‘சுத்தமற்ற’ பெர்சே நடத்தும் நடுவர் மன்றத்துக்கு தெங்கு அட்னான் போக…

பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், பெர்சே ஏற்பாடு செய்துள்ள நடுவர் மன்றத்துக்குச்  செல்லப்போவதில்லை என அறிவித்துள்ளார். தேர்தல் சீரமைப்பைக் கோரும் அந்த என்ஜிஓ-வின் நடவடிக்கை ‘bersih’-ஆக (சுத்தமாக) இல்லை என்றாரவர். பெர்சே, புத்ரா ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில்   வெளிநாட்டவரை வாக்களிக்க அனுப்பி வைத்தது தமக்குத்…

மனமுடைந்த சஞ்சீவன் மைவாட்ச்-இலிருந்து விலக முடிவு

மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டுள்ள மைவாட்ச் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன்,  அந்தக் குற்ற-எதிர்ப்புக் கண்காணிப்பு அமைப்பிலிருந்து விலகுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். “மைவாட்ச் தானாகவே செத்துப்போகும் என நினைக்கிறேன். நாட்டுப்பற்றுள்ள மலேசியன் என்ற முறையில்  என் பங்கை நான் செய்தேன்.  அதற்காக அடிஉதை பட்டேன். சுடப்பட்டேன்”,  என சஞ்சீவன் நேர்காணல் ஒன்றில்…

அன்வார்: மகாதிர்தான் முழுக் காரணம் என்று சொல்வதற்கில்லை

அன்வார் இப்ராகிம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர்மீது எவ்வளவு பகையுணர்வு கொண்டவர் என்பது ஊரறிந்த விசயம்தான்.  ஆனாலும் ,  அவர் சாபாவில் வெளிநாட்டவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்ட விவகாரத்தில் மகாதிரைத் தற்காத்து பேசினார். “ஊடகங்களில் எல்லாவற்றுக்கும் மகாதிர்தான் காரணம் என்று பழி போடுகிறார்கள். அது சரியல்ல. “அது அவருக்கு முன்னிருந்தே செயல்பட்டுக்…

வாருங்கள் விவாதம் செய்யலாம்: கைரிக்கு சுரேந்திரன் அழைப்பு

பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், அண்மையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  அறிவித்த பூமிபுத்ரா பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்மீது அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினுடன் விவாதம் நடத்த விரும்புகிறார். “வறுமை ஒழிப்புப் பிரச்னைக்குத் தீர்வுகாண தேவையின் அடிப்படையில் முயல்வது நல்லதா, இன அடிப்படையில் முயல்வது நல்லதா என்பதன்மீது…

பூமிகளுக்கு தனி வங்கி தேவை

பூமிபுத்ராக்களுக்கு தனி வங்கி ஒன்றை அமைக்க வேண்டும் என மலேசிய மலாய் வணிகர் சங்கம் (டிபிஎம்எம்) கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கம் அண்மையில் அறிவித்த பூமிபுத்ராக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான கொள்கையில் நடுத்தரத் தொழில் முனைவர்களுக்கு உதவும் திட்டம் இல்லை என்பதால் அப்படி ஒரு வங்கி தேவைப்படுவதாக டிபிஎம்எம் தலைவர் சைட்…

நாடற்ற மூவருக்கு முடிவில் மைகார்ட் கிடைத்தது

குடியுரிமை மீது மலேசியாவில் பிறந்த மூன்று இந்தியர்கள் தொடுத்த வழக்கு இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு நல்ல முடிவைக் கண்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஒரு சமரசத்துக்கு வந்திருப்பதாக நீதிபதி ஸகேகா யூசுப்பிடம் தெரிவித்துக்கொண்டனர்.   தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) செப்டம்பர் 6-இல், எஸ்.லட்சுமிக்கும் அவரின்…

உதவித் தொகை குறைப்பு பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறது…

எரிபொருளுக்கான உதவித் தொகை குறைக்கப்பட்டதால் எரிபொருள் விலை உயர்ந்திருந்தாலும் நாட்டின் பணவீக்கத்தில் அது பெருந் தாக்கத்தை ஏற்படுத்தாது எனக் கருவூலத் தலைமைச் செயலாளர் முகம்மட் இர்வான் செரிகார் அப்துல்லா கூறுகிறார். எரிபொருள் விலை உயர்வால் பணவீக்க உயர்வு  குறைந்த விகிதத்தில்தான் இருக்கும் என்பது  நிதி அமைச்சின் கணிப்பு என்றாரவர். …

‘மேல்முறையீட்டில் ஷாபி அரசுதரப்பு வழக்குரைஞராக வாதாடலாம்’

இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீட்டில் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா அரசுத்தரப்பைப் பிரதிநிதிக்கலாம்  என முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூவரடங்கிய நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை வகித்த நீதிபதி ரம்லி அலி, தீர்ப்பு ஏகமனதானது என்றார். அக்குழுவில் இருந்த மற்ற இருவர், நீதிபதி…

பிகேஆர், டிஏபி ஆகியவற்றுடன் ஒத்துழைப்பதால் பாஸ் நன்மை அடைந்துள்ளது

பாஸ் பக்காத்தான் ரக்யாட்டில்  இருப்பதை ஆலோசிக்க வேண்டும் என்று ஏற்கனவே முன்மொழிந்திருந்த அக் கட்சியின் டேவான் உலாமா, இப்போது அக்கருத்தை  மறுபரிசீலனை செய்வதாகக் கூறியிருப்பதை சிலாங்கூர் பாஸ் வரவேற்றுள்ளது. “பிகேஆருடனும் டிஏபி-யுடனும் ஒத்துழைப்பதால் பாஸுக்கு நட்டம் ஏதுமில்லை. பக்காத்தானில் இருப்பதால் பாஸ் நிறைய பயனடைந்துள்ளது”, என மாநில ஆணையர்…

இசி, வெளிநாட்டு வாக்காளர்கள் என்ற சந்தேகத்தைத் தீர்த்துவைக்க மறுத்தது: எம்பி…

இன்று பெர்சே தேர்தல் நடுவர் மன்றத்தில் சாட்சியமளித்த கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, வாக்களிப்பு நாளில் ஒரு பேருந்து காணப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆவி வாக்காளர்களாக இருக்கலாம் என்று மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்த்து வைக்க தேர்தல் ஆணையம்(இசி) மறுத்துவிட்டதாகக் கூறினார். “அவர்கள் வாக்களித்தனரா என்பதைக் கண்டறிந்து சொல்ல…

அசிஸ் பாரி: சின் பெங்கிற்கு அளித்த வாக்குப்படி நடந்து கொள்ளுங்கள்

அளித்த வாக்குறுதிகளை மதியுங்கள். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சின் பெங்கின் மரணத்தை தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் இன்று அம்னோ-பாரிசான் அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கினார். தமது சுடலை நீறை மலேசியாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற சின் பெங்கின் இறுதி…

ஹாடி: பூமிபுத்ராக்கள்மீது மட்டும் கவனம் செலுத்துவது சரியல்ல

பொருளாதார உதவியை பூமிபுத்ராக்களுக்கு மட்டும் கொடுப்பது முறையல்ல, அது எல்லா இனங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட  வேண்டும் என்கிறார் பாஸ் தலைவர் ஹாடி ஆவாங். “பூமிபுத்ராக்களின் உரிமை என்ற பெயரில் உதவியை வழங்கிவிட்டு மற்ற இனங்களை விட்டுவிடுவது சரியல்ல”, என இன்று பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஹாடி கூறினார்.…

வெளியார்தான் கேண்டீன் விவகாரத்தைப் பெரிதாக வளர்த்து விட்டார்கள்: இட்ரிஸ் குற்றச்சாட்டு

ஸ்ரீபிரிஸ்தானாவில் குளியலறை கேண்டீனாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் முடியும் நிலையில் இருந்த வேளையில், அதில் சம்பந்தப்படாதவர்கள் அதை ஊதி ஊதி பெரிதாக்கி விட்டார்கள்  என கல்வி அமைச்சர் II இட்ரிஸ் ஜூஸொ இன்று  குற்றம் சாட்டினார். அவர் இன்று அப்பள்ளிக்கு திடீர் வருகை மேற்கொண்டார். “பெற்றோர் உண்மைநிலையைப் புரிந்துகொண்டு  அதைப்…

‘நா காக்க வேண்டும் பகாங் மந்திரி புசார்’

சீன மலேசியர்கள் மாநில மலேசிய நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது குறைவாக உள்ளதாகக் குறைகூறி, இனிவரும் காலங்களில் அவ்வாறு இருக்கக்கூடாது என்று எச்சரித்த பகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கூப் மசீசவின் கண்டனத்துக்கு இலக்கானார். அந்த எச்சரிக்கை ஒரு மிரட்டலுக்கு ஒப்பானது என்றுரைத்த மசீச அலோர் காஜா எம்பி கோ…

‘தேர்தலின்போது அரசியல்வாதிகள் செய்தியாளர்களுக்குப் பணம் கொடுத்தார்கள்’

13வது பொதுத் தேர்தல் பற்றிச் செய்திகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்கள் சிலருக்கு அரசியல்வாதிகளிடமிருந்து பணமும் இதர சலுகைகளும் கிடைத்துள்ளன. சுதந்திர இதழியல் மையத்தின் செயல்முறை இயக்குனர் மஸ்ஜலிஸா ஹம்சா இதனைத் தெரிவித்தார். செய்தியாளர்களின் பொதுத் தேர்தல் அனுபவம் பற்றிய ஆய்வு ஒன்றுக்காக நேர்காணல் காணப்பட்ட செய்தியாளர்களில் பாதிக்குமேற்பட்டோர்…

தடுப்புக்காவல் சட்டத்தின் தீமைகளை விளக்க நாடகம் தயாரிக்கிறது சுவாராம்

மனித உரிமை என்ஜிஓ-வான சுவாராம், தடுப்புக்காவல் சட்டங்களின் தீமைகளை விளக்கும் நாடகம் ஒன்றை அரங்கேற்றவுள்ளது. “Bilik Sulit” என்னும் தலைப்பைக் கொண்ட அந்நாடகம் செப்வம்பர் 19-இலிருந்து 22வரை கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மணடபத்தில் அரங்கேறும். அந்நாடகம் முன்னாள் தடுப்புக்காவல் கைதிகளின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன் தடுப்புக் கைதிகளை…

பிஎஸ்எம்: ரிம30 பில்லியன் ஒதுக்கீடு ஏழை பூமிகளுக்கும்கூட உதவப்போவதில்லை

இனத்தின் அடிப்படையில் சமுதாயத்தைத் திருத்தி அமைப்பதானது மற்ற இனங்களின் ஏழை மக்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் நியாயமான செயலல்ல என்பது ஒரு புறமிருக்க அதே இனத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்கும்கூட அது நியாயம் செய்வதாக இல்லை என்கிறார் மலேசிய சோசலிச கட்சியின் (பிஎஸ்எம்) தலைவர் ஒருவர். “அது, ஏழை பூமிபுத்ராக்களைக் காண்பித்து…

சின் பெங்கின் உடல் கொண்டுவரப்படுவதைத் தடுக்க முழு விழிப்பு நிலையில்…

காலஞ்சென்ற முன்னாள் மலாயா கம்முனிஸ்டுக் கட்சித் தலைவர் சின் பெங்கின் உடல் மலேசியாவுக்குள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதில் பொலீசார் தீவிரமாக உள்ளனர். “சின் பெங்கின் உடல் கொண்டுவரப்படுவதைத் தடுக்க எல்லா நுழைவுப்பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன”, என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் நேற்றிரவு டிவிட்டரில் பதிவு செய்திருந்தார்.…

விரைவு-ரயில் சேவை பற்றி தலைவர்கள் அடுத்த ஆண்டில் இறுதி முடிவு…

சிங்கப்பூரையும் கோலாலும்பூரையும் இணைக்கும் விரைவு-ரயில் சேவை மீது அடுத்த ஆண்டில் இறுதி முடிவு செய்யப்படும்  என சிங்கப்பூருக்கான மலேசிய தூதர் உஸ்னி ஸை யாக்கூப் கூறினார். ஆண்டுதோறும் தனி இடத்தில் சந்தித்துப் பேசும் வழக்கத்தைக் கொண்டுள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியான் லூங்கும்…

அன்வார்: சின் பெங் விசயத்தில் நடந்ததை மறப்போம்

காலஞ்சென்ற முன்னாள் கம்முனிஸ்டு தலைவர் சின் பெங்கின் உடல் மலேசியாவுக்குள் வரக்கூடாது எனக் கூட்டரசு அரசாங்கம் பிடிவாதமாக இருப்பது பற்றிக் கருத்துரைத்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், “கடந்தகால சம்பவங்கள் கடந்தவையாகவே இருக்கட்டுமே”, என்றார்.

குதப்புணர்ச்சி வழக்குII: நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கர்பாலின் மனு…

இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக் கோரி வழக்குரைஞர் கர்பால் செய்திருந்த மனுவை முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவரது மனுவை விசாரித்த மூவரடங்கிய நீதிபதி குழுவுக்குத் தலைமைதாங்கிய நீதிபதி ரம்பி அலி, மாற்று நீதிபதி யார் என்பது நாளை முடிவு…

சின் பெங் மலேசியக் குடிமகன் அல்ல: ஐஜிபி நினைவுறுத்தல்

காலஞ்சென்ற முன்னாள் மலேசிய கம்முனிஸ்டு கட்சி(சிபிஎம்)த் தலைமைச் செயலாளர் சின் பெங்-கின் உடல் மலேசியாவுக்குக் கொண்டுவரலாமா என்று கேட்கவே  கூடாது என்கிறார் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார். “அவர் சித்தியாவானில் பிறந்தவர் என்றாலும் அவர் ஒரு மலேசியக் குடிமகன் அல்லர். சிபிஎம்-மில் சேர்ந்தபோது அவர் குடியுரிமை …

பிரதமர்: சரவாக் உருமாற்றம் காண பிஎன் உதவும்

கூட்டரசு அரசாங்கத்துக்கும் சரவாக் அரசுக்குமிடையில் நிலவும் நெருக்கமான ஒத்துழைப்பு அம்மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு வழிகோலும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குறிப்பிட்டார். “இந்த நெருக்கமான ஒத்துழைப்பு அடுத்த 50 ஆண்டுகளில் சரவாக்  மேலும் முன்னேற்றம் காணும் என்பதற்கு உத்தரவாதமாகும்”, என்றாரவர். சாபா, சரவாக் மக்கள் பல இனங்களைச் சேர்ந்தவர்கள்…