்! உத்துசான், அம்னோவின் பத்திரிகை. அரசு விளம்பரங்கள் உத்துசானுக்குதான் போகவேண்டும் என்றால், கூஜா தூக்கிகலான மற்ற பத்திரிக்கைகளின் பிழைப்பு? நம் நாட்டில் பெரும்பாலான பத்திரிக்கைகள் அரசையும் அம்னோவையும் துதிபாடுபவை. ஆனால் இந்த உத்துசான் பொய்களையே கூறி ஓட்டாண்டியாய் போன கழிவறைப்…

தெங் பினாங்கு கெராக்கான் தலைவராவதற்கு முன்னாள் தலைமைச் செயலாளர் ஆதரவு

நாளை நடைபெறும் பினாங்கு கெராக்கான் தலைவர் போட்டியில் தம் ஆதரவு தெங் சாங் இயோவுக்கே என அக்கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சியா குவாங் சை, வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். பினாங்கு கெராக்கானுக்குத் தலைமையேற்கும் வாய்ப்பு தெங்குக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றாரவர். அதே வேளையில் தலைவர் பதவிக்குப் போட்டி இல்லாதிருப்பதையே…

தீர்வு காணப்பட்ட நிலையிலும் கம்போங் ரயில்வே குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படும் அபாயம்

கம்போங் ரயில்வே விவகாரத்துக்கு நீதிமன்றத்துக்கு வெளியில் ஒரு தீர்வு காணப்பட்டுள்ள நிலையிலும் குடியிருப்பாளர்கள்  செவ்வாய்க்கிழமைக்குள் இடத்தைக் காலி செய்தாக வேண்டும் என அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்படுவோருக்கு கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) தற்காலிக வீட்டு வசதிகளை இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதால் செவ்வாய்க்கிழமையன்று அவர்கள் வீடற்றவர்களாகத்தான் நிற்பார்கள்…

உத்துசான் மலேசியாவை காப்பற்ற மக்கள் பணமா?

நேற்று கோலாலம்பூரில் உத்துசான் மலேசியா நாளிதழ் தலைமையகத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த பிரதமர் நஜிப் ரசாக் அரசாங்க ஏஜென்சிகளும், அரசாங்க தொடர்புடைய நிறுவனங்களும் உத்துசான் மலேசியாவில் அதிகமாக விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "அனைத்து அரசாங்க ஏஜென்சிகளும், அரசாங்கம் தொடர்புடைய  ஜிஎல்சிகளும் மற்றும் தனியார்…

பெர்சே ஆர்ப்பாட்டக்காரருக்கு 16 மாதச் சிறை

கடந்த ஆண்டு  பெர்சே பேரணியின்போது ஒரு போலீஸ் வாகனத்தைச் சேதப்படுத்தியதற்காகவும் ஒரு போலீஸ்காரரையும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஒருவரையும் காயப்படுத்தியதற்காகவும் 26-வயது பால்வெட்டுத் தொழிலாளர் ஒருவருக்கு கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம்  16மாதச் சிறைத் தண்டனையும் ரிம5,500 அபராதமும் விதித்தது. முகமட் சபுவான் மாமாட் குற்றவாளிதான் என்பதை அரசுத் தரப்பு ஐயத்துக்கிடமின்றி…

உத்துசானில் கூடுதல் விளம்பரங்கள் செய்வீர்: அரசுத் துறைகளுக்கும் ஜிஎல்சி-களுக்கும் நஜிப்…

அரசுத் துறைகளும் அரசுசார்ந்த நிறுவனங்களும் (ஜிஎல்சி),  அம்னோவின் குரலாக விளங்கும் உத்துசான் மலேசியாவில் கூடுதல் விளம்பரங்களைச் செய்ய வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்தியுள்ளார். 75-ஆண்டுகளுக்குமுன் தோற்றுவிக்கப்பட்ட அந்நாளேடு தொடர்ந்து நிலைத்திருக்க அது அவசியம் என்றாரவர். ஜாலான் சான் செள லின், ஜாலான் எனாமில் உத்துசானின்…

2014 ஜூலைவரை மிகக்குறைந்த கட்டணத்தில் விமானப் பயணங்கள், எம்ஏஎஸ் வழங்குகிறது

மலேசிய விமான நிறுவனம், செப்டம்பர் 16-க்குப் பின்னர் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு தொடர்ந்து குறைந்த கட்டணங்களில் பயணங்களை வழங்குகிறது. குறிப்பிட்ட சில உள்ளூர், அனைத்துலக பயணங்களுக்கு மட்டுமே இச் சலுகை என எம்ஏஎஸ் ஓர் அறிக்கையில் கூறியது. “சில இடங்களுக்கான கட்டணங்களில் 55விழுக்காடுவரை கழிவு வழங்கப்படுகிறது”, என அந்நிறுவனத்தின்…

எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானா விவகாரத்தில் முழு விசாரணை தேவை

குளியலறை உணவு உண்ணும் இடமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் முடிவின்றி இழுத்துக்கொண்டே போவதற்கு  எஸ்கே ஸ்ரீ பிரிஸ்தானா தலைமையாசிரியரும் கல்வி அமைச்சும்தான் காரணம் என்கிறார் ஈப்போ பாராட் டிஏபி எம்பி, எம்.குலசேகரன். கல்வி அமைச்சு உடனடியாக விசாரணை மேற்கொண்டிருந்தால் விவகாரம் இவ்வளவு பெரிதாக உருவாகி இருக்காது. ஆனால், கல்வி அமைச்சு…