ஷஹிடான்: பெர்லிஸ் அம்னோ யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்

பெர்லிஸ் அம்னோ  தொகுதிகள்  அவற்றின்  ஆண்டுக் கூட்டங்களைத்  தொடக்கிவைக்க யாரை  வேண்டுமானாலும் அழைக்கலாம்  என  மாநில  தொடர்புக்  குழுத்  தலைவர்  ஷாஹிடான்  காசிம்  கூறினார். அம்மாநிலத்தில்  உள்ள  மூன்று  அம்னோ  தொகுதிகளும்-  கங்கார், ஆராவ்,  பாடாங்  புசார்-  அம்னோ  தலைவர், துணைத்  தலைவர், உதவித்  தலைவர்கள்  அல்லது  உச்சமன்ற …

நஜிப்பின் 1எம்டிபி பற்றிய பதில்கள் புத்தகமாக வருகிறது

1எம்டிபி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பிரதமர் நஜிப்பின் பதில்களை சிறப்பு விவகார இலாக (ஜாசா) புத்தகமாக வெளியிடவிருக்கிறது. அப்புத்தகம் நாடு தழுவிய அளவில் வெளியிடப்படும் என்று ஜாசாவின் தலைமை இயக்குனர் முகமட் புவாட் ஸார்காசி கூறினார். "மகாதிர், சரவாக் ரிபோர்ட், மலேசியாகினி மற்றும் மலேசியன் இன்சைடர் ஆகிவை எழுப்பியவையின்…

விஸ்மா டிஎபிக்கு நன்கொடை வழங்கியவர்கள்: வந்து பட்டியலைப் பாருங்கள்

  பினாங்கு, ஜாலான் ரங்கூனில் அமைந்திருக்கும் விஸ்மா டிஎபி கட்டுவதற்கு அளிக்கப்பட்ட நன்கொடை அக்கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட வங்கிக்கணக்குகளில் போடப்படவில்லை என்று பினாங்கு டிஎபி அறிவித்தது. பல்வேறு நிதி திரட்டல் நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட பணம் கட்சியின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டது என்று மாநில டிஎபி சோசலிச இளைஞர் பிரிவின்…

புதிய டிஏபி கட்டிடத்துக்குப் பணம் எங்கிருந்து வந்தது? அம்னோ இளைஞர்கள்…

பினாங்கு  அம்னோ  இளைஞர்  பகுதி,  அந்தத்  தீவில்  மாநில டிஏபி  பல மில்லியன்  ரிங்கிட்  செலவில்  கட்டிய  அலுவலகக்  கட்டிடத்துக்குப்  பணம்  எங்கிருந்து  வந்தது  எனக்  கேள்வி  எழுப்பியது. 2008-இல்  லிம்  குவான்  எங்  முதலமைச்சராக  வந்த  இரண்டாண்டுகளில்   கட்டப்பட்ட  அக்கட்டிடத்துக்குப்  பணம்  வந்த  விதத்தை   டிஏபி  தெரிவிக்க …

7 மாதங்கள் ஆகியும் கீர் தோயோ வழக்கில் தீர்ப்பைக் காணோம்

ஆகஸ்ட்  19  வந்தால்  ஏழு  மாதமாகும். ஊழல்  வழக்கில் குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்ட  சிலாங்கூரின்  முன்னாள்  மந்திரி  புசார்  டாக்டர்  முகம்மட்  கீர்  தோயோ-வின்  மேல்முறையீடு மீது    கூட்டரசு  நீதிமன்றம்  இன்னும்  தீர்ப்பு  வழங்காதிருக்கிறது. கூட்டரசு  நீதிமன்றம்  தீர்ப்பு  வழங்க  நாள்  எதுவும்  இன்னும்  வரையறுக்கப்படவில்லை  என்றும்  தெரிகிறது.…

பிகேஆர்: ஸெட்டிமீது தவறான முறையில் விசாரணை மேற்கொண்டால் ரிங்கிட் பாதிப்புறும்

போலீசார் பேங்க்  நெகாரா  கவர்னர்  ஸெட்டி  அக்டார் அசீஸை  விசாரிப்பதென  முடிவு  செய்தால்  விசாரணை முழுக்க  முழுக்க  வெளிப்படையாக  நடக்க  வேண்டும்  என  பிகேஆர்  வர்த்தக,  முதலீட்டுப்  பிரிவு  வலியுறுத்தியுள்ளது. ஸெட்டி  அனைத்துலக  நிதி  வட்டாரங்களில்  நன்கு  மதிக்கப்படுபவர். அவருக்கு  எதிராக  எடுக்கப்படும்  அரசியல்  நோக்கம்  கொண்டதாகக்  கருதப்படும் …

எதிரணித் தலைவர்கள் எம்ஏசிசி-க்கு ஆதரவு

எதிரணித்  தலைவர்கள்  இன்று மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணைய(எம்ஏசிசி)  தலைமையகம்  சென்று எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனத்தின்மீது  விசாரணை  நடத்துவதற்காக  அழுத்தத்துக்கு  இலக்காகியுள்ள  அந்த  ஆணையத்துக்கு  ஆதரவு  தெரிவித்துக்  கொண்டனர். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின் தனிப்பட்ட  வங்கிக்  கணக்கில் போடப்பட்டதாகக்  கூறப்படும்  ரிம2.6 பில்லியனில்  ரிம42 மில்லியன்  எஸ்ஆர்சி  இண்டர்நேசனலிலிருந்து …

‘தேடப்படும்’ கிளேய்ருக்கு யுகே போலீஸ் பாதுகாப்பு

மலேசிய  போலீசார்  கைது  செய்ய  விரும்பும்  சரவாக்  ரிப்போர்ட்  தலைமைச் செயலாளர் கிளேர்  ரியுகாஸல்  பிரவுனுக்கு  பிரிட்டிஷ்  போலீசார்  பாதுகாப்பு  வழங்கியுள்ளனர். மலேசிய  ஊழல்  விவகாரத்தை  ஆய்வு செய்ததற்காக  தாம்  பின்தொடரப்படுவதாகவும்  படமெடுக்கப்படுவதாகவும்  ரியுகாஸல்  புகார் செய்ததை  அடுத்து  அவருக்குப்  போலீஸ்  பாதுகாப்பு  கொடுக்கப்பட்டிருக்கிறது. ரியுகாஸலிடமிருந்து  புகார்  பெற்றதை …

எம்எசிசிக்கு மலேசியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்

  பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் ரிம2.6பில்லியன் குறித்து விசாரித்து வரும் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற அக்கருத்தரங்கில் 1,000…

ஸைட் அறைகூவல்: நஜிப்பிற்கு எதிராக 100,000 மக்கள் பங்கேற்கும் பேரணி

  பிரதமர் நஜிப்பிற்கு எதிராக ஓர் இலட்சம் மக்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடத்த வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் அறைகூவல் விடுத்துள்ளார். அனைத்து பின்னணிகளை யும் கொண்ட 100,000 மக்கள் பங்கேற்கும் ஒரு பேரணியை அமைதியாக பிரதமர் நஜிப்பிற்கு எதிராக நடத்த வேண்டும்…

எம்டிபி சிறப்புப் பணிக்குழு இனிமேலும் தேவையில்லை

  1எம்டிபி விவகாரத்தை விசாரித்து வந்த சிறப்புப் பணிக்குழு இனிமேலும் தேவையில்லை என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்துறை தலைவர் முகம்மட் அப்பாண்டி அலி ஆலோசனை கூறியுள்ளார். ஆகவே, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்எசிசி) சட்டத்துறை தலைவரின் ஆலோசனைப்படி அதன் சொந்த அறிக்கையை வெளியிடுகிறது. சட்டத்துறை தலைவரின் ஆலோசனைப்படி…

ரிம2.6பில்லியன்: கொடுத்தவர் பெயர் இரகசியம்

பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6பில்லியன் எங்கிருந்து வந்ததது என்பதற்கான விளக்கத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெற்றுள்ளது . ஆனால், மத்தியக்கிழக்கிலிருந்து வந்த அப்பணத்தை கொடுத்தது யார் என்பதை வெளியிட முடியாது என்று அந்த ஆணையம் கூறுகிறது. பிரதமர் கணக்கில் அப்பெருந்தொகையை வைத்த நன்கொடையாளர்…

அம்னோவுக்கு ரிம2.6பில்லியன் நன்கொடை: அது ஏன் முகைதினுக்கு தெரியவில்லை?

பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6பில்லியன் அம்னோவுக்கானதாகும் என்றால், அது எப்படி அம்னோவின் துணைத் தலைவரான முகைதின் யாசினுக்கு தெரியாமல் போனது? பாரிசானின் வியூகத் தொடர்பு இயக்குனர் அப்துல் ரஹ்மான் டாலான் நேற்று ஒரு தொலைக்காட்சி நேர்க்காணலில் அந்தத் தொகை ஓர் அரசியல் நன்கொடை என்று கூறியிருந்ததற்கு…

பாஸ்: நஜிப் ரிம2.6பில்லியன் நன்கொடையாளருக்கு வேலை செய்கிறாரா?

மக்கள்தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் எஜமானர்கள். அவர் அவர்களுக்கு பதில் கூற கடமைப்பட்டிருக்கிறார் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் பிரதமருக்கு நினைவுறுத்தினார். ஆகவே, ரிம2.6பில்லியன் நன்கொடை வழங்கியவர் யார் என்பதை நஜிப் வெளிப்படுத்த வேண்டும் என்று துவான் இப்ராகிம் கூறினார்.…

பிஎசி உறுப்பினர்களின் நியமனத்திற்காக நாடாளுமன்ற அவசரக் கூட்டம் வேண்டும், கிட்…

  நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவிற்கு (பிஎசி) புது உறுப்பினர்களை நியமிப்பதற்கு நாடாளுமன்றம் அவரசக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினரும் டிஎபியின் மூத்த தலைவருமான லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார். இக்கூட்டம் மெர்தேக்கா தினமான ஆகஸ்ட் 31 க்குள் நடத்தப்பட வேண்டும் என்றாரவர். பிஎசியின்…

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியரை கைது செய்ய ஆணை

  சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல் பிரௌனை கைது செய்ய போலீஸ்   கைது ஆணை பெற்றுள்ளது. அவர் பிரதமர் நஜிப்பை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தில் ஓர் அங்கமாகும் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறார். அக்கைது ஆணை மலேசிய குற்றவியல் சட்டம் செக்சன் 124B மற்றும் செக்சன் 124Iஆகியவற்றின்…

பிரதமர் கலந்துகொள்ளும் தொகுதிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் எதைப் பற்றியும் வினவலாம்

ஞாயிற்றுக்கிழமை  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஜோகூர்  பாசிர்  கூடாங்  அம்னோ  தொகுதிக்  கூட்டத்தைத்  தொடக்கி  வைக்கிறார். தொகுதி  உறுப்பினர்கள் அக்கூட்டத்தை அம்னோ  எதிர்நோக்கும்  பிரச்னைகளை  எழுப்புவதற்கான ஒரு  தளமாக  பயன்படுத்திக்  கொள்ளலாம்  என  அம்னோ  இளைஞர்  உதவிச்  செயலாளர்  நூர்  அஸ்லீன்  அம்ப்ரோய்ஸ்  கூறினார். “உறுப்பினர்களே கட்சியின் …

நன்கொடை என்பதை திட புத்தியுள்ள மலேசியர்கள் ஏற்க மாட்டார்கள்

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  சொந்த  வங்கிக்  கணக்கு  பற்றி  எம்ஏசிசி விடுத்த  அறிக்கை  1எம்டிபி  விவகாரம்  பற்றிய  எந்த  முக்கியமான  கேள்விக்கும்  பதில்  அளிக்கவில்லை. மாறாக, புதிய கேள்விகள்தான்  எழுகின்றன  என்று  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  கூறினார். “எந்த  எதிர்பார்ப்புமின்றி  நன்கொடையாளர்  ஒருவர்  ரிம2.6பில்லியனை …

ரிம2.6 பில்லியன் கொடை வழங்கியது ஒரு குற்றச் செயலல்ல

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் அம்னோமீது  நம்பிக்கை கொண்ட  ஆதரவாளர்களிடமிருந்து  ரிம2.6 பில்லியனை  நன்கொடையாக  பெற்றது  ஒரு  குற்றச்செயல்  அல்ல  என்கிறார்  கைரி  ஜமாலுடின். “மலேசியாவில் அரசியல்  கட்சிகள்  ஆதரவாளர்களிடமிருந்து  நன்கொடை  பெறுவதைத்  தடுக்கச்  சட்டமில்லை”, என  அம்னோ  இளைஞர்  தலைவர்  கூறினார். எனவே, நஜிப்பின்  வங்கிக்  கணக்கில் …

ஜோகூர் எம்பி: அம்னோவால் ஊழலைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது

ஜோகூர்  மந்திரி  புசார்  காலிட்  நோர்டின், ஊழலைக்  கண்டு  அம்னோ வாயைப்  பொத்திக்  கொண்டிருக்கக்  கூடாது  என்று  கோரிக்கை  விடுத்திருப்பது  பலருக்கும்  வியப்பளிக்கிறது. இவ்வளவுக்கும்  அவர்  யாருடைய  பெயரையும்  குறிப்பிடவில்லை. “அம்னோவால்,  மலாய்க்காரர்  போராட்டத்துக்கு  முன்னுரிமை  அளிக்காமல் விசுவாசம்  என்ற  பெயரில்  சில  தரப்பினரைத்  தற்காக்கக்  கட்சி  பயன்படுத்தப்படுவதைப் …

ஷாபியின் தொகுதி ‘கலவர’த்துக்கு அஞ்சி நஜிப்பைப் புறக்கணித்தது

ஷாபி  அப்டாலின்  செம்பூர்ணா  அம்னோ தொகுதி  அதன்  ஆண்டுக்  கூட்டத்துக்கு  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு விடுத்த  அழைப்பை  மீட்டுக்கொண்டு  துணைத்  தலைவர்  முகைதின்  யாசினை  அழைத்துள்ளது. ஆகஸ்ட்  15-இல்  நடைபெறும்  அத்தொகுதி  ஆண்டுக்  கூட்டத்துக்கு  நஜிப்  வந்தால் நிலவரம்  கலவரமாகிடலாம்  என்ற  அச்சமே  காரணமாகும் பிரதமருமான  நஜிப், 1எம்டிபி …

ரிம2.6 பில்லியன் ‘நன்கொடை’ மீது இணையத்தில் கிண்டல்கள், கேலிகள்

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  வங்கிக்  கணக்கில்  போடப்பட்ட  ரிம2.6 பில்லியன்  நன்கொடைகளாகக்   கிடைத்த  பணம்  என்று  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்  அறிவித்திருப்பதை  இணைய  மக்கள்  டிவிட்டரிலும்  முகநூலிலும்  பலவகையாகக்  கிண்டல்  செய்திருக்கிறார்கள். பெரும்பாலான  பதிவுகள்  நஜிப்பைக்  குறைகூறுகின்றன. அப்படிக்  குறை  கூறுவோர்மீது  நடவடிக்கை  எடுக்கப்படும்  என  துணைப் …

கைரி: ரிம2.6 பி. அம்னோ ஆதரவாளர்கள் கொடையாக வழங்கியது

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  சொந்தக்  கணக்கில்  வரவு  வைக்கப்பட்ட  ரிம2.6 பில்லியன்  அம்னோ  ஆதரவாளர்கள்  வழங்கிய  பணம்  என்கிறார் கட்சியின்  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின். “நான்  அறிந்தவரை  அது  ஆதரவாளர்களும்  கொடையாளர்களும் வழங்கிய  பணமாகும். “அது கொடையாளர்களிடமிருந்தும்  ஆதரவாளர்களிடமிருந்தும்  கிடைத்த  நன்கொடை  என  எம்ஏசிசி  கூறியிருப்பதே …