விடுப்பில் செல்வீர்: பிரதமருக்கு லாபிஸ் அம்னோ கோரிக்கை

ஜோகூர்  லாபிஸ்  அம்னோ  இளைஞர்  பகுதி,  1எம்டிபி  சிறப்புப்  பணிக்குழு  அதன்  பணியை  இடையூறின்றிச்  செய்வதற்கு  வசதியாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  விடுப்பில்  செல்ல  வேண்டுமென  வலியுறுத்தியுள்ளது. நஜிப்,  பொதுக்  கணக்குக்குழு  உறுப்பினர்கள்  நால்வரை அமைச்சரவையில்  இழுத்துப்  போட்டுக்  கொண்டு  அப்துல்  கனி  பட்டேலைச்  சட்டத்துறைத்  தலைவர் …

பிஏசி அதன் விசாரணையைத் தொடரும்

அடுத்த மாதம்  நடைபெறத்  திட்டமிடப்பட்டிருக்கும்  பொதுக்  கணக்குக்  குழுவின்(பிஏசி)  விசாரணையை  எக்காரணம்  கொண்டும்  தாமதப்படுத்தக்  கூடாது  என  பிஏசி  துணைத்  தலைவர்  டாக்டர்  டான்  செங்  கியாவ் கூறினார். இன்று  ஓர்  அறிக்கையில்  இவ்வாறு  உரைத்த  கெப்போங்  எம்பியுமான  டான்,  செவ்வாய்க்கிழமை  தொடங்கி  மூன்று  நாள்களுக்கு  நடைபெறும்  விசாரணை …

‘நஜிப்பைக் கைது செய்’ என்று கூறும் குரல் என்னுடையது அல்ல:…

நெகிரி  செம்பிலான்  மந்திரி  புசார்  முகம்மட்  ஹசான்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கைது  செய்ய  வேண்டுமென்று  தாம்  ஒரு  போதும்  சொன்னதில்லை  என்று  மறுத்திருக்கிறார். சுவாரா  டிவி-இல்   ஒலிக்கும்   குரல்  தம்முடையது  அல்ல  என்றாரவர். “சமூக  ஊடகங்களில்  வலம் வந்து  கொண்டிருக்கும்  அந்தக்  குரல்  என்னுடையது  எனச் …

எம்எச்370-இன் உடைந்த பாகம்தான் என்பதில் ஆய்வாளர்களுக்கிடையில் கருத்துவேறுபாடு

மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச் 370  காணாமல்போய்  16  மாதங்கள்  ஆகும்  வேளையில்  புதிதாகக்  கிடைத்துள்ள  ஒரு  தடயம்  அந்த  விமானத்தைக் கண்டுபிடிக்கும்  நம்பிக்கையைத் தந்துள்ளது. மடகாஸ்கார்  கரைக்கு  அப்பால்  மாரிசியஸ்  தீவிலிருந்து  175 கிமீ  தொலைவில்,  ரியூனியன் தீவில் விமானத்தின்  உடைந்த  பகுதி  ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டது  இந்த …

சட்ட நிபுணர் அசீஸ் பாரி டிஏபி-இல் சேர்ந்தார்

அரசமைப்புச்  சட்ட  வல்லுனரும்  முன்னாள்  சட்ட  விரிவுரையாளருமான  அப்துல்  அசீஸ்  பாரி  டிஏபி-இல்  சேர்ந்துள்ளார். டிஏபி  திறமைக்கு  மதிப்புக்  கொடுப்பதும்  அனைவரையும்  அரவணைத்துச்  செல்லும்  அதன்  பண்பும்  தம்மை  வெகுவாகக்  கவர்ந்து  விட்டது  என்றாரவர். கடந்த  பொதுத்  தேர்தலில்,  அசீஸ்  சாபாக்  பெர்ணம்  நாடாளுமன்றத்  தொகுதியில்  பிகேஆர்  வேட்பாளராக …

1எம்டிபி விசாரணைக்கு முழுக்கு?…. டிஐ-எம் அப்படித்தான் நினைக்கிறது

நாட்டில்  ஏற்பட்டுள்ள  சில  அரசியல்  நடப்புகளைப்  பார்க்கையில்  1எம்டிபி மீதான  விசாரணைகள்  இருக்கிறதா  இல்லையா  என்றே  தெரியவில்லை என்று  கூறும் ட்ரேன்ஸ்பேரன்சி   இண்டர்நேசனல்  மலேசியா (டிஐ-எம்) விசாரணைகளுக்கு  முழுக்குப்  போடப்பட்டு  விட்டதாகவே  தோன்றுகிறது  எனக்  குறிப்பிட்டுள்ளது. 1எம்டிபி  மீது  தனித்தனியே  இரண்டு  விசாரணைக்  குழுக்கள்  அமைக்கப்பட்டன. ஒன்று  நாடாளுமன்ற …

கணக்கில் ரிம2.6 பில்லியன் வைக்கப்பட்டதை பிரதமர் ஒப்புக்கொண்டார் என்கிறார் முகைதின்

  நேற்றிரவு முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அவரது இல்லத்தில் பலரைச் சந்தித்து அவர்களுடன் நடத்திய உரையாடல் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டு கசிய விடப்பட்டுள்ளது. தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் அந்த வீடியோ பதிவில் பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட கணக்கிற்கு பல மில்லியன்கள் மாற்றப்பட்டது பற்றி…

பெர்சே 4.0 பேரணி நஜிப் பதவி விலகக் கோரிக்கை விடுக்கும்

பெர்சே,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலக  வேண்டும்  என்பதை  வலியுறுத்தி  மூன்று  மாநகரங்களில்  மிகப்  பெரிய  அளவில்  பேரணி  நடத்தத்  திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட்  29-30 இரவில்  நடத்தப்படும்  அப்பேரணி  நிறுவனப்பூர்வமான  சீரமைப்புகள்  உள்பட, நான்கு  கோரிக்கைகளைக்  கொண்டிருக்கும். அப்பேரணி  கோலாலும்பூர்,  கூச்சிங்,  கோட்டா  கினாபாலு  ஆகிய …

முகைதின்: ஒரு தலையசைவில் பதவி பறிபோயிற்று

ஒரு  சிறிய தலை அசைவுதான். அதன்  மூலமாக  பிரதமர்  நஜிப்  ரசாக்  துணைப்  பிரதமராக இருந்த  முகைதின்  யாசினைப்  பதவியிலிருந்து  வெளியேற்றினார். தாம்  பதவிநீக்கம்  செய்யப்பட்ட  விதத்தை  முகைதின்  செய்தியாளர்களிடம்  விவரித்தார். “நேற்று  பிற்பகல்  12.15க்குப்  பிரதமரைச்  சந்திக்குமாறு  என்னிடம்  கூறப்பட்டது. “சிறிது  பேசிய  பின்னர்  அழைத்தது ஏன் …

முகைதின்: நாடாளுமன்ற கொறடா சொல்வதைக் கேட்பேன்

நாடாளுமன்றத்தில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்க்கு  எதிராக  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டுவரப்படுமானால் முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  அம்னோவின்  நாடாளுமன்ற  கொறடா  சொல்படிதான்  நடந்து கொள்வார். “நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டுவரப்படுமா  என்பது  எனக்குத்  தெரியாது. “(அப்படி கொண்டுவரப்பட்டால்) கட்சியின்  பொறுப்பான  உறுப்பினர்  என்ற  முறையில்  கட்சி  கொறடா …

முகைதின்: மகாதிர் மகனுடன் சேர்ந்து சதி செய்யவில்லை

டாக்டர்  மகாதிரின்  புதல்வர்  முக்ரிஸுடன்  சேர்ந்து  சதி  செய்வதாகக்  கூறப்படுவதை  முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  மறுத்தார்.  முக்ரிஸ்  நேற்று முகைதினைச் சந்திக்க  அவரது  வீட்டுக்குச்  சென்றதை  வைத்து  அவ்வாறு  கூறப்படுகிறது. புக்கிட்  டமன்சாராவில்  உள்ள  தம் இல்லத்தில்  செய்தியாளர்களிடம்  பேசிய  முகைதின்  அது வழக்கமான  ஒரு   …

சைட் அலி: 1எம்டிபி விவகாரத்தில் முகைதினுடன் ஒத்துப் போகிறேன்

செராஸ்  அம்னோ தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷி,   1எம்டிபி  விவகாரத்தில்  முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  கொண்டுள்ள  கவலையைத்  தாமும்  பகிர்ந்து  கொள்வதாகக்  கூறினார். “1எம்டிபி  விவகாரத்துக்குத்  தீர்வு  காணாவிட்டால்  அது  அம்னோவுக்கும்  பிஎன்னுக்கும்  சுமையாகிவிடும்  என  முகைதின்  கூறியதை  நானும்  ஒத்துக்கொள்கிறேன்”, என்றாரவர். “1எம்டிபி …

மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க பிரதமருக்கு உதவுவேன் -நூர் ஜஸ்லான் சூளுரை

உள்துறை  துணை  அமைச்சராக  புதிதாக  நியமிக்கப்பட்டிருக்கும் நூர்  ஜ்ஸ்லான்  முகம்மட்,  அரசாங்கத்தின்மீது  மக்களின்  நம்பிக்கையைப்  பெருக்க பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  உதவியாக இருக்கப்போவதாக  உறுதி  கூறியுள்ளார். “பொதுஒழுங்கை  நிலைநிறுத்தி  அரசாங்கத்தின்மீது  மக்களுக்குள்ள  நம்பிக்கை  உயர்வதற்கு  உதவுவேன்  என  வாக்குறுதி  அளிக்கிறேன். “அத்துடன் (புதிதாக  துணைப்  பிரதமராகியுள்ள) உள்துறை …

முகைதினை வெளியேற்றிய நஜிப்பைச் சாடுகிறார் அம்னோ மூத்த உறுப்பினர்

அம்னோ  அவை  துணைத் தலைவர் முகம்மட்  அசீஸ், துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  முகைதின்  யாசினைத்   அகற்றியதற்காக பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைச்  சாடியுள்ளார். ஜோகூர்  சட்டமன்றத்  தலைவரும்  அம்னோவில்  50 ஆண்டுகளுக்குமேல்  உறுப்பினராகவுமுள்ள  முகம்மட்,  நஜிப் கட்சியை  அழிக்கப்  பார்க்கிறார்  எனக்  குற்றம்  சாட்டினார். “இது  அம்னோவுக்கு  நல்லதல்ல.…

பிரதமரின் முகநூல் பக்கத்தில் பதவி விலகச் சொல்லும் செய்திகள் குவிகின்றன

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினைப்  பதவியிலிருந்து  வெளியேற்றியதை  அடுத்து  அவரது  முகநூல்  பக்கத்தில்  நேற்று  தொடங்கி  "#najibletakjawatan” செய்திகள்  நிறைந்து  வருகின்றன. இன்று காலைவரை 34,952  கருத்துகள்  அப்பக்கத்தில்  பதிவிடப்பட்டிருந்தன. பெரும்பாலானவை நஜிப்பைப்  பதவி  விலகச்  சொல்லியிருந்தன. அதை  எதிர்க்கும்  வகையில்  நஜிப் …

புதிய அமைச்சர்களும் துணை அமைச்சர்களும்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அறிவித்த  அமைச்சரவை  மாற்றத்தில் அமைச்சர்கள்  ஐவர்  பதவியிலிருந்து  அகற்றப்பட்டிருக்கிறார்கள். அதேவேளை  புதிதாக  எழுவர்  அமைச்சர்களாக  நியமிக்கப்பட்டிருக்கிறாரக்ள். புதிய  அமைச்சர்கள்:- -வில்வ்ரெட்  மட்யுஸ்  தங்காவ் (அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க  அமைச்சர்) -ஹம்சா  சைனுடின் (உள்நாட்டு  வர்த்தக, கூட்டுறவு, பயனீட்டாளர்  விவகார  அமைச்சர்) -வான் ஜுனாய்டி…

நாடாளுமன்றத்தில் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

முகைதின்  யாசினும்  பிஎன்னுக்கு  விசுவாசமாகவுள்ள  மற்ற  எம்பிகளும்  எதிரணியினருடன்  சேர்ந்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிரான  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்துக்கு  ஆதரவாக  வாக்களிக்க  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இது  மலேசியாவைப்  பாதுகாக்கும் திட்டத்தின்  ஒரு  பகுதியாகும்  என  கெராக்கான்  ஹராபான்  பாரு (ஜிஎச்பி) தலைவர்  முகம்மட்  சாபு, …

‘முகைதினை நீக்குவது சிரமமாகத்தான் இருந்தது ஆனாலும் செய்ய வேண்டியதாயிற்று’

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  முகைதின்  யாசினைத்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  நீக்குவது  ஒரு  சிரமமான  முடிவுதான்  என்றாலும்  அமைச்சரவை  கருத்துவேறுபாடின்றி  ஒன்றாக  செயல்படுவதற்கு  அப்படிச்  செய்வது  அவசியமாயிற்று  என்றார். “முகைதினை  வெளியேற்றுவது  என்பது  சிரமமான  முடிவுதான். ஆனாலும்,  அமைச்சரவை  ஒன்றாகச்  செயல்படுவதற்கு  நான்  வலுக்கட்டாயமாக  அவ்வாறு  செய்ய …

முகைதின் நீக்கப்பட்டார், ஜாஹிட் புதிய துணைப் பிரதமர்

முகைதின்  யாசின்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  கழட்டி  விடப்பட்டார். இன்று  பிற்பகல் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  புதிய  அமைச்சரவையை  அறிவித்தார். அம்னோ  உதவித்  தலைவரும் உள்துறை  அமைச்சருமான அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  புதிய  துணைப்  பிரதமராக  அறிவிக்கப்படிருக்கிறார். 1எம்டிபி  விவகாரத்தில்  குறைகூறி  வந்ததற்காக முகைதின்  துணைப்  பிரதமர் …

புதிய அமைச்சரவை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் பிஎம்ஓ-வில் செய்தியாளர்கள் குவிந்தனர்

புத்ரா  ஜெயாவில்  பிரதமர்துறை  அலுவலகத்தில்  செய்தியாளர்களின்  கூட்டமோ  கூட்டம். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் விரைவில்  புதிய  அமைச்சரவையை  அறிவிக்கப்  போகிறார்  என்ற  எதிர்பார்ப்புதான்  இதற்குக்  காரணம். முதலில்  மூன்று  மணிக்கு  பிரதமர்  புதிய  அமைச்சரவையை  அறிவிப்பார்  என்று  சொல்லப்பட்டது. பிறகு  பிற்பகல்  1 மணிக்கு  என்றார்கள். மலேசியாகினியும் …

‘துணைப் பிரதமர் சொன்னது தவறு, 1எம்டிபி காரணமாக அம்னோ தேர்தலில்…

1எம்டிபி விவகாரம்  காரணமாக  அம்னோ  அடுத்த  பொதுத்  தேர்தலில்  தோற்றுப்  போகும்  எனத்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  கூறியிருப்பதை  விவசாயம், விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப்  நிராகரித்துள்ளார். அம்னோ  ஒற்றுமையாக  இருந்து  அதன்  உறுப்பினர்கள்  அடுத்த  பொதுத்  தேர்தலில்  வெற்றி  பெறும்  நோக்கத்துடன் …

அமைச்சரவை மாற்றம்? துணைப் பிரதமர் கழட்டி விடப்படுவாரா?

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் புதிய  அமைச்சரவை  பட்டியலுடன்  பேரரசரைச்  சந்தித்திருப்பதாகக்  கூறப்படுகிறது. அமைச்சரவை  மாற்றம்  பற்றி  விரைவில்  அறிவிக்கப்படலாம்  என்று  அம்னோவின்  குரலாக  விளங்கும் உத்துசான்  மலேசியா  ஆன்லைன்  நள்ளிரவுக்குப்  பின்னர்  அறிவித்திருந்தது. இன்று  பிற்பகல்கூட அறிவிக்கப்படலாம்  என  ஊகங்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே,  நஜிப்  1எம்டிபி  விவகாரத்தைக் …

பதவி முடிவுக்கு வந்தது கனிக்கே தெரியாதாம்

உடல்நலக்  குறைவு  காரணமாக தமது  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி) பதவி  முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டிருப்பது  தமக்கே  தெரியாது  என்கிறார்  அப்துல்  கனி  பட்டேய்ல். அரசாங்கத்  தலைமைச்  செயலாளர்  அப்படி  ஓர்  அறிவிப்பைச்  செய்தது  தமக்குத்  தெரியாது  என  கனி  மலாய்  மெயில்  ஆன்லைன்  இணையத்தளத்திடம்  தெரிவித்துள்ளார். “எனக்குத்  தெரியாது.…