மலாலா பெற்ற விருதுக்கு தமிழக சிறுவன் பெயர் பரிந்துரை!

நெதர்லாந்து: சிறுவர்களுக்கான சர்வதேச அமைதி பரிசை மலாலா யூசுப்ஜாய் பெற்றது போல் அந்த பரிசுக்கு தமிழக மாணவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்தி (12). நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது திட்டிவிட்டதால் பள்ளி படிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார். அதன்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர்…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் வரை பலியாகியுள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக வைரஸ் காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏராளம். டெங்கு வைரஸை பரப்பும் ஏடீஸ் கொசுக்களின் லார்வாக்கள் உருவாவதை தடுக்க…

தமிழை மட்டும் புறக்கணித்த மத்திய அரசு வெப்சைட்.. செம்மொழிக்கு நேர்ந்த…

டெல்லி: மத்திய அரசின் 'ஏக்பாரத்' என்ற இணையதளத்தில் தமிழ் மொழி இடம் பெறவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏக்பாரத் (ஒரே இந்தியா) என்ற இணையதளம், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. இந்த வெப்சைட்டில், இந்தியாவின் கலாசாரங்கள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாசாரங்கள்,…

முகலாயர்கள் ஆட்சி “காட்டுமிராண்டித்தனமானது” சங்கீத் சோம் கருத்துக்கு பா.ஜனதா ஆதரவு

லக்னோ, பாரதீய ஜனதாவில் சர்ச்சை பேச்சுக்கு பெயர்போன எம்.எல்.ஏ. சங்கீத் சோம் பேசுகையில், “முகலாயர்கள் இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்தவர்கள். வரலாறு என்ற பெயரில் துரோகிகளை மகிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். அவர்களது பெயர்கள் வரலாற்றில் இருந்து நீக்கப்பட வேண்டியது. தாஜ்மஹாலை கட்டியவர் சொந்த மகனால் சிறையில் வைக்கப்பட்டார். இந்த கதையையா…

மக்களின் மனநிலை மாறுகிறது.. பாஜகவுக்கு பாடம் கற்பித்த குர்தாஸ்பூர் இடைத்தேர்தல்…

டெல்லி: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் லோக்சபா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுனில் ஜாஹர் 1,92,219 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சலேரியாவை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பாஜக…

பிரபல தாதா ஸ்ரீதரின் உடல் சென்னை வந்தடைந்தது; பிரேத பரிசோதனைக்கு…

கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்ட பிரபல காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் தனபாலின் உடல் இன்று சென்னை வந்தது.  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிரபல தாதாவும் காஞ்சிபுரம் சாராய வியாபாரியுமான ரவுடி ஸ்ரீதர்,  கொலை மற்றும் கொலைமுயச்சி, ஆட்கடத்தல், கொலைமிரட்டல் போன்ற 43 வழக்குகளில்…

ஜி.எஸ்.டி.யும், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையும் நல்ல சீர்திருத்தங்கள்! – ஐ.எம்.எஃப்.…

ஜி.எஸ்.டி.யும், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையும் நல்ல சீர்திருத்தங்கள் எனவும், இந்தியா நல்ல பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் ஐ.எம்.எஃப். தலைவர் கிறிஸ்டின் லகார்டே தெரிவித்துள்ளார். ஆளும் பாஜக அரசில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றுவருகின்றன. இந்நிலையில், ஐ.எம்.எஃப். என அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின்…

மீனவர் பிரச்சனை: இந்திய, இலங்கை அமைச்சர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் இலங்கை இடையே மீனவர் பிரச்சனை தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை சனியன்று புது டெல்லியில் நடைபெற்றது. இந்தியா சார்பில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கும், இலங்கை சார்பில் கடல் தொழில் மற்றும் நீரியல் வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த…

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது செக்ஸ் டூரிசம் போன்றது.. தேவசம் போர்டு…

திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும், தாய்லாந்து கோவில் போல இதையும் செக்ஸ் டூரிசமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று தேவசம்போர்டு தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது. சபரிமலை கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம்…

பஞ்சலோக சிலை கடத்தலில் 4 பேர் கைது

சென்னை புறநகர் பகுதியில் பஞ்சலோகத்தால் ஆன 600 ஆண்டுகள் பழமையான சுந்தரமூர்த்தி நாயனார் சிலை கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ஒரு வெள்ளை நிற கார் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையை…

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு விவகாரம்: உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

டெல்லி: சபரிமலை கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. உலகப்புகழ்பெற்ற சபரி மலை அய்யப்பன் கோவிலில் நுழைய 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனைத்து பெண்களையும் அனுமதிக்கக்கோரி கேரள இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கு…

தமிழ்நாடு கோரி உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள் –…

சென்னை: தமிழ்நாடு என்று பெயர் வைக்க உண்ணாவிரதம் இருந்து தன் இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனாரின் 61ஆவது நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கலைக்கோட்டுதயம் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாலை…

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு

ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் மீன்துறையினரின் அனுமதியுடன் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக குட்டிக்கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்தனர். சில படகுகளில் இருந்த மீன் கள் மற்றும்…

தமிழ்நாட்டில் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக தடைக்கல்லாக இருப்பது யார்?

கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 6 தலித்துகள் உள்பட பிராமணரல்லாத 36 பேரை அர்ச்சகர்கள் பணிக்கு நியமித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்து முடித்து, தீட்சை பெற்றவர்கள் தங்களையும் தமிழக அரசு இதுபோல பணியில் அமர்த்த…

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்; முதல்–அமைச்சரிடம் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, முதல்–அமைச்சரிடம் திருமாவளவன் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசு பயிற்சி பள்ளிகளில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் பணி நியமனத்துக்காக 10 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கேரள அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள…

டெங்குவிற்கு கொத்து கொத்தாக மடியும் மக்கள் – பலி எண்ணிக்கை…

சென்னை: தமிழகத்தில் டெங்கு உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 9 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலியாகியுள்ளனர். காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு…

வாலிபர் மர்ம மரண வழக்கு.. பாராலிம்பிக் மாரியப்பனின் பெயரை சேர்க்க…

சென்னை: சேலத்தில் இளைஞர் ஒருவர் மர்ம மரண வழக்கில் பாராலிம்பிக் சாம்பியன் மாரியப்பனின் பெயரை சேர்க்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் மாரியப்பன். இதைத்தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் சார்பில் அவருக்கு பரிசுகள்…

பிரபாகரன் உடலைப் பார்த்த போது எனக்கும் பிரியங்காவுக்கும் குற்ற உணர்வு…

வதோதரா : தமது தந்தையின் மரணத்துக்கு காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உடலை பார்த்த போது மகிழ்ச்சியடைவில்லை..வேதனைப் பட்டோம்.. எங்களுக்கு 'குற்ற உணர்வு'ம் கூட ஏற்பட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல்…

சிவகாசியில் வெடிக்குமா டெல்லி பட்டாசுத் தடை?

இந்தியத் தலைநகர் டெல்லியிலும் தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் நவம்பர் 1ஆம் தேதி வரை பட்டாசுகளை விற்பனைசெய்ய உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடையின் காரணமாக, தமிழகத்தில் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு தீபாவளி முடிவடைந்த பிறகு, டெல்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் மாசுபாடு ஏற்பட்டது.…

இந்தியாவுடன் இணைந்து எல்லையில் அமைதியை பராமரிக்க தயார் என சீனா…

பீஜிங், டோக்லாம் விவகாரம் தொடர்பாக இந்தியா–சீனா இடையே அடிக்கடி மோதலும், பதற்றமும் நீடித்தது. இப்போதும் டோக்லாம் பகுதியில் சீனா 500 வீரர்களை குவித்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்தியாவிற்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது எனவும் எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் சீன பகுதியில் இப்பணிகள்…

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: 11 முஸ்லிம்கள் மீதான மரண…

குஜராத்தில் உள்ள ஒரு நீதி மன்றம், 2002-ல் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 11 முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் இறந்தார்கள். அதில் பெரும்பான்மையானவர்கள் இந்து மத யாத்ரீகர்கள். கோத்ரா தாக்குதல்தான்,…

தமிழகத்தில் காய்ச்சலுக்கு 85 பேர் பலி… சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை காய்ச்சலால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை ஆவடியையடுத்த திருமுல்லைவாயில் பகுதியச் சேர்ந்தவர் இமயவரம்பன். இவரது மனைவி குணவதி கடந்த 15 நாட்களாக பன்றிக் காய்ச்சலால் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

கேரளா ‘லவ் ஜிகாத்’ என்னுடைய மகள் தற்கொலை வெடிகுண்டாக வேண்டாம்…

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கே.எம்.அசோகன் என்பவரது மகள் அகிலா என்கிற ஹாதியா என்பவரை மதம் மாற்றி ஷபின் ஜகான் என்பவர் திருமணம் செய்தார். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணியமர்த்த பெண் மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளார், ஜகான் ஒரு கைகூலி என குற்றம் சாட்டப்படுகிறது. இத்திருமணத்தை…