மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் கூறுகையில், முன்னாள் மந்திரி பெசார் அமினுடின் ஹருன் உள்ளிட்ட சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளை முழுமையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளனர். மாநில முதல்வர் இஸ்மாயில் லாசிம், அந்த நிதியைத் திருப்பித் தருமாறு கோரி செவ்வாய்க்கிழமை பக்காத்தான் ஹராப்பான் (PH) பிரதிநிதிகளுக்கு அறிவிப்புகள்…
அரசியல் விளையாட்டுகளையும் பழித்துரைப்பதையும் கைவிடுவீர்: எம்பிகளுக்குப் பேரரசர் அறிவுறுத்து
இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் தொடக்கிவைத்த மாட்சிமை தங்கிய மாமன்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவா’ட்ஸம் ஷா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரீத அரசியல் விளையாட்டுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதுடன் இப்போதைய ஆட்சியே தொடர வேண்டும் என்ற விருப்பதையும் வெளியிட்டார். அப்போதுதான் மலேசியா உயர் வருமானம் கொண்ட ஒரு …
ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது எம்எச்370-இன் இரண்டாவது பகுதியாக இருக்கலாம்
இந்தியப் பெருங்கடல் தீவான லா ரீயுனியனில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச் 370 விமானத்தின் இரண்டாவது பகுதியாக இருக்கலாம் என ஒரு செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. கடலோரமாக மெதுஓட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஜோன்னி பெக் என்பார் அதைக் கண்டெடுத்தார் என ஏஎப்பி செய்தி நிறுவனம்…
“மலேசியர்களே, அந்நியத் தொழிலாளர்களிடம் அன்பு காட்டுங்கள்”, ஐஎல்ஒ
மலேசியாவில் வேலை செய்வதற்கு சட்டப்பூர்வமாக வந்திருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் மீது பரிவும், அக்கறையும் காட்டி அவர்களுக்கு மரியாதையும் காட்டுமறு அனைத்துலக தொழிலாளர் சம்மேளம் (ஐஎல்ஒ) மலேசியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. உலகின் நமது பகுதியில், மலேசியா உட்பட, வாழும் மக்கள் அந்நியத் தொழிலாளர்கள் மீது கொண்டுள்ள எதிர்மறையான தோற்றம்…
1எம்டிபி மீதான விசாரணைக்கு அரசு ஆணையம் அமைக்க அகோங் வேண்டுகோள்…
மலேசிய நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. டிஎபியின் மூத்த தலைவரும் கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் அக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார். ஏனென்றால் நாடாளுமன்றத்திலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது இன்னும் தொடர்கிறது. இருப்பினும், நாளை தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கும் உரையில் பேரரசர் ரிம2.6…
1எம்டிபி அறிக்கை: இரகசியம் என வகைப்படுத்தப்பட்டிருப்பதற்கு என்ஜிஓ கண்டனம்
1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை அதிகாரத்துவ இரகசியக் காப்புச் சட்ட(ஓஎஸ்ஏ)த்தின்கீழ் ஒரு இரகசிய அறிக்கையாக வகைப்படுத்தப்பட்டது நீதிக்குத் தடைபோடும் செயலாகும் என ஊழல்-எதிர்ப்பு என்ஜிஓ ஒன்று சாடியுள்ளது. “கணக்கறிக்கையின் நோக்கமே பொது நிதிகள் தொடர்பில் ஊழல் நிகழ்ந்ததாக என்பதைக் கண்டறிவதுதான் என்கிறதுபோது, இச்செயல் அந்த நோக்கத்துக்கே முரணாக …
சாபாவில் மேற்குக் கரையிலும் பாதுகாப்புக்கு மிரட்டல்
துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, சாபாவில் கிழக்குக் கரையில் மட்டுமல்லாமல் மேற்குக் கரையிலும் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டிருப்பதாக எச்சரிக்கிறார். “முன்பு சாபாவின் கிழக்குக்கரையில் மட்டுமே அச்சுறுத்தல் நிலவியது. அங்கு பாதுகாப்புப் பணிகள் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்போது பாதுகாப்பு மிரட்டல் கிழக்குக் கரையிலிருந்து மேற்குக் கரைக்கும் விரிவடைந்துள்ளது. “சாபாவின் ஒவ்வொரு …
‘முகைதின் திருந்த வேண்டும்; அம்னோவுக்குத் திரும்ப வேண்டும்’
அம்னோ துணைப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முகைதின் யாசின், மீண்டும் அம்னோவுக்குத் திரும்பி வந்து அம்னோமீது மக்களுக்குள்ள நம்பிக்கையை நிலைநிறுத்த உதவ வேண்டும். கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் முகம்மட் ர்ஸ்லான் முகம்மட் ரபி ஓர் அறிக்கையில் இவ்வாறு கேட்டுக்கொண்டார். “உங்கள் இறுமாப்பை ஒதுக்கிவைத்து திரும்பி வாருங்கள்.…
தென்மேற்கு சுமத்ராவில் மிதமான நடுக்கம்
ரிக்டர் கருவியில் 5.3 என்று பதிவான மிதமான நடுக்கம் இன்று அதிகாலை 4.20க்கு சுமத்ராவின் தென்மேற்குப் பகுதியைத் தாக்கியதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிவித்தது. அந்நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சிபெருட்டிலிருந்து தென்மேற்கே 604கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக மெட்மலேசியா கூறிற்று. அந்நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் இல்லை என்றும் …
நஜிப் பதவி விலக, மக்கள் பிரகடனத்தை மகாதீர் முன்வைத்தார்!
மலேசியாவை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய 37 பத்திகளைக் கொண்ட ஒரு பிரகடனம் முக்கிய அரசியல் தலைவர்கள் வழி வெளியிடப்பட்டது. இதற்கு மூலகாரணமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆவார். இன்று பிற்பகல் நான்கு மணியளவில் மலாயா…
வீடமைப்பு அதிகாரிகள் என ஏமாற்றிக் கொண்டிருக்கும் கும்பலிடம் கவனம் தேவை:…
வீடமைப்புத்துறை அதிகாரிகள்போல் வேடமிட்டு கட்டுப்படியான விலை-வீடுகளை வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடம் பணம் வசூலித்து வரும் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் கவனமாக இருக்குமாறு பினாங்கு அரசு எச்சரித்துள்ளது. “ வீடமைப்புத் துறை வீடுகளுக்கு விண்ணப்பம் செய்வோரிடம் பணம் வசூலிப்பதில்லை”, என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்(வீடமைப்பு) ஜக்தீப் சிங் கூறினார். “எம்பிகள், …
முக்ரிஸ்: நஜிப் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் கெடாவை பிஎன் இழக்கும்
நஜிப் அப்துல் ரசாக் தொடர்ந்து அம்னோ தலைவராகவும் பிரதமராகவும் இருந்தால் அடுத்த பொதுத் தேர்தல் கெடாவை பிஎன் இழக்க நேரும் என முன்னாள் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் கூறினார். “அவர் தொடர்ந்து கட்சித் தலைவராக இருந்தால் 14-வது பொதுத் தேர்தலில் (கெடாவில்) வெற்றி பெறுவோம் என்ற …
டிஎம்ஐ தடைக்கு அரசாங்கம் கூறும் காரணம் ‘சிறுபிள்ளைத்தனமானது’: கிட் சியாங்…
“அமைதி, நிலைத்தன்மை, நல்லிணக்கம்” ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே த மலேசியன் இன்சைடர் செய்தித்தளத்தைத் தடை செய்ததாக ஒரு “சிறுபிள்ளைத்தனமான, அறிவிலித்தனமான” காரணத்தை முன்வைத்த மலேசிய அரசாங்கத்தைப் பார்த்து உலகம் சிரிக்கிறது என எதிரணித் தலைவர் ஒருவர் சாடியுள்ளார். “அது மலேசிய அரசாங்கம் அதன் 59-ஆண்டுக்கால வரலாற்றில் கொஞ்சமும் யோசிக்காமல் …
எக்கோனமிஸ்ட்: நஜிப்பால் மலேசியாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பாணியில் ஆட்சி நடக்கும் வரையில் உலகில் அதற்கு உரிய அங்கீகாரம் மலேசியாவுக்குக் கிடைக்கப்போவதில்லை என உலகப் புகழ்பெற்ற வாராந்திர சஞ்சிகையான தி எக்கோனமிஸ்ட் கூறுகிறது. நேற்று அதில் வெளியிடப்பட்டிருந்த கட்டுரை ஒன்று, அம்னோவிடம் கருத்துப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்றும் கட்சித் தலைவரின் நேர்மையே …
1எம்டிபி அறிக்கை: அதிகாரப்பூர்வ ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி
1எம்டிபி மீதான விசாரணை அறிக்கை பலமுறை தாமதிக்கப்பட்டு ஒரு வழியாக இன்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு(பிஏசி)விடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அறிக்கை ஒப்படைக்கப்படும் நிகழ்வுக்குச் சென்று செய்திகள் சேகரிக்க அரசாங்க ஊடகங்களான ஆர்டிஎம்- மையும் பெர்னாமாவையும் தவிர மற்ற ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. அவை நாடாளுமன்றத்துக்குள் செல்ல முயன்றபோது வாயிலில் …
பக்கத்தான் ஹராபான் ஏற்பாட்டில் ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணி
பக்கத்தான் ஹராபான் ஏப்ரல் 2ஆம் தேதி, பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தும். ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவுபெறும் வேளையில் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று கோலாலும்பூர் பிகேஆர் தலைமையகத்தில் பக்கத்தான் ஹராபான் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா இதனைத் தெரிவித்தார். “இது நாங்கள் …
முக்ரிஸ்: நானும் முகைதினும் ஏன் அம்னோவிலேயே தங்கி விட்டோம் என்பதைத்…
முன்னாள் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் அவரின் தந்தையைப் பின்பற்றி அம்னோவிலிருந்து வெளியேறப்போவதில்லை. இன்று மலேசியாகினியிடம் பேசியபோது இதனைத் தெரிவித்த முக்ரிஸ், தம் முடிவு தம் தந்தையான முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் தெரியும் என்றார். “நேற்று துன்னுடன் (மகாதிருடன்) பேசினேன். நானும் முகைதினும் எதற்காக …
ஆசியாவின் மிகப் பெரிய கடனாளிகள் மலேசியர்களாம்
மலேசியர்களில் 68 விழுக்காட்டினர் கடன்காரர்களாக இருப்பதை அண்மைய Manulife ஆய்வு ஒன்று காண்பிக்கிறது. ஆசியாவின் எட்டுச் சந்தைகளில்- ஹொங் காங், சீனா, தைவான், ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, பிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில்- அவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. மற்ற நாடுகளில் சராசரி 33 விழுக்காட்டினர் கடனாளிகளிகளாக இருக்கிறார்கள். மலேசியர்கள் சராசரி …
நாளை, மகாதிர், ஹராபான் கூட்டுச் செய்தியாளர் கூட்டம்
மலேசிய அரசியல் வானம் நாளொரு மாற்றமும் பொழுதொரு வண்ணமும் பெற்று வருகிறது. ஆகக் கடைசியாக வந்துள்ள செய்தி- நாளை டாக்டர் மகாதிர் முகம்மட்டும் பக்கத்தான் ஹராபானும் கூட்டாக செய்தியாளர் கூட்டம் நடத்தப் போகிறார்களாம். இதைத் தெரிவித்திருப்பவர் அவரோ இவரோ அல்ல, மகாதிரின் ஜன்ம பகைவராகக் கருதப்படும் அன்வார் இப்ராகிமின் …
முகைதின் அம்னோவில் தொடர்ந்து இருப்பார்
முகைதின் யாசின், அம்னோவில் தொடர்ந்து இருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை அவர் சங்கப் பதிவகத்திடம் கொண்டு செல்வார். “அம்னோவில் தொடர்ந்து இருப்பேன். கட்சியிலிருந்து வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை. அப்படி நான் சொன்னதில்லை” என்று முகைதின் இன்று செய்தியாளர் கூட்டத்தில்…
முன்னாள் ஏஜி நஜிப்புக்கு எதிரான சாட்சியங்களை வைத்திருந்தார், முகைதின் மீண்டும்…
பிரதமர் நஜிப்புக்கு எதிரான சாட்சியங்களை முன்னாள் சட்டத்துறை (ஏஜி) தலைவர் வைத்திருந்தார் என்று அம்னோவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள முகைதின் யாசின் மீண்டும் கூறுகிறார். ஏஜி தம்மிடம் காட்டிய சாட்சியம் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டது பற்றியதாகும் என்றாரவர். கனி பட்டேயில் தம்மிடம்…
ஒரு புதிய இளைஞர் அமைப்பு பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கிறது
நேற்று சேலஞ்சர் என்ற இளைஞர் அமைப்பு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தலைமைத்துவம் நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லும் என்று கருத்துத் தெரிவித்திருந்தது. இன்று வேறு சில இளைஞர் தலைவர்கள் நஜிப்புக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர். இந்தப் புதிய அமைப்பில் யுஐடிம் மாணவர் மன்ற முன்னாள் தலைவர் ஆபாங் …
அடுத்த பிரதமர் யார்?
பிரதமர் நஜிப் பதவியிலிருந்து அகற்றப்பட்டால், அவரின் இடத்தில் அமர்வதற்கு முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி ஆகிய மூவரும் தகுதியுடையவர்கள் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறுகிறார். அடுத்த பொதுத்…
WSJ உறுதி செய்யப்பட்ட உண்மைகளைப் புறக்கணிப்பது ஏன்? அரசாங்கப் பேச்சாளர்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் சவூதி அராபியாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற நன்கொடை என்பதை “பல அமலாக்க அமைப்புகள்” உறுதிப்படுத்திய பிறகும் அப்பணத்தை 1எம்டிபியுடன் தொடர்புப்படுத்திப் பேசும் வால் ஸ்திரிட் ஜர்னலை மலேசிய அரசாங்கம் சாடியுள்ளது. “அப்பணம் சவூதி அராபியாவிடமிருந்து வந்த நன்கொடை என்பதை மலேசிய …


