ஆந்திராவில் 49 தமிழர்கள் கைது..

திருப்பதி சேஷாச்சலவனம் உள்பட ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் அதிகளவு நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 20 தமிழர்களை, ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு கடப்பா ஒட்டி மிட்டா வனப்பகுதி ஏரியில் 5 தமிழர்கள், மர்மமான முறையில்…

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும்

புதுடெல்லி, காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதேபோல் டெல்லியில் 8 மாத பெண் கைக்குழந்தை ஒன்றை 28 வயது வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த 2…

டாஸ்மாக்கை மூடுங்கள்.. முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதி விட்டு மாணவர்…

நெல்லை: டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நெல்லையில் தினேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். அவர் முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலியின் தெற்கு புறவழிச்சாலை பகுதியில் வசிப்பவர் தினேஷ். 12ம் வகுப்பு படிக்கும் மாணவரான இவரின் தந்தை, கடந்த…

நீ கோவிலுக்குள் வரக் கூடாது.. தடுத்து நிறுத்திய “ஆதிக்கம்”.. போராடி…

புதுச்சேரி: புதுச்சேரியில் கோயிலுக்குள் சென்ற தலித் பெண் விரட்டி அனுப்பப்பட்ட சம்பவ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதுச்சேரி அருகே உள்ள கிராமம் கூனிச்சம்பட்டு. இந்த கிராமத்தில் திரௌபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்து செல்வர்…

தமிழகத்தை இன்னொரு காஷ்மீராக மாற்றுவதா?: சீமான் கண்டனம்

சென்னை: காவிரி படுகையில் துணை ராணுவத்தினரை குவித்து தமிழகத்தை இன்னொரு காஷ்மீராக மாற்ற முயற்சிப்பதா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோகார்பன் எடுப்பு , மீத்தேன் எடுப்பு,ஷெல்…

வளர்ப்பு யானைகளின் பரிதாப வாழ்க்கை – பெருகும் மரணம், வீழும்…

சேலம் மாவட்டம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 42 வயதான யானை ராஜேஸ்வரி, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உடல்நிலை சரியில்லாமல் படுத்துக் கிடந்தது. ராஜேஸ்வரியின் இரண்டு முன்னங்கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் உடல் முழுவதும் புண் இருந்தது. இந்த யானையைக் கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த…

டெல்டா பகுதிகளில் மத்திய படையினர் குவிக்கப்படுவது ஏன்?

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி மீத்தேன் காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், மத்திய அரசின் அதி விரைவுப் படையினர் டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு…

காவிரி விவகாரம்: பிரதமரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை……

சேலம்: காவிரி விவகாரத்தில் பிரதமருக்கு தீர்மானம், கடிதம் அனுப்பியும் அவரிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து…

ஸ்கேன் முடிவு மெய் என்பதை நிரூபிக்க ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை…

கருக்காலத்தின் போது வயிற்றில் இருக்கும் பாலினத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்துவது நமது நாட்டில் தடை செய்யப்பட்ட, சட்டவிரோத, தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா பகுதியில் வசிக்கும் அனில் பான்டா என்பவர் எட்டு மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அருகில் இருக்கும் தனியார்…

தலித் மக்கள் மீதான கொடுமைகள் குறித்து மோடி மௌனம் காப்பது…

தலித் மக்கள் மீதான கொடுமைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன் என உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 12ஆந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா…

ரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீது தடை விதிக்க முடியாது!…

இந்திய அரசானது சுமார் $4.5 பில்லியன் டாலர் பெறுமதியான S-400 எனப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைப் பொறிமுறையை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கூடாது என மூத்த அமெரிக்க சட்ட வல்லுனர்களும் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.…

காதல், கருத்து வேறுபாடு, மாற்றங்கள்: தொடர் சரிவில் மாவோயிஸ்டுகள்

அந்த ஒற்றை அறை மட்டுமே கொண்ட அந்த வீடு யாரும் வசிக்காமல் விடப்பட்டது போல உள்ளது. ஆனால், அங்கு ஒரு இளம் தம்பதிகள் வசிக்கின்றனர். அவர்களுக்கு சமீபத்தில்தான் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. கிழக்கு மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியின் கோண்டு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 26 வயதாகும் சுக்தேவ்…

கொங்கு மண்டலத்தை செழிக்கச் செய்த நொய்யல் ஆற்றின் அவல நிலை

ஜீவநதிகள் எதுவும் இல்லாத கொங்கு மண்டலத்தில் விவசாயத்தை வளர்த்து, நிலத்தடி நீரை பெருகச்செய்த நொய்யல் நதி பல்வேறு ஆக்கிரமிப்புகளால் அழிவின் விளிம்பில் உள்ளது. அரசு நிர்வாகத்தின் அலட்சியமும், மக்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளுமே ஒரு நதியின் அழிவுக்குக் காரணமாகி விட்டதாக இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். கொங்கு நாட்டின் அடையாளம்…

கூடலூர் தேவாலாவில் அணை கட்டாவிட்டால் மெரினாவில் சாகும்வரை உண்ணாவிரதம்: அய்யாக்கண்ணு

ஊட்டி: கூடலூர் தேவாலாவில் ஜுன் 9-க்குள் தமிழக அரசு அணை கட்டாவிட்டால் மெரினாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நேற்று ஊட்டி வந்திருந்தார். அப்போது ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் மரபணு மாற்றப்பட்ட…

டெல்லியில் பயங்கரம்: 11 வயது சிறுமியை கடத்தி மதராசாவில் வைத்து…

காஸியாபாத்: டெல்லியில் 11 வயது சிறுமியை கடத்தி மதராசாவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு டெல்லியின் காஸிபூர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 21ஆம் தேதி திடீரென மாயமானார். இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இதுகுறித்து…

தீர்ப்பைக் கேட்டதும் நிம்மதி இழந்து, பயந்துபோன ஆசாராம் பாபு!

16 வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், ஜோத்பூர் எஸ்.இ/எஸ்.டி சிறப்பு நீதிமன்றம், சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவைக் குற்றவாளி என அறிவித்தது. மேலும், அவருக்கு ஆயுள் தண்டனையும், அவருக்கு உதவியாக இருந்த ஹிப்ளி மற்றும் சரத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், தீர்ப்பளிக்கப்பட்ட…

இறப்பதற்கு அனுமதி கேட்கும் 5000 விவசாயிகள்..

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தனர். அதில், குஜராத் மாநில அரசும், குஜராத் பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனமும் தங்கள் நிலங்களை பறித்துவிட்டதாகவும், பிழைக்க வழியில்லை என்பதால் இறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும்…

தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?’

தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற குரல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலிக்கத் துவங்கின. இதன் அடிப்படையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு…

ஆளுநர் மாளிகையை நோக்கி, தலித் அமைப்புகள் கண்டன பேரணி!

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், அச்சட்டத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைத்திட வலியுறுத்தியும் தலித் அமைப்பினர் ஒருங்கிணைந்து இன்று மதியம் 2 மணி அளவில் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் இருந்து ஆளுனர் மாளிகை வரையிலும் பேரணியாக…

காவிரியை விட மெரினா தான் முக்கியமா?… அரசுக்கு உயர் நீதிமன்றம்…

சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் போராட அனுமதி அளிக்க முடியாது என்று அரசு உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறிய நிலையில் காவிரியை விட மெரினா தான் அரசுக்கு முக்கியமா என்று ஹைகோர்ட் நீதிபதி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 90 நாட்கள் உண்ணாவிரதம்…

பீகார், உத்தரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளுகின்றன-நிதி…

புதுடெல்லி, நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி  அமிதாப் கந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- வட இந்திய மாநிலங்களை காட்டிலும், தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. மனித வளர்ச்சி குறியீட்டில் நாம் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். மனித வளர்ச்சி குறியீட்டில் 188 நாடுகள்…

மேகாலயா, அருணாச்சலில் சிறப்பு அதிகாரச்சட்டம் வாபஸ்… உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ…

டெல்லி : மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அமலில் இருந்த ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரச்சட்டம் வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இரு மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்பை விட அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தீவிரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி…

ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்த தினத்தில் 10 சிறுமிகள் பலாத்காரம்..

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த தினமான நேற்று மட்டும் நாடு முழுவதும் 10…