மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் கூறுகையில், முன்னாள் மந்திரி பெசார் அமினுடின் ஹருன் உள்ளிட்ட சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளை முழுமையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளனர். மாநில முதல்வர் இஸ்மாயில் லாசிம், அந்த நிதியைத் திருப்பித் தருமாறு கோரி செவ்வாய்க்கிழமை பக்காத்தான் ஹராப்பான் (PH) பிரதிநிதிகளுக்கு அறிவிப்புகள்…
சிஎம்: எனக்கு வீடு விற்றவர் வெளியில் வந்து விட்டார்; ரிம2.6பி.…
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தாம் ஒரு பங்களா வீட்டைச் சந்தை விலைக்கும் குறைவான விலைக்கு வாங்கியதை ஊழல் என்று முத்திரை குத்த முனைவோரைக் கடுமையாக சாடினார். தாமோ, தமக்கு ரிம2.8 மில்லியனுக்கு வீட்டை விற்றவரோ ஒளிப்பதற்கு ஏதுமில்லை என்று டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் கூறினார்.…
பயங்கரவாத மிரட்டல் பற்றிய அறிக்கை ஒரு அரசியல் கட்டுக்கதை அல்ல
மலேசியா பயங்கரவாத மிரட்டலை எதிர்நோக்குவதாக அரசாங்கம் வெளியிட்ட அறிக்கைகள் காதில் பூ சுற்றும் வேலை அல்ல என்று அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். தலைவர்களைக் கடத்துவது உள்பட பயங்கரவாதிகளால் நாட்டுக்கு மிரட்டல் ஏற்பட்டிருப்பது உண்மையே என்பதைத்…
வேகமாக காரோட்டிச் செல்லும் அமைச்சர்களுக்கு அபராதம் இல்லை
அரசாங்க அலுவல் காரணமான வேகமாக செல்லும் அரசாங்கக் கார்களுக்கு சம்மன் வழங்கப்படாது. அந்தக் கார்களில் செல்லும் அமைச்சர்களோ, துணை அமைச்சர்களோ வேகமாகச் செல்வதற்கு நியாயமான காரணம் இருக்குமானால் சம்மன் வழங்கப்படாது என உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் கூறினார். யாரும் சட்டத்துக்கு மேற்பட்டவர்கள் அல்லர் என்பதை…
கேஎல், பினாங்கில் வீடுகள் கட்டுப்படியான விலையில் இல்லை
பேங்க் நெகராவின் 2015 ஆண்டறிக்கை, கோலாலும்பூரிலும் பினாங்கிலும் வீடுகள் கட்டுப்படியான விலையில் இல்லை என்கிறது. கோலாலும்பூரிலும் பினாங்கிலும் ஒருவர் ஐந்தாண்டுகள் வேலை செய்து ஈட்டிய பணத்தில் எதுவும் செலவு செய்யாமல் இருந்தால் மட்டுமே கட்டுப்படியான விலையில் ஒரு வீட்டை வாங்க முடியும். வீட்டு விலைகள் சராசரி வருமானம் உள்ளவர்கள்…
மார்ச் 27 மலேசியாவை காப்பாற்றுவோம் கூட்டத்தில் அதிகமான அம்னோ உறுப்பினர்கள்…
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, ஷா அலாம் கொன்வென்சன் சென்டரில் நடைபெறவிருக்கும் மலேசியாவை காப்பாற்றுவோம் கூட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான அம்னோ உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்று அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் இன்று கூறினார். அதிகமான அம்னோ உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர் என்று மலேசியாகினியிடம்…
எம்எச்370-இன் உடைந்த பகுதி என்று நம்பப்படும் ஒன்றை ஒப்படைக்க தென்னாப்ரிக்கர்…
35-வயது தென்னாப்ரிக்கர் ஒருவர், காணாமல்போன எம்எச்370 விமானத்துக்குச் சொந்தமானது என்று நம்பப்படும் உடைந்த பாகங்களில் ஒன்றை ஒப்படைப்பதற்காக வைத்துக் கொண்டிருக்கிறார். தென்னாப்ரிக்காவின் தெற்குக் கடலோரமாக அவர் அதைக் கண்டெடுத்தாராம். நெலியஸ் குருகர் என்னும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மொசல் வளைகுடா பகுதியில் கடலோரமாக நடந்து கொண்டிருந்தபோது “விநோதமாகக் காணப்பட்ட” ஒரு …
பினாங்கு சிஎம் பங்களா வாங்கியதன்மீது எம்ஏசிசி விசாரணை தொடங்கியது
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பங்களா வாங்கிய விசயத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டிருப்பதன் தொடர்பில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் கொம்ப்டாரில் உள்ள மாநில அரசு அலுலவகங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளது. இதனை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் மாநில டிஏபி தலைவருமான செள கொன் …
பிரஸ்ஸல்ஸ் தாக்குதலை அடுத்து விமான நிலையப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளை அடுத்து விமான நிலயங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது, நடப்பில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுஆய்வு செய்யப்படுகின்றன. ஸவண்டெம் விமான நிலையத்திலும் மெட்ரோ ரயிலிலும் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுபேற்றுக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய பிரதமர் மெல்கம் …
நஜிப்மீது வழக்கு தொடுத்தார் மகாதிர்: ரிம2.6பில்லியன் இழப்பீடு கோருகிறார்
டாக்டர் மகாதிரும் வேறு இருவரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது வழக்கு தொடுத்துள்ளனர். நம்பி ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை மீறினார் என்றும் சட்டத்தைப் பின்பற்ற வேண்டியவரே சட்டத்தை மீறினார் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கில் மகாதிரை அடுத்து அனினா சாஆடுடினும் கைருடின் …
கைரிக்கு மஇகா இளைஞர்கள் ஆதரவு
இளைஞர், விளையாட்டு அமைச்சில் நிகழ்ந்துள்ள ரிம100மில்லியன் ஊழல் தொடர்பில் அதன் அமைச்சர் கைரி ஜமாலுடின் பதவி விலக வேண்டியதில்லை என்கிறார் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சி.சிவராஜா. அவ்விவகாரத்துக்கு கைரி ஏற்கனவே முழுப் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளார் என்றாரவர். “பணத்தைக் கையாடியதாக உயர் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். எனவே, …
பிரஜைகள் பிரகடனத்திற்கு அமோக ஆதரவு!
மலேசியாவை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய 37 கூறுகளைக் கொண்ட பிரஜைகள் பிரகடனத்திற்கு இதுவரையில் 46,000 –க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். நேற்று காலை, பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஒரு கையெழுத்திடும் நிகழ்ச்சியில் 26 சமூக இயக்கங்களை சார்ந்தவர்கள் கையெழுத்திட்டு தங்களின்…
குலா: உண்மையான ஒற்றுமை மேலோங்க இனவாத அரசியல் கட்சிகளையும் கொள்கைகளையும்…
செண்டர் பார் பெட்டர் டுமாரொ அல்லது சென்பெட் எனும் ஆய்வுக் குழுவின் ஆய்வின்படி, இனவாதம்கொண்டவர்கள் அல்லது இனவாதத்தின் தாக்கத்தை உணர்ந்தவர்கள் என 40.75 % மலேசிய இளைஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக் காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன், பெரும்பாலான மலேசியர்கள் இனவாதத்தை ஆதரிக்காவிட்டாலும், அவர்களின்…
ரிம100 மில்லியன் கையாடல்மீது உடனடி விசாரணைக்குப் பிரதமர் உத்தரவு
இளைஞர், விளையாட்டு அமைச்சில் நிகழ்ந்துள்ள ரிம100 மில்லியன் கையாடல்மீது விசாரணை நடத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உத்தரவிட்டுள்ளார். “அவ்விவகாரம் மீது உடனடி விசாரணைக்குப் பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார். “ஊழலை நாட்டிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும். அரசாங்கம் அதைப் பொறுத்துக்கொள்ளாது”, என அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா கூறியதாக பெர்னாமா …
புவா: குவான் எங் விடுப்பில் செல்ல வேண்டியதில்லை
ஒரு பங்களா வாங்கியது தொடர்பில் சர்ச்சையில் சிக்கியுள்ள பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டாலொழிய அவர் விடுப்பில் செல்ல வேண்டிய அவசியமில்லை. டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா இவ்வாறு கூறினார். “குற்றம் சாட்டப்பட்டால் மட்டுமே ஒருவர் விடுப்பில் செல்ல வேண்டும்”, …
சிஎம் விடுப்பில் செல்வது பற்றியும் யோசிக்கலாம்: அம்பிகா
வீடு வாங்கியது தொடர்பில் சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்குப் பல விருப்புரிமைகள் இருப்பதாக வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கூறினார். “அவர் விரைந்து விசாரணை செய்யுமாறு மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தை வலியுறுத்தியிருப்பது ஒரு நல்ல காரியமாகும். இதை விரைவாக விசாரிக்க முடியும்”,…
பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி மாற்றுக் கருத்துகள் ஒடுக்கப்படுகின்றன
அரசாங்கங்கள் குறை சொல்வோரை ஒடுக்குவதற்கான சட்டங்களைக் கொண்டுவர பயங்கரவாதத் தாக்குதல்களைக் காரணம் காட்டுகின்றன என்று அனைத்துல ஜூரர்கள் ஆணைய(ஐசிஜே) ஆசிய-பசிபிக் வட்டார இயக்குனர் சேம் ஸரிபி கூறினார். பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக மக்களைப் பாதுகாக்கும் கடப்பாடு அரசாங்கங்களுக்கு உண்டு. ஆனால், அரசாங்கங்கள் தங்களுக்குள்ள கடப்பாட்டை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி …
பின்ஹோர்ன் சாலை பங்களா விற்பனை தொடர்பில் பாங் லி கூன்…
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு தம்முடைய ஜாலான் பின்ஹோர்ன் பங்களாவை விற்றது தொடர்பில் சத்திய பிரமாணமொன்றைச் செய்துள்ள பாங் லி கூன், அந்த வீட்டு விற்பனை தொடர்பான சர்ச்சையில் யாராவது தம்மை இழுத்துவிட முனைந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறினார். பாங், டெண்டர் மூலமாக …
மாட் சாபு சரவாக்கில் நுழைய தடை
சரவாக்கில் அடியெடுத்து வைக்க முயன்ற பார்டி அமானா நெகாரா (அமானா) தலைவர் முகம்மட் சாபு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். “காலை மணி 10.30க்கு சிபு விமான நிலையம் வந்து சேர்ந்ததும் உடனே திருப்பி அனுப்பப்பட்டேன்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். மாட் சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் …
5.5மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்களா? இல்லவே இல்லை என்கிறது உள்துறை அமைச்சு
மலேசியாவில் 5.5மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. இவ்வாண்டு ஜனவரி 31 முடிய நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.08 மில்லியன். இது குடிநுழைவுத் துறையின் கணக்கு என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தற்காலிக வேலை அனுமதி வைத்திருப்பவர்கள். பவுசி அப்துல் ரஹ்மான்…
கெடா, பெர்லிசில் இரண்டு நாள்களுக்குப் பள்ளிகள் மூடப்படும்
கல்வி அமைச்சு நாளை தொடங்கி கெடாவிலும் பெர்லிசிலும் எல்லாப் பள்ளிகளையும் மூடும்படி உத்தரவிட்டுள்ளது. கடும் வெப்பத்தின் காரணமாக பள்ளிகள் மூடப்படுவதாக அமைச்சர் மஹாட்சிர் காலிட் முகநூலில் கூறினார். கெடாவிலும் பெர்லிசிலும் வெய்யில் கடுமையாக உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்படுகின்றன.
மணவிலக்குக்குப் பிந்திய ரிம30 மில்லியன் அன்பளிப்பு போதாது. ரிம100மி. வேண்டும்:…
தம் முன்னாள் கணவர் மஹமுட் பெகிர் தயிப், மணவிலக்குக்குப் பிந்திய அன்பளிப்பாக ரிம30 மில்லியன் கொடுக்க வேண்டும் என கோலாலும்பூர் ஷியாரியா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஷானாஸ் ஏ. மஜிட் மேல்முறையீடு செய்துள்ளார். அதற்கான மனுவை ஷியாரியா உயர் நீதிமன்றத்தில் இன்று அவர் சமர்ப்பித்தார். ரிம30மில்லியன் …
பயங்கரவாதிபோல் நடத்தப்பட்டேன்: ரிதுவான் டீ குமுறல்
இனம், சமய விவகாரங்கள் குறித்து சினமூட்டும் வகையில் கருத்துத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் பேராசிரியர் முகம்மட் ரிதுவான் டீ அப்துல்லா, சிங்கப்பூருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டார். அந்த அனுபவத்தை இன்று சினார் ஹரியானில் தமது பத்தியில் நினைவுகூர்ந்த அவர், திருப்பி அனுப்பியதற்கான காரணத்தைக் கூட சிங்கை …
ரிம100மில்லியன் ஊழலின் சூத்திரதாரி இளைஞர், விளையாட்டு அமைச்சைச் சேர்ந்தவர்
ரிம100மில்லியன் ஊழல் தொடர்பில் கைதான மூத்த அரசாங்க அதிகாரி தம் அமைச்சைச் சேர்ந்தவர்தான் என்பதை கைரி ஜமாலுடின் உறுதிப்படுத்தினார். அவர்மீது விசாரணை நடந்து வருவதைச் சில வாரங்களுக்கு முன்பு மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) தம்மிடம் தெரிவித்ததாக இளைஞர், விளையாட்டு அமைச்சர் கூறினார். அரசாங்கப் பணக் கையாடல் தொடர்பில் ஒன்பது …


