மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் கூறுகையில், முன்னாள் மந்திரி பெசார் அமினுடின் ஹருன் உள்ளிட்ட சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளை முழுமையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளனர். மாநில முதல்வர் இஸ்மாயில் லாசிம், அந்த நிதியைத் திருப்பித் தருமாறு கோரி செவ்வாய்க்கிழமை பக்காத்தான் ஹராப்பான் (PH) பிரதிநிதிகளுக்கு அறிவிப்புகள்…
குடிமக்கள் பிரகடனத்தால் பெர்சேயில் பிளவு
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டையும் எதிரணியினரையும், சிவில் அமைப்புகளையும் ஒன்றுபட வைத்த குடிமக்கள் பிரகடனம் சில இடங்களில் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திப் பிளவினை உண்டுபண்ணியுள்ளது. எதிரணியினரிடையே மட்டுமல்லாமல் சமூக அமைப்புகளிலும்கூட அப்பிரகடனம் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன, குறிப்பாக பெர்சேயில். பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா…
ஸெட்டிக்குப் பிறகு பேங்க் நெகரா கவர்னராக பொறுப்பேற்பவர் 1எம்டிபி ஆலோசகராம்
ஸெட்டி அஹ்தார் அசீஸ் 16 ஆண்டுகள் மலேசியாவின் மத்திய வங்கியான பேங்க் நெகாரா கவர்னராக இருந்து விட்டு ஏப்ரல் 30-இல் பணி ஓய்வு பெறுகிறார். அவருக்குப் பின் அப்பொறுப்பை ஏற்பவர் மத்திய வங்கியைச் சேர்ந்தவராக இருக்க மாட்டார் என்று தெரிகிறது. ஸெட்டிக்குப் பிறகு அப்பதவியை ஏற்கப் போகின்றவர் நிதி …
பிகேஆர்: அரசியல் கருத்துவேறுபாட்டின் காரணமாக மகாதிரின் பதவியைப் பறிப்பது சரியல்ல
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிருடன் அரசியல் கருத்துவேறுபாடு கொண்டிருக்கலாம். அதற்காக மகாதிரை தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாசின் ஆலோசகர் பதவியிலிருந்து விலக்கியது சரியல்ல என பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன் கூறினார். “மகாதிரின் நியமனம் முடிவுக்கு வருவதாக அறிவித்த பிரதமர்துறை அலுவலகம்(பிஎம்ஓ)…
வயதாகிவிட்டது, கபடத்தனம் செய்யும் அவசியம் எனக்கில்லை- லிம் கிட் சியாங்
டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், மலேசியாவைக் காக்கும் இயக்கத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டுடன் இணைந்து பணியாற்றுவதை வைத்து அவரைக் கபடதாரி என்று குறைகூறுவோரைப் பொருட்படுத்தவில்லை. “என்னைக் கொள்கை இல்லாதவன் என்றும் சந்தர்ப்பவாதி என்றும் சொல்கிறார்கள். “50 ஆண்டுகளாக பணம், பொருள், பதவி - …
‘டிஏபி கைகுலுக்கலை’க் குறைசொல்வதா: இப்ராகிம் அலி ஆவேசம்
“அவர்கள் கபடதாரிகள்”. கடந்த வாரம் குடிமக்கள் தீர்மானத்தில் கையொப்பமிடும் நிகழ்வின்போது டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்குடன் கைகுலுக்கியதைக் குறை சொல்வோரை பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி இப்படித்தான் வருணித்தார். “இந்தக் கபடதாரிகள் என்னைக் கொண்டு டிஏபி-யைத் தாக்கலாம் என்று நினைக்கிறார்கள். “நான் கைகுலுக்கியதைப் பெரிய விவகாரமாக்கி …
சிறார்கள் மத மாற்றம்: சட்டம் தயார் என்று கூறலாம், ஆனால்…
சிறார்கள் ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்படுவது குறித்த சட்டத் திருத்தம் தயார் என்று புத்ரா ஜெயா அறிவிப்பு செய்திருக்கலாம். ஆனால், அதனை நாடாளுமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதற்கான ஓர் உறுதியான தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது என்று டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற…
நஜிப்பின் இடத்தை நிரப்பப் போவது யார் என்ற சர்ச்சையை நிறுத்துவீர்,…
பிரதமர் நஜிப்பிற்கு மாற்று யார் என்ற சர்ச்சையை நிறுத்துமாறு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளார் மாறாக, மலேசியாவை காப்பாற்றக் கோரும் மக்கள் பிரகடனத்தின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், அடுத்து வரும் அரசாங்கத்தில் ஊழல் மற்றும் அதிகார அதுமீறல் ஆகியவற்றை…
ஹாடி: குடிமக்கள் தீர்மானம் ஒரு உருப்படாத திட்டம்
குடிமக்கள் தீர்மானத்தின்வழி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வெளியேற்றும் முயற்சியை “உருப்படாத” திட்டம் என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் வருணித்தார். “அது உருப்படாத திட்டம்தான். காரணத்தோடுதான் சொல்கிறேன்”, என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஹாடி கூறினார். ஜனநாயக முறையில் ஒரு பிரதமரை அகற்ற வேண்டுமென்றால் ஒன்று …
மகாதிருடன் இணைந்து பணியாற்றவில்லை, ஒரே கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம், அவ்வளவுதான்’
புக்கிட் குளுகோர் எம்பி ராம்கர்பால் சிங், எதிரணி முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் சேர்ந்து பணியாற்றவில்லை என்பதைத் தெளிபடுத்தினார். சட்டப்பூர்வ வழியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து வெளீயேற்ற வேண்டும் என்பதில் மட்டுமே எதிரணி மகாதிருடன் ஒன்றுபட்டிருக்கிறது. “மகாதிருடன் சேர்ந்து பணியாற்றுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.…
சிறார் மதமாற்றச் சட்டம் தயார்: அமைச்சர்
சிறார்களை ஒருதலைப்பட்சமாக மதமாற்றும் விவகாரம் தொடர்பிலான சட்டங்களை வரையும் பணி முடிவடைந்திருப்பதாக அமைச்சர் நன்சி சுக்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “சிவில் சட்டம் தொடர்பில் பிரச்னை எதுவுமில்லை. இதில் ஷியாரியா சட்டமும் சம்பந்தப்பட்டிருக்கிறது”, என்றாரவர். புதிய சட்டம் தொடர்பில், பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம், மாநில இஸ்லாமிய …
நஜிப்பின் ரிம2.6 பில்லியன் வழக்கில் ஊழல் நிகழ்திருப்பதற்கான சான்று இல்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் ரிம2.6 பில்லியன் அரசியல் நன்கொடை வழங்கப்பட்டதில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) கருதவில்லை என புத்ரா ஜெயா கூறியது. “ஏஜி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட அதன் விசாரணை அறிக்கையில் பிரதமர் ஊழல் செய்தார் என்ற குறிப்பே கிடையாது”. நேற்று நாடாளுமன்றத்தில் வழங்கிய …
மலேசியாகினி கருத்துக்கணிப்பு: 76 விழுக்காட்டினர் பிரகடனத்துக்கு ஆதரவு
சமூக வலைத்தளங்களில் மலேசியாகினி மேற்கொண்ட ஒரு கருத்துக்கணிப்பில் குடிமக்கள் பிரகடனத்துக்கும் அதில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரின் பங்களிப்புக்கும் பரவலான ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. மலேசியாகினியின் முகநூல், டிவிட்டர் பக்கங்களுக்கு வந்து கருத்துத் தெரிவித்த 5,852 பேரில் 76.2 விழுக்காட்டினர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவியிலிருந்து …
நம்பிக்கை-இல்லாத் தீர்மானம் நிராகரிப்பை அடுத்து திரெங்கானு சட்டமன்றம் ஒத்திவைப்பு
திரெங்கானு சட்டமன்றத்தில் மந்திரி புசார் அஹ்மட் ரஸிப் அப்துல் ரஹ்மானுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை-இல்லாத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது ஏன் என அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுந்ததைத் தொடர்ந்து மன்றத் தலைவர் முகம்மட் சுபிர் எம்போங் கூட்டத்தை ஒத்திவைத்தார். “நான் முடிவு செய்தாயிற்று. சட்டமன்றக் கூட்டத்தை நாளைவரை தள்ளி வைக்கிறேன்”, என்று …
நம்பிக்கை-இல்லாத் தீர்மானத்தைச் சட்டமன்றத் தலைவர் நிராகரித்தார்
திரெங்கானுவின் முன்னாள் மந்திரி புசார் அஹ்மட் சைட், நடப்பு மந்திரி புசார் அஹ்மட் ரஸிப் அப்துல் ரஹ்மானுக்கு எதிராகக் கொண்டுவந்த நம்பிக்கை-இல்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. இன்று பிற்பகல் மணி 2.30க்குச் சட்டமன்றம் கூடியபோது அத்தீர்மானம் நிராகரிக்கப்படுவதாக சட்டமன்றத் தலைவர் முகம்மட் சுபிர் எம்போங் அறிவித்தார்.
திரெங்கானு மந்திரி புசாருக்கு எதிராக நம்பிக்கை-இல்லாத் தீர்மானம்
திரெங்கானுவின் முன்னாள் மந்திரி புசார் அஹ்மட் சைட், நடப்பு மந்திரி புசார் அஹ்மட் ரஸிப் அப்துல் ரஹ்மானுக்கு எதிராக நம்பிக்கை-இல்லாத் தீர்மானம் ஒன்றை இன்று மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். பகல் மணி 12.30க்கு அது தாக்கல் செய்யப்பட்டதாக பிகேஆர் பண்டார் சட்டமன்ற உறுப்பினர் அசான் இஸ்மாயில் கூறினார்.…
‘மூன்று பிரதமர்கள் தேர்தல் இல்லாமலேயே வெளியேற்றப்பட்டனர்’
நஜிப் அப்துல் ரசாக் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் குடிமக்கள் பிரகடனத்தைத் தற்காத்துப் பேசிய முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் இதற்குமுன் மூன்று பிரதமர்கள் இதேபோன்று வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். “தேர்தலுக்காகக் காத்திராமல் ஒரு பிரதமரை வெளியேறக் கேட்டுக்கொள்வது ஒன்றும் புதிதல்ல. துங்கு …
‘பேரரசரைச் சிறுமைப்படுத்தினார்கள்’ என கிட் சியாங், மாட் சாபு, மலேசியாகினிமீது…
டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், அமானா தலைவர் முகம்மட் சாபு ஆகியோர்மீதும் மலேசியாகினியின்மீதும் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. மலேசியாகினியில் நேற்று வெளியிடப்பட்டிருந்த Kerajaan sediakan titah Agung, kata Kit Siang (பேரரசரின் உரையைத் தயாரித்துக் கொடுத்தது அரசாங்கம்- கிட் சியாங் கூறுகிறார்) என்ற செய்திதான் …
ஐஎஸ் தீவிரவாதிகள் பிரதமரைக் கடத்த முயன்றார்களாம்: ஜாஹிட் வெளியிடும் அதிர்ச்சித்…
கடந்த ஆண்டு முற்பகுதியில் டேஷ் (ஐஎஸ்) தீவிரவாதிகள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கடத்த முயற்சி மேற்கொண்டதாக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். அத்தீவிரவாதிகள் அமைச்சர்கள் சிலரையும் கடத்தத் திட்டமிட்டிருந்தார்களாம். “2015, ஜனவரி 30-இல் டேஷ்ஷுடன் தொடர்புள்ள 13 பேர் உள்துறை அமைச்சர் (ஜாஹிட்), தற்காப்பு …
உங்கள்மீது அளவுகடந்த நேசமுண்டு, ஆனால் அதை நிறுத்துங்கள்’- மகாதிருக்கு ஒரு…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் மிகுந்த பற்றும் பாசமும் வைத்துள்ள பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் லாய் பூஜாங், அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து அகற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார். குறுகிய ஆதாயத்துக்காக அரசியலைப் பயன்படுத்தக் கூடாது என்ற மாட்சிமை …
ரிம2.6 பில்லியன் தொடர்பான கேள்வியை நாடாளுமன்றம் நிராகரித்தது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் வழங்கபட்ட ரிம2.6 பில்லியன் அரசியல் நன்கொடை தொடர்பில் இரண்டு பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடுத்த கேள்விகளை மக்களவை நிராகரித்தது. மன்சூர் ஒத்மான்(பிகேஆர்- நிபோங் தெபால்) நன்கொடையில் மீதப்பட்ட தொகை பற்றியும் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின்(பிகேஆர்- புக்கிட் கெட்டில்) பிரதமர் ரிம2.03 பில்லியனை …
ஒருதலைப்பட்ச மத மாற்றத்திற்கு தடை, டிஎபி எம்பி மசோதா தாக்கல்…
சிறார்கள் ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்ய வகை செய்யும் சட்டத்தை தடை செய்வதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்பதலைக் கோரும் மசோதா ஒன்றை டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சிநிரல் திட்டத்தில் குலா முன்மொழிந்துள்ள மசோதா 16 ஆவது இடத்தில்…
முகைதினும் முக்ரிசும் அம்னோவிலிருந்து நீக்கப்படுகிறார்களா?
இடைநீக்கம் செய்யப்பட்ட அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசினையும் முன்னாள் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரையும் கட்சியிலிருந்து நீக்க அடுத்த அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும். அவ்விருவரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து வெளியேறக் கோரும் குடிமக்களின் பிரகடனத்துக்கு ஆதரவளித்ததுதான் காரணம் எனத் தெரிகிறது.…
தெங்கு ரசாலி: பிரதமர்-எதிர்ப்பு இயக்கத்தை ஆதரிக்கவில்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குடிமக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் என்று கூறப்பட்டிருப்பதை அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி மறுத்தார். “நான் அங்கு செல்லவில்லை. அதை நான் ஆதரிக்கவுமில்லை. அது பற்றி நான் அறியேன்”, என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். நஜிப்பைப் பதவி அகற்றும் இயக்கத்தை …


