மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் கூறுகையில், முன்னாள் மந்திரி பெசார் அமினுடின் ஹருன் உள்ளிட்ட சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளை முழுமையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளனர். மாநில முதல்வர் இஸ்மாயில் லாசிம், அந்த நிதியைத் திருப்பித் தருமாறு கோரி செவ்வாய்க்கிழமை பக்காத்தான் ஹராப்பான் (PH) பிரதிநிதிகளுக்கு அறிவிப்புகள்…
ஈக்காத்தான்: நஜிப் பதவி விலக வேண்டியதில்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு நாட்டை வழிநடத்த வலுவான அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதால் அவர் பதவி விலக வேண்டிய தேவையில்லை என்கிறார் பார்டி ஈக்காத்தான் பங்சா மலேசியா தலைவர் அப்துல் காடிர் ஷேக் பாட்சிர். பாஸ் கட்சியுடன் புதிய அரசியல் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் அப்துல் காடிர், நஜிப்பின் …
மகாதிர் மலேசியாவைக் காக்க அல்ல, அழிக்க விரும்புகிறார்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மலேசியாவைப் பாதுகாக்க நினைக்கவில்லை மாறாக அழிக்க விரும்புகிறார் எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறினார். வெள்ளிக்கிழமை மகாதிர் அம்னோ உறுப்பினர்களுக்கு எழுதிய திறந்த மடல்மீது கருத்துரைத்த சாலே, முன்னாள் பிரதமர் ஆளும் கட்சியை முனைப்பாக இருக்கிறார் என்றார்.…
செய்தியாளர்களுக்கு வீட்டைச் சுற்றிக் காண்பித்தார் சிஎம்
ஒரு பங்களா வாங்கியதன் தொடர்பில் சர்ச்சைக்கு இலக்காகியிருக்கும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கேள்விக்குரிய வீட்டை செய்தியாளர்களுக்குக் காண்பித்தார். இன்று கொம்டாரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் எப்போது செய்தியாளர்களுக்கு வீட்டைக் காண்பிக்கப் போகிறார் என்று வினவப்பட்டது. அதற்கு லிம் “இப்போதே” என்று பதிலளித்து செய்தியாளர்களை ஜாலான் பின்ஹோர்னில் …
அன்வார் நல்லாவுக்கு எதிரான வழக்கில் தானே வழக்காடுவார்
முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், மலேசிய ஐக்கிய இந்தியர் கட்சித் தலைவர் எஸ்.நல்லகருப்பனுக்கு எதிராக தொடுத்துள்ள ரிம100மில்லியன் அவதூறு வழக்கை தாமே நடத்த முடிவு செய்துள்ளார். அவ்வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருவதாக அன்வாரின் முன்னாள் வழக்குரைஞர் லத்தீபா கோயா தெரிவித்தார். வழக்குரைஞருடன் கலந்துபேச அன்வாருக்குப் போதுமான நேரம் …
குவான் எங் அவரின் வீட்டைச் செய்தியாளர்களுக்குக் காண்பிப்பது நல்லது
பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், ஜாலான் பின்ஹோர்னில் உள்ள அவரது வீட்டைச் செய்தியாளர்களுக்குத் திறந்து காண்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அதை முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் கீர் தோயோவின் வீட்டோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இன்று பினாங்கில் டிஏபி-இன் 50ஆம் ஆண்டு விழாவில் உரை …
அஸலினாவின் கூற்று குறித்து எம்ஏசிசி கருத்துரைக்க விரும்பவில்லை
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் விசாரணை அறிக்கை எஸ்ஆர்சி இண்டர்நேசனல் விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஊழல் எதுவும் செய்யவில்லை என்று காண்பிப்பதாக அரசாங்கம் கூறியுள்ள வேளையில் எம்ஏசிசி-இன் உயர் அதிகாரி ஒருவர் அதை உறுதிப்படுத்த மறுத்தார். “அந்த விவகாரத்தில் நான் கருத்துரைக்க விரும்பவில்லை”, என எம்ஏசிசி விசாரணை …
மகாதிர் அம்னோ விவகாரங்களில் தலையிடக் கூடாது, அன்வார் மூசா
அம்னோ-வைவிட்டு விலகிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அம்னோ உறுப்பினர்களை நடப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நம்பிக்கை-இல்லாத் தீர்மானம் கொண்டுவரச் சொல்வது சரியல்ல என்று அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா கூறினார். “மகாதிரை அம்னோ விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அவர் …
‘ஐஎஸ் தீவிரவாதத்தை வீழ்த்த ஜனநாயகம் ஒன்றே வழி’
ஜனநாயகத்தின் வழிதான் ஐஎஸ்ஸை வீழ்த்தி மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியும் என முன்னாள் எகிப்திய எம்பி அப்துல் மவ்குட் டார்டரி கூறினார். சர்வாதிகார ஆட்சிகளும் பயங்கரவாதமும் ஒன்று மற்றொன்றை வாழவைத்துக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். சர்வாதிகாரம் நிலவும்போது மக்கள் அதை எதிர்க்க வன்முறையை நாடுகிறாரகள். ஆனால், வன்முறை …
தகிக்கும் வெய்யில்; வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வீர்
அனல் காற்றுக்கு போலீஸ் பயிற்சியாளர் ஒருவர் பலியானதை அடுத்து மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. . இம்மாதத் தொடக்கத்திலிருந்து தகிக்கும் வெய்யிலால் நான்கு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஒருவர் உயிர் இழந்தார் என்றும் சுகாதார அமைச்சு கூறியது. புதன்கிழமை, ஜோகூரில் போலீஸ் பயிற்சியாளர் அசிசான் …
ரஷ்யாவில் 61 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கியது
தெற்கு ரஷ்யாவில் பயணிகள் விமானமொன்று விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த 55 பயணிகளும் ஆறு பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. டுபாயிலிருந்து வந்த அவ்விமானம் ரோஸ்டோவ் விமான நிலையத்தில் தரை இறங்க முயன்று முதல் முயற்சியில் தோல்வி கண்ட பின்னர் மறுபடியும் முயன்றபோது தரையில் மோதியது என ரஷ்ய அவசரகால …
சிவப்புச் சட்டையினர் மகாதிர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
சுமார் 500 ஆர்ப்பாட்டக்காரர்கள், சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜ்மால் முகம்மட் யூனுஸ் தலைமையில் கொளுத்தும் வெய்யிலையையும் பொருட்படுத்தாமல் புத்ரா ஜெயாவில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எதிராக ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலோர் சிவப்புச் சட்டை அணிந்து கைகளில் மகாதிரைக் குறைகூறும் பதாதைகள் ஏந்தியிருந்தனர். பதாதைகளில் …
பிரதமருக்கு எதிராக நம்பிக்கை-இல்லாத் தீர்மானம் கொண்டு வருவீர்: மகாதிர்
அம்னோ உறுப்பினர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வெளியேற்ற தமக்கு உதவ வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு எழுதிய திறந்த மடல் ஒன்றில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். “கட்சியையும் நாட்டையும் பாதுகாக்க எனக்கு உதவ வேண்டும் என்று கட்சியின் உண்மையான …
சட்டவிரோத சிகரெட்டுகளினால் புகையிலை நிறுவனம் தொழிற்சாலையை மூடுகிறது
சிகரெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபேக்கோ பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அதன் தொழிற்சாலையை மூடவுள்ளது. அதன் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்பட்டு 2017 இரண்டாம் பாதி ஆண்டில் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என அந்நிறுவனம் புர்சா மலேசியாவுக்கு நேற்று தெரியப்படுத்தியது. கள்ள சிகரெட்டுகளின் வரத்து பெருகி இருப்பது இம்முடிவுக்கு …
‘சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு’ வீடு வாங்கிய சிஎம் லிம்மீது…
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தாம் முன்பு வாடகைக்குக் குடியிருந்த வீட்டை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுவது தொடர்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. மலேசிய சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும் எறும்புக்குழுவின் தலைவர் ஸபாருடின் அப்துல் ரகிம் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் இன்று புகாரைச் செய்தார்.…
அம்னோவுக்கும் அன்வார் விள்ம்பரப் பலகை விவகாரத்துக்கும் தொடர்பில்லை
அம்னோவுக்கும் சிலாங்கூர் என்ஜிஓ-கள் கூட்டமைப்பின் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் “அன்வாரை விடுதலை செய்” விளம்பரப் பலகையை எரிக்க விரும்புவதற்கும் தொடர்பில்லை என்கிறார் அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா. ஜமால் சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர்தான் என்றாலும் இந்த விவகாரத்தில் கட்சிப் பிரதிநிதியாக அவர் செயல்படவில்லை …
முகைதின்: நான் நாஜிப்புக்கு எதிராக சதி செய்வதாக அஸலினா கூறியது…
பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட், அம்னோ துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட முகைதின் யாசின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக சதி செய்தார் என்று கூறியது பெரும் பாவமாகும். பிரதமருக்கு எதிரான சதித் திட்டத்தை மறுத்த முகைதின்தான் இவ்வாறு கூறினார். அதேவேளை நாட்டு நிலவரம் …
கெஜாரா புள்ளிக்குறைப்பு முறை மே மாதம் செயல்படத் தொடங்கும்
தானியங்கு அமலாக்க முறை (ஏஇஎஸ்)யும் கெஜாரா புள்ளிக்குறைப்பு முறையும் ஒன்றிணைந்த தானியங்கு விழிப்புணர்வு பாதுகாப்பு முறை (ஆவாஸ்) மே மாதம் அமலுக்கு வருகிறது. அதன் பொருட்டு சாலைப் போக்குவரத்துத் துறை சட்டம் திருந்தப்படும் என போக்குவரத்து துணை அமைச்சர் அப் அசீஸ் கப்ராவி கூறினார். “ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் (சட்டத் …
அமெரிக்க ஆய்வு நிலையம்: பிப்ரவரிதான் வெப்பம் மிகுந்த மாதம்
அமெரிக்காவின் தேசிய கடல், வான்மண்டல வாரிய(என்ஓஏஏ)த்தின் கணக்கின்படி பிப்ரவரிதான் வெப்பம் மிகுந்த மாதமாகும். 1880ஆம் ஆண்டு தொடங்கி வெப்பநிலையைப் பதிவுசெய்து வரும் அமைப்பு அது. 20ஆம் நூற்றாண்டில் இருந்ததைவிட நிலத்திலும் கடலிலும் வெப்பநிலை 1.21 பாகை கூடியிருப்பதாக அது தெரிவித்தது. பிப்ரவரியில் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, தெற்கு மற்றும் …
பினாங்கில் குவான் எங் சர்வாதிகாரி என்று குற்றஞ்சாட்டும் பதாதைகள்
பினாங்கு தீவில் பல இடங்களிலும் பட்டர்வர்திலும் செபராங் பிறையிலும் டிஏபி சர்வாதிகாரத்தன்மை வாய்ந்தது என்று குற்றஞ்சாட்டும் பதாதைகள் காணப்பட்டுள்ளன. பதாதைகளில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கின் படம் பொறிக்கப்பட்டு, “எங்களுக்குச் சர்வாதிகாரிகள் தேவையில்லை. பிகேஆர் டிஏபியுடனும் பிஎச்(பக்கத்தான் ஹராபான்)-உடனும் ஒத்துழைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று …
ரிம2.6பில்லியன் குறித்து கேள்வி கேட்பதற்குத் தடையா? பண்டிகார் தெரியாது என்கிறார்
ரிம2.6 பில்லியன் நன்கொடை தொடர்பான கேள்விகள் கேட்பதற்கு மக்களவை நிலை ஆணைகளின்படி தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அறிந்திருக்கவில்லை. “எப்போது அப்படிக் கூறப்பட்டது?”, என கூ ஹிசியாவ் லியங்கிடம் பண்டிகார் வினவினார். கூ (பிகேஆர்- அலோர் ஸ்டார்), அரசாங்கம் சிம் ட்ஸே ட்ஸின்னுக்கு …
கடந்த 5 ஆண்டுகளில் 2015-இல் அதிகமானோர் ஆள்குறைப்பு செய்யப்பட்டனர்
கடந்த ஐந்தாண்டுகளில் 2015-இல்தான் மிக அதிகமான தொழிலாளர்கள் ஆள்குறைப்பு செய்யப்பட்டார்கள் என மனிதவள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “கடந்த ஐந்தாண்டுகளை எடுத்துக் கொண்டால் 2015-இல்தான் ஆள்குறைப்பு அதிகம் நடந்துள்ளது. ஆனாலும் 2007, 2008, 2009 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் எண்ணிக்கை குறைவுதான்”, என எழுத்துவழி …
குவான் எங் ஊழல் புரிந்தார் எனக் கூறப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தில்…
லிம் குவான் எங் (டிஏபி-பாகான்) ஊழல் புரிந்தார் என்று கூறப்பட்டதை அடுத்து மக்களவையில் ஒரே கூச்சலும் குழப்பமும் நிலவியது. லிம் முன்பு வாடகைக்குக் குடி இருந்த வீட்டை இப்போது மிகக் குறைந்த விலைக்கு வாங்கி இருப்பதாக ஷாபுடின் யஹ்யா(பிஎன் -தாசெக் குளுகோர்) கூறினார். ஜார்ஜ்டவுனில் உள்ள அந்த வீட்டின் …
ஏஜிக்கு எதிராக நம்பிக்கை-இல்லாத் தீர்மானம்: எதிரணி மேல்முறையீடு செய்யும்
சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலிமீது நம்பிக்கை-இல்லாத் தீர்மானத்துக்கு மக்களவைத் தலைவர் அனுமதி மறுத்திருப்பதற்கு எதிராக எதிரணி மேல்முறையீடு செய்யும். எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மக்களவைத் தலைவர் பண்டிகார் அலியிடம் மேல்முறையீட்டைத் தாக்கல் செய்வார். “விரைவில் அவருக்குக் கடிதம் அனுப்புவேன். மக்களின் நலனை …


