முன்னாள் மந்திரி புசார் ரொம்பினில் பிஎன் வேட்பாளர்

பகாங்கின்  முன்னாள்  மந்திரி  புசார்  ஹசான்  அரிப்பின்  ரொம்பினில்  பிஎன்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  அவரது  நியமனத்தை  அறிவித்தார். ஹசான்  ரொம்பின்  அம்னோ  தொகுதி  இடைக்காலத்  தலைவருமாவார். ரொம்பின்  இடைத்  தேர்தல்  மே 5-இல்  நடைபெறும். அத்தொகுதி  எம்பி ஜமாலுடின்  ஜர்ஜிஸ்  ஏப்ரல்…

முஸ்லிம்களுக்கு ஜிஎஸ்டி விலக்களிக்கும் விவகாரம் அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது

பொருள், சேவை  வரி  செலுத்துவதிலிருந்து  முஸ்லிம்களுக்கு  விலக்களிக்கப்பட  வேண்டும்  என்ற  தம்  பரிந்துரை அமைச்சரவையின்  கவனத்துக்குக்  கொண்டு  செல்லப்பட்டுள்ளதாகக் கூட்டரசுப்  பிரதேச  முப்தி  சுல்கிப்ளி  முகம்மட்  அல்  பக்ரி  கூறினார். அந்த  ஆறு  விழுக்காடு  வரி ‘ஜக்காத்’(இஸ்லாமிய  வரி)  செலுத்துவோருக்குக்  குறைக்கப்பட  வேண்டும்  அல்லது  அடியோடு  அகற்றப்பட  வேண்டும் …

இணையத்தில் படிப்பதை எல்லாம் நம்பி விடாதீர்கள்: நஜிப்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  சமூக  வலைத்தளங்களில்  வரும்  குற்றச்சாட்டுகள்  உண்மையாக  இருப்பதில்லை  என்று எச்சரிக்கிறார். முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்   இணையத்தில்  பதிவேற்றம்  செய்த  பல காணொளிகளில்  கடுமையாக  தாக்குதல்  நடத்தி  இருப்பதை  அடுத்து  நஜிப்  தம்  வலைப்பதிவில் இவ்வாறு  கூறியுள்ளார். “பல  தகவல்கள்  பெரிதுபடுத்தப்பட்டுத் …

சுல்: பாஸ் 2004 தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

பாஸ்  2004-இல்  செய்த  தவறுகளிலிருந்து  பாடம்  கற்றுக்கொள்ளாவிட்டால் 14வது  பொதுத்  தேர்தலில்  அதன்  நிலை  மோசமாகும்  என  அக்கட்சியின்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  ஒருவர் எச்சரிக்கிறார். அந்த  இஸ்லாமியக்  கட்சி  அதன்  பக்கத்தான்  ரக்யாட்  பங்காளிக்  கட்சிகளுடன்  சர்ச்சையிட்டுக்  கொண்டிருப்பது  குறித்து   முன்னாள்  கோலா  சிலாங்கூர்  எம்பி  சுல்கிப்ளி …

அதிகாரிகள் தி எட்ஜ் குழுமத்தின் உரிமையாளரைக் குறி வைக்கிறார்களா?

கடந்த  மாதம் தி எட்ஜ்  பத்திரிகையின்  தலைமை  செயல்  அதிகாரி  ஹோ  கே தாட்  கைது  செய்யப்பட்டதை  அடுத்து இப்போது  அதிகாரிகளின்  கவனம்  தி எட்ஜ்  ஊடகக் குழுமத்தின்  உரிமையாளர்  தோங்  கூய் ஒங்-மீது  திரும்புவதுபோல்  தெரிகிறது. தோங்-கை  வருமான  வரி  வாரிய (ஐஆர்பி)  அதிகாரிகள்  விசாரித்து  வருவதாக …

ஜாஹிட்: பெர்மாதாங் பாவில் அதிர்ச்சி காத்திருக்கிறது

மே 7  பெர்மாத்தாங்  பாவ்  இடைத்  தேர்தல்  ஓர்  அதிர்ச்சியை  உண்டுபண்ணும் என்று  அம்னோ  உதவித்  தலைவர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார். அன்வார்  இப்ராகிம்  அம்னோ  உறுப்பினராக இருந்த  காலத்திலிருந்து  வென்று  வந்துள்ள  அத்தொகுதியில்   “அதிர்ச்சிதரும்”  அரசியல்  மாற்றம்  நிகழப்  போகிறது  என்றாரவர். அதை  விளக்கும்படி  கேட்டதற்கு…

சுஹாகாம்: பொடாவுடன் எங்களுக்கு உடன்பாடு இல்லை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மலேசிய மனித உரிமைகள் கழகம் (சுஹாகாம்) ஒப்புதல் அளித்திருந்தது என்று உள்துறை அமைச்சார் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறியிருந்ததை அக்கழகம் மறுத்துள்ளது. மாறாக, மார்ச் 12 இல் சுஹாகாம் உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. மனித உரிமைகளைப் பொறுத்தவரையில் இச்சட்ட மசோதாவில் எவ்வாறான…

ஹிண்ட்ராஃப் ஒப்பந்தம் – நஜிப்பை கவிழ்க்கும்!

ஹிண்ட்ராஃப் இயக்கத்திற்கும் தேசிய முன்னணிக்கும் இடையே செய்து கொள்ளப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் மதிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் ஆலோசகர் என். கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் தொடர்பாக அண்மையில்…

லொக்: ஹாடியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பக்கத்தானிடம் இல்லை

பக்கத்தான்  ரக்யாட்  ஒரு  பதிவு  பெற்ற கட்சி அல்ல  என்பதால்  அக்கூட்டணியின்  நிலைப்பாட்டை  மீறிச்  செயல்பட்ட பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  அவாங்குக்கு  எதிராக  ஒழுங்கு  நடவடிக்கை  எடுக்கும்  அதிகாரத்தை  அது  பெற்றிருக்கவில்லை என்கிறார்  டிஏபி  ஏற்பாட்டுச்  செயலாளர் அந்தோனி  லொக். சங்கப்  பதிவகத்தில் அதன்  பதிவு  இன்னும் …

லிம்: பொடா நிறைவேற்றப்பட்டபோது ஆஸ்திரேலியாவில் இருந்தேன்

பினாங்கு  முதலமைச்சர்  லிம் குவான்  எங்,  பயங்கரவாதத்  தடுப்புச்  சட்டம்(பொடா) மக்களவையில்  விவாதத்துக்கு  வந்து  நிறைவேற்றப்பட்டபோது  தாம்  அங்கில்லாமல்  போனது  ஏன்  என்ற கேள்விக்குப்  பதிலளிக்காமல் தப்பிக்கப்  பார்க்கிறார்  என்று  கூறப்படுவதை  மறுத்தார். அப்போது  ஆஸ்திரேலியாவில் இருந்ததை  ஒப்புக்கொண்ட  அவர் , அங்கு  விடுமுறைக்காக  சென்றாரா  அல்லது  அதிகாரப்பூர்வமாக …

பிஎஸ்எம்: எம்பிகளுக்கு சம்பள உயர்வு, ஆனால் தொழிலாளர்களுக்கு இல்லை, ஏன்?

  தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய சம்பளத்தை உயர்த்திக் கொண்டதற்காக மலேசிய சோசலிசக் கட்சி அவர்களை இன்று வன்மையாகச் சாடியது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரிம9,500 (146 விழுக்காடு உயர்வு) சம்பள உயர்வு அளிக்கப்பட்டிருக்கையில், தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை ரிம900 லிருந்து ரிம1500 க்கு அதிகரிக்க…

‘நஜிப்பைக் கவிழ்க்க மகாதிர்- அன்வார் உடன்படிக்கை எதுவும் இல்லை’

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கைக்  கவிழ்க்க  முன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகமட்டுக்கும்  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்குமிடையில்  இரகசிய  உடன்படிக்கை  இருப்பதாகக்  கூறுவதை  செராஸ்  அம்னோ  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷி  மறுக்கிறார். அப்படி  ஒன்று  இருப்பதாக  எதிரணியினர்  சமூக  வலைத்தளங்களில்  செய்தி  பரப்பி …

யுபிஎஸ்ஆர் கேள்வித்தாள்கள் வெளியான வழக்கில் இரு ஆசிரியர்கள் விடுதலை

கடந்த  செப்டம்பரில் யுபிஎஸ்ஆர்  தேர்வுக்கு  முன்னதாகக்  கேள்வித்தாள்களை  வெளியாக்கியதாக  அதிகாரத்துவ  இரகசியச்  சட்டத்தின்கீழ்  குற்றம்சாட்டப்பட்ட  இரு  ஆசிரியர்களை  சிரம்பான்  செஷன்ஸ்  நீதிமன்றம்  இன்று  விடுவித்தது. அவர்களை  விடுவித்த செஷன்ஸ்  நீதிபதி  ஜக்ஜிட்  சிங்,    அவ்விருவரும்  கேள்வித்தாள்களை  வெளியாவதற்கு  உடந்தை  என்பதற்கோ  கேள்வித்தாள்களை  வசப்படுத்திக்கொள்ள  முனைந்தார்கள்  என்பதற்கோ  எவ்வித  ஆதாரமும்…

மகாதிர் vs பிரதமர் சர்ச்சையைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் அன்வார்

முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  சிறைத்தண்டனையை  அனுபவித்துக்  கொண்டிருந்தாலும் சிறையின்  இரும்புக்  கம்பிகளோ  காங்கிரீட்  சுவர்களோ  நாட்டின்  அரசியல்  நடப்புகளை  அவர்  அறிவதற்குத்  தடையாக  இல்லை. அந்த  வகையில்தான்  இப்போது  டாக்டர்  மகாதிர்  முகமட்டுக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்குமிடையில்  நடக்கும்  சர்ச்சையையும்  அன்வார் உன்னிப்பாக  கவனித்து …

இபிஎப் பண மீட்பில் ஒரு சமரசத் திட்டம்

ஊழியர்  சேமநிதி (இபிஎப்)  சந்தாதாரர்கள்  அவர்களின் பணத்தை 55 வயது  தொடங்கிக்  கட்டம்  கட்டமாக  மீட்டுக்கொள்ள  அனுமதிக்கலாம்  என  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி  ஒரு  சமரசத்  திட்டத்தை  முன்வைத்துள்ளார். பணமீட்பு  வயதை  55-இலிருந்து  60-க்கு  உயர்த்த  இபிஎப் எண்ணியிருப்பதாக  வெளிவந்த  செய்திக்கு  எதிராக  சந்தாதாரர்கள்  போர்க்கொடி …

சாமிவேலு: பழனிவேல் மஇகா-வைக் கொன்று விட்டார்

மஇகா-வின்  நடப்புத்  தலைவர்  ஜி.பழனிவேல்  அக்கட்சியைக்  கொன்று  அதன்  வீழ்ச்சிக்கும்  காரணமாக  அமைந்து  விட்டார்  என  மஇகாவின்  நீண்டகாலத்  தலைவர்  ச.சாமிவேலு  குற்றம்  சாட்டியுள்ளார். “அவரை(ஜி.பழனிவேல்)ப் பாராட்ட  வேண்டும். இதுவரை  எவராலும் மஇகாவை  அழிக்க  முடியவில்லை. அவர்  பதவிக்கு  வந்ததும்  மஇகாவை  அழித்து  விட்டார்”, என  சாமிவேலு  மலேசியாகினியிடம் …

ஜாஹிட்: கடிகாரங்கள் நிறுவனத்துறையில் இருந்தபோது வாங்கியவை

தம்மிடமுள்ள  சொகுசு   கடிகாரங்கள்  எல்லாம்  முன்பு  நிறுவனத்துறையில்  வேலை  செய்தபோது  வாங்கப்பட்டவை  என  உள்துறை  அமைச்சர்  அஹ்மட் ஜாஹிட்  ஹமிடி  கூறினார். “இதை (அரசியல்வாதிகளின்  கடிகாரங்களை) ஏன்  கவனித்துக்  கொண்டிருக்க  வேண்டும்?”, என்றவர்  செர்டாங்கில் ஒரு  நிகழ்வில்  கலந்துகொண்டபோது  வினவினார். “நான்  அரசியலுக்கு வருமுன்னர்  நிறுவனத் துறையில்  இருந்தேன்”,…

பல்லில்லா புலிகள்கூட அல்ல; வெறும் பூனைக்குட்டிகள்

பொதுக் கணக்குக்குழுவும் (பிஏசி)  மனித உரிமை  ஆணையமும்(சுஹாகாம்)  புலிபோல்  செயல்பட்டு  அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தி வைக்க  உருவாக்கப்பட்ட அமைப்புகள். ஆனால், அவை  புலிகளாகவா  இருக்கின்றன? பல்  பிடுங்கப்பட்ட  புலிகள்போல்  அல்லவா  காட்சியளிக்கின்றன. பிஏசியும்  சுஹாகாமும்  முன்வைக்கும்  பரிந்துரைகளை   அரசாங்கம்  கவனத்தில் கொள்வது  உண்மைதான். ஆனால், அது  எல்லாமே  வெறும்  ஒப்புக்காகத்தான்.…

சட்டமன்ற உறுப்பினர்: முக்ரிஸின் பதவிக்குக் குறி வைக்கவில்லை

கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ் மகாதிரின்  பதவி  விலகலுக்குக் கோரிக்கை  விடுத்த  புக்கிட்  லாடா  சட்டமன்ற  உறுப்பினர்  அஹ்மட்  லெபாய்  சூடின், மாநில  மந்திரி  புசார்  ஆகும் விருப்பத்தில்  அக்கோரிக்கையை  விடுக்கவில்லை  என  மறுக்கிறார். முக்ரிஸ்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  ஆதரிக்காவிட்டால் பதவி  விலகுவதே  நல்லது  என …

கேஜெ: நான் 1மலேசியா அணி, 2020 தொலைநோக்கு அணி அல்ல

அம்னோ  இளைஞர்கள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  ஆதரவு  தெரிவித்ததை  அடுத்து  அதன்  தலைவர்  கைரி  ஜமாலுடின்  தாம்  ‘1மலேசியா  அணி’யின் ஒரு பகுதி  என்பதையும் ‘2020 தொலைநோக்கு அணி’யில்  தாம்  இல்லை  என்பதையும்  பெருமையாக  அறிவித்தார். ‘1மலேசியா’ நஜிப் அடிக்கடி பயன்படுத்தும்  ஒரு  சுலோகம்.  ‘2020 தொலைநோக்கு’ …

எம்ஏசிசி: ரோஸ்மாமீதே விசாரணை நடத்தியவர்கள், எதற்கும் அஞ்சோம்

தான்  ஒரு காகித  புலி  அல்ல  என்பதை  வலியுறுத்தும்  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி)  விசாரணை  என்று  வந்து  விட்டால்  வேண்டியவர்  வேண்டாதவர்  எனப்  பாகுபாடு  காட்டுவதில்லை   என்கிறது. இதற்கு  எடுத்துக்காட்டாக,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  துணைவியார்  ரோஸ்மா மன்சூர்  ரிம24.4 மில்லியன்  வைர மோதிரம்  வாங்கியதாக  எதிரணியினர்…

போலீஸ் ராஜ்யமாகிறதோ என மகாதிர் கவலை

குறைசொல்வோருக்கும்  எதிர்ப்புக்  காட்டுவோருக்கும்  எதிரான  போலீஸ்  நடவடிக்கையைப்  பார்த்து  மலேசியா  போலீஸ்  ராஜ்யமாக  மாறுகிறதோ  என்று  கவலையுறுகிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். பதிவர்கள்  முன்னாள்  பிரதமரை   நேர்காணல்  கண்டு  பதிவேற்றம்  செய்த  யுடியுப்  காணொளி  ஒன்றில், தி எட்ஜ்  ஊடக  குழுமத்தின் செய்தியாளர்கள்  கைது  செய்யப்பட்டதை  மகாதிர்  கண்டித்தார்.…

பிரதமர் நஜிப்-மகாதிர் திறந்த விவாதம் நடத்த வேன்டும்

  பிரதமர் நஜிப் அவரை கடுமையாக விமர்சித்து வரும் முன்னாள் பிரதமர் மகாதிருடன் திறந்த விவாதம் நடத்த வேண்டும் என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் பிரதமரை வலியுறுத்தினார். திறந்த விவாதம் நஜிப் அவருக்கு எதிராக மகாதிர் தொடுத்து வரும் கடும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க…