ஆஸி. செல்ல முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்துள்ளது

ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரும் நோக்கில் சுமார் 200 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகு, இந்தோனேஷியத் தீவான ஜாவாவுக்கு தெற்கே கடலில் கவிழ்ந்துள்ளது. அந்தப் படகில் இருந்தவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக கருதப்படுகிறது. விபத்து நடந்த இடத்துக்கு இருநாட்டு கடற்படை மற்றும்…

கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்கு சென்று சீனர்கள் சாதனை

கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று, சீனர்கள் சாதனை படைத்துள்ளனர். கடலுக்கு அடியில் ஏராளமான கனிமங்களும், இன்னும் சில அற்புதங்களும் புதைந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கடலின் மிக அதிக ஆழம் வரை செல்லும் வீரர்களின் துணையோடு, சில ஆராய்ச்சிகள்…

பர்மிய இன மோதல்: 90,000 பேர் இடம்பெயர்ந்தனர்

பர்மாவின் மேற்கில் பௌத்த மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வன்முறை மோதல்களில், 90,000 பேர் வரை தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக உதவி நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தாம் அவசரகால உணவு உதவிகளை வழங்கியுள்ளதாக உலக உனவுத்திட்ட…

ஆப்கான் ஹொட்டல் தாக்குதலில் 15 பொதுமக்கள் பலி

ஆப்ஹானிஸ்தானில் ஒரு ஆடம்பர ஹொட்டலில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த 12 மணிநேர சண்டையில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் தீவிரவாதிகளும் இதில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தலைநகர் காபூலுக்கு அருகே லேக்சைட் ஹொட்டலின் மீது தலிபான்கள் வியாழனன்று பிற்பகலில் தாக்குதலை…

பிரதமர் பதவியை பறித்தது உயர் நீதிமன்றம்: பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தானில் யூசுப் ரஸா கிலானி பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துள்ளதாக அந்நாட்டின் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆஸிப் அலி சர்தாரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளை மீண்டும் விசாரிப்பதற்கு மறுத்ததன் மூலம் நீதிமன்றத்தை கிலானி அவமதித்தார் என உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு முன்பு…

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: சோஷலிஸ்ட் கட்சி வெற்றி

பிரான்ஸ் அதிபர் ஹோலண்டின் சோஷலிஸ்ட் கட்சி, நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திடமான‌ பெரும்பாண்மை பெற்றது. மேலும் ஐரோப்பிய பொருளாதார சிக்கலை கருத்தில் கொண்டு அதிக பணம், பட்ஜெட் சலுகைகள் ஆகியவைகளை ஹோலண்ட் கையாளவில்லை என தேர்தல் அமைப்பாளர்களுக்கு தெரியவந்தது. மாஜி அதிபர் சர்கோஷி கன்சர்வேட்டிவ் கட்சி ‌தேசிய சபையில்…

எகிப்து நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவு!

எகிப்திய நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எகிப்தில் 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால், அவர் ஆட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து இராணுவ உயர்மட்ட மன்றம், இடைக்கால ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தேர்தல் நடத்தக்கோரி மக்கள் மீண்டும் போராட்டம்…

பிறந்த நாள் கவலைகள் மரணத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தகவல்

பிறந்த நாள் அன்று ஏற்படும் கவலையினால், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மரணம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஆய்வு நிறுவனம், கடந்த 40 ஆண்டுகளாக, 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம், ஒரு ஆய்வு நடத்தியது. பிறந்த நாள் அன்று ஏற்படும் கவலை மற்றும் மன அழுத்தத்தால், 60…

இத்தாலியில் நிதி நெருக்கடி: திருமணம் நடக்காத கிராமம்

இத்தாலி நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு கிராமத்தினர் திருமணம் செய்து கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் கடும் நிதி நெருக்கடி காணப்படுகிறது. கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வங்கிகளில் பணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க இயலாத நிலையில் சில நாடுகள்…

சிரியாவில் 83 அப்பாவி மக்கள் பலி

சிரியாவில் நேற்று நடந்த தாக்குதலில் மட்டும் 83 பேர் பலியானதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.சிரியாவின் முக்கிய நகரமான தராவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் 20 பேர் பலியானார்கள்.ஹோம்ஸ் நகரில் குடியிருப்பு பகுதியில் 29 பேர் பலியாகியுள்ளனர். மற்றும் பல்வேறு இடங்களில் சேர்ந்து 83 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக…

அமெரிக்காவை மிரட்ட ரஷ்யா – சீனா கூட்டாக போர் பயிற்சி

வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய குடியரசுத் தலைவர் விலாடிமிர் புட்டின் பெய்ஜிங் சென்றுள்ளார். அவர் சீனத் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதில் ஆசிய-பசிபிக்…

எலிசபெத் அரசிக்கு வைர விழா: குடியரசு அமைப்பினர் எதிர்ப்பு

பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறி, 60 ஆண்டுகள் ஆனதையொட்டி நடந்த விழாவை கண்டித்து, குடியரசு அமைப்பினர் லண்டனில் போராட்டம் நடத்தினர். பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறிய வைர விழா, பிரிட்டன் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி, தேம்ஸ் நதியில், ஆயிரம் படகுகளின் பவனி…

சுவரில் எழுதிய பெண்ணுக்கு சிங்கப்பூரில் பிரம்படி தண்டனை

சிங்கப்பூரில், சுவரில் எழுதிய, 25 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரம்படி தண்டனை அளிக்கப்படும். விரும்பத் தகாத வாசகங்களை, பொது சுவரில் எழுதுவது, போஸ்டர்களை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகள் சிங்கப்பூரில் குற்றமாக கருதப்படுகின்றன. அண்மையில் 25 வயது பெண், சுவரில் ஆட்சேபத்திற்குரிய வாசகங்களை…

திருமணத்தின் போது நடனமாடிய பெண்களுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில், திருமணத்தின் போது நடனமாடிய நான்கு பெண்கள், கிராம பஞ்சாயத்தின் உத்தரவுப்படி, கொல்லப்பட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு, அரசை விட கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்குத் தான், செல்வாக்கு அதிகம். இங்குள்ள கோகிஸ்தான் மாவட்டத்தில், பண்டோ…

கட்டடத்தின் மீது விமானம் மோதி வெடித்துச் சிதறியது; 153 பேர்…

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கட்டடத்தின் மீது விமானம் மோதி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த சுமார் 153 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நைஜீரியாவிலுள்ள பெரிய நகரான லாகோஸில் ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது. டானா ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் லாகோஸில் இருந்து…

அசாஞ்சை ஸ்வீடனிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு

பல்வேறு நாட்டின் இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, 'விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை, ஸ்வீடன் நாட்டிடம் ஒப்படைக்கும் படி, பிரிட்டன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் இராணுவ இரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு இரகசியங்களை 'விக்கி லீக்ஸ்' இணைய தளத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை…

இலஞ்சம் வாங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி நேபாளத்தில் சுட்டு கொலை

நேபாள உச்ச நீதிமன்ற நீதிபதி ராணா பகதூர் பாம், அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். நேபாள உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ராணா பகதூர் பாம், (வயது 64). இவர்  மூன்று குற்றவாளிகளை விடுவிக்க இலஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, இவர் மீது, அந்நாட்டு…

லைபீரியாவின் முன்னாள் அதிபருக்கு 50 ஆண்டு சிறை!

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்படுவதற்குக் காரணமான உள்நாட்டுப் போருக்கு உதவிய மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லருக்கு 50 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஐ.நா. நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. அண்டை நாடான சியாரா லியோனில் செயல்பட்ட புரட்சிகர ஐக்கிய முன்னணி என்கிற…

சியாச்சினில் புதையுண்ட பாகிஸ்தான் வீரர்கள் தியாகிகளாக அறிவிப்பு

சியாச்சின் மலையில், பனிப் பாறையில் சிக்கி பலியான பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாச்சின் பனி மலையில், ஜியாரி என்ற இடத்தில், கடந்த மாதம் 7-ஆம் தேதி, ஆயிரம் மீட்டர் நீளமும், 25 மீட்டருக்கும் அதிகமான அகலமும் கொண்ட பனிப் பாறை சரிந்து,…

இளம் பெண்களுடனான கேளிக்கைக்கு பல கோடியை செலவிட்ட மாஜி பிரதமர்

இளம் பெண்களுடனான கேளிக்கை விருந்துக்கு இத்தாலிய முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி, 7 கோடி வெள்ளிக்கு மேல் செலவிட்டுள்ளார். இத்தாலிய முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர். அவர், செக்ஸ் தொழிலாளர்கள் பலருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்காகப் பல கோடி வெள்ளி செலவிட்டதாகப் புகார் கூறப்பட்டது. அதுமட்டுமல்லாது,…

நியூட்டனின் புதிருக்கு விடை கண்டுபிடித்து இந்திய மாணவன் சாதனை

புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த ஐசக் நியூட்டன் உருவாக்கிய சமன்பாட்டுக்கு, இந்திய மாணவன் விடை கண்டுபிடித்துள்ளான். மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவதை கண்ட விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், புவி ஈர்ப்பு விசை குறித்த விஷயத்தை, உலகுக்கு தெரியப்படுத்தினார். இவர் உருவாக்கிய சில சமன்பாடுகளுக்கான புதிர், 350 ஆண்டுகள்…