திரெங்கானு சுல்தானின் சிற்றப்பா பாஸிலிருந்து விலகினார்

சுல்தான்  திரெங்கானு  சுல்தான்  மிஸான்  சைனல்  அபிடினின்  சிற்றப்பா  தெங்கு  ஸ்ரீ  படுகா  ராஜா  தெங்கு  இப்ராகிம் பாஸ்  கட்சியிலிருந்து  விலகியுள்ளார். ஆறாண்டுகளாக  பாஸ்  உறுப்பினராக இருந்த தெங்கு  இப்ராகிமுக்கு  கடந்த  கட்சித்  தேர்தலில்  முற்போக்காளர்கள்  நிராகரிக்கப்பட்டது  பிடிக்கவில்லை. அதனால்  அதிலிருந்து விலகினார். தெங்கு  இப்ராகிம்  கோலா  திரெங்கானு …

1எம்டிபி தகவல் கசிவு தொடர்பில் எம்ஏசிசி உயர் அதிகாரியிடம் போலீஸ்…

போலீசார்  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையத்தின்  உயர்  அதிகாரி  ஒருவரை   புத்ரா  ஜெயாவில்  உள்ள  அவரது  அலுவலகத்தில்  விசாரித்து  வருகின்றனர். 1எம்டிபி  புலனாய்வுத்  தகவல்களைக்  கசிய விட்டது  தொடர்பில்  அந்த  விசாரணை  நடைபெறுவதாக  தெரிகிறது. புக்கிட்  அமான்  குற்றப்  புலனாய்வுத்  துறை  அதிகாரிகள்  மூவர்  பிற்பகல்  மணி  2.45க்கு  எம்ஏசிசி …

முன்னாள் எம்பி: புதிய அமைச்சரவை 1எம்டிபி அமைச்சரவை

முன்னாள்  கெடா  மந்திரி  புசார்  சனுசி  ஜுனிட் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  அமைச்சரவையை மட்டம்  தட்டிப்  பேசியுள்ளார். “யாரெல்லாம்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டைச்  சாடிகிறார்களோ  அவர்கள்தாம்   அமைச்சரவையில்  சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். “அந்த வகையில்  இது  1எம்டிபி  அமைச்சரவைபோல்  காட்சியளிக்கிறது.  1எம்டிபி-யைத்  தற்காக்கும்  அமைச்சரவை. 1எம்டிபி-யை  அம்பலப்படுத்தும் …

அம்னோ அடிநிலை உறுப்பினர்கள்: பிரதமர்மீது பாசம் உண்டு, ஆனால், ரிம2.6…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், கடந்த  வார  இறுதியில் கட்சியில்  3மில்லியன்  உறுப்பினர்களின்  ஆதரவு  தமக்கிருப்பதாகக்  கூறிப்  பெருமைப்பட்டுக்  கொண்டார்.  ஆனாலும்,  கட்சியின்  அடிநிலை  உறுப்பினர்களில்  சிலர்  1எம்டிபி  குற்றச்சாட்டுகள்மீதான  உண்மை  தெரிய  வேண்டும்  என்கிறார்கள். “பிரதமர்  அவருடைய  கணக்கில்  போடப்பட்டதாகக்  கூறப்படும்  ரிம2.6 பில்லியன் பணம்  என்னவானது …

கதை கட்டுவோர்மீது மின்னல்வேக நடவடிக்கை: ஜாஹிட் சூளுரை

துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி,  “கதை கட்டுவோர்”மீது  எச்சரிக்கையின்றியே  நடவடிக்கை  எடுக்கப்படும்  எனக்  கூறினார். “இது  எச்சரிக்கை  இல்லை. எச்சரிக்கை  இன்றியே  நடவடிக்கை  எடுப்பேன். அதற்கு  நீங்கள்  கொடுக்கும்  விலை  அதிகமாக  இருக்கும். “எதையும்  இட்டுக்கட்டிக்  கூறாதீர்க்கள். இதுதான்  ஜாஹிட்  ஹமிடி, சரியா?”, என  உள்துறை  அமைச்சருமான …

மகாதிர்: ஐஆர்பி பிரதமர் கணக்கைச் சோதித்ததா?

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கணக்கில்  யுஎஸ்$700மில்லியன்  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படுவதை  உள்நாட்டு  வருமான  வரி  வாரியம் (ஐஆர்பி)  அறியுமா  எனக்  கேள்வி  எழுப்பப்பட்டுள்ளது. கேள்வி  எழுப்பியவர்  முன்னாள் பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். இன்று தம் வலைப்பதிவில்  அக்கேள்வியை  எழுப்பிய  மகாதிர், வருமான  வரி   வாரியத்தின்  சோதனைக்கு  ஆளான …

பிரதமர்: அமைச்சரவை மாற்றம் முடிந்தது; அடுத்த வேலையைக் கவனிப்போம்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அமைச்சரவை  மாற்றங்கள்  முடிந்து  விட்டன  என்பதால்  அதை  விட்டு  முன்னே  சென்று  அதைவிட  முக்கியமான  காரியங்களில்  கவனம்  செலுத்த  வேண்டும்  என்று  கூறினார். “மக்களின்  தேவைகளைக்  கவனிக்க  வேண்டும்”. பிரதமர் இன்று  புத்ரா  ஜெயாவில்  பிரதமர்  அலுவலகப்  பணியாளர்களின்  மாதாந்திரக்  கூட்டத்தில்  பேசினார்.…

முகைதின்:1எம்டிபிமீது வாயைப் பொத்திக் கொண்டிருக்க மாட்டேன்

1எம்டிபி போன்ற  விவகாரங்கள்   மக்கள்  சம்பந்தப்பட்டவை.  அதனால்  வாயைப் பொத்திக்  கொண்டிருக்க  முடியாது  என்கிறார்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  வெளியேற்றப்பட்ட  முகைதின்  யாசின். குளுவாங்  அம்னோ தொகுதி  ஆண்டுக் கூட்டத்தில்  உரையாற்றிய  முகைதின்  தாம்  குற்றம்  ஏதும் செய்ததாகக்  கருதவில்லை  என்றார். தம்  நண்பர்கள்  அம்னோ  துணைத்  தலைவர் …

சமூக ஆர்வலர்கள்: சோதனையில் தோற்றார் துணைப் பிரதமர்

நேற்று  #TangkapNajib(நஜிப்பைக்  கைது செய்) பேரணி  தொடங்குவதற்குமுன்  29 பேர்  கைது  செய்யப்பட்டதானது  பொதுமக்களை  அச்சுறுத்தும்  நடவடிக்கையாகும்  என்று  பேரணி  ஏற்பாட்டாளர்கள்  கூறுகின்றனர். “உண்மையில்  #TangkapNajib பேரணியே புதிய  துணைப்  பிரதமரும் போலீசுக்குப்  பொறுப்பாகவுள்ள  உள்துறை  அமைச்சர்  எப்படி  நடந்துகொள்கிறார்  என்பதை அளவிடும் ஒரு  முயற்சிதான். “பொதுமக்களைப்  பயமுறுத்தும் …

அனல் பறக்கும் குளுவாங் அம்னோ ஆண்டுக் கூட்டம்

குளுவாங்  அம்னோ தொகுதி  ஆண்டுக் கூட்டத்தில்  அல்டான்துன்யா  கொலை  விவகாரமெல்லாம்  கிளறப்படும்  என்பதால் அது  அனல்  பறக்கும் கூட்டமாக  அமையும்  என  எதிர்பார்க்கப்படுகிறது. அந்த  ஆண்டுக்கூட்டத்துக்கு  வருகை  புரிந்த  அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசினுக்கு  சிரம்பான்,  கோத்தா  மலாக்காபோல்  அல்லாது  சிறப்பான  வரவேற்பு  கொடுக்கப்பட்டது. சுமார்  400 …

நஜிப் கூறுகிறார்: 1எம்டிபி சொத்துகள் மீது சீனாவும் காட்டாரும் ஆர்வம்…

கடனில் மூழ்கிக்கிடக்கும் 1எம்டிபியின் சொத்துகள் மீது காட்டாரும் சீனாவும் ஆர்வம் கொண்டிருக்கின்றன என்று பிரதமர் நஜிப் கூறியதாக பெர்னாமாவின் சனிக்கிழமை செய்தி கூறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காட்டாரின் அமிர் ஸீக் தாமின் பின் ஹாமாட் அல்-தானியும் பிரதமர் நஜிப்பும் சந்தித்தனர். அப்போது அமிர் 1எம்டிபியின் சொத்துகள் மீது ஆர்வம்…

முகமட் ஹசான்: நெகிரி செம்பிலானில் எல்லாம் அம்னோவுக்கே வேண்டும்

நெகிரி செம்பிலான் சட்டமன்ற தொகுதிகள் அனைத்தையும் பாரிசான் பங்காளிக் கட்சிகளின் உதவி இல்லாமல் அம்னோ கைப்பற்ற முடியும் என்று நெகிரி செம்பிலான் மாநில மந்திரி புசார் முகமட் ஹசான் இன்று கூறினார். பிரச்சனைகளில் சிக்கித் தத்தளிக்கும் பாரிசான் பங்காளிக் கட்சிகளை அவற்றின் போக்கிற்கே விட்டு விடுவோம். அவை செத்துத்…

#TangkapNajib ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது: 20 பேருக்குமேல் கைது

#TangkapNajib  ஆர்ப்பாட்டத்தை  அதன் ஆரம்பக்  கட்டத்திலேயே  போலீசார்  முறியடித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொள்ள  வந்தவர்களில்  20 பேருக்கு  மேற்பட்டோர்  கைது  செய்யப்பட்டதாக  டாங்  வாங்கி  போலீஸ்  தலைமையகப்  பேச்சாளர்  ஒருவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார். இதனிடையே, போலீசார்  துவாங்கு  அப்துல் ரஹ்மான் சாலையை மூடியுள்ளனர். அங்கிருந்த  பொதுமக்களிடம்  உடனடியாக  இடத்தைக்  காலி …

#TangkapNajib ஆர்ப்பாட்டம்: இதுவரை 10 பேர் கைது

பிற்பகல்  மணி  2.30  அளவில்,  #TangkapNajib(நஜிப்பைக்  கைது  செய்) ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட  கிள்ளான்  எம்பி  சார்ல்ஸ்  சந்தியாகுவின்  உதவியாளர்  ஜேய்  ஜேய்  டென்னிஸ்  உள்பட சுமார்  பத்து  பேர்  கைது  செய்யப்பட்டனர். ஒருவர் போலீஸ்மீது  பட்டாசுகளைக்  கொளுத்திப்  போட்டதற்காகக்  கைது  செய்யப்பட்டார். கைது  நடவடிக்கை  அதிர்ச்சியளிப்பதாக  அங்குள்ள  வழக்குரைஞர் …

#TangkapNajib பேரணிக்கு முன்னதாக போலீஸ் குவிப்பு

கோலாலும்பூரில்  #TangkapNajib (நஜிப்பைக் கைதுசெய்) பேரணியை  ஒடுக்குவதற்காக  போலீசார்  நிறைய குவிக்கப்பட்டுள்ளனர். சுமார்  80  போலீசார்  ஆர்ப்பாட்டம்  தொடங்குவதற்கு  அரை  மணி  நேரத்துக்கு  முன்னதாக பிற்பகல்  மணி  1.30க்கு    ஆர்ப்பாட்டக்காரர்கள்  ஒன்றுகூட  திட்டமிட்டிருக்கும்  சோகோ  விற்பனை  மையத்தில்  நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தனர். சோகோ  மாலுக்கு  எதிரில்  மூன்று  போலீஸ்  வாகனங்களும் …

மகாதிர் 1எம்டிபி பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்ளப்போகிறாரா?

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்  பற்றி  வலைப்பதிவில்  கருத்துரைப்பதை  நிறுத்திக்  கொள்ளக்கூடும். போலீசால்  கைது  செய்யப்படலாம்  என்ற  பயம்தான்  காரணம். அவ்விவகாரம்  பற்றிக்  கருத்துரைப்பதே  “குற்றமாக”ப்  பார்க்கப்படுவதால்  அதன்மீது  கருத்துரைக்கப்போவதில்லை  என்று  நேற்று  மகாதிர்  கூறியிருந்ததை  வைத்து  இனி  அவர்  அதைப்  பற்றி …

முகைதின் காணொளிமீது நடவடிக்கை எடுக்காத ஜாஹிட்டைச் சாடுகிறார் எம்பி

முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குறைகூறும்  காணொளிமீது  விசாரணை  நடத்தாத  உள்துறை  அமைச்சர்  ஜாஹிட்  ஹமிடியை  எதிரணி  எம்பி  ஒருவர்  சாடினார். “குறைந்த  பட்சம்,  போலீஸ்  முகைதினையும் கசிந்துள்ள  காணொளியில்  காணப்படும்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிரையும் கூப்பிட்டனுப்பி  அவர்களின் …

எம்ஏசிசி முன்னாள் ஆலோசகரும் ஏஜி அலுவலக அதிகாரியும் கைது

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) முன்னாள் ஆலோசகரான  ஒரு ‘டான்ஸ்ரீ’-யையும் சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி)  அலுவலகத்தின் அதிகாரி  ஒருவரையும் போலீஸ்  கைது செய்துள்ளது. 1எம்டிபி விவகாரம்மீதான சிறப்புப்  பணிக்குழுவின்  விசாரணை  தொடர்பில்  அவ்விருவரும்  கைது  செய்யப்பட்டதாக  த  ஸ்டார்  தெரிவித்தது. போலீஸ், எம்ஏசிசி, பேங்க்  நெகாரா, ஏஜி  அலுவலகம் …

எரிபொருள் விலை பத்து சென் குறைகிறது

  இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விலை ஒரு லீட்டருக்கு 10 சென் குறைகிறது. ரோன்95 இன் புதிய விலை ஒரு லீட்டருக்கு ரிம2.05; ரோன்97 க்கு ரிம2.45. டீசலின் விலை ஒரு லீட்டருக்கு ரிம1.95 ஆகும். இப்புதிய விலை ஆகஸ்ட் 1 நள்ளிரவு 12.01 மணியிலிருந்து…

டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் சமூக ஆர்வலர்கள் கைது

சமூக  ஆர்வலர்கள்  இருவர்  டாங் வாங்கி  போலீஸ்  தலைமையகத்தைவிட்டு  வெளியேறும்போது  கைது செய்யப்பட்டனர். ஒருவர்  மாணவர்  தலைவர்  ஆடம்  அட்லி. மற்றவர்  லென்சா  கம்முனிகேசன்ஸ்  அதிகாரி  சுக்ரி  அப்ட்  ரசாப். சுக்ரி, தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  கைது  செய்யப்பட்டார். ஆனால்,  ஆடம்  எதற்காகக்  கைதானார்  என்ற  விவரம்  தெரியவில்லை.…

தி எட்ஜின் இடைநீக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

செய்தியாளர்கள், சமூக  ஆர்வலர்கள்,  பொதுமக்கள்  எனச்  சுமார்  70 பேர்  கோலாலும்பூரில்  தி  எட்ஜ்  ஊடகக்  குழுமத்தின்  தலைமையகத்துக்கு  வெளியில்  ஒன்றுதிரண்டு  அதற்குத்  தங்களின்  ஆதரவைத்  தெரிவித்துக்  கொண்டனர். 1எம்டிபி-யைக்  குறைகூறும்  செய்திகளை  வெளியிட்டதற்காக  தி  எட்ஜ்  நாளேடும் தி  எட்ஜ்  வார இதழும்  உள்துறை அமைச்சால் தற்காலிகமாக …

அது‘தீய அறிக்கை’- துணைப் பிரதமர் சாடல்

சரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளம்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  தயாரிக்கப்பட்ட  குற்றப்பத்திரிகை  என்று கூறி  ஓர்  அறிக்கையை  வெளியிட்டு  அதன்  மூலம்  பிரதமரைக்  குற்றவாளியாகக்  காண்பிக்க  முயல்வதாக அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  சாடியுள்ளார். “அது பிரதமருக்கு  எதிராக  எதிர்மறையான  எண்ணத்தை  உருவாக்க  முயலும்  ஒரு  தீய  அறிக்கை”, என்று …

பிரதமருக்கு எதிராக குற்றப் பத்திரிகையா? மறுக்கிறது எம்ஏசிசி

சிறப்புப்  பணிக்  குழு, எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்மீது  மேற்கொண்ட  விசாரணை  தொடர்பில்  குற்றப்  பத்திரிகை  எதுவும்  தயாரிக்கப்படவில்லை  என  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி)  கூறியது. அந்த  விசாரணை  இன்னும்  தொடர்வதாகவும்  விசாரணை  அறிக்கை  எதுவும்  சட்டத்துறை  தலைவர்(ஏஜி)  அலுவலகத்திடம்  ஒப்படைக்கப்படவில்லை  என்றும்  அந்த  ஆணையம்  இன்று  ஓர்  அறிக்கையில் …