கணக்கறிக்கை: போலீசாரின் ஆயுதங்கள், விலங்குகள் காணமல் போயின

2012 ஆம் ஆண்டு அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை, அரச மலேசிய போலீஸ் படைக்குச் சொந்தமான  ஆயுதங்கள், கைவிலங்குகள்,  வாகனங்கள் என மொத்தம் 309 பொருள்கள் காணமல் போனதாக தகவல் வெளியிட்டிருக்கிறது. 2010-க்கும் 2012-க்குமிடையில்  காணாமல் போனதாக பதிவுசெய்யப்பட்டிருக்கும்  அப்பொருள்களின் மதிப்பு ரிம 1.33 மில்லியன். காணாமல் போன…

கர்பால்: அரசியல்வாதிகளுக்கு எதிராக ஐஎஸ்எ பயன்படுத்தப்படாது, அப்போதும் சொன்னார்கள்

அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமுதாயத்தினர்ஆகியோருக்கு எதிராகத் தடுப்புக் காவல் பயன்படுத்தப்படாது என்று 1960 ஆம் ஆண்டில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்எ) இயற்றப்பட்ட போது வாக்குறுதி அளித்திருந்தனர் என்று டிஎபியின் தலைவர் கர்பால் சிங் நினைவு கூர்ந்தார். அந்த வாக்குறுதியை அளித்தவர் அப்துல் ரசாக் ஹுசேன், அப்போதைய துணைப்…

டிஎபி மத்திய செயற்குழுவில் ஒரிஜினல் மலாய்க்காரர் இல்லையாம்!

நேற்று நடைபெற்ற டிஎபி மத்திய செயற்குவிற்கான தேர்தவில் வெற்றி பெற்ற 20 பேரில் ஒருவர் கூட அசல் மலாய்க்காரர் இல்லை என்று பினாங்கு மலாய் காங்கிரஸ் தலைவர் ரஹ்மாட் இஸாஹாக் அங்கலாய்க்கிறார். நேற்றைய தேர்தலில் போட்டியிட்ட ஏழு "மலாய் அஸ்லி" கதி என்னவாயிற்று என்று அவர் கேட்டார். வெற்றி…

திரெங்கானுவில் கூரை இடிந்து விழுவதற்கு யார் பொறுப்பு?

திரெங்கானுவில் பொதுமக்கள் வசதிக்காக உள்ள கட்டிடங்களின் கூரைகள் எத்தனை தடவை இடிந்து விழுந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்? கோலா திரெங்கானு பாஸ் எம்பி, ராஜா கமருல் பஹ்ரேன் ஷா ராஜா அஹமட் இக்கேள்வியை முன்வைத்துள்ளார். இவ்வாண்டில் மட்டும் மூன்று தடவை இப்படிக் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன என்றாரவர். நேற்றுக்…

செர்டாங் மருத்துவமனையில் மூன்றாவது முறையாக கூரை இடிந்து விழுந்தது

செர்டாங் மருத்துவமனையில் கடந்த இரண்டு  நாள்களில் இரண்டாவது தடவையாகக் கூரை இடிந்து விழுந்திருக்கிறது. அம்மருத்துவமனையில், கூரை இடிந்து விழுவது ஒரு வழக்கமாகி விட்டது கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மூன்று தடவை கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இன்றைய விபத்தில் மகப்பேறு மருத்துவப் பிரிவுக் கூரை அதிகாலை மணி 2.55-க்கு…

ஒதுக்கீடுகள் பற்றிய வாக்குறுதிகளைப் பிரதமருக்கு நினைவுறுத்துகிறது இண்ட்ராப்

பிஎன்னுடன் இண்ட்ராப் செய்துகொண்ட புரிந்துணர்வுக் குறிப்பில்(எம்ஓயு) ஒப்புக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை  நிறைவேற்ற வேண்டிய  தருணம் வந்துவிட்டதை  பெர்சத்துவான் இண்ட்ராப் மலேசியா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு  நினைவூட்டியுள்ளது. ஏப்ரலில்  அந்த எம்ஓயு கையெழுத்தானதிலிருந்து பிரதமர்துறையில் இந்தியர்களுக்கென ஒரு பிரிவு அமைக்கப்பட்டதைத் தவிர  வேறு எதுவும் செய்யப்படவில்லை என  இண்ட்ராப் பினாங்கின்…

‘ஜனநாயகமில்லாத டிஏபி’-கைரி சாடல்

டிஏபி-இல் அம்னோவைப் போல் ஜனநாயகம் இல்லை  அதனால்தான் அது  மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டது  என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்  கூறுகிறார். பினாங்கு மலாய் காங்கிரஸ் தலைவர், ரஹ்மாட் இஷாக்,  டிஏபி-இலிருந்து விலகியது மலாய்க்காரர்கள் அக்கட்சியின்மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதைக் காண்பிக்கிறது  என்றாரவர். “அம்னோவை…

‘உதவித் தொகைக்கு ஒருவரும் அரசுக்கு நன்றி சொல்வதில்லை’

எவ்வளவோ உதவித் தொகைகள் கொடுக்கப்படுகின்றன ஆனால், மக்கள் நன்றி சொல்வதில்லை என நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் இன்று நாடாளுமன்றத்தில் அங்கலாய்த்துக் கொண்டார். “உதவித் தொகை கொடுக்கும்போது ஒருவரும் (அரசுக்கு) நன்றி சொல்வதில்லை. ஆனால், உதவித் தொகையைக் குறைத்தால் போது ஆர்ப்பரிக்கத் தொடங்கி விடுவார்கள்”, என்றாரவர். இந்த…

மந்தினில் பிஎஸ்எம் தலைமைச் செயலாளரும் பதினொருவரும் கைது

கம்போங் ஹக்கா மந்தினில் வீடுகளை உடைக்க முற்பட்ட மேம்பாட்டாளரைத் தடுக்க முயன்ற ஐந்து குடியிருப்பாளர்களும் ஏழு சமூக ஆர்வலர்களும் இன்று கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ்.அருள்செல்வனும் ஒருவர். 100-ஆண்டு பழைமை வாய்ந்த அந்தக் கிராமத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடப்பது இது இரண்டாவது தடவையாகும். இதற்குமுன்…

நஜிப்: திருத்தப்பட்ட பிசிஏ ஒரு புதிய ஐஎஸ்ஏ அல்ல

குற்றத்தடுப்புச் சட்டம் (பிசிஏ) 1959-இல் செய்யப்படும் திருத்தம்,  விசாரணையின்றித் தடுத்துவைக்க வகை செய்கிறது என்றாலும் அது பழைய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்ஏ) போன்றது அல்ல என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். திருத்தப்பட்ட பிசிஏ,  திட்டமிட்ட குற்றச் செயல்களை எதிர்க்கும் நோக்கம் கொண்டது  என்று நஜிப்,  நியூ…

அம்பிகா: ஏஜி-இன் சொல்லுக்கு மதிப்பில்லையா?

சட்டத்துறைத் தலைவரை (ஏஜி) ஓரங்கட்டிவிட்டுத்தான்  அரசாங்கம் தடுப்புக் காவல் சட்டத்தைத்  தாக்கல் செய்ததா? மூத்த வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீநிவாசன் இக்கேள்வியை எழுப்பியுள்ளார். இன்று  நாடாளுமன்றத்துக்கு  வெளியில்  பேரணி  ஒன்றில் உரையாற்றிய  அம்பிகா,  கடந்த ஜூலை மாதம்  ஏஜி அப்துல் கனி பட்டேய்ல்  தடுப்புக் காவல் சட்டத்தை  எதிர்ப்பதாக பொதுவில்…

கர்பால், கனவு காண்பதால் மட்டுமே புத்ரா ஜெயா கைக்கு வந்துவிடாது

உங்கள் கருத்து:  ‘பக்காத்தானில் இன்னும் சீர்படுத்த வேண்டியவை நிறைய உள்ளன. இன்னும் விவேகமாகவும் கடுமையாகவும் உழைக்க வேண்டும்’ கர்பால்: மிகவும் வயதாவதற்கு முன்பே புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவோம் பெயரிலி #69337042: கடந்த 56 ஆண்டுகளாக தேர்தல் ஆடுகளம் சமமாக இருந்ததே இல்லை. அதன் விளைவாக ஒரே ஆட்சி இத்தனை…

முக்ரிஸ் ஒரு பழிவாங்கும் மந்திரிபுசார்

கெடா மாநில மந்திரிபுசார் முக்ரிஸ் மகாதிர் பழிவாங்கும் மந்திரிபுசார் என்பதற்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன. பாரிசானுக்கு எதிரான வாக்களித்ததால் சீனர்களை தண்டிக்கும் எண்ணத்தில் செயல்படுகிறார்  என்று செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோ கூறுகிறார். கெடா மாநில சீனப்பள்ளிகளிடமிருந்து வரும் எந்தக் கோரிக்கையையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று முக்ரீஸ் விடுத்துள்ள…

கர்பால்: வயதாவதற்கு முன்பு புத்ரா ஜெயாவை வெற்றி கொள்வோம்

வயதாகிக் கொண்டிருக்கும் கட்சியின் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தில் இடம் பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என தாம் நம்புவதாக டிஎபியின் தலைவர் கர்பால் சிங் கூறினார். இன்று கோலாலம்பூரில் நடைபெறும் கட்சியின் சிறப்பு மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய கர்பால், பக்கத்தான் ரக்யாட் அடுத்தப் பொதுத் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி…

தண்டா புத்தெரா, நட்டம் ரிம3.77 மில்லியன்தான்!

இந்நாட்டு தேசியவாதிகளின் அமோக அரசியல் ஆதரவு இருந்தும் பெரும் சர்ச்சைக்குள்ளான தண்டா புத்தெரா படத்தை காப்பாற்ற முடியவில்லை. இவ்வார தொடக்கத்தில் அப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்ட போது அப்படம் வெற்றிகரமாக தோல்வியில் முடிந்தது. நட்டம் சுமார் ரிம3.77 மில்லியன்தான். அப்படம் ரிம4.7 செலவில் தயாரிக்கப்பட்டது. 25 நாள்கள் சினிமா அரங்குகளில்…

விசாரணையின்றி தடுத்துவைத்தல் என்பது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் உண்டு:…

விசாரணையின்றி தடுத்துவைக்க வகை செய்யும் குற்றத்தடுப்புச் சட்டத் திருத்தம் அமெரிக்கா, பிரிட்டன் முதலிய வளர்ந்த நாடுகளில் உள்ள தடுப்புக் காவல் சட்டம் போன்றதுதான். இதனைச் சுட்டிக்காட்டிய பிரதமர்துறையில் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் நன்சி ஷுக்ரி, “அது, குற்றம் செய்தவர்கள்மீது போதுமான ஆதாரங்களைத் திரட்டுவதற்குத் தேவையான கால அவகாசத்தை…

பிசிஏ பற்றிப் பேசுவதை தவிர்த்தார் கைரி

தம்மை ஒரு முற்போக்கிவாதியாகக் காட்டிக்கொள்ளும் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் குற்றத் தடுப்புச் சட்ட(பிசிஏ)த் திருத்தம் பற்றிக் கருத்துரைப்பதைப் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறார். இன்று கோலாலும்பூரில் ஒரு நிகழ்வில் அவரைப் பிடித்துக்கொண்ட மலேசியாகினி செய்தியாளர் பிசிஏ பற்றி கருத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு கைரி, “நான் பேசவுள்ள அரங்கம்…

1.4 மில்லியன் மலேசியர்கள் ஊழல்வாதிகளா?

உங்கள் கருத்து ‘கண்ணைமூடிக் கருத்துரைக்கும் அம்னோபுத்ரர்களுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. சிலர், மலேசியாவில் ஊழல் என்ற ஒன்று இல்லைவே இல்லை என்றுகூட அடித்துச் சொல்வார்கள்’ துணை அமைச்சர்: மலேசியர்களில்  ஊழலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை 5 விழுக்காடு மட்டுமே லூயிஸ்: பிரதமர்துறை துணை அமைச்சர் ரசாலி இப்ராகிம், அறியாமல் பேசும்…

பிசிஏ மாற்றரசுக்கட்சியினரை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதல்ல: ஜாஹிட் உத்தரவாதம்

குற்றத் தடுப்புச் சட்ட (பிசிஏ)த்தில்  திருத்தங்கள் செய்யப்படுவது, இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்குப் பதிலாக அதனைப் பயன்படுத்துவதற்காக அல்ல  என்கிறார் உள்துறை அமைச்சர்  அஹ்மட் ஜாஹிட் ஹமிட். அதே வேளை,  மாற்றரசுக் கட்சியினரை மிரட்டும் நோக்கமும் அதற்குக் கிடையாது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அச்சட்டத் திருத்தங்கள் பரவலான…

எண்ணெய் விலை மீண்டும் உயர்கிறதா? அரசாங்கம் மறுப்பு

எண்ணெய் விலை நாளையிலிருந்து மேலும் 10 சென் உயரும் என்ற வதந்திகளை அரசாங்கம் மறுக்கிறது. எண்ணெய் விலை இன்றிரவு உயராது என்று நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் டிவிட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார். “ரோன்95-க்கு அரசாங்கம் கொடுக்கும் உதவித் தொகையில் மேலும் 10 சென் குறைக்கப்படுவதாகக் கூறப்படுவதை மறுக்கிறேன்.  எனவே,…

‘பாலேக் இந்தியா’ பாலேக் சீனா’ என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்கப்பட்டது

மாணவர்களை நோக்கி ‘பாலேக் இந்தியா’ பாலேக் சீனா’ என்று கூறியதாக சொல்லப்படும்  எங்கு உசேன் பள்ளி துணை முதல்வர் அப்படிச் சொன்னதற்காக மன்னிப்பு கேட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பெற்றோர்- ஆசிரியர் சங்கக் கூட்டத்தில்  மன்னிப்பு கேட்கப்பட்டதாக சின் சியு டெய்லி,  பள்ளியின் பணியாளர்களில் ஒருவரை மேற்கொள்காட்டி  செய்தி…

மகாதிர்: ஆலோசனைப் பணிக்கு ரிம20 மில்லியனா? என்னாலும் செய்ய முடியுமே

அரசாங்கம், தேசியக் கல்வி செயல்திட்டத்துக்கு ஆலோசனை கட்டணமாக ரிம20 மில்லியன் கொடுத்திருப்பது பற்றிக் கருத்துரைத்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், தம்மாலும்கூட அந்தப் பணியைச் செய்திருக்க முடியும் என்றார். “என்னாலும் உள்ளூர் நிபுணராக பணியாற்ற முடியும். ஆனால், எனக்குத்தான் யாரும் (ஆலோசனை சொல்லும்) வேலை கொடுக்கமாட்டேன் என்கிறார்கள்”,…

அரசாங்க நிகழ்வுகளிலும் அம்னோ தேர்தல் காய்ச்சல்

இன்னும்  ஒரு மாதத்தில் அம்னோ கட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள வேளையில்,  தேர்தல் வேட்பாளர்கள், அதிலும் குறிப்பாக அவர்களில்  அமைச்சர்களாக இருப்பவர்கள், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தேர்தலைப் பற்றி மக்களுக்குக் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு நினைவூட்டத் தவறுவதில்லை. நேற்று,  புத்ரா ஜெயாவில் கார்னிவெல்  உசாஹாவான் டேசா தொடக்க விழாவில்,  பேசிய…